பிரிவு : அறத்துப்பால், இயல் : துறவறவியல், அதிகாரம் : 27.தவம், குறள் எண்: 261 & 266.

Sasideera

Well-Known Member
#1
குறள் 261:- உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு.

பொருள் :- தான் பெற்ற துன்பத்தைப் பொறுத்தலும் மற்ற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகியவைகளே தவத்திற்கு வடிவமாகும்.

பிறரால் தனக்குச் செய்யப்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வது, துன்பம் செய்தவர்க்கும் துன்பம் செய்யாதிருப்பது என்னும் இவ்வளவுதான், தவம் என்பதன் இலக்கணம்.
 
Sasideera

Well-Known Member
#2
குறள் 266:- தவஞ்செய்வார் தம்கருமம் செய்வார்மற்று அல்லார்
அவஞ்செய்வார் ஆசையுள் பட்டு.

பொருள் :- தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமைகளைச் செய்கின்றவர் ஆவர்; அவர் அல்லாத மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டு வீண்முயற்சி செய்கின்றவரே.

தவத்தைச் செய்பவரே தமக்குரிய செயலைச் செய்தவர்; மற்றவர்களோ ஆசை வலைப்பட்டு வீணானவற்றைச் செய்தவர் ஆவர்.
 
Sasideera

Well-Known Member
#3
அதிகார விளக்கம் :-

இவ்வதிகாரத்தில் முயற்சியே தவம்; தம் கருமம் செய்வதே தவம் என்கிறார் வள்ளுவர். அவர் சொல்லும் தவம் கடமை ஆற்றும் முயற்சியான் வரும் துன்பங்களை ஒரு நோன்பு போலத் தாங்கிக் கொள்ளுதலும் அம்முயற்சியில் வெற்றி காணும் நோக்கில் மற்றவர்களுக்கு ஊறு நேராவண்ணம் வாழ்வியல் மேற்கொள்ளலுமாம். தவம் என்பது துறவு மேற்கொண்டவர்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல என்பது பெறப்பட்டது.
குறளில் துறவற இயல் என்று வகுக்கப்பட்டதில் இல்லறத்தார்க்கும் துறவறத்தார்க்கும் பொதுவான அதிகாரங்கள் பல உள. அவற்றில் இதுவும் ஒன்று.
 
Advertisement

Sponsored