பிரிவு : பொருட்பால், இயல் : அரசியல், அதிகாரம் : 60. ஊக்கமுடைமை, குறள் எண்: 594&597.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 594:- ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையா னுழை.

பொருள் :- சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழி கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்.
 

Sasideera

Well-Known Member
குறள் 597:- சிதைவுஇடத்து ஒல்கார் உரவோர் புதையம்பின்
பட்டுப்பாடு ஊன்றும் களிறு.

பொருள் :- உடம்பை மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டும், யானை தன் பெருமையை நிலைநிறுத்தும்; அதுபோல், ஊக்கம் உடையவர் அழிவு வந்தவிடத்திலும் தளரமாட்டார்.
 

Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-

ஊக்கமுடைமை என்பது செயல் ஆற்றுவதில் தளர்ச்சியின்றி மன எழுச்சி உடைத்தாதலைக் குறிக்கும். செயலின் கண் ஆர்வமும் நிறைவேற்றிவிட வேண்டும் என்பதில் ஒருப்பாட்டையும் முயற்சியையும் உள்ளடக்கியது. ஒருவன் வாழ்வில் உயர்வடைவதற்கு ஊக்கம் இன்றியமையாததாக வேண்டப்படுகிறது. ஊக்கமில்லையெனில் போட்டிநிறைந்த உலகில் வெற்றி பெற்று முன்னிலையில் நிற்க இயலாது. இவ்வதிகாரத்தைத் தொடர்ந்துவரும் மடியின்மை, ஆள்வினை உடைமை, இடுக்கணழியாமை என்பனவும் ஊக்கமுடைமைக்கு நெருங்கிய தொடர்புடையனவே.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top