நேசம் மறவா நெஞ்சம் -25Nesam Marava Nenjam

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நேசம் மறவா நெஞ்சம்

அத்தியாயம்-25

கயலுக்கு கல்லூரி மீண்டும் திறக்க கண்ணன் ஸ்கூடிட்டியில் தான் செல்லவேண்டும் என்று சொன்னபோது கயல் எவ்வளவு மறுத்தும் கண்ணன் கேட்கவில்லை.... ஒருவாரம் கூடவே வந்தாலும் கயலுக்கு பயம் போகவில்லை.... இருந்தாலும் கண்ணனுக்காக அவள் வண்டியில் சென்றாள்....... வரும் வழியில் ஒரு முந்திரி காடு இருக்கும்... அங்கு கொஞ்சம் ஆள் நடமாட்டம் குறைவாக இருப்பதால் அங்கு வரும்போது மட்டும் வேகமாக வருவாள்..... அவளுக்கு அமைதியாக ஒருஆளாக சென்று வருவதுதான் கஷ்டமாக இருந்தது........ போகும் போது டியூசன் பிள்ளைகள் யாராவது பஸ்ஸ்டான்டில் இருந்தால் கூட்டிக்கொண்டு செல்வாள்.....



அன்று பேருந்தில் கயலிடம் வம்பிழுத்து அடிவாங்கியவன்.....கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இப்போதுதான் ஆஸ்பத்திரியில் இருந்து வந்திருந்தான்.... கயலை பழிதீர்க்க நேரம் பார்த்து கொண்டிருந்தவன் .... கண்ணன் கயல் கூடவே வரவும் பேசாமல் அடங்கி இருந்தவன்.... அன்று மாலை காலேஜ் விட்டு வந்தவள்..... வண்டி பஞ்சராகவும்.... அதை கண்டு கடுப்பானவள் அதை உருட்டிக் கொண்டு வந்து பஞ்சர் பார்த்தாள்...... அன்று மாலை ஆறு மணிக்கே சீக்கிரம் இருட்டிக்கொண்டு வரவும் வண்டியை வேகமாக ஓட்டி வந்தாள்... முத்துவுக்கும் அப்போதுதான் கோச்சிங்கிளாஸ் முடிந்து வெளியே வந்தவன்... கயல் அவனை கவனிக்காமல் வேகமாக போகவும் கத்தி கூப்பிடுவதற்குள் கயல் வேகமாக சென்றிருந்தாள்.... அவள் அந்த முந்திரி காடு வரும் போது இன்னும் வேகமெடுக்க அவளை மெதுவாக பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த அந்த குடிகாரனும் வேகமாக வந்து அவளை வழிமறிக்க... கயல் பேலன்ஸ் தவறி கீழே விழுந்திருந்தாள்.......



வண்டியோடு வண்டி மோதியிருக்க கயல் வண்டியை விட்டு சற்று தள்ளி விழுந்ததால் அவளுக்கு அடிஎதுவும் படவில்லை........ கயலுக்கு பயத்தில் கைகால் வெடவெடக்க.. மெதுவாக கையை ஊன்றி எழுந்தவள்.... அந்த குடிகாரனை பார்க்கவும் ...... மயக்கமே வரப்பார்த்தது...... இருந்தாலும் வண்டியை இவன்கிட்ட போய் எப்படி போய் எடுப்பது என்று யோசிக்கவும்.... அவள் கயலை பார்த்து இளித்தபடி...

“ என்னமா... அன்னைக்கு என்னமோ.... உம் புருசன் லேசா கையை உரசுனதுக்கே.... என்னோட கையை ஒடச்சான்..... இன்னைக்கு உன்னைய நான் முழுசா ....... அனுபவிக்கப் போறனே .... இப்ப என்ன பண்ணுவான்.... “என்று கேட்டபடி குடிவெறியில் தள்ளாடியபடி வந்து கயலின் கையை பிடிக்கவும்...... அதுவரை வண்டியை எப்படி எடுப்பது என்ற யோசனையில் இருந்தவள்..... அவன் கையை பிடிக்கவும்..... அவளுக்கு எங்கிருந்துதான் அவ்வளவு தைரியம் வந்ததோ அவன்கையை உதறியவள்... அவனை வேகமாக பின்னால் தள்ளிவிட்டு....... அந்த முந்திரி காட்டுக்குள் வேகமாக ஓடினாள்....... தடுமாறி கீழே விழுந்தவனும் எழுந்து அவளை விரட்டிச் சென்றான்.....



