நேசம் மறவா நெஞ்சம்-28Nesam Marava Nenjam

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நேசம் மறவா நெஞ்சம்

அத்தியாயம்-28



சூட்டிங்... ஆரம்பித்த நாளிலிருந்து வாசு சுதாவை அவள் தாய் வீட்டில் விட்டுருந்தான்... காலையில் ஒன்பது மணிக்குதான் சூட்டிங் ஆரம்பிப்பதால் சுதா வாசுவுக்கு சமைத்துவிட்டுதான் தன் தாய் வீட்டிற்கு வருவாள்... இரவு வந்து வாசு வீட்டிற்கு கூட்டிச் செல்வான்..... வாசுவின் அப்பா அந்த தோப்போடு சில வயல்களையும் வாசுவுக்கு பிரித்து கொடுத்தார்.... முதல் இரண்டு நாள் சூட்டிங்கை பார்த்தவனுக்கு அது பிடிக்காமல் போகவும்.... அவன் வயலை போய் பார்த்து அடுத்து என்ன செய்யலாம்.....என்ற யோசனையில் இருந்தான்.... கண்ணன் விவசாய கல்லூரியில் படித்திருந்ததால் அவனிடம் உதவி கேட்கலாமா.... என்று யோசித்துக் கொண்டிருந்தான்.....



கண்ணனிடம் நேரில் பேசலாம் என்று நினைத்தவன்.... அன்று காலை கிளம்பிக் கொண்டிருக்க சுதா... இன்று தான் வீட்டிலேயே இருப்பதாக சொன்னாள்...... சூட்டிங் ஒரு வாரம் தங்களுடைய தோப்பில் நடந்தும் நாம ஒரு தரம்கூட பாக்காம இருக்க கூடாது என்று நினைத்தவள்.... அன்று வீட்டிலேயே இருந்தாள்.... வாசுவும் தான் சீக்கிரமே வீட்டுக்கு வருவதாக சொல்லியிருந்தான்...... சூட்டிங் ஆரம்பிக்கவும் அதை வேடிக்கை பார்த்தபடி இருந்தாள்.... அது ஒரு கிராமத்து கதை... புதுமுகங்களை வைத்து எடுத்தார்கள்.... அந்த நடிகை ஒரு காட்சி எடுக்கவே பலமுறை நடிக்க வேண்டியதிருந்ததால் சுதாவுக்கே அலுத்து விட்டது......டைரக்டர்.... கண்ணனின் நண்பன் என்பதால் சுதாவை மரியாதையாகவே நடத்தினான்.... தயாரிப்பாளர் அங்கேயே ஒரு சேரில் அமர்ந்து கொண்டு..... படப்பிடிப்பை பார்த்தபடி சுதாவை எவ்வாறு வழிக்கு கொண்டு வருவது என்று யோசித்து கொண்டிருந்தார்.... அவருக்கு வயது 50 க்கு மேல் இருக்கும்...... இந்த பெண்........ டைரக்டர்க்கு வேண்டிய பொண்ணா இருக்காளே.... இவள என்ன சொல்லி நம்ம வழிக்கு கொண்டு வருவது என்று யோசித்து கொண்டிருந்தார்..... அவர் அந்த ஊரை சுற்றி பார்க்க போகும் போது வினோத்தும் நைசாக பேசி நட்பு கொண்டிருந்தான்.... அவரிடம் பேச்சுக் கொடுத்ததில் சுதா மேல் அவருக்கு ஆசை இருப்பதை கண்டு கொண்டான்.....





வாசுவும் கண்ணனை பார்த்து உதவி கேட்கவும்... கண்ணன் வாசுவை விவசாய அலுவலகத்துக்கு அழைத்து வந்து வேண்டிய உதவியை செய்து கொடுத்தான்.... இருவரும் நல்ல நட்புறவை வளர்த்துக் கொண்டிருந்தனர்.... நாட்கள் அதன் போக்கில் செல்ல..... அன்று மாலை வீட்டிற்கு தேவையான சில பொருட்களை எடுப்பதற்காக கண்ணன் தன் கடைக்கு கயலை கூட்டிச் செல்ல வந்தான்.......





சாவித்திரிதான் கயலை வெளியே அனுப்பி வைத்தார்....” ஏத்தா வீட்டுக்குள்ளயே அடஞ்சு கிடக்காம கொஞ்சம் வெளிய போயிட்டு வாத்தா...”.



“இல்லத்த மழை வரமாதிரி இருக்கு..... இன்னொரு நாளைக்கு போறேன்த்த....”



கண்ணனோ...”. அதென்ன இன்னொரு நாளைக்கு இப்ப வா... வெளியில போயிட்டு வருவோம்...”



“ஏங்க இனிமே போய் டிரஸ் மாத்தனும்... எனக்கு புடிச்ச சீரியல் வேற முக்கியமான இடத்துல தொடரும்னு போட்டுட்டான்..... அத வேற பாக்கனும்ங்க....”



“அடிப்பாவி... புருசனோட வெளிய வர்றதவிட உனக்கு நாடகம் முக்கியமா போச்சா...வாடி” என்றபடி அவளை மாடிக்கு கூட்டிச் சென்றவன்...

“.இன்னும் அஞ்சு நிமிசத்துல நீ கிளம்பனும் புரியுதா...”.

“ம்ம்ம்.....” அவள் முனுமுனுத்தபடி கிளம்ப ஆரம்பிக்க....



“அங்க என்ன சத்தம்.....”



“ம்ம்ம்... ஒன்னுமில்லங்க...கிளம்புறேன்...” கைக்கு கிடைத்த ஒரு சுடிதாரை போட்டு கிளம்பியவளை..பின் இருந்து அணைத்தவன்...”நாம ஊருல இருந்து வந்து ஒரு வாரம் ஆச்சு..... நீ என்னடி என்னைய கண்டுக்காம திரியுற.......மச்சான மறந்துட்டியா.....”



“என்னங்க இப்புடி சொல்றிக.... பாவம் அத்த வழுக்கி விழுந்து நடக்க முடியாம செரமபட்டாங்கன்னு தானே கீழேயே இருந்து உதவி பண்ணுனேன்......”



“உதவி பண்ணுனது சரிதாண்டி அதுக்காக மச்சான கவனிக்கவே இல்லையே....” என்றபடி அவள் பின் கழுத்தில் முகம் புதைத்தான்.......





அவள் மேலிலிருந்து பவுடர் மனத்தோடு மஞ்சள் மனமும் தூக்கியது.......” நானும் இதே பவுடர தானே போடுறேன்.... ஆனா உன்கிட்ட மட்டும் தனி வாசம் வருதுடி.... அப்புடியே ஆள தூக்குது.....”.அவள் பின் கழுத்தில் இருந்து அவள் முன்புறமாக சென்றவன்... அவள் முன் கழுத்தில் முகத்தை புதைத்தான்.... முத்தமிட்டுக் கொண்டே மெதுவாக கிழே வரவும்....



“ஐய்யய்யோ... அடுப்புல பாலை வச்சேங்க... அடுப்ப ஆப்பண்ணேண்னு தெரியலயே.... விடுங்க..... போய் பாத்திட்டு வந்திருரேன்.....”





“ஏய்.... இம்சை கொஞ்சம் பேசாம இருடி..... ஊருல போய் ஒரு வாரம் இருந்த..... உன்னைய கூட்டிட்டு வீட்டுக்கு வந்தேன்... அம்மா கீழ விழுந்து ஒரு வாரமா நடக்க ரொம்ப செரம படுறாங்கன்னு.... மேலையே வராம கீழேயே இருக்க.... படுக்க கூட மேல வரல..... பகல்லயாச்சும் மேல வருவன்னு பாத்தா காலேஜ்...டியூசன்... நீ பாட்டுக்கு உன் வேலையை பாத்துக்கிட்டு திரிஞ்சா..... மனுசன் என்னதான்டி பண்ணுறது............ ஏய் மச்சான் பாவம்டி......... அப்பப்ப கொஞ்சம் கவனி....... இப்ப வெளியில போறோம் அதுக்காகதான் நானே ராமன கடையில வச்சிட்டு அஞ்சு மணிக்கே வந்திருக்கேன்....”



