பிரிவு : பொருட்பால், இயல் : நட்பியல், அதிகாரம் : 81. பழைமை, குறள் எண்: 803 & 809.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 803:- பழகிய நட்புஎவன் செய்யும் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை?

பொருள் :- பழகியவர் உரிமைபற்றிச் செய்யும் செயலைத் தாம் செய்தது போலவே கருதி உடன்படாவிட்டால் அவரோடு தாம் பழகிய நட்பு என்ன பயன் தரும்?
 
Sasideera

Well-Known Member
குறள் 809:- கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு.

பொருள் :- உரிமை கெடாமல் தொன்றுதொட்டு வந்த உறவு உடையவரின் தொடர்பைக் கைவிடாதவரை உலகம் விரும்பிப் போற்றும்.
 
Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-

நெடுங்கால நட்புத் தொடர்பைப் பழைமை என்ற சொல்லால் குறித்துப் பழைய நட்பின் பெருமைகளை நன்கு உரைக்க, ஓர் அதிகாரமே அமைக்கின்றார் வள்ளுவர். நட்பு இலக்கணம் கூறி, ஆய்ந்து ஆய்ந்து நட்புச் செய்க என்று அறிவுறுத்தியபின், இங்கு, உரிமையோடு கூடிய மனித உறவுகளில் உயரிய வகையான அந்த நட்புறவு பற்றி சொல்கிறார். இதன் பின் தீநட்பு, கூடாநட்பு என்ற தலைப்புகளில் இரு அதிகாரங்கள் அமைவதால் இப்பாடல் தொகுதியை 'நல்ல நட்பு' அதிகாரம் என அழைக்கலாம். எந்த நிலையிலும் பழையாரை விட்டுக் கொடுக்காமல் பழகுபவரை எல்லோரும் விரும்புவர் என்கின்றன அதிகாரப் பாடல்கள்.
 
fathima.ar

Semma
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top