சாவித்திரி போன் செய்யவும் கண்ணனுக்கு ஒரு நிமிடம் உலகமே நின்றதுபோல இருந்தது........ இவ ஏன் இன்னும் வரல.... என்னாயிருக்கும்... என்று யோசித்தபடி அவள் போனுக்கு டிரை பண்ண அது சைலன்டில் கிடந்ததால் ரிங் முழுவதும் போயிற்று.... போனை எடுக்காமல் இருக்கவும் இவ எதுக்குதான் போன்னு ஒன்னு வச்சிருக்கான்னு தெரியல... அவமட்டும் கைல கிடைச்சா... இருக்கு இன்னைக்கு..... என்று நினைத்தபடி போனில் மீண்டும் மீண்டும் தொடர்பு கொண்டபடி .....வேகமாக சென்று வண்டியை எடுத்தவன் கயலின் காலேஜை நோக்கி சென்றான்.......



தன் இரு நண்பர்களோட வீட்டுக்கு சைக்கிளில் வந்து கொண்டிருந்த முத்து அந்த முந்திரிகாட்டின் பாதையில் இருவண்டி கிடக்கவும்... “என்னடா வண்டி மட்டும் ரோட்டுல கிடக்கு......யாரையுமே காணோம்” என்று வந்தவர்கள்..... அருகில் வர இது அண்ணி வண்டி மாதிரி இருக்கே என்று யோசித்தவன்.....

“ டேய்... இது எங்கண்ணி வண்டிடா....”என்று கத்தியவன்.... வேகமாக சென்று கீழே கிடந்த வண்டியை எடுத்தவன்.... வண்டியில் இருந்த பையில் இருந்து வெளிச்சம் வரவும் அதை திறந்து பார்த்தான்... அது போனின் வெளிச்சம்.... அதில் தன் அண்ணனின் நம்பர் வரவும் அதை வேகமாக ஆன் செய்ய....வேகமாக வந்து கொண்டிருந்த கண்ணன் படக்கென்று வண்டியை நிப்பாட்டி....

“ கயலு..... கயலு... எங்கயிருக்க..... என்னாச்சு....” என கத்தவும்.....



“அண்ணே.... நான் முத்து பேசுறேன்.... அண்ணே இங்க வீட்டுக்கு வார வழியில முந்திரி காடு இருக்குள்ள..... அங்க...நம்ம அண்ணியோட வண்டி மட்டும் கிடக்குதுண்ணே..... அண்ணிய காணோம்” என்று அழ ஆரம்பிக்க.....

“டேய்.... அழுகாத.... ந்தா.... நான் அங்கனதான் வந்துட்டு இருக்கேன்.... இன்னும் அஞ்சு நிமிசத்துல வந்துருவேன்...”. என்றபடி வேகமாக வந்தவன் ஐந்து நிமிடத்தில் அங்கே இருந்தான்.... அங்கு முத்து அழுதுகொண்டிருக்கவும்.....வேகமாக தன் வண்டி கீழே விழுந்தது கூட தெரியாமல் கயலின் வண்டியை நோக்கி ஓடி வந்தவன்.... அவள் வண்டியை மோதி இன்னொரு வண்டி கிடக்கவும் இது யாரோ செய்த வேலை என்று யூகித்தவன்.... வேகமாக அந்த முந்திரி காட்டை நோக்கி ஓடியபடி....

“முத்து நீ செல்போன லைட்ட ஆன் பண்ணி அந்த வெளிச்சத்துல உங்க அண்ணிய தேடு.....” என்றபடி அந்த காட்டிற்குள் நுழைந்திருந்தான்.......



ஒரு மணி நேரமாகியும் கண்ணனால் கயலை கண்டுபிடிக்க முடியவில்லை...... வருவதற்கு முன்னால் ராமனுக்கு போன் செய்து நாளஞ்சுபேரை கூட்டிவந்து அவர்களையும் காட்டிற்குள் தேடச்சொல்ல.... கண்ணனும் காட்டின் ஒரு மூலைமுடுக்கையும் விடவில்லை....காட்டின் கடைசிக்கே வந்துவிட்டான்.... இன்னும் கொஞ்ச தூரத்தில் ஒரு பெரிய கம்பி வலைதான் இருக்கும்.....கயலின் தந்தைக்கும் போன் செய்தும் சொல்லியிருந்தான்...” கயல்... கயல் “என்று கத்தியபடியே வர.... அவனுக்கு பயம் அதிகரித்தது.... இப்ப என்ன பண்ணுறது.... .இன்னைக்கு பொம்பளபுள்ளைகளுக்கு பாதுகாப்பே இல்லாமல் போச்சே.. கயலு நீ எங்கடி போன....சீக்கிரம் வந்துருடி... என்னால நீ இல்லாம இருக்கமுடியாது ...வந்துருடி.... என்று மனசிற்குள் கதறியவன்.... தன் போக்கில் கயல்...கயல் என்று கத்திக் கொண்டே இருந்தான்....



கயல் அந்த குடிகாரன் விரட்டவும் அந்த காட்டிற்குள் ஓடத் துவங்கியவள்....சிறிது தூரம் ஓடியவள் ஒரு பெரிய மரத்தின் வேர் தடுக்கவிட கீழே விழுந்திருந்தாள்..... அதற்குள் அவளை நெருங்கியிருந்த அந்த குடிகாரன்.....

