நேசம் மறவா நெஞ்சம்-31Nesam Marava Nenjam(Final)

Advertisement

Meena. J

New Member
விடிந்தால் ராமனுக்கும் மல்லிகாவுக்கும் திருமணம்....... இவனும் என்ன பிட்டை போட்டாலும் மல்லிகாவோடு பேச முடியவில்லை...... மெசேஜ் அனுப்பினாலும் எந்த ரிப்ளையும் அனுப்பமாட்டாள்...... ராமனும் இருடி தாலிகட்டவும் இங்க தானே வந்தாகனும்....... உனக்கு இருக்கு......காலையில் விடியற்காலை முகூர்த்தம் என்பதால் கயலுக்கு வேலை சரியாக இருந்தது...... சௌந்தர்யா அப்பத்தாவோடு படுத்துக்கொள்ள தன் மகனை தூளியில் தூங்க வைத்தாள்..... அப்போதுதான் கண்ணனும் எல்லாவேலையையும் முடித்துவிட்டு உள்ளேவர......குழந்தையை தொட்டிலில் போட்டு ஆட்டி கொண்டிருக்கவும் சத்தம் எழுப்பாமல் சென்று குளித்து வந்தவன்..... படுக்க தயாராக....”.என்னங்க சாப்புடலையா..... வாங்க சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.....”



“இல்லடா பசிக்கல.... கொஞ்சம் பால் மட்டும் எடுத்துட்டு வாரியா........”



“ந்தா... போறேங்க.... உங்க பையன் அழுதாமட்டும் லேசா ஆட்டிவிடுங்க தூங்கிருவான்.......”



“ம்ம்ம் சரிடி.....”



பாலை எடுத்துவர” நீ சாப்புட்டியா..... அம்மு தூங்கிட்டாளா......”



“சாப்புட்டேங்க.... நான் சாப்புடலைனா அத்த எங்க விடுறாங்க...... அம்மு அத்தகிட்ட தூங்கிட்டா.......”



பாலை குடித்தவன் மறுகையால் கயலை அணைக்க........



“என்னங்க தூக்கம் வருதுன்னு சொன்னிங்க.....”

“இல்ல ஒரு பத்து பதினைஞ்சு நாளா வேலை வேலைன்னு உன்கிட்ட வரவே இல்லை நீ பாட்டுக்கு கோவிச்சுகிட்டு உங்க அம்மாவீட்டுக்கு போயிட்டா நான் என்ன பண்ணுறது.....”



“ஏங்க அது நான் எப்ப சொன்னது..... அதயே ஓயாம சொல்லிக் காட்டுறிங்க.....”



“சரிவிடு இனிமே சொல்லி காட்டலை.... ஆனா நீயா என்கிட்ட வரணும்டி எப்ப பாத்தாலும் புள்ளைங்க பின்னாடியே திரியுற.... அப்ப அப்ப மச்சானையும் கொஞ்சம் கவனி.....” கயல் இப்போதெல்லாம் சௌமி அப்பா என்றுதான் அழைப்பாள்..... மச்சான் என்று கண்ணன் அழைக்க சொல்லி ஓயாமல் சொல்லுவான்.......தனியாக இருக்கும் போதுமட்டும்தான் மச்சான் என்று அழைப்பாள்......அதுவே கண்ணனுக்கு கிறக்கமாக இருக்கும்...... இன்றும் கயலை கட்டி அணைத்தவன்...”. குழந்தை பொறக்கவும் சும்மா கும்முன்னு ஆயிட்டடி......”அவள் கன்னத்தில் வாசம் பிடித்தவன் மெதுவாக கீழே இறங்கிவர...”.நமக்கு கல்யாணம். ஆகி ஆறு வருசம் ஆகப்போகுதுன்னு நம்ப முடியலடி..... நேத்துதான் கல்யாணம் பண்ணி அந்த மலையில தூக்கிக்கிட்டு இறங்கிவந்த மாதிரி இருக்கு.... இப்ப நமக்கு ரெண்டு புள்ளைங்க நம்ப முடியலடி...”.என்றபடி அவள் உதட்டில் மூழ்கி முத்தமிட்டவன்...” ஆனா நாளாக நாளாக உம்மேல ஆசைதான் கூடுது...முன்னெல்லாம் வேலைவிசயமா வெளியூருக்கு போனா ஒரு வாரம் தங்கிட்டு கூட வருவேன்.... இப்ப ஒரு நாளு இருக்க முடியல.....உன்நினைப்பும் புள்ளைங்க நினைப்பும் என்னைய இருக்க விடமாட்டேங்குதுடி....” வாய் பேசி கொண்டிருந்தாலும் தன் வேலையை அவள் மேனியில் பார்த்துக் கொண்டிருந்தது ......கயலும் கொஞ்ச கொஞ்சமாக தன்னை மறந்து கொண்டிருந்தாள் ....கண்ணனும் கயலும் ஒருவருக்குள் ஒருவர் கரைந்து கொண்டிருந்தனர்......



