பீட்டர் லவ்ஸ் ஜூலி...

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
பீட்டர் லவ்ஸ் ஜூலி...


பீட்டர்.... :love::love:

அவன் கடைக்கண் பார்வையிலேயே காதல்ல விழுந்தவங்கள கவுண்ட் பண்ண முடியாது... அதோட அவன் அழகு.. ஆள அசரடிக்கும்.. சைட் அடிக்க வைக்கும்...!
பேரழகன் தான் அவன்.

ஆனா அவனோடான என் காதல் அழகால வந்ததில்ல... அடி ஆழத்தில இருந்து வந்தது..

அவனும் அப்படிதான்.

எங்க காதலே கவிதை தான்.... அதை கவிதையா சொல்லனும்னா......

நானின்றி அவனில்லை......
அவனின்றி வாழ்வில்லை.....


இந்த கவிதை காதல் எல்லாம் அந்த ஒரு நாள் எங்க வாழ்க்கைல வர்ற வரைக்கும் தான்....

ஜூலி.....

அவ அவன் வாழ்க்கைல வர்ற வரைக்கும் எல்லாம் நல்லா தான் போயிட்டு இருந்துச்சு...
அவ வந்தா... என் பீட்டர் என்னை மொத்தமா மறந்தான்.

எஸ்.. பீட்டர் ஈஸ் இன் லவ் வித் ஹெர்.

எனக்கே எனக்காக... மட்டுமே காத்திருந்தவன் இப்போ எல்லாம் ஜூலிய எதிர்பார்த்து காத்திருக்கான்.

ஜூலியும் பீட்டரை உயிருக்கு உயிரா நேசிக்குறா. கரை கடந்தோடும் காதல் அவள் கண்ணில் தெரியும்.
ஆனா அவ வீட்டில இவங்க காதலுக்கு எதிர்ப்பு.

எனக்கு அந்த ஜூலிய சுத்தமா பிடிக்கல. என் பீட்டரையும் விட்டு கொடுக்க முடியல.

நான் விட்டு குடுத்துடுவேனா என்ன?? நோ நெவெர்!!

இவங்க எப்படி சேருறாங்கன்னு நானும் பார்க்குறேன்!!
நான் சேர்த்துவெச்சாலும் ஜூலிய பீட்டரோட சேர அவன் விடமாட்டான். அந்த ஆறடி ஆப்பிள்.

என் பக்கத்து தெருவுல தான் இருக்கான். அவனுக்கும் எனக்கும் சுத்தமா ஆகாது.

காரணமில்லாம எங்களுக்குள்ள முட்டிகிச்சு.. நாங்க காரணமே இல்லாம முட்டிக்கறதுக்கு காரணம் ஜூலியும் பீட்டரும் தான்.

எனக்கு எப்படி என் பீட்டரோ அப்படி தான் அந்த ஆப்பிளுக்கு ஜூலி. ரெண்டு பேரும் யாருக்காகவும் அவங்கள மட்டும் விட்டு தர மாட்டோம்.

இதெல்லாம் நினைச்சு சந்தோசப்பட்ட நேரத்துல எனக்கு தெரிய வந்தது அது.

பீட்டரை காணோம்!!!!!!!!!!!

உடைஞ்சுபோய் வாசல்படியிலேயே உக்காந்துட்டேன்.

என் வீட்டு கேட் திறக்குற சத்தத்துல நிமிர்ந்தா.. கைய கட்டிட்டு என்ன பார்த்து முறைக்குறான் ஆறடி உயரம் அழகிய புருவம் ஆப்பிள் போல இருக்கும் அவன்.

அவன் கடத்தியிருக்க வாய்ப்பிருக்கு.. யெஸ்! அவனைத் தவிர என் பீட்டருக்கு வேற எதிரி இல்ல..

எங்கடா என் பீட்டர்??? அவனை என்ன செஞ்சீங்க?? அவன் சட்டைய பிடிச்சு கேக்கணும்னு நெனச்சேன்.

ஆனா, எங்க என் ஜூலின்னு கேட்டு அவன் முந்திக்கிட்டான்.

ஜூலியையும் காணோமா!!!!

“என்னை கேட்டா? உங்க ப்ராப்பர்டியை நீங்க தான் பத்திரமா பார்த்துக்கணும்” என்றேன் நான்.

“வாட்?????”