“ என்னமா... இந்த ஓட்டம் ஓடுறா....” என்றபடி கயலின் சுடிதார் துப்பட்டாவை தூக்கி எறிந்தவன் அவள் கையை பிடிக்கவர... கயல் அவனை ஓங்கி ஒரு உதைவிட.... அவன் கை தடுமாறி...அவள் சுடிதாரின் முன்பகுதியை பிடித்தவன்... அவள் உதைக்கவும் தோள்பட்டை கிழிந்து... அந்த உடையின் அவள் உள்ளாடை வெளியே தெரியும்படி கிழிந்தது..... அவன் கீழே விழவும் கயல் தடுமாறி எழுந்தவள்.... கயல் உனக்கு உயிரே போனாலும் இவனோட கையில மாட்டக்கூடாது....என்று நினைத்தபடி ஓடத்துவங்கியவள்.... ஏங்க அன்னைக்குமட்டும் வந்து என்னைய காப்பாத்துனீங்க.... வாங்க... வாங்க என்று மனதிற்குள் கண்ணனை நினைத்தபடி இந்த இருட்டில் ஓடத்துவங்கியவள்... அவன் காலடி சத்தம் தன்னை நெருங்கவும்.. ஓடிக் கொண்டிருந்தவள் ஒரு மரத்தில் மோதியவள் கையால் துழாவ அந்த மரத்தின் கிளை தாழ்வாக இருக்கவும் அதில் கால் வைத்து ஏறி அந்த மரத்தின் ஒரு பெரிய கிளையில் அமர்ந்திருந்தாள்..... அந்த குடிகாரன் அந்த மரத்தை தாண்டும் போது மூச்சை அடக்கி அமர்ந்திருந்தாள்.... கயலுக்கு எப்போதும் இருட்டென்றால் பயம்.. ஆனால் இன்னைக்கு இருட்டா இருக்குறதால தானே அவன் என்னைய கண்டுபிடிக்கல என்று யோசித்தபடி மனதிற்குள் தன் தந்தையையும் கண்ணனையுமே சீக்கிரம் யாராச்சும் வாங்களேன் என்று உருபோட்டபடி அமர்ந்திருந்தாள்.....
 
Last edited:

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஒரு அரைமணி நேரம் கழித்து ஒரு குரல் கேட்கவும் காதை கூர்மையாக்கிக் கேட்டவள்..... அது தன்னை நோக்கி வரவும் அருகில் வர வர அது கண்ணனின் குரல் என்பதால் அவளுக்கு மனதில் எழுந்த நிம்மதிக்கு அளவே இல்லை.... கண்ணன் அந்த மரத்தின் அருகில் வந்தவன்.... அந்த மரத்தில் சாய்ந்து மூச்சு வாங்கியவன்” கயல் …..கயல் “என்று மீண்டும் கத்தி வேறு புறம் போக பார்க்க....

கயல் “என்னங்க.... நான் இங்கே இருக்கேன்....” திடிரென குரல் கேட்கவும்... செல்போன் வெளிச்சத்தில் சுற்றிலும் தேடிப் பார்க்க...



“ஏங்க ... இங்க பாருங்க....”



குரல் வந்த திசையை நோக்கி வெளிச்சத்தை திருப்ப... கயல் மரத்தில் இருந்ததை பார்த்தவன்... சட்டென்று அந்த மரத்தில் ஏறி... கயலை எட்டி பிடித்து அணைத்திருந்தான்......அவன் இதயத்தின் ஓசை அவள் காதிற்குள் தாறுமாறாக கேட்டது..... ஒரு பத்து நிமிடம் கயலை இருக்க அணைத்திருந்தவன்.... அவன் மனம் ஒரு நிலைக்கு வரவும் தன்னைவிட்டு விலக்கியவன்...மெதுவாக மரத்தில் இருந்து இறங்கி... குதி என சொல்ல கயலும் குதிக்க கயலை கையில் ஏந்தியிருந்தான்.....

அவளை கீழே இறக்கிவிட.....கயல் அவன் மார்பில் தன் இரு கையால் குத்தியபடி “ ஏன் சீக்கிரமே வரல..... நான் ரொம்ப பயந்துட்டேன்.......ம்ம்” என்றபடி அவன் நெஞ்சில் சாய்ந்து அழ......



“என்னைய தேடுனியா.....”



