பிரிவு : பொருட்பால், இயல் : நட்பியல், அதிகாரம் : 84. பேதைமை, குறள் எண்: 833 & 835.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 833:- நாணாமை நாடாமை நார்இன்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.

பொருள் :- தகாதவற்றிற்கு நாணாமலிருத்தல், தக்கவற்றை நாடாமலிருத்தல், அன்பு இல்லாமை, நன்மை ஒன்றையும் விரும்பாமை அகியவை பேதையின் தொழில்கள்.
 
Sasideera

Well-Known Member
குறள் 835:- ஒருமைச் செயல்ஆற்றும் பேதை எழுமையும்
தான்புக்கு அழுந்தும் அளறு.

பொருள் :- எழுபிறப்பிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத் துன்பத்தைப் பேதை தன் ஒரு பிறவியில் செய்து கொள்ள வல்லவனாவான்.
 
Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-

இவ்வதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள பேதைமைக்கு ஒன்றுமறியாத முட்டாள்தனம் எனப் பொருள் கொள்ளமுடியாது. செய்வன தவிர்வனவற்றுள் ஒன்றும் அறியாமை பேதைமை. என்ன கற்றிருந்தாலும் இதைச் செய்தால் இது நடக்கும் என்பதை அறியாதவன் அல்லது அதை ஒத்துக்கொள்ளாதவன் பேதையாவான். அவன் செய்வனவெல்லாம் குற்றமாகிறது. பேதை பொதுவிலிருந்து விலகிய நடத்தையுடையவன், தனிப்போக்குக் கொண்டவன்.
 
Manimegalai

நன்று(y)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top