பிரிவு : அறத்துப்பால், இயல் : துறவறவியல், அதிகாரம் : 25. அருளுடைமை, குறள் எண்: 248 & 250.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 248:-
பொருள்அற்றார் பூப்பர் ஒருகால் அருள்அற்றார்
அற்றார்மற்று ஆதல் அரிது.

பொருள் :-
பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர்; அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயன் அற்றவரே; அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை.

பொருள் இல்லாமல் ஏழையாய்ப் போனவர் திரும்பவும் செல்வத்தால் பொலிவு பெறலாம்; அருள் இல்லாமல் போனவரோ, போனவர்தாம்; மீண்டும் அருள் உள்ளவராய் ஆவது கடினம்.
 

Sasideera

Well-Known Member
குறள் 250:- வலியார்முன் தன்னை நினைக்க,தான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து.

பொருள் :- (அருள் இல்லாதவன்) தன்னைவிட மெலிந்தவர்மேல் துன்புறுத்தச் செல்லும்போது, தன்னைவிட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும்.

அருள் இல்லாதவன் , தன்னைவிட எளிய மனிதரைத் துன்புறுத்தச் செல்லும்போது, தன்னைவிட பலசாலி தன்னைத் துன்புறுத்த வந்தால் அவருக்கு முன் தான் அஞ்சி நிற்பதாக எண்ணிப் பார்க்க.
 

Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-

அன்பு தொடர்புடையாரிடத்து காட்டப்படும் பற்று; அருள் என்பது தொடர்பில்லாத பிற உயிர்களிடத்தும் பரந்து செல்லும் கருணை அல்லது இரக்கக் குணம் ஆகும். இது பிற உயிர்களின் துயர் போக்குதல், பிற உயிர்களுக்குத் துன்பம் இழையாமை, பிற உயிர்களைக் கொல்லாமை ஆகிய பண்புகளைக் குறித்து நிற்கும். மன்னுயிர் ஓம்பும் மாண்புடைய இப்பண்புடையாரை அருளாளர் என்று மொழிவர். மனிதநேயம் என்பதும் அருளின்பாற்படுவதே. ஆடு, மாடு போன்ற மெல்லிய உயிர்களிடம் இரக்கம் காட்டுவதும் அருட்செயல் ஆகும். அருள் ஆள்பவர் வன்முறையை முற்றிலும் நீக்கியவராவர். நம்மிலும் வலிமையற்ற மனிதர்களிடம் மாறுபாடு கொள்ளும்போது எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற எளியவழி ஒன்று கற்றுத்தரப்படுகிறது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top