“ஆமா..... நான் ரொம்ப நேரமா உங்கள தேடுனேன்..... காணாம்னு சொல்லவும் எங்க அப்பாவாச்சும் வரச் சொல்லு கடவுளேன்னு வேண்டிக்கிட்டு இருந்தேன்......” என்று சிறு பிள்ளை போல தன் கண்ணை இரு கையால் கசக்க.... அவள் முகத்தில் இருந்த முடியை ஒதுக்கிவிட்டவன்...... அவளை செல்போன் வெளிச்சத்தில் பார்க்க.....கீழே விழுந்ததில் கை...கால்களில் சிராய்த்து இருந்தது......தலைமுடியெல்லாம் கலைந்து பார்க்கவே பரிதாபமாக இருந்தாள்.... அவள் உடைவேறு தோள்பட்டையோடு கிழிந்திருந்தது..... அவளை வேகமாக அணைத்தவன்..... அவள் முகமெல்லாம் ஒரு இடம் விடாமல் முத்தமிட்டவன்..... அவள் உதட்டில் வந்து இளைப்பாறினான்...... இவ்வளவு நேரம் இருந்த மன கஷ்டத்தை அவள் உதட்டில் வன்மையாக இறக்கி வைக்க..... அவன் முரட்டுத் தனத்தில் பேசாமல் இருந்தவள்.... அவள் உதட்டில் ரத்தத்தை காணவும்..

“. ஏய் சாரிடி...... மன்னிச்சுக்க..... ரொம்ப வலிக்குதா....”



கண்ணில் நீரோடு” நீங்க என்னைய என்ன வேணும்னாலும் பண்ணிக்கங்க.... ஆனா என்னைய வேற யாரும் தொடவிட்ராதிங்க...... ப்ளிஸ்.... “எனச் சொல்லவும் கண்ணன் இவ என்னைய மனசார ஏத்துக்கிட்டாளா......அவன் மனதிற்குள் ஓ.....வென இறைச்சல் கேட்டது...... மீண்டும் அவளை இறுக்கி அணைக்க பேச்சுக் குரல் பக்கத்தில் கேட்டது..... தன்னை விட்டு அவளை விலக்கியவன்..... வேகமாக தன்சட்டையை கழட்டி கயலிடம் கொடுத்து போடச் சொன்னான்.... அப்போதுதான் தன் உடையை பார்த்தவள் தன் உள்ளாடை தெரியவும்....வெட்கத்தோடு தன் கையை குறுக்காக வைக்கவும்....



“இப்ப வச்சு.... நான்தான் உன்னைய அப்பத்திலிருந்து பாத்துக்கிட்டு இருக்கனே...... “எனச் சொல்லவும்......

“போங்க... போங்க ... “என்றபடி அவனுக்கு முதுகை காட்டி அவன் சட்டையை போட்டவள்.....

“எங்க போறது....... இனிமே உன்னைய விட்டு எங்கயும் போகமாட்டேன்.... உனக்கு மட்டும் எப்புடித்தான் இப்புடி பிரச்சனையெல்லாம் வருதோ.....” அனைவரும் இவர்கள் இருக்கும் இடத்திற்கு வரவும்... அவர்களை பார்த்தவள்...

“அம்மா.... அப்பா...” என்று அவர்களிடம் ஓடியிருந்தாள்.... கண்ணன் நிமிர்ந்து பார்த்தவன்.... அங்கு ஒரு ஐம்பது பேர் நின்றிருந்தார்கள்.... முத்து ப்ரண்ட்ஸ் ரெண்டு பேர்.... ராமன் கூட்டிவந்த நான்கு பேரை தவிர...மற்ற அனைவரும் மாணிக்கத்தின் ஊரிலிருந்து வந்திருந்தார்கள்..... கயல் குடும்பத்தை தவிர அப்பத்தா வயதில் இருக்கும் தாத்தா பாட்டிகள்....கயல் ஓடி.... ஓடி அனைவரையும் தனித் தனியாக சின்னாயா...பெரியப்பத்தா.. .தாத்தா... பாட்டி... சின்ன தாத்தா...விசாரிக்க... அவ்வளவு நேரம் இருந்த இறுக்கம் மாறி கலகலப்பான சூழ்நிலைக்கு வந்தார்கள்.....



கண்ணன் .....” அன்னைக்கு பஸ்ல உன்கிட்ட வம்பிழுத்தவன்தானே இன்னைக்கு உன்கிட்ட வம்பிழுத்தான்.....”



கயல் ஆமாம் என தலை அசைக்க....



கண்ணன் வெறியோடு கிளம்பினான்......” அவனை... அன்னைக்கு உயிரோட விட்டது தப்பு....... அவன் எந்த பக்கம் போனான்....”



கயல் ஓடி வந்து அவன் கையை பிடித்தவள்....” வேணாங்க..... நீங்க அந்த பக்கம் போக வேணாம்......”



“ஏன்.. அவன இப்புடியே விடச்சொல்லுறியா....”



“இல்லங்க.... நாம அவன ஒன்னும் பண்ணவேணாம்... அங்க பேயோ என்னமோ இருக்கு...”



“என்னது பேயா.... கொஞ்சநேரம் பேசாம இரு இந்தா வாரான்.....”

“ஐயோ.... போகாதீங்க... அங்கிட்டு போனவன்.... அம்மான்னு ஒரு பெரிய சத்தம் அப்புறம் ஒன்னுமே கேக்கல.... முனி இல்லனா பேய் அடிச்சிருக்குமுன்னு நினைக்கிறேன்.... ஒரு வேள சிங்கம்... புலி ...கரடி ஏதாச்சும் இருந்தா... என்ன பண்ணுறது....”



