பிரிவு : அறத்துப்பால், இயல் : துறவறவியல், அதிகாரம் : 30. வாய்மை, குறள் எண்: 292 & 295.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 292:- பொய்ம்மையும் வாய்மை இடத்த, புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.

பொருள் :- குற்றம் தீர்ந்த நன்மையை விளைக்குமானால் பொய்யான சொற்களும் வாய்மை என்று கருதத்தக்க இடத்தைப் பெறுவனவாம்.

குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால் உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம்.
 

Sasideera

Well-Known Member
குறள் 295:- மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம்செய் வாரின் தலை.

பொருள் :- ஒருவன் தன் மனத்தோடு பொருந்த உண்மை பேசுவானானால், அவன் தவத்தோடு தானமும் ஒருங்கே செய்வாரைவிடச் சிறந்தவன்.
 

Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-
வாய்மை என்பது பொய்சொல்லாமையைக் குறிக்கும். எதுவாய் இருந்தாலும் தீமை இல்லாதது வாய்மை; குற்றமற்ற நன்மை பயக்குமேல் பொய்யும் வாய்மையே என்பன வாய்மைக்கு வள்ளுவர் தரும் வரையறைகள். விதி விலக்கின்றி கடைப்பிடிக்க வேண்டிய நெறிகள் பொய்யாமையும் கொல்லாமையும் ஆகிய இரண்டும் ஆகும்; அவற்றில் பொய்யாமையை அறங்களெல்லா வற்றுள்ளும் நல்லது என்று கூறுகிறார் அவர். வாய்மையைவிடச் சிறந்தது வேறு எதுவும் இல்லை. ஒருவர் வாய்மையின் வழியில் தவறாமல் செல்வாரேயானால் ஏனைய நன்மை எதையும் செய்ய வேண்டாம். ஏனென்றால் மற்றவை எல்லாம் அதனுள் அடங்கும் என்பது வள்ளுவரது வாய்மை மொழி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top