“என்ன வாட்! நீங்க தான் ஜூலிய லவ் டார்ச்சர் செஞ்சிருக்கீங்க.. உங்கள அவளுக்கு சுத்தமா பிடிக்கல அதான் அவ ஒழுங்கா இருந்த என் பீட்டரையும் எதோ செஞ்சு கூட்டிட்டு ஓடி போய்ட்டா.. எல்லாம் ஜூலிய வளர்த்தவங்கள சொல்லணும்”

“நீ லூசானு எனக்கு முன்னமே சந்தேகம் இருந்திச்சி இப்போ கன்பார்ம்.. பீட்டரை மட்டும் ஒழுங்கா வளர்த்தாங்களோ??”

“ஏய்!! என் பீட்டரை தப்பா பேசுனா அவ்ளோதான்”

விவாதம் முத்திப்போய் நாங்க சொல்லால் அடிச்சுகிட்டா சமயத்துல

வவ் வவ்..

வந்த குரலில் அடித்து பிடித்து திரும்ப பீட்டரும் ஜூலியும் என் வீட்டு கேட் கிட்ட நிக்குறாங்க.

“பீட்டர்..” பாசமா நான்.

அந்த ஆப்பிள் திரும்பி என்ன முறைக்குறான். அவன் கிடக்குறான் பட்டர்.. எனக்கு என் பீட்டர் தான் முக்கியம்.

“பீட்டர்.. என் பட்டு”

நான் கைய விரிக்க ஓடி வந்து தொத்திக்கிட்டான் என் பட்டு.

“ஜூலி.. கமான் பேபி” அவன் கூப்பிட்டதும் அந்த ஆப்பிள் மேல தாவினா ஜூலி.

வெறுப்பேத்தவே அந்த நாய்க்கு இந்த பேரை வெச்சிருப்பான் போல.. சரி நம்ம மட்டும் அவனுக்கு சளைச்சவளா என்ன!!

அவன் என்னை முறச்சுகிட்டே தூக்கிட்டு போய்ட்டான். நானும் அவனை முறைச்சுட்டே பீட்டரை உள்ள கூட்டிட்டு வந்துட்டேன்.

ஒரு வாரம் ஆச்சு... பீட்டர் சரியா பெடிக்ரீ கூட சாப்பிடல.. தூங்கல.. வாக்கிங் போகல.. ஏன்னா ஜூலி குடும்பம் வேற ஊருக்கு மாறினதுனால.

ஜூலிக்கும் அப்படிதான் போல!!

ரெண்டு பேரும் அஹிம்சா வழியில சத்யாகிரஹம் செய்ய... கைகூடுமா அந்தக் காதல்????

மனிதர்களுக்கு மட்டுமா காதல் சாத்தியம். இது மனிதர் உணர்ந்துகொள்ள மனித காதல் அல்ல.. அதையும் தாண்டி...

dog-couple-relationship-feature.jpg

ஒரு வருடம் கழித்து..

பீட்டர் அண்ட் ஜூலி வாக்கிங்.. டாக்கிங்.. பெடிக்ரீ டாக் பிஸ்கட் எல்லாம் ஒண்ணா ஒரே தட்டுள்ள சாப்பிட்டு கொஞ்சி விளையாடி ஒரே ஆனந்தம் தான்.

அவ ஓட.. அவன் துரத்த.. கண் கொள்ளா காட்சி.

உண்மையான நேசம் யாரிடமும் தோற்காதே!!

இதோ கண்முன்னே!! காதல் கை சேர்ந்த மகிழ்ச்சியில் இரு உயிர்கள்..

“இப்போ சந்தோசமா??” காதருகில் என்னவன் குரல் கிசுகிசுக்க..

“ஹ்ம்ம் ரொம்ப ரொம்ப....” அவன் தோள் சேர...

“எப்படியோ ஜோடி சேர்ந்திடுச்சு” காதலுடன் அவன்.

“அவங்க மட்டுமா!!” கள்ளத்தனத்துடன் நான்

என் தலையில் செல்லமாய் முட்டி அவன் முன்னால் செல்ல அவனையே பார்த்திருந்தேன்..

சரி நானும் கிளம்புறேன் என் ஆப்பிளுக்கு ஆப்பிள் ஜூஸ் போட்டு குடுக்கணும்.

அப்பறம் ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்.......


என் பேரு..

ஜூலி..

என் ஆப்பிள் பேரு..

பீட்டர்..

8b8426f0abb514d9b61d6126537fe533.jpg

just for fun makkale!!!! ;);)
do share ur comments :):)
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய ''பீட்டர்
லவ்ஸ் ஜூலி''-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி சிறுகதைக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
மித்ராபரணி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா.............
அந்த ஆப்பிளுக்கும்
அவனோட லவ்வருக்கும்
வேற பெயர் வைத்திருக்கக்
கூடாதா, மித்ராபரணி டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top