காந்திமதியோடு வந்திருந்த அவர்வயதுடைய மற்றொரு பாட்டியோ....” கயலு இது மாதிரி எதுவும் நடக்குமுன்னுதான் நம்ம பாண்டி ஐயா கோவில் துன்னூற கொண்டுவந்தேன்.... பேராண்டி இந்தாய்யா... இத கைல வச்சிக்க... உன்னைய எந்த முனியும் அண்டாது...... பேயும் கிட்ட வராது....”



மற்றொரு கிழவியோ....” அப்பு.... ந்தா.. எம்புருசன கூட்டிக்கிட்டு போ... எந்த மிருகம் வந்தாலும் பாஞ்சு அடக்கிடுவாரு....... அந்த காலத்துல வேட்டையாடுறதுல கில்லாடி....” கண்ணன் அவரை பார்க்க அவர் நடக்ககூட முடியாமல் இருந்தார்....



ராமனோ கண்ணன் காதிற்குள் வந்து அண்ணே...” இந்த கிழவிக தொல்லை தாங்க முடியல......”



“தம்பி... என்னப்பா... சொல்றாரு...”



“இல்ல பாட்டி இன்னும் நாலஞ்சு பேர கூட்டிட்டு போவோம்னு சொன்னான்.....”



“நம்ம கயலு மாப்பிள்ளையும் கயலு மாதிரியே நல்ல பிள்ளையா இருக்குத்தா.... கல்யாணத்தன்னைக்கு நல்லாக்கூட பேசமுடியல” என்றபடி அவன் கன்னத்தை உருவி முத்தம் கொடுத்தவர்......

“அப்ப வாங்க எல்லாரும் சேந்து போவோம் “என்றபடி நடக்க ஆரம்பிக்க.... கண்ணனோ...... ஐயோ அம்புட்டும் இப்புடி இருக்குக என்று யோசித்தபடி நடக்க ஆரம்பித்தான்.....



சிறிது தூரம் நடந்தவர்கள்..... தரையோடு ஒரு கிணறு தெரியவும்... அதை எட்டிப் பார்க்க அந்த குடிகாரனோ.... அந்த தண்ணியில்லா கிணற்றுக்குள் தலையில் அடிப்பட்டு கை...காலெல்லாம் ஒடிந்த நிலையில் உள்ளே கிடந்தான்....... இவர்கள் தலை தெரியவும் “கை எடுத்து கும்பிட்டவன் என்னைய எப்புடியாச்சும் காப்பாத்துங்க.... நான் தெரியாம பண்ணிட்டேன்….” கயலை நோக்கி கை எடுத்து கும்பிட்டவன்....” தங்கச்சி என்னைய மன்னிச்சிரு..... நான் தெரியாம பண்ணிட்டேன்.... எப்புடியாச்சும் சொல்லி என்னைய காப்பாத்தா சொல்லிருமா...”.என்று கெஞ்ச துவங்கினான்....



காந்திமதி..”.டேய் கட்டைல போறவனே.... வெளங்காதவனே.... உனக்கு எம்புட்டு திமிரு இருந்தா இப்புடி செய்வ...” ஆளாளுக்கு அவனை வசைபாட ராமன் தன நண்பர்களோடு சேர்ந்து பக்கத்தூரில் கயறு வாங்கிவந்து அவனை காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்தான்.... அனைவரும் ஊருக்கு கிளம்புவதாக சொல்ல கண்ணன் தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தான்...

.மாணிக்கம் “வேணாம் மாப்புள்ள... இவுக எல்லாம் நம்ம தெருதான் நான் கிளம்பவும் எல்லாரும் ஒத்தகாலுல நின்னு வந்தாளே வரனும்னு சொல்லி வந்துட்டாங்க.... அம்புட்டுக்கும் நம்ம கயலுன்னா ரொம்ப பிடிக்கும் அதான்..... என்னால ஒன்னும் சொல்ல முடியல......”



“ பரவால்ல மாமா அம்மா இவுகளயெல்லாம் பாத்தா ரொம்ப சந்தோசப்படுவாங்க.....” என்று சொல்லி கிளம்ப சொன்னான்... கயல் கீழே விழுந்ததில் அடிபட்டிருந்ததால் மெதுவாக நடக்க... கண்ணன் அவளை தூக்கிக் கொண்டு வர அனைவரும் சந்தோசத்துடன் தாங்கள் வந்த வேனில் அவளை ஏற்றச் சொன்னார்கள்.... அனைவரும் கண்ணன் வீட்டிற்கு கிளம்ப மணி பத்தாயிற்று.....
 
Last edited:

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அன்று இரவு வாசு வீட்டில் வினோத் மாடியில் அமர்ந்து தண்ணி அடித்துக் கொண்டிருந்தான்... தன் அண்ணனை அழைத்து…..” நீயும் கொஞ்சம் குடிடா.... இந்தா..”.