“அம்மாட்ட சொல்லிட்டேன் டியூசனுக்கு லீவுவிடச் சொல்லி.... இது என்ன டிரஸ்.... நல்லாவே இல்லை மரியாதையா .... இந்தா இந்த சேலையக் கட்டுற.... “என்றவன் ஒரு சேலையை கொடுக்க.....



“இதுவா... இது எனக்கு ரொம்ப பளிச்சுன்னு தெரியுமேங்க....”.



“பயவால்ல இதயே கட்டு......நாம சினிமாவுக்கு போயிட்டு லேட்டாத்தான் வருவோம்........ சீக்கிரம் கிளம்பு......”



“ஏங்க மழைவரமாதிரி இருண்டுகிட்டு வருது..... இன்னொரு நாளைக்கு போனா என்னங்க.....”



“வரவர... சொல்றதயே கேக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டியா......”

“அப்புடியெல்லாம் ஒன்னும் இல்லங்க.... ந்தா...கிளம்புறேன்.....” இருவரும் கிளம்ப வர வானமும் மழை வர தயாராக இருந்தது....
 
Last edited:

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சுதா இப்போதெல்லாம் தன் தாய் வீட்டிற்கு செல்லாமல்.... ஷூட்டிங் நடக்கும் இடத்திலேயே இருந்தாள்...... அந்த நடிகைக்கு மேக்கப் போடுபவருடன் நன்கு பழகி தானும் கற்றுக் கொள்ள ஆசைப்பட்டாள் ……வாசுவிடம் சொல்லியிருந்தால் பக்கத்தூரில் இருக்கும் ஏதாவது ஒரு பியூட்டிபார்லரில் சேர்த்து கற்றுக் கொள்ள சொல்லியிருப்பான்... இவள் வீட்டில் இருக்கேன் என்று சொன்னதும் வாசுவும் இந்த வீட்டிற்கு வந்ததில் இருந்து பேசாமல் இருந்தவள்..... இவ்வாறு சொல்லவும் வாசுவும் ஒன்னும் சொல்லாமல் தன்னுடைய வேலையை பார்க்க செல்வான்.......





இவர்கள் தோப்பில் மட்டும் இல்லாமல்..பக்கத்தில் இருக்கும் தோப்புகளிலும் ஷீட்டிங் நடந்தது.....சுதாவும் கூடவே செல்ல ஆரம்பித்தாள்..... அந்த தயாரிப்பாளரும் அடிக்கடி இவளின் அழகை வர்ணிக்க.... சுதாவுக்கு பெருமை தாங்க முடிய.வில்லை... மேக்கப் போடுபவளும் அந்த தயாரிப்பாளரின் ஆள் என்று சுதாவுக்கு விளங்கவில்லை.... வினோத்தும் அடிக்கடி வந்து பேச்சுக் கொடுக்க.. வினோத்திடம் பேசியதை வாசுவிடம் சொல்லவேயில்லை.... ஏற்கனவே தம்பிமேல கோபமா இருக்காரு நம்ம பேசுனத சொன்னோம்னா..... கோவிச்சுக்குவாரோ என்று எண்ணி பேசாமல் இருந்தார்..... அந்த டைரக்டரிடம் தன் கணவரின் தம்பி என சொல்லவும் கண்ணனின் தோழனும் இவரும் உறவுகாரர் என நினைத்து பேசாமல் இருந்து விட்டான்......



