படித்ததில் பிடித்தது 1

mila

Writers Team
Tamil Novel Writer
#1
டுமாறும் பொழுது தாங்கிப் பிடிப்பவனும், தடம் மாறும் பொழுது தட்டிக் கேட்பவனுமே உண்மையான நண்பன்.

உங்களைப் புரிந்து கொண்டவர்கள் கோபப்படுவதில்லை. உங்களைப் புரியாதவர்களின் கோபத்தை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை.

குழந்தைகளிடம் பழகிப் பாருங்கள். நாம் எப்படி இருந்தோம் என தெரியும். வயதானவர்களிடம் பழகிப் பாருங்கள். நாம் எப்படி இருக்கப் போகிறோம் என தெரியும்.

ஒருவர் உன்னைத் தாழ்த்திப் பேசும் போது ஊமையாய் இரு. புகழ்ந்து பேசும் போது செவிடனாய் இரு. எளிதில் வெற்றி பெறுவாய்.

சங்கடங்கள் வரும்போது தடுமாறாதே. சந்தர்ப்பங்கள் வரும் போது தடம் மாறாதே.

வளமுடன் வாழும் போது நண்பர்கள் உன்னை அறிவார்கள். பிரச்சினைகள் வரும் பொழுது நண்பர்களை நீ அறிவாய்.

ஒருமுறை தோற்றுவிட்டால் அதற்கு நீ ஒருவரைக் காரணம் சொல்லலாம். தோற்றுக் கொண்டே இருந்தால் அதற்கு நீ மட்டுமே காரணம்.

நீ சிரித்துப் பார்! உன் முகம் உனக்குப் பிடிக்கும். மற்றவர்களை சிரிக்க வைத்துப் பார். உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்.

அவசியம் இல்லாததை வாங்கினால், விரைவில் அவசியமானதை விற்க நேரிடும்.

வாழ்க்கையில் தோற்றவர்கள் இரண்டு பேர். ஒருவர், யார் பேச்சையும் கேட்காதவர். மற்றொருவர், எல்லோர் பேச்சையும் கேட்பவர்.

எண்ணங்களை அழகாக மாற்ற முயற்சி செய்தாலே போதும். வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறிவிடும்.

நீ ஒருவனை ஏமாற்றிவிட்டால் அவனை முட்டாள் என்று நினைக்காதே. நீ ஏமாற்றியது அவன் உன்மேல் வைத்த நம்பிக்கையையே.

அமைதியாய் இருப்பவனுக்குக் கோபப்படத் தெரியாது என்பதல்ல அர்த்தம். கோபத்தை அடக்கி ஆளும் திறமை படைத்தவன் என்பதே அர்த்தம்.

மரியாதை வயதைப் பொறுத்து வருவதில்லை. அவர்கள் செய்யும் செயலைப் பொறுத்தே வருகின்றன.
 
Last edited:

Advertisement

Sponsored