வாசு எப்போதும் தண்ணியடிக்க மாட்டான்.... எப்போதாவது ஒருநாள்தான் குடிப்பான்..... இன்றும் தம்பியோடு உட்கார்ந்து தண்ணியடிக்க.......சிறிது நேரத்திலேயே அவன் சுதாவின் அழகை பற்றி போதையில் உளர துவங்கினான்... “டேய் ஒம்பொண்டாட்டி.... எப்புடிடா இப்புடி தளதளன்னு இருக்கா.....” என்பது போல ஒரு அண்ணனிடம் எவ்வாறெல்லாம் அவன் மனைவியை பேசக்கூடாதோ அப்படி பேச வாசு ஒரு எல்லைக்கு மேல் பேச்சு கேட்க முடியாமல் போக...வார்த்தை முற்றி இருவரும் அடிதடியில் இறங்கினர்……



கீழே சத்தம் கேட்டு சுதாவும் அவர்களின் பெற்றோரும் அடித்து பிடித்து மேலே வந்து இருவரையும் விலக்க.... வினோத்தை வாசு நன்கு வெளுத்திருந்தான்.... “அடப்பாவிகளா... ஏண்டா இப்புடி அடிச்சுக்குறீக... டேய்….” என பேச்சி ஒப்பாரி வைத்து அழ ஆரம்பிக்க.... இவர்களின் தந்தையோ... தண்ணீரை பிடித்து இருவர் மேலும் மாற்றி மாற்றி ஊற்ற....இருவருக்கும் சிறிது நேரத்தில் போதை தெளிந்தது... அப்போதுதான் வினோத்துக்கு தான் பேசியது சிறிது சிறிதாக ஞாபகத்திற்கு வந்தது...... எங்க இவன் அத அப்பா அம்மாட்ட சொல்லிருவானோ என்று நினைத்து ..... வினோத் படக்கென்று பணப்பிரச்சனையை கொண்டு வந்தான்....



“டேய்... நீங்கல்லாம் அண்ணே தம்பிகளா... இப்புடி அடிச்சுக்கிறீங்க...வெக்கமாயில்லை...”



“ஏம்மா...நான் கஷ்டப்பட்டு வெளிநாட்டுல சம்பாதிப்பேன்... இவனும் இவன் பொண்டாட்டியும் ஒய்யாரமா உக்காந்து சாப்புடுவாங்களா... இவன் வீடு கட்டுனதுலயே எம்புட்டு காச ஆட்டைய போட்டுறுக்கான் தெரியுமா... இதுக்கு அப்பா நீங்களும் சப்போர்ட்டு......”



“டேய் நான் என்ன சப்போர்ட் பண்ணுனேன்.....”



“விடுங்கப்பா.... எல்லாம் எனக்கு தெரியும் அப்புடி ரோசம் இருக்குறவனா இருந்தா இப்ப நான் குடுத்த காச வைக்கச் சொல்லுங்க.... இல்லையா இவனையும் இவன் பொண்டாட்டியையும் வீட்டை விட்டு வெளிய போகச் சொல்லுங்க…..” அடப்பாவி எப்புடி பேச்சை மாத்திட்டான்.... வாழ்க்கையில் முதல் முறையாக இவ்வளவுநாள் ஊதாரிதனமாக இருந்ததற்கு வாசு வருத்தப்பட்டான்..... இவன் மனசுல இப்புடி ஒரு எண்ணம் இருக்குன்னு சொன்னா நம்ம அம்மா அப்பா நம்புவாங்களா.... கண்டிப்பா நம்ம மாட்டாங்க.... இப்ப என்ன பண்ணுறது.....



“டேய் .... என்ன வாய மூடிக்கிட்டு இருக்க.... ஒன்னு பணத்தை இப்பவே எண்ணி வை... இல்லையா வீட்டைவிட்டு வெளிய போ....”



“டேய்.... டேய்... இன்னேரத்துல காசுக்கு அவன் என்ன பண்ணுவான்......இப்ப எப்புடிடா வெளிய போவான்......”



“அம்மா...அப்பா... இப்ப சொல்றத கேளுங்க... ஒன்னு பணத்தை எண்ணி வைக்கனும் இல்லைன்னா வெளிய போகச்சொல்லுங்க..... வாய மூடிக்கிட்டு இருந்தா நீங்க இங்க இருக்களாம்.... இல்லைனா ....நீங்களும் அவனோட வெளிய போயிருங்க......”



பேச்சிக்கு பகீரென்றது......... நம்ம மவனுக்காக வெளிய போனாலும் இவ நம்மள ஒரு மனுசியாக் கூட மதிக்க மாட்டாளே...... என்று நினைத்து வாயை மூடிக்கொண்டாள்....