மறுநாள் கண்ணனுக்கு கயலுக்கும் நடந்த அதே குன்றக்குடி முருகன் கோவிலில் கல்யாணம்..... கயல் தன் மகளுக்கு பச்சைநிற பட்டுப்பாவாடை போட்டு தலையை அழகாக பின்னி பூ வைத்து விட்டிருந்தாள்....தன் மகனுக்கு டிரஸ் மாத்தி தன் அப்பத்தாவிடம் கொடுக்க....... காந்திமதி தன் கொள்ளு பேரனை கொஞ்சிக் கொண்டிருந்தார் .......கோவிந்தனும் வாசுவும் தன் வீட்டு கல்யாணம்போல எடுத்துச் செய்ய... கண்ணனுக்கு பெரிய உதவியாக இருந்தது.... தாமரையும் சுதாவும் மல்லிகாவுக்கு அலங்காரம் செய்துவிட மல்லிகா அப்படி ஒரு அழகாக இருந்தாள்.... தாமரை...கயல்... சுதா... மூவரும் ஒரே மாதிரி சேலையை எடுத்திருந்தனர்..... சுதா எல்லாருக்கும் மேக்கப் பண்ணியிருந்தாள்...... வாசு சுதாவை பக்கத்தூரில் ப்யூட்டி பார்லரில் டிரைனிங் எடுக்க சொல்லி சொந்தமாக உள்ளுரிலே ஒரு ப்யூட்டி பார்லர் வைத்து கொடுத்திருந்தான்....... கண்ணனும் குழந்தைகள் வளரவும் கயலை அவளுக்கு பிடித்த வேலைக்கு அனுப்புவதாக சொல்லியிருந்தான்..... கயல்தான்..... என்னால புள்ளைங்கள விட்டுட்டு வேலைக்கு போக முடியாது என சொல்லி தன் மாமியாரிடம் ரெக்கமன்டேசன் செய்ய சொல்லி சொல்லியிருந்தாள்......



கோவில் பூசாரியும் தாலியை முருகன் பாதத்தில் வைத்து எடுத்து கொடுக்க ராமனும் மல்லிகாவின் கழுத்தில் கட்டினான்...... அவள் கட்டியிருந்த மெரூன் வண்ண பட்டு அவள் சிவந்த நிறத்திற்கு மேலும் மெருகேற்றியது.....”.ஏய் ஜாமூன் என்னடி ரொம்ப பண்ணுற... .இந்த சேலையில அப்படியே ஜீராவுல ஊருன ஜாமூன் மாதிரி இருக்கடி.... இரு உன்னைய அப்புடியே கடிச்சு திங்கப் போறேன்......”



ராமனின் பேச்சில் மல்லிகாவின் முகம் குப்பென வெட்கத்தால் சிவந்தது.....” என்னடி இப்புடி மொகம் சிவக்குது.... அப்ப இம்புட்டு நேரம் சும்மா கோபமா இருக்குற மாதிரி நடிச்சியா...... நான் நீ கோபமா இருக்கியோன்னு ரொம்ப டென்சனா இருந்தன்டி......” மல்லிகா அவன் கையை மெதுவாக பிடித்தவள்....

.” கொஞ்ச நேரம் சும்மா இருங்க எங்க மச்சான்க எல்லாம் வந்திருக்கானுக......”.என்று அவர்களை பார்த்து சிரிக்க......



காண்டுடன் நிமிர்ந்தவன்.... அங்கு நின்று கொண்டிருந்த அந்த எட்டு.... பத்து.... பனிரென்டு வயது பையன்களை பார்த்து திருதிருவென முழித்தான்......”.ஹாய் மல்லிகா......”



“ஹாய் மச்சான்ஸ்.....”.



“ஏய் எங்கள கட்டிக்குரேன்னு சொன்ன இப்ப இவர கட்டியிருக்குற.......”

“இவரு ரொம்ப கெஞ்சுனாரு பாவம் போனா போகுதுன்னு கல்யாணம் பண்ணிகிட்டேன்.... விடுங்க உங்களுக்கு வேற பொண்ண பாப்போம்.......”



ராமன் மல்லிகாவின் கையை நன்றாக அழுத்தி....” இவனுகதான் உன்னோட மச்சான்களா......”



“ஆமா.... எல்லாரும் சூப்பர்ல.......”



“நீ அடங்க மாட்டடி...”என்றபடி அவள் தோளை சுற்றி கையை போட்டான்.....அனைவரும் படியில் இறங்கிவர.....முத்து உதுரி பூவை கொண்டு வந்தவன் தடுமாறி பூவை கொட்ட...... அது கரெக்டாக அருணாவின் தலையில் சிதறியது.....



“டேய் லூசு...லூசு “என தலையில் இருந்த பூவை எடுக்க முத்துவின் மனதில் மணியடித்தது.... இவ என்ன பாவாடை தாவனியில சூப்பரா இருக்கா.....( டேய் போதும்டா... இதுக்கும் மேல நாங்க தாங்க மாட்டோம்........ நாங்க ஓடப் போறோம்.... .டாட்டா.... .பைபை. ....)



நன்றி..............

முற்றும்....................

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top