வினோத் ....... வாசு என்றெல்லாம் வெளியூருக்கு செல்கிறானோ அன்று வந்து சுதாவோடு பேசுவான்.... வினோத்தும் அந்த தயாரிப்பாளரும் சேர்ந்து சுதாவை மூளை சலவை செய்ய ஆரம்பித்தனர்..... தயாரிப்பாளர்... அடுத்தப் படத்துக்கு குடும்ப பாங்கான கதாபாத்திரத்துக்கு சுதாவின் முகம் பொருத்தமாக இருக்கும் நீங்களே நடியுங்கள் என்று சொல்ல... வினோத்தோ...இந்த படத்துல நடிச்சா பணம் லச்சகணக்குல கிடைக்கும்...காரு வாங்கலாம்.... பங்களா வாங்கலாம் என ஏகத்துக்கும் சொல்லவும் சுதாவும் கோவில் மாடு மாதிரி தலை ஆட்ட ஆரம்பித்திருந்தாள்.......





தாமரையின் கணவன் கோவிந்தன்..... அன்று வீட்டிற்கு வரும்போதே சந்தோசமாக வந்தான்.......அவன் வீட்டிற்கு வரும் போது மணி பத்து.. அனைவரும் தூங்கிக் கொண்டிருக்க.... வீட்டிற்குள் நுழைந்தவன்... தாமரையை தூக்கிச் சுற்ற.......



“ஐயோ... அம்மா.. என்னங்க.... இது விடுங்க... பத்து மணிக்கு இது என்ன வேலை....”



“ஏய் பொண்டாட்டிய கொஞ்சுறதுக்கு நேரம் காலம் எல்லாம் கிடையாதுடி...... நான் ரொம்ப நாளா கஷ்டப்பட்டத்துக்கு இன்னைக்கு கடவுள் கயலு வீட்டுகாரர் மூலமா ஒரு வழி காட்டியிருக்கார்டி....”



“என்னது கயலு வீட்டுக்காரர் மூலமாவா.....”.



“ஆமாடி.... எத்தனதரம் அந்த பேங்க் லோனுக்கு நாயா அலைஞ்சிருப்பேன்..... இன்னைக்கு பேங்க்க்கு போயிருந்தனா... அங்க கண்ணன் தம்பிய பாத்தேன்.... அவருகிட்ட விவரத்தை சொல்லவும்....விறுவிறுன்னு மேனேஜர்கிட்ட கூட்டிப்போனாருடி.....அவரு எடுத்து சொல்லவும் எல்லா டீடெயில்ஸ் இருக்கான்னு செக்பண்ணவும்.... நான் எல்லாமே பக்காவா வச்சிருந்தனே... இன்னும் ஒரு வாரத்துல லோன் தாரேன்னு சொல்லிட்டாங்க... அந்த தம்பி அங்கதான் காசுபணம் புழக்கம் அதிகமா வச்சிருக்கும் போல அந்த மேனேஜர் ரொம்ப மரியாதையா பேசுனாருடி..... நாம பட்ட கஷ்டம் எல்லாமே விலகிரும்டி..... இனிமே நானும் வேலை வேலைன்னு அலையாம எம் பொண்டாட்டி புள்ளைகளோடு கொஞ்சம் சந்தோசமா இருப்பேன்....” வாய் பேசியபடி இருந்தாலும் கோவிந்தன் தாமரையை கட்டிலில் தள்ளி அவள் மேல் படர்ந்திருந்தான்....



“என்னங்க இது வந்ததும் வராததுமா... இந்த வேலை பாக்குறீங்க.....”



“ஏய் நமக்கென்ன வயசாயிருச்சா..... புள்ளைங்க ரெண்டும்தான் அம்மாட்ட படுத்திருக்குகல்ல அப்புறம் என்னடி.... இன்னைக்கு ஐயா செம மூடுல இருக்கேன் பேசாத” என்றபடி அவள் இதழில் தன் இதழை புதைத்து தாமரையை இந்த உலகத்தையே மறக்க வைத்தான்......



