பிரிவு : அறத்துப்பால், இயல் : இல்லறவியல், அதிகாரம் : 22. ஒப்புரவறிதல், குறள் எண்: 215 & 220.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 215:- ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.

பொருள் :- ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம், நீரால் நிறைந்தாற் போன்றது.

உலகின் வளர்ச்சிப் போக்கை அறிந்து செயற்படும் பேர் அறிவாளனின் செல்வம், நீர் நிறைந்த ஊருணி எல்லார்க்கும் பொதுவாவது போல் பொதுவாகும்.
 

Sasideera

Well-Known Member
குறள் 220:- ஒப்புரவி னால்வரும் கேடுஎனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்கது உடைத்து.

பொருள் :- ஒப்புரவால் கேடு வரும் என்றால், அக்கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக் கொள்ளும் தகுதி உடையதாகும்.

இருப்பதைப் பிறர்க்குக் கொடுத்துவிட்டால், நாளை நமக்குத் தீமை வருமே என்று சொன்னால், தன்னையே விலையாகக் கொடுத்து அந்தத் தீமை வாங்கத்தக்கதே.
 

Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-

ஒப்புரவுஅறிதல் என்பது உலக ஒழுக்கத்தை அறிந்து ஒருவர்க்கொருவர் உதவி செய்து ஒத்துப்பழகுவதைக் குறிப்பது. இது தானே அறிந்து செய்யும் தன்மையதாதலால் ஒப்புரவு-அறிதல் எனப்பட்டது. அன்பின் அகத்தூண்டுதலால் விளைவது ஒப்புரவு. அது ஒருவன் தான் வாழும் சமுதாயத்தோடு தன்னை அடையாளம் கண்டு பொதுக்கொடை வழங்குவதும் பொதுநலத் தொண்டு ஆற்றுவதும் ஆம். தான் சமுதாயத்திற்கு இன்றியமையாது செய்யும் கடமை என்பதை உணர்ந்து ஒப்புரவாளன் ஊருணி, பயன்மரம், மருந்துமரம் இவை போல உலகத்துக்குப் பயன்படும் வகையில் நற்பணிகள் செய்வான் என்கிறது அதிகாரப் பாடல்கள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top