“டேய் இப்பவே மணி பத்தாக போகுது........ இன்னேரத்துல அவுக எங்க வெளிய போவாங்க......ராத்திரி மட்டும் போகட்டும்டா...காலையில பேசிக்கலாம்.....”



வினோத் இவன் ஒரு ராத்திரி தங்குனா கூட நம்மள பத்தி போட்டுக் குடுத்துருவான்... இவன் பொண்டாட்டி எங்க போயிர போறா..... என்று நினைத்தபடி கண்டிப்பாக வெளியே சென்றுதான் ஆக வேண்டும் என்று ஒரே குறியாக நின்றான்.... இருவரும் எவ்வளவு எடுத்து சொல்லியும் கேட்க வில்லை........ வாசுவுக்கு மிகவும் அவமானமாக இருந்தது .... சுதாவோ... இவரு என்னத்த பேசுனாருன்னு தெரியலயே... கொஞ்சம் வாய மூடிக்கிட்டு இருந்திருக்கலாம்.....



“டேய்... நீங்க வேனும்னா நம்ம தோப்புல போய் தங்குங்க.... அது குடும்ப சொத்து அது மூத்தவன் உனக்குத் தான் சேரும்......”



“தோப்புக்கா....” என்ற வாசுவுக்கு அங்கு ஒரு வசதியும் இல்லையே என்று நினைத்தபடி இருவரும் வீட்டை விட்டு கிளம்பினர்......



வாசு...” வேணுனா... உங்க அம்மாவீட்டுக்கு போவமா.....”



“வேணாம்... வேணாம்...” அன்று தன் தந்தை பேசியதை அவள் வாசுவிடம் சொல்லவே இல்லை...” நீங்க கொஞ்சநேரம் வாய மூடிக்கிட்டு இருந்திருந்தா... இந்த பிரச்சனையே இல்லை....”



“கொஞ்சம் வாயமூடு.... அவன் என்ன பேசுனான்னு தெரியுமா...... பேசாமா வா அங்க எந்த வசதியும் இருக்காது..... கூட வாராதாயிருந்தா வா... இல்லைனா உங்க அம்மாவீட்டுக்கு போ......”.சுள்ளென சொல்லவும் சுதா வாயை திறக்கவே இல்லை.... சுற்றிலும் இவ்வளவு உறவு இருந்தும் இருவரும் அந்த இரவு நேரத்தில் ஊரை விட்டு தள்ளியிருந்த அந்த தோப்பிற்கு சென்றனர்.......



கண்ணன் வீட்டிற்கு அனைவரும் வரவும் கயலை வெளியே நிறுத்தி ஆரத்தி எடுத்து சாவித்திரி உள்ளே கூட்டிச் சென்றார்...” ஊரு கண்ணுயெல்லாம் ஒம்மேலதான்தா... அதுதான் உனக்கு இப்புடி நடந்திருச்சு.....”எல்லாரையும் அன்போடு வரவேற்க கண்ணன் வீடு ஜே...ஜே வென்று இருந்தது....



காந்திமதி” போத்தா போய் தலையோட ஊத்தி குளிச்சிட்டு வா... எல்லா கிரகமும் தொலையட்டும்...போத்தா...”.



கயல் மாடிக்கு குளிக்க போக கண்ணன் அனைவரையும் கவனிக்கச் சென்றான்....

கயல் குளிக்கும் போது காயம்பட்ட இடங்களில் எல்லாம் எரிச்சல் கிளம்பியது..... முழங்காலிலும் கை முட்டியிலும் ரத்தம் உறைந்திருந்தது ...... மெதுவாக தேய்த்து குளித்தவள்...... தலையை காய வைத்தபடி கீழே வந்து தன் தங்கச்சிகளோடு பேசிக் கொண்டிருக்க..... அவள் தந்தை வந்து அவள் அருகில் அமரவும் அவர் மடியில் தலைவைத்து படுத்தாள்.... மாணிக்கம் இன்று கண்ணன் போன் செய்யவும் மிகவும் பயந்திருந்தார்.... மெதுவாக கயல் தலையை தடவிக் கொடுக்க காந்திமதி வந்து கயலின் காலை எடுத்து தன் மடியில் வைத்து அமுக்கி விட...... அவள் சகோதரிகள் இருவரும் அவள் கையை பிடித்தபடி உட்காந்திருந்தனர்........



அப்போதுதான் தோட்டத்தில் இருந்து வீட்டுக்குள் நுழைந்த கண்ணன் இந்த காட்சியை பார்த்து .... பார்ரா.... எம் பொண்டாட்டிக்கு அவ குடும்பமே சேந்து சேவுகம் செய்யுதுக..... என்று சிரித்தபடி உள்ளே வந்தான்......



சாவித்திரியோடு சகுந்தலாவும் சேர்ந்து சமைக்க ஒரு மணி நேரத்தில் சமைத்து முடித்திருந்தனர்....... அனைவரும் பேசியபடி சாப்பிட்டு கொண்டிருக்க பரிமாற வந்த கயலை கண்ணன் வேண்டாம் என தடுத்து அவனே பரிமாறினான்.......