கண்ணன் கயலை சினிமா தியேட்டருக்கு அழைத்து வர....”.என்ன படம்ங்க....”.



“என்ன படமா இருந்தா என்ன....”. விஜயின் சர்கார் படத்துக்கு அழைத்து வந்திருந்தான்... இவர்கள் வண்டி உள்ளே வர மழையும் ஆரம்பித்தது......



“என்னங்க மழை ஆரம்பிச்சிருச்சு......”



“படம் முடியிருதுக்குள்ள மழை விட்டுரும்டி....”.என்றபடி உள்ளே செல்ல.... கூட்டம் குறைவாகவே இருந்தது.....படம் ஆரம்பித்திருந்ததால் ..... இவர்களும் ஒரு ஓரச்சீட்டில் அமர்ந்து படம் பார்க்க ஆரம்பித்தார்கள்...கயல் படத்தில் மூழ்கிப்போக.... கண்ணன் கயலின் தோளில் கையை போட்டு தன் புறம் இழுத்திருந்தான்......

“என்னங்க இப்புடி பண்ணா எப்படி படம் பாக்குறது....பேசாம இருங்க......”





இப்போது கண்ணன் அவள் வெற்றிடையில் கையை போட்டு இருக்கி.....” ஏய் நீ படம் பாரு.... நான் படம் பாக்க வரல... உன்னையதான் பாக்க வந்தேன்……” என்றபடி அவள் கழுத்தில் முகத்தை புதைத்தான்...... கயலுக்கும் அவன் மூச்சுக்காற்றில் உள்ளம் புரள ஆரம்பித்தது.... ஒரு கைவெற்றிடையை வருட மற்றொரு கை அவள் உச்சியில் இருந்து வருட ஆரம்பித்தது.... உதட்டில் கை வைத்தவன் அதை மெதுவாக வருட......



“ஏங்க என்ன இது.... “என்றபடி அவன் கையை பிடித்தவள்.....” சும்மா இருங்க.... யாராச்சும் பாத்தா.. என்ன நினைப்பாங்க..... எனக்கு வெக்கமா இருக்கு.....”



அப்போது இடைவேளை விட...கண்ணனும் பேசாமல் அமர்ந்தான்......

“உனக்கு என்ன வாங்கிட்டு வர.....”

“ம்ம்ம்... ஐஸ்கிரிம்.....”

“ஏய் மழை இப்புடி ஜோன்னு ஊத்துது...... இப்ப போய் ஐஸ்கிரிம் தேவையா.....”



“இப்ப சாப்புட்டா.... தாங்க சூப்பரா இருக்கும்......”



“உன்னைய திருத்தவே முடியாது வீட்டுக்கு வந்து சளி .... தும்மல்ன்னு சொல்லு உனக்கு இருக்கு......” என்றபடி வெளியே போனவன் படம் போட்ட பிறகே ஐஸ்கிரிமோடு வந்தான்...



“என்னங்க...ஒரு ஐஸ்கிரிம்தான் வாங்கிட்டு வந்திருக்கிங்க.....”.

“எனக்கு பிடிக்காது நீ சாப்புடு.....”



“இல்லங்க நீங்க ஒரு வாய் சாப்புட்டு தாங்க.....”.என்றபடி தன் ஐஸ்கிரிமை நீட்ட. அவன் வேண்டாம் என்று மறுக்கவும் ......கயல் மெதுவாக சாப்பிடத்தான் ஆரம்பித்தாள்...... ஆரம்பித்ததுதான் தெரியும் ஐஸ்கிரிம் அவன் வாயில் இருந்தது...



“என்னங்க...” என்றபடி சிணுங்க....

“யேய்.. விட்டுட்டு சாப்புட்டா வயித்த வலிக்கும்டி...பாவம் உனக்கு நல்லதுதான்டி நினைச்சேன்.....”





