Rajalakshmi Narayanasamy

Writers Team
Tamil Novel Writer
#1
இருவர் வீட்டிலும் இவர்கள் முடிவை சொன்னதும் மிகவும் மகிழ்ச்சியாக சம்மதித்தார்கள்... பாலனின் உதவியுடன் பண்ணை மிக வேகமாக நேர்த்தியாக தயாராகிக் கொண்டிருந்தது. வீட்டின் அருகிலேயே சிறிது இடத்தை பவித்ராவின் சொந்த தோட்டத்திற்காக ஒதுக்கியிருந்தால் ஆதவன்.. அவன் அன்புக்குரியவள் அவள் கையாலேயே அவளுடைய தோட்டத்தை அமைக்க வேண்டும் என்பதற்காக அந்த இடம் அவளுக்காக காத்துக் கொண்டிருந்தது..

பவித்ராவின் கல்லூரிக் காலமெல்லாம் முடிந்து ஒரு மாதம் அவளை அவள் போக்கில் ஓய்வெடுக்க விட்டான் ஆதவன்... அதற்காக அவளுடன் பேசாமல் இல்லை...

முடிந்தவரை தினமும் அவள் கண்களில் பட்டுக்கொண்டு தான் இருந்தான்... நேரில் வரமுடியாத நாட்களில் போனில் அவளை பிடித்தான்...

அவனுக்கு பட்டாசு ஆலை அதோடு விவசாயம் மேலும் ஹோட்டல்களையும் பார்க்க வேண்டியதிருந்தது..

அவ்வளவு வேலைக்கிடையிலும் அவன் தன் காதல் வேலையையும் செவ்வனே செய்து கொண்டிருந்தான்.. போதும் போதுமெனும் அளவிற்கு வீட்டில் தூங்கி எழுந்தவள்.. அதற்கு மேலும் சோம்பி கிடக்க பிடிக்காமல் தான் செய்ய ஒத்துக் கொண்ட வேலையை செய்ய முன் வந்தாள்..

உடனே அங்கு வந்தவன் தாமதிக்காது அவளை ஆலைக்கு அழைத்துச் சென்று அவளிடம் பொறுப்பை ஒப்படைக்க பரபரத்தான்... எனினும் முறைப்படி அதியனிடம் பேசி அவர் முறைப்படி ஆதிமூலத்திடம் பட்டாசு ஆலை நிர்வாகம் பற்றி சொல்ல.., சிறிது யோசித்த ஆதிமூலம் அவளை ஆலையின் மேனேஜராக மட்டுமே முன்னிருத்தும் படி கூறினார்.

என்னதான் அவர்கள் வரை திருமணம் தொடர்பாய் ஒரு முடிவிற்கு வந்திருந்தாலும், பவித்ரா எப்போது எப்படி மாறுவாள் என புரியாத குழப்ப நிலையில் மொத்த நிர்வாகத்தையும் அவளிடம் ஒப்படைப்பது தேவையில்லாதது.. மேலும் கிராமத்தில் அது பல வதந்தைகளுக்கு வித்திடும், மகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என யோசித்தவர் இவ்வாறு கூற, அதை அதியவனும் ஏற்றுக் கொண்டார்.

பதவி மட்டுமே மேனேஜர் என்றும் ஆனால் ஆலையில் அவள் விருப்பப்படி ஏதும் செய்யலாம் என்றும் பத்திரம் எழுதி முறைப்படி அதை பதிவும் செய்து பவித்ராவை ஆலையில் வேலைக்கு அமர்த்தினார் அதியவன்...

முதல் நாள் வேலைக்கு கிளம்ப, அந்த வீடே பரபரத்து தான் கிடந்தது.. எப்போதும் இயல்பாய் ஓர் பரபரப்பு வேலையில் இருக்குமே தவிர, கிராமத்து பண்ணை வீடுகளுக்கே உரிய அமைதியும் நிசப்தமும் கூட ஒருங்கே இருக்கும் எனும் போது, இன்று அங்கு தோன்றிய பரபரப்பு மிகவும் விசித்திரமாய் தான் தோன்றியது..

முதல் நாள் வேலை என கோவிலில் பூசைக்கு கொடுத்திருந்தார் யசோதா.. கிராமங்களில் இதுவும் வழக்கம் தான், வீட்டினர் யாருக்கேனும் பிறந்தநாள், திருமண நாள் என விசேச நாட்களிலும், முக்கியமான நேரங்களிலும் எல்லாம் நல்லபடியாய் நடக்க இறைவனை வேண்டி அன்று கோவில் பூசைக்கு ஆகும் செலவை அந்த குடும்பத்தார் ஏற்றுக் கொள்வார்கள்..

எனவே, அதிகாலையிலேயே அனைவரையும் எழுப்பி கிழப்பி கோவிலில் கொண்டு வந்து நிறுத்தியவர் ஒரு இளம்பசுவின் பால் முழுவதையும் அன்னையின் அபிஷேகத்திற்கெனவே கொண்டு வந்துவிட்டார்.

