பருப்பு உருண்டை குழம்பு

Advertisement

Bhuvana

Well-Known Member
பருப்பு உருண்டை குழம்பு:

தேவையான பொருட்கள்:

புளி - 1 நெல்லிக்காய் அளவு
தக்காளி - 1
பூண்டு - 8 பல் {இடித்து கொள்ளவும்}
சின்ன வெங்காயம் - 6
மஞ்சள் தூள் - 1 டீ ஸ்பூன்
சாம்பார் பொடி - 2 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

அரைத்து கொள்ள:

சீரகம் - 2 டீ ஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 டீ ஸ்பூன்
பருப்பு உருண்டை செய்ய:
கடலை பருப்பு - 1 கப் {1/2 மணி நேரம் வெந்நீரில் ஊற வைத்தது}
மிளகாய் வற்றல் - 8
சோம்பு - 1 டீ ஸ்பூன்
சீரகம் - 1 டீ ஸ்பூன்
தேங்காய் துருவல் - 3 டீ ஸ்பூன்
வெங்காயம் - 1 {பொடியாக நறுக்கியது}
கறிவேப்பில்லை - 1 கைப்பிடியளவு {பொடியாக நறுக்கியது}
உப்பு - தேவையான அளவு

ஊறிய கடலை பருப்பை, மிளகாய் வற்றல், சோம்பு, சீரகத்துடன் வடைக்கு அரைப்பது போல மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
இதனுடன் தேங்காய் துருவல், கறிவேப்பில்லை, வெங்காயம், உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒரு கடாயில் 2 நிமிடம் லேசாக வதக்கவும். நீர் இருந்தால் எடுப்பதற்காக.

இளஞ்சூட்டில் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தனியே வைத்து கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து, சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.

புளிக்கரைசல் சேர்த்து, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் பொடி, உப்பு மற்றும் அரைத்த விழுதாகி சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

பச்சை வாசனை போய் குழம்பு நன்றாக கொதிக்க ஆரமித்தவுடன் அடுப்பை குறைந்த தீயில் வைத்து ஒரு ஒரு உருண்டையாக உள்ளே போடவும். குழம்பு கொஞ்சம் நீர்த்தே இருக்கலாம்.

ஒரு ஒரு உருண்டையாக வெந்து மேலே வர அடுத்ததை போடவும். மொத்தமாக உருண்டைகளை போட்டால் அது பிரிந்து குழம்புடன் கரைந்து போக வாய்ப்புள்ளது.

ஒவ்வொரு உருண்டையாக இரு புறமும் திருப்பி வேகவிட்டு, கொத்தமல்லி இலை தூவி அணைக்கவும். சூடான சாதத்துடன் சாப்பிட சுவையான பருப்பு உருண்டை குழம்பு தயார்.

15542291_968783263227619_1435954551348225928_n.jpg

15590283_968783343227611_4199485160734056520_n.jpg

15622095_968783373227608_4367238307291353869_n.jpg
 
Meenu25

Member
பருப்பு உருண்டை குழம்பு:

தேவையான பொருட்கள்:

புளி - 1 நெல்லிக்காய் அளவு
தக்காளி - 1
பூண்டு - 8 பல் {இடித்து கொள்ளவும்}
சின்ன வெங்காயம் - 6
மஞ்சள் தூள் - 1 டீ ஸ்பூன்
சாம்பார் பொடி - 2 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

அரைத்து கொள்ள:

சீரகம் - 2 டீ ஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 டீ ஸ்பூன்
பருப்பு உருண்டை செய்ய:
கடலை பருப்பு - 1 கப் {1/2 மணி நேரம் வெந்நீரில் ஊற வைத்தது}
மிளகாய் வற்றல் - 8
சோம்பு - 1 டீ ஸ்பூன்
சீரகம் - 1 டீ ஸ்பூன்
தேங்காய் துருவல் - 3 டீ ஸ்பூன்
வெங்காயம் - 1 {பொடியாக நறுக்கியது}
கறிவேப்பில்லை - 1 கைப்பிடியளவு {பொடியாக நறுக்கியது}
உப்பு - தேவையான அளவு

ஊறிய கடலை பருப்பை, மிளகாய் வற்றல், சோம்பு, சீரகத்துடன் வடைக்கு அரைப்பது போல மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
இதனுடன் தேங்காய் துருவல், கறிவேப்பில்லை, வெங்காயம், உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒரு கடாயில் 2 நிமிடம் லேசாக வதக்கவும். நீர் இருந்தால் எடுப்பதற்காக.

இளஞ்சூட்டில் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தனியே வைத்து கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து, சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.

புளிக்கரைசல் சேர்த்து, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் பொடி, உப்பு மற்றும் அரைத்த விழுதாகி சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

பச்சை வாசனை போய் குழம்பு நன்றாக கொதிக்க ஆரமித்தவுடன் அடுப்பை குறைந்த தீயில் வைத்து ஒரு ஒரு உருண்டையாக உள்ளே போடவும். குழம்பு கொஞ்சம் நீர்த்தே இருக்கலாம்.

ஒரு ஒரு உருண்டையாக வெந்து மேலே வர அடுத்ததை போடவும். மொத்தமாக உருண்டைகளை போட்டால் அது பிரிந்து குழம்புடன் கரைந்து போக வாய்ப்புள்ளது.

ஒவ்வொரு உருண்டையாக இரு புறமும் திருப்பி வேகவிட்டு, கொத்தமல்லி இலை தூவி அணைக்கவும். சூடான சாதத்துடன் சாப்பிட சுவையான பருப்பு உருண்டை குழம்பு தயார்.

View attachment 1604

View attachment 1605

View attachment 1606
Pakkavae sema yaa irukku kaaa
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top