“போங்க.....” என்றவள் சிறிது நேரம் கழித்து மீண்டும் சாப்பிட இப்போது ஐஸ்கிரிமோடு அவள் உதட்டையும் சுவைக்க......அவன் முத்தத்தில் ஆழ்ந்தவள்.....திடிரென விஜய் பாட்டுக்கு விசில் சத்தம் கேட்கவும் சுய நினைவுக்கு வந்தாள்.... அவனை விட்டு விலகி “ஏங்க இப்புடி பண்ணுறீக.... எனக்கு விஜய் படம்னா ரொம்ப புடிக்கும் அதை இப்புடி பாக்கவுடாம பண்ணுறீங்க.......”



பாதி முத்தத்தில் விலகவும் கண்ணன் கடுப்பில் அவளை பார்த்தவன்.... அவள் கெஞ்சவும் முகத்தை வெளிப்புறமாக திரும்பி உணர்ச்சியை தன் கட்டுக்குள் கொண்டு வந்தவன் பேசாமல் அவளை விட்டு தள்ளி அமர்ந்தான்.....



கண்ணன் தன்னைவிட்டு தள்ளி அமரவும் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள்... அவன் என்ன மனநிலையில் இருக்கிறான் என்றே அவளுக்கு தெரியவில்லை.... ஒரு வேளை கோபமா இருக்கானோ என்று நினைத்தவள்....அவன் முழங்கைக்கு மேலாக தன் கையை கொடுத்தவள் அவன் தோளில் தன் தலையை வைத்தாள்.....



சரி .... அவள் படம் பார்க்கட்டும் என்று நினைத்தவன்... அவள் தோளில் கை போட்டு அவள் உச்சியில் தன் தாடையை பதித்தவன் அவள் மேல் சாய்ந்தவாறு சற்று கண் அயர்ந்தான்......
 
Last edited:

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
படம் முடியவும்..... வெளியே வந்தவர்கள் ஒரு ஹோட்டலில் போய் சாப்பிட மணி ஒன்பது ஆயிற்று.....



“என்னங்க.... பெரிய மழையா பெஞ்சிருக்குமோ...... எங்க பாத்தாலும் ஒரே தண்ணியா தெரியுது......நம்ம ஊர்லயும் மழை பெஞ்சிருக்கும் தானே......”



“ம்ம்ம்... அப்புடித்தான் நினைக்கிறேன்.....”



“என்னைய நீங்க கடைக்கு சாமான் வாங்கதானே கூட்டிட்டு போறேன் அத்தைக்கிட்ட சொன்னிங்க.....இப்ப அத்தே சாமான் எங்கன்னு கேட்ட என்ன சொல்லுவிங்க....”.





“அதெல்லாம் ராமன்கிட்ட எடுத்துட்டு போக சொல்லி போன்ல சொல்லிட்டேன்.... நீ கவலை படாம வா...”. என்றபடி தன் தோளில் இருந்த கயலின் கையை எடுத்து அவளை முன்நோக்கி இழுத்தவாறு தன் வயிற்றில் வைத்தான்.....



மழை பெய்து ஆங்காங்கே தண்ணிர் கிடந்ததால் கண்ணன் மெதுவாகவே வண்டியை ஓட்டினான்.... கரண்ட் இல்லாமல் ஊரெங்கும் கரும்கும்மென்று இருட்டாக இருந்தது... கயலுக்கு பயமாக இருந்தாலும் கண்ணனின் துணையிருந்ததால் கண்ணனின் சட்டையை இருக்கமாக படித்தபடி அவன் முதுகில் முகம் புதைத்தாள்.....



அவள் கைமேல் தன் கையை வைத்தவன்.......”ஏய்... என்னடி ஆச்சு.... பயமாயிருக்கா...”



“ச்சே....ச்சே.... நீங்க இருக்கையில எனக்கு என்னங்க பயம்......”



“ஆமாமா... மச்சான் இருக்கையில உனக்கு என்ன பயம்......”