சிறப்பாய் பூசைகள் முடிந்து வீடு சேர்ந்தால்.., அவளுக்கு பிடித்த அனைத்து உணவு வகைகளும் அணிவகுத்து இருந்தன.. மேசை மேல்..

அதை பார்த்ததும் கட்டுக்கடங்காத கோபம் தான் வந்தது பவித்ராவிற்கு.. “அம்மா சும்மாவே அர்த்த ராத்திரில தா எங்கள எழுப்பி கோவில்க்கு கூப்டு போன.., இதுல இம்புட்டு வகயா சமச்சி வேற வச்சிருக்க.. நைட்டு தூங்கினயா இல்லயா நீயி? இதெல்லாம் ஒரே நாள்ல சாப்டாட்டி தினம் ஒன்னு சாப்டா ஆகாதா?” என நிறுத்தாமல் பொறும ஆரம்பித்தாள்..

அவளின் கத்தலை பொருட்படுதாமல் அவர் அவளைப்பார்த்து நகைக்க.., அவள் குழப்பமுடன் முழிக்க, அங்கு பெற்றோருடன் வந்து சேர்ந்தான் ஆதவன்... “சும்மா எப்போ பாத்தாலும் அவங்கள டென்சன் செய்யறது... இப்போ பாரு அம்மா மேல பாசம் பொத்துக்கிட்டு வர்றத...” என்றான் ஆதவன்.

“எங்க அம்மா மேல எனக்கு பாசமில்லாமலா இருக்கும்? அதெல்லாம் நிறையவே இருக்கும்.., காட்ட வேண்டிய இடத்துல காட்டுவேன்” என சண்டைக்கோழியாய் கொக்கரித்தால் அவள்..

“அது சரி, உனக்காக கஷ்டப்பட்டு இதெல்லாம் செஞ்சி கொண்டு வந்தது நானு.. உன் கரிசனையெல்லாம் உங்க அம்மாவுக்கா..? ரொம்ப நல்லாருக்கு பவிம்மா... ரொம்ப நல்லாருக்கு நீ செய்யறது” என்று மறுபடி அவளை சீண்டினான்..

பேச்சிழந்து போன பேதையவள்... “என்ன நீங்க செஞ்சீங்களா? “ என அதிர்ச்சியில் உறைந்து நிற்க... அவள் நிலை கண்டு இறங்கிய அதியவன்.. “அவன் சும்மா சொல்றான்மா.. வெண்ணியே ஒழுங்கா போடத்தெரியாது இதுல இவன் இவ்வளவு சமைக்கிறானா?” என்றார்.

அவள் மீண்டுமாய் அவனை முறைக்க... “நான் சமைச்சேன்னு நான் சொல்லவே இல்லயே..!! நான் ஏற்பாடு செஞ்சேன்னு தான் சொன்னேன்..” என்றபடி நகைத்தான்..

மீண்டும் குழப்பமாய்.. “அய்யோ யார் செஞ்சானு யாராது சொல்லுங்க இல்ல அமைதியா இருங்க.. யார் செஞ்சா என்ன? எனக்கு அவ்வளவு ஆர்வம் எல்லாம் தாங்காது.. காலங்காத்தால எழுப்பி பசிக்க வேற செய்யுது.. நான் சாப்ட போறேன்..” என்றபடி எதையும் கண்டுகொள்ளாதவல் போல டேபிளில் அமர்ந்து உணவுப் பதார்த்தங்களை தட்டில் நிரப்ப ஆரம்பித்தாள்..

அவள் நிலை புரிந்த அகிலா.., “இது எல்லாம் நம்ம ஹோட்டல்ல வேல பாக்கற செப் அ கூப்டு வந்து ஆதவன் தான் செய்ய வச்சான் மா.. சமைச்சது செப் தான்.. ஆனா அதுக்கான ப்ளான் போட்டு, விடியமுன்ன அவர இங்க இழுத்துட்டு வந்து இவ்வளவும் சமைக்க வச்சது அவன் தான்..” என்றார்.

அவனுக்கு வராத வேலை..!! அவன் செய்யாவிட்டால் தான் என்ன? தனக்காக இப்படி யோசித்து, உறக்கம் கெட்டு இவ்வளவும் அவன் ஏன் செய்ய வேண்டும் என எண்ணிய நொடி அவன் மேல் அன்பு ஊற்றாக பெருக.., நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்..

அவனும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்..

அவன் பார்வையை சந்தித்தவுடன்.., பட்டென வெட்டும் விழிகளை பிரித்துக் கொண்டு உண்ணத் தொடங்கிவிட்டாள்..

“அடியேய் என் சீனிவெடி... உன்னய என் வழிக்கு கொண்டு வர நான் எவ்வளவு கஷ்டப்பட்டு வேல பாத்தாலும் பூன்னு ஊதிட்டு போய்ட்டே இருக்கியே.. இதுக்கெல்லாம் சேத்து வச்சி உனக்கு இருக்குடி .. “ என மனதில் கருவிக் கொண்டான் ஆதி!
 
Attachments

Advertisement

New Episodes