பிரிவு : பொருட்பால், இயல் : நட்பியல், அதிகாரம் : 87. பகைமாட்சி, குறள் எண்: 863 & 866.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 863:- அஞ்சும் அறியான் அமைவுஇலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.

பொருள் :- ஒருவன் அஞ்சுகின்றவனாய், அறிவு இல்லாதவனாய், பொருந்தும் பண்பு இல்லாதவனாய், பிறர்க்கு ஒன்று ஈயாதவனாய் இருந்தால், அவன் பகைவர்க்கு மிக எளியவன்.
 

Sasideera

Well-Known Member
குறள் 866:-காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்.

பொருள் :- ஒருவன் உண்மை காணாத சினம் உடையவனாய், மிகப் பெரிய ஆசை உடையவனாய் இருந்தால், அவனுடைய பகை விரும்பி மேற்கொள்ளப்படும்.
 

Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-

வலிமையை எதிர்த்து மென்மையை தவிர்ப்பது பகைக்கு சிறப்பு. அன்பும், நல்ல துணையும், சுய சிந்தனையும் இல்லாதவன் பகை வீண். அச்சமும், அமைதியும், கொடுக்கும் பண்பும் இல்லாதவன் பகைவர்க்கு எளிமையானவன். அறியாமலேயே வெறுப்பும், பேராசையும் உள்ளவனை பகையாக கொள்ள வேண்டும். கூடி இருந்தே அழிக்க நினைப்பவனை பகைமை பாராட்ட வேண்டும். பகை உணர்வு உள்ளவனுக்கு இன்பம் அறிவற்று அஞ்சும் ஒருவரே. கல்லாதவன் யாருடனும் கூடி இருக்கும் தகுதியற்றவன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top