அவர்களுடைய ஊருக்கு வரும் வழியில் ஒரு சரிவு பாலம் இருக்கும்...மழை அதிகமாக பெய்யும் நேரங்களில் அதில் முழங்கால் அளவு தண்ணிர் செல்லும்... அந்த பாலம் வந்தவுடன் கண்ணனுக்கு எப்பொழுதைவிட அதில் தண்ணிர் அதிகமாக செல்வதை போல தெரியவும் தன் வண்டியின் வெளிச்சத்தில் அதில் ஒருவர் நடந்து வருவது தெரியவும் வண்டியை ஓரமாக நிறுத்தினான்.....





அங்கு வந்து கொண்டிருந்தவர் கண்ணனுக்கு நன்கு தெரிந்தவர்... நன்கு வசதியானவர்... இவர்களை பார்க்கவும் கண்ணனின் அருகில் வந்தவர்....” கண்ணா.... என்னப்பா ஊருக்கா...”



“ஆமாண்ணே... என்ன நடந்து வாரிங்க...”





“ஒண்ணுமில்லப்பா.... வண்டி பாலத்துக்கு அங்கிட்டு இருக்கு தண்ணி கொஞ்சம் அதிகமா வருது....அதான் எஞ்சின்குள்ள தண்ணி போனா வண்டி வீனா போயிரும்னு நிப்பாட்டிட்டு நடந்து வாரேன்.... என்னன்னு தெரியல தண்ணி அதிகமா வாரமாதிரி தெரியுது .... நீங்களும் வண்டியில போக வேண்டாம்பா... லேசா சாஞ்சாக்கூட தண்ணியோட இழுத்துக்கிட்டு போயிருவிக.....இங்கன நிப்பாட்டிட்டு நடந்து போங்க......”



“ம்ம்ம் சரிண்ணே.... நீங்க எம்புட்டு தூரம்ணே நடந்து போவிக.... என்னோட வண்டிய எடுத்துகிட்டு போங்க....நான் காலையில வாங்கிக்குறேன்....” என்றபடி தன் வண்டியை கொடுக்க......



“அப்ப இந்தாப்பா என்னோட வண்டி சாவி..... பாலத்தை தாண்டி அந்த ஆலமரத்துக்கு பின்னாடி நிப்பாட்டி வச்சிருக்கேன்..... எடுத்துட்டு போங்க.... காலையில வண்டிய மாத்திக்குவோம்.....”



“சரிண்ணே....” என்றபடி அவர் வண்டிசாவியை வாங்கிக் கொண்டான்...... அவர் தன் வண்டியை எடுத்துக் கொண்டு செல்லவும்.... கண்ணன் கயலின் கையை பிடித்தபடி அந்த பாலத்தை நோக்கிச் சென்றான்.....





கிரண்டைகால் தண்ணிர் அளவில் இறங்கியவர்கள் மெதுவாக அந்த தரைபாலத்தின் சரிவை நோக்கிச் செல்ல கண்மாய்களை மூடி பிளாட் போடவும் அங்கு செல்ல வேண்டிய தண்ணிர் அங்கு செல்லமுடியாமல் சரிவாக இருந்த அந்த பாலத்தை நோக்கி வேகமாக வந்து மற்றொரு கண்மாய்க்கு சென்று கொண்டிருந்தது...... கண்ணன் இதே ஊரில் பிறந்து வளர்ந்து இந்த பாதையிலேயே சென்று வந்தவன்... சிறுவயதில் இருந்து இதே பாதையில் நூறு முறை சென்று வந்திருப்பான்... தண்ணிர் முழங்காலுக்கு மேலாக போனதே இல்லை....





இருவரும் நடு பாலத்துக்கு வரவும் தண்ணிரின் வேகம் மிகவும் அதிகரித்து கண்ணனுக்கு இடுப்புக்கு மேலாக சடாரென உயர்ந்தது.... கயலின் கழுத்தை தாண்டி உயர்ந்து விட்டது.....கயலை பார்த்த கண்ணனுக்கு பயம் வந்தது....மீண்டும் திரும்பி செல்லலாம் என்றால் பாலத்தின் நடுவில் நின்றார்கள்......அங்கிட்டும் போக முடியாமல் இங்கிட்டும் போகமுடியாமல் நின்றார்கள்..... ஊரெங்கும் ஒரே இருட்டு ஒரு ஆள்நடமாட்டம்கூட இல்லை....

