பிரிவு : பொருட்பால், இயல் : நட்பியல், அதிகாரம் : 88. பகைத்திறந்தெரிதல், குறள் எண்: 875 & 879.

Sasideera

Well-Known Member
#1
குறள் 875:- தன்துணை இன்றால் பகைஇரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.

பொருள் :- தனக்கு உதவியான துணையோ இல்லை; தனக்குப் பகையோ இரண்டு; தானோ ஒருவன்; இந்நிலையில் அப்பகைகளுள் ஒன்றை இனிய துணையாகக் கொள்ள வேண்டும்
 
Sasideera

Well-Known Member
#2
குறள் 879:- இளைதுஆக முள்மரம் கொல்க: களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.

பொருள் :- முள்மரத்தை இளையதாக இருக்கும்போதே வெட்ட வேண்டும்; காழ்ப்பு ஏறி முதிர்ந்தபோது வெட்டுகின்றவரின் கையையே அது வருத்தும்.
 
Sasideera

Well-Known Member
#3
அதிகார விளக்கம் :-

பண்பற்ற பகை விரும்ப வேண்டாம். கொலைக் கருவி கொண்டவனின் பகைவிட சொல் கொண்டவன் பகை வலிமையானது. எல்லாரையும் பகைத்துக் கொள்பவனே ஏழை. பகைவரை நட்பாக கருதும் பண்பே முதன்மையானது. தெளிவற்றவன் நட்பு நல்லதல்ல. தன்னை காத்துக் கொள்ளவதும் பகையுணர்வை வளரவிடாமல் அழிப்பதும் அவசியமானது. குற்றம் செய்பவரின் செறுக்கை அழிக்காதவர் உண்மையாக வாழ்பவர் இல்லை.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement