பாசி பயிறு கடையல்

Advertisement

Indira75

Active Member
முழு பாசிப்பயிறு - 2 கை அளவு
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 4 அல்லது 5
தக்காளி. - 1 சிறியது
சீரகம் - 1 தேக்கரண்டி
தனியா. - 1 தேக்கரண்டி
பூண்டு. - 2 பல்லு
கருவேப்பிலை. - 1 கொத்து
எண்ணெய். - 2டீஸ்பூன்
மஞ்சள் தூள். - சிறிது
உப்பு. - சிறிது

பாசிபயிரை மஞ்சள் தூள் எண்ணெய் சேர்த்து வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்,பூண்டு வதங்கியதும்
சீரகம், மல்லி சேர்த்து வதக்கி , வேகவைத்த பாசிபயிரில் கொட்டி, உப்பு சேர்த்து மண்சட்டியில் மத்து வைத்து மசித்து எடுத்தால் பாசிப்பயிறு கடயல் ரெடி. சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, சப்பாத்தி க்கு
தொட்டுக்கொள்ள சத்தான சுவையான பாசிப்பயிறு கடையல் மிகவும் சுவையாக இருக்கும்.
 

banumathi jayaraman

Well-Known Member
சூப்பர் ரெசிப்பி, இந்திரா டியர்
எனக்கு ரொம்பவும் பிடித்த டிஷ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top