.”.உனக்கு நீச்சல் தெரியுமா.....”



“தெரியாதுங்க......”தண்ணிர் அவளின் வாயருகே வந்தது.....கண்ணனுக்கு நீச்சல் தெரியும் ஆனால் தண்ணீரின் வேகம் அதிகமாக இருப்பதால் அவனால் கயலை கையில் பிடித்தபடி நித்தயம் நீச்சலடிக்க முடியாது........



கண்ணனுக்கு மூளையே மறத்து விட்டது.... தன் காலை பலமாக ஊன்றியிருந்ததால் அவனால் நிற்கமுடிந்தது.... லேசாக காலை அசைத்தால்கூட இருவரும் தண்ணீர் வந்த வேகத்திற்கு தண்ணீரோடு அடித்துச் செல்லப்பட்டு ஏதாவது மரத்தில் மோதி உயிர் இழக்கத்தான் வாய்ப்பு அதிகம்.... மழையோடு மழையாக எல்லா பொருட்களும் அடித்து வரப்பட்டது.... பெரிய பெரிய மரக்கம்புகளும் இவர்களை மோதி சென்றது.......ஒரு தண்ணிர் பாம்புகூட நெளுநெளுவென்று கயலை தொட்டுச் சென்றது..... மற்ற நேரமாக இருந்தால் கயல் கத்தி ஊரையே கூட்டியிருப்பாள்.... இப்போது தன் உணர்வின்றி இருந்தாள்....அவளுக்கு தெரியும் கண்ணன் கைபிடியிலேயே தான் நிற்பது... ஏனென்றால் தண்ணீரின் வேகம் கயலின் காலை கீழே ஊன்ற முடியாமல் அதிக வேகமாக சென்றது...





தன் வாயை தாண்டி தண்ணிர் வரவும் லேசாக எக்கியவள்... கண்ணனின் கையை உதற ஆரம்பித்தாள்......” என்னோட கையை விடுங்கங்க.... உங்களுக்குத்தான் நீச்சல் தெரியும்ல.... நீங்க போங்க......”



கயலின் கையை விட மறுத்தவன்....” ஏய் என்னடி கிறுக்கு வேலை பாக்குற.... பேசாம இரு....”





“இல்லங்க நீங்க கைய விட்டுட்டு நீச்சலடிச்சு போயிருங்க...... என்னால உங்களுக்கு ஒன்னும் ஆகக்கூடாது....ப்ளிஸ் விடுங்க....” வேகவேகமாக கையை உதறினாள்... கயலுக்கு கண்ணனுக்கு எதுவும் ஆகக்கூடாது நமக்கு என்ன ஆனாலும் சரி அவரு அவுக குடும்பத்தோட சந்தோசமா இருக்கனும்..... என்னை காப்பாத்த போய் இவருக்கு எதுவும் ஆகக்கூடாது கடவுளே அவர காப்பாத்து..... என்று அவனுக்காக வேண்டிக்கொண்டே இருந்தாள்...... இப்போதுதான் தெரிந்தது தான் கண்ணன் மேல் கொண்டிருக்கும் அன்பு...... இவர் தன் அக்காவுக்கு பாத்த மாப்பிள்ளை என்பதெல்லாம் மறந்தது.... இவரு என்னோட உயிர்.... இவருக்கு எதுவுமே ஆகக்கூடாது..........என்று



கண்ணனுக்கு தெரியும்............ தான் கையை விட்டால் கயலை பிணமாகத்தான் கிடைப்பாள்.... என்று...........





இனி......................??????



தொடரும்.................
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top