பாரதியாரின் நினைவு தினம்.

Advertisement

Joher

Well-Known Member
என்னோட favorite.......

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந் தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்
அற்பமாயைகளோ?-உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

வானகமே இளவெயிலே மரச்செறிவே
நீங்களெல்லாம் கானலின் நீரோ? வெறுங் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?

காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்
சோலை பொய்யாமோ? இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?

காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பதன்றோ?
வீண்படு பொய்யிலே நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதில்லை
காண்பது சக்தியாம் இந்தக் காட்சி நித்தியமாம்...

 

Uma Ramesh

Well-Known Member
நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும் - சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?
 

jeevaranjani

Well-Known Member
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி,இவ் வையம் தழைக்குமாம்;
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாட்கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்கடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ!
 

sveni

Well-Known Member
மனதிலுறுதி வேண்டும், வாக்கினி லேயினிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்; கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்; தனமும் இன்பமும் வேண்டும், தரணியிலே பெருமை வேண்டும். கண் திறந்திட வேண்டும், காரியத்தி லுறுதி வேண்டும்; பெண் விடுதலை வேண்டும், பெரிய கடவுள் காக்க வேண்டும், மண் பயனுற வேண்டும், வானகமிங்கு தென்பட வேண்டும்; உண்மை நின்றிட வேண்டும். ஓம் ஓம் ஓம் ஓம்
 

fathima.ar

Well-Known Member
வாழ்க நலம்...



இன்றைக்கு மகாகவி பாரதியாரின் நினைவு நாள்...

ஆகவே கவியின் நினைவுகள் சில..








மகாகவி பாரதியாரின் நாவில் கலைமகள் குடிகொண்டிருந்தார் என்பது உண்மையான சத்திய வாக்கு. பொய்யே பேசாதவர், அவர் சொல்லும் வாக்கு ஒவ்வொன்றும் அருள் வாக்கு என்பதை பல நேரங்களில் அவர் நிரூபித்திருக்கிறார்.

பாரதி புதுவையில் குடியிருந்த ஈஸ்வரன் தர்மராஜா கோயில் தெருவில் அடுத்த வீட்டில் வசித்தவர் செல்வந்தர் பொன்னு முருகேசம் பிள்ளை.

பாரதியார் குடும்பத்தின் தேவையறிந்து அவ்வப்போது பல உதவிகளைச் செய்து வந்தவர்கள் பிள்ளையும் அவரது மனைவியும். யாரும் வந்து உதவி செய்கிறேன் என்று சொல்லி செய்தால் அதை சுயமரியாதை காரணமாக பாரதி நிராகரித்து விடுவது வழக்கம்.

அவருக்கு உதவி செய்ய விரும்புகிறவர்கள் அவர் அறியாமல் அந்த உதவிப் பொருட்களை அவர் வீட்டில் வைத்துவிட்டுச் சென்றுவிட வேண்டும்.

நெசவுத் தொழில் செய்துவந்த அவருடைய நண்பரும், பாரதி குயில் பாட்டைப் பாடிய மாந்தோப்புக்குச் சொந்தக்காரரும், பாரதியால் வெல்லச்சுச் செட்டியார் என்று அன்போடு அழைக்கப்பட்ட நண்பர் கூட பாரதிக்குப் பண உதவி செய்யும்போது அவர் அறியாமல் பணத்தை அவர் வீட்டில் வைத்துவிட்டு வந்து விடும் வழக்கமுடையவர்.

பாரதியார் வீட்டில் சமையலுக்கு அரிசியோ, காய்கறிகளோ ஒரு பையில் போட்டு ஒருவரும் அறியாமல் அவர் வீட்டு சமையல் அறையில் வைத்து விடுவாராம் பொன்னு முருகேசம்பிள்ளையின் மனைவி.

அப்படிப்பட்டவரின் மகன் ராஜாபாதர் என்பவர் படிப்பதற்காக பிரான்சு நாட்டிற்குச் சென்றார். அப்போது முதல் உலக யுத்தம் முடியும் தருவாயில் இருந்தது.
வெகுகாலம் ஆகிவிட்டபடியால் தன் மகனைப் பார்க்க தந்தை முருகேசம் பிள்ளையின் மனம் துடித்துக் கொண்டிருந்தது. மகனுடைய பிரிவு அவரை மிகவும் துன்புறுத்தியது.

அப்போது ராஜாபாதர் ஊர் திரும்புவதாக ஒரு செய்தி வந்தது, தந்தைக்கு அளவிடமுடியாத மகிழ்ச்சி. தொடர்ந்து சில நாட்களுக்குள் ராஜாபாதர் பயணம் செய்த கப்பல் நடுக்கடலில் உடைந்துவிட்டது என்ற செய்தி இடிபோல வந்து பிள்ளையைத் தாக்கியது.

மனம் பேதலித்த பொன்னு முருகேசம் பிள்ளை நடமாட்டம் இல்லாமல் படுத்த படுக்கையாக தன் மகன் நினைவோடு கிடந்தார். பலரும் பல விதங்களில் அவரைத் தேற்ற முயன்றும் ஒன்றும் பயனளிக்கவில்லை.

மகன் பயணம் செய்த கப்பல் கடலில் மூழ்கவில்லை என்றொரு பொய்த் தந்தியைத் தயார் செய்து கொண்டு வந்து காட்டியும் பார்த்துவிட்டனர்.

ஒன்றுக்கும் அவர் மனம் தேறவில்லை. கடைசியில் பாரதியார் வந்து சொல்லட்டும் நான் நம்புகிறேன் என்றார் பொன்னு முருகேசம் பிள்ளை.

அவர் உடல் நலம் தேறவேண்டுமென்கிற நல்ல எண்ணத்தில் சுற்றத்தார் பாரதியாரிடம் வந்து ராஜாபாதருக்கு ஒரு கெடுதலும் நேரவில்லை என்று பிள்ளையிடம் சொல்லுமாறு வேண்டிக் கொண்டனர்.

செய்வதறியாது திகைத்த பாரதி எப்படி இப்படியொரு பொய்யைச் சொல்லி ஒரு நல்ல மனிதரை ஏமாற்றுவது என்று தயங்கினார்.

இதுபோன்ற இக்கட்டான சந்தர்ப்பங்களில் பொய் சொல்வது தவறில்லை; மகாபாரதத்தில்கூட தர்மரை 'அஸ்வத்தாமன்' இறந்து விட்டதாகப் பொய் சொல்லச் சொன்னபோது தயக்கத்துடன் அவர் "அஸ்வத்தாமா ஹத: குஞ்சர:" (அஸ்வத்தாமன் எனும் யானை இறந்தது) என்று குஞ்சர: எனும் சொல்லை மெல்லச் சொல்லிவிடவில்லையா.

ஆகவே முருகேசம் பிள்ளையின் உயிரைக் காக்கவேண்டுமானால் அப்படியொரு பொய்யைச் சொல்வதில் தவறில்லை என்று கருதி, அவரிடம் சென்று "ஐயா! கப்பலே கவிழ்ந்தாலும் பராசக்தியருளால் நம் ராஜாபாதருக்கு ஒரு கெடுதலும் நேராது. அதற்கு நான் ஜவாப்தாரி" என்று ஆறுதல் கூறினாராம்.

எனினும் மனத் துன்பம் காரணமாக பிள்ளை ஓரிரு நாட்களில் உயிர் துறந்து விட்டார்.


அப்படியானால் கவியின் வாக்கு பொய்த்து விட்டதா? இல்லை, கப்பல் உடைந்த போதும் ராஜாபாதர் உயிர் பிழைத்து புதுவைக்கு வந்து சேர்ந்தார்.

மகாகவி சொன்ன வாக்கு "ஐயா! நாம் ஜவாப்தாரி; பராசக்தி காப்பாற்றுவாள்" என்று அவர் சொன்னதை பராசக்தி நிறைவேற்றி விட்டாள். இந்த அதிசயத்தைச் சொல்லிச்சொல்லி அனைவரும் மகிழ்ந்து போனார்கள்.


(இணையத்திலிருந்து )










குருவிப் பாட்டு

அருவிபோலக் கவி பொழிய --
எங்கள் அன்னை பாதம் பணிவேனே 1
குருவிப் பாட்டை யான்பாடி --
அந்தக் கோதைபாதம் பணிவேனே.


கேள்வி

சின்னஞ்சிறு குருவி -- நீ செய்கிற வேலையென்ன? 2
வன்னக் குருவி -- நீ வாழும் முறை கூறாய்!

குருவியின் விடை

கேளடா மானிடவா --
எம்மில் கீழோர் மேலோர் இல்லை 3
மீளா அடிமை யில்லை --
எல்லோரும் வேந்தரெனத் திரிவோம்.


உணவுக்குக் கவலையில்லை --
எங்கும் உணவு கிடைக்குமடா 4
பணமும் காசுமில்லை --
எங்குப் பார்க்கினும் உணவேயடா!

சிறியதோர் வயிற்றினுக்காய் --
நாங்கள் ஜன்ம மெல்லாம் வீணாய் 5
மறிகள் இருப்பதுபோல் --
பிறர் வசந்தனில் உழல்வதில்லை.

காற்றும் ஒளியுமிகு --
ஆகாயமே எங்களுக்கு 6
ஏற்றதொரு வீடு --
இதற்கெல்லை யொன்றில்லையடா!

வையகம் எங்குமுளது --
உயர்வான பொருளெல்லாம் 7
ஐயமின் றெங்கள் பொருள் --
இவைஎம் ஆகார மாகுமடா.

ஏழைகள் யாருமில்லை --
செல்வர் வறியோர் என்றுமில்லை 8
வாழ்வுகள் தாழ்வுமில்லை --
என்றும் மாண்புடன் வாழ்வமடா.

கள்ளம் கபடமில்லை --
வெறும் கர்வங்கள் சிறுமையில்லை 9
எள்ளற்குரிய குணம் --
இவை யாவும் உம் குலத்திலடா.

களவுகள் கொலைகளில்லை --
பெருங் காமுகர் சிறுமையில்லை 10
இளைத்தவர்க்கே வலியர் --
துன்பம் இழைத்துமே கொல்லவில்லை.


சின்னஞ்சிறு குடில்லி --
மிகச் சீரழி வீடுகளில் 11
இன்னலில் வாழ்ந்திடுவீர் --
இது எங்களுக்கு இல்லையடா.


[பாட பேதம்]: செல்வம் ஏறியோர்}


பூநிறை தருக்களிலும் --
மிகப் பொலிவுடைச் சோலையிலும் 12
தேனிறை மலர்களிலும் --
நாங்கள் திரிந்து விளையாடுவோம்.

குளத்திலும் ஏரியிலும் --
சிறு குன்றிலும் மலையினிலும் 13
புலத்திலும் வீட்டினிலும் --
எப் பொழுதும் விளையாடுவோம்.

கட்டுகள் ஒன்றுமில்லை --
பொய்க் கறைகளும் ஒன்றுமில்லை 14
திட்டுகள் தீதெங்கள் --
முதற் சிறுமைகள் ஒன்றுமில்லை.

குடும்பக் கவலையில்லை --
சிறு கும்பித்துயருமில்லை 15
இடும்பைகள் ஒன்றுமில்லை --
எங்கட் கின்பமே என்றுமடா.

துன்பமென்றில்லையடா --
ஒரு துயரமும் இல்லையடா 16
இன்பமே எம் வாழ்க்கை --
இதற்கு ஏற்றமொன்றில்லையடா.

காலையில் எழுந்திடுவோம் --
பெருங்கடவுளைப் பாடிடுவோம் 17
மாலையும் தொழுதிடுவோம் --
நாங்கள் மகிழ்ச்சியில் ஆடிடுவோம்.

தானே தளைப்பட்டு --
மிகச் சஞ்சலப்படும் மனிதா 18
நானோர் வார்த்தை சொல்வேன் --
நீமெய்ஞ்ஞானத்தைக் கைக்கொள்ளடா.

கெடுதலை ஒன்றுமில்லை --
உன் கீழ்மைகள் விடுதலையைப் பெறடா --
நீ விண்ணவர் நிலைபெறடா 19
உதறிடடா.

இன்பநிலை பெறடா! --
உன் இன்னல்கள் ஒழிந்ததடா 20
துன்பம் இனியில்லை --
பெருஞ் சோதி துணையடா.

அன்பினைக் கைக் கொள்ளடா --
இதை அவனிக்கிங்கு ஓதிடடா 21
துன்பம் இனியில்லை --
உன் துயரங்கள் ஒழிந்ததடா.

சத்தியம் கைக்கொள்ளடா --
இனிச் சஞ்சலம் இல்லையடா 22
மித்தைகள் தள்ளிடடா --
வெறும் வேஷங்கள் தள்ளிடடா.

தர்மத்தைக் கைக்கொள்ளடா --
இனிச் சங்கடம் இல்லையடா. 23
கர்மங்கள் ஒன்றுமில்லை --
இதில் உன் கருத்தினை நாட்டிடடா.

அச்சத்தை விட்டிடடா --
நல் ஆண்மையைக் கைக்கொள்ளடா 24
இச் சகத்தினிமேலே நீ --
என்றும் இன்பமே பெறுவையடா.











வாழ்க கவியின் புகழ்..


அன்புடன்
அனுபிரேம்

Ippo thaan naan first time therinjukkuren..
Super
 

bavi1308

Well-Known Member
எனக்கு மிகப் பிடித்த பாரதியார் பாடல்..
சிந்து நதியின் .......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top