எல்லாருக்கும் படுக்கையை விர்த்து கொடுத்தவள்....படுக்க போக மணி 1 ஆயிற்று....



மாடிக்கு வந்தவள் கண்ணன் படுத்திருக்கவும்..... அவன் அருகில் வந்து படுத்தவள்..... “ஏங்க தூக்கம் வரலையா.....”



“ம்ம்ம்.... இன்னைக்கு மாதிரி நான் வாழ்க்கையில டென்சன் ஆனதே இல்லை...... ப்பா.... ஒரு நாளுல ராட்சசி என்ன பாடு படுத்திட்ட .....” என்றபடி அவள் பக்கம் திரும்பி படுத்தவன்......” ஏண்டி போன்னுனு ஒன்னு இருக்குல..... இந்த மாதிரி வண்டி ரிப்பேரா போனா எனக்கு ஒரு வார்த்தை போன்ல சொல்லியிருந்தா.....நான் வந்து கூட்டிட்டு வந்திருப்பேன்ல...... இன்னைக்கு உம்மேல இருந்த கோபத்துக்கு உன்னைய அடி வெளுத்திருப்பேன்..... பாவம்னுதான் விட்டேன்.....”..

கயல் அவனுக்கு முதுகைகாட்டி திரும்பி படுக்கவும்....” இப்ப என்ன.... இந்த பக்கம் திரும்பி படு......”



“ம்ம்ம்....மாட்டேன் நீங்கதான் என்னைய அடிப்பேன்னு சொல்றீங்க......”



“அப்புறம் உன்னைய கொஞ்சுவாங்களா..... நீ பண்ண வேலைக்கு..... இங்கிட்டு திரும்பு” என்றபடி அவளை தன் புறம் திருப்பியவன் அவளை தன் அருகில் இழுத்தவன்.... “என்னைய ரொம்ப தேடுனியா......”



“ஆமா.... “

“எவ்வளவு......தேடுன....”



“ந்தா..... இம்புட்டு” என்று தன் கையை அகல விரித்து காட்ட.....



“வாடிச் செல்லக்குட்டி …….”என்று அவளை இறுக்கி அணைக்க.... அவன் கை காயத்தில் உரசவும் கயல்” ஸ்ஸ்ஸ....... அம்மா......”



“என்னடி.... என்னாச்சு.....”. எழுந்து லைட்டை போட்டவன் அவளின் காயத்தை பார்த்தவன் தன் தலையில் அடித்துக் கொண்டவன்....” யேய்.... உனக்கு அடி பட்டுச்சு தானே மருந்து போடல..... வா நான் போட்டு விடுறேன்....”



“வேணாம்.... மருந்த குடுங்க நானே போட்டுக்குறேன்.....”

“நீ சொன்னவுடனே நான் கேக்க போறனா... வா “என்று அவள் கைக்கு மருந்தை போட்டவன் அவள் கால் பக்கம் வர.....” குடுங்க கால்ல நானே போட்டுக்குறேன்.....” மெதுவாக நைட்டியை தூக்கியவன்....அவள் முழங்காலில் மருந்தை போட்டவன் அவள் காலைபிடித்து விட.....” ஐய்யையோ... என்ன பண்ணுறீங்க....விடுங்க....”

“நான் ஏன் விடனும் எம்பொண்டாட்டி.... உங்க அப்பத்தா மட்டும் பிடிச்சு விடுறாங்கள்ள...நானும் பிடிச்சு விடுவேன் “என்று பிடித்து விட்டவன்....... அவள் காலுக்கு முத்தமிட்டு அவள் கால் விரலுக்கு முத்தமிட கயலுக்கு என்ன தோன்றியதோ.... படக்கென்று அவன் கையை எடுத்து விட்டவள் தன் நைட்டியை இழுத்து விட்டு போதும் தூக்கம் வருது படுங்க…. எப்போதும் தூங்கும்போது தன் கை காலை மட்டும் போட்டு தூங்குபவள்.... இன்று தன் தலையை எடுத்து கண்ணன் மார்பில் தலைவைத்து உறங்கியிருந்தாள்...... கண்ணனும் உள்ளுர ரசித்தபடி உறங்கினான்.......



மறுநாள் காலை இருவரும் கீழே இறங்கி வர.... காந்திமதி...” சரித்தா நீ ஊருக்கு கிளம்பு.....”

கண்ணன் கொலைவெறியுடன் அப்பத்தாவை முறைத்துக் கொண்டிருந்தான்......



இனி................... ?



தொடரும்...................
 
Last edited:

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரண்ட்ஸ் அடுத்த அத்தியாயத்தோட வந்திட்டேன்....படிச்சுட்டு மறந்திறாம கமெண்ட்ஸ் போடுங்க....... போன பதிவுக்கு லைக்ஸ் .... கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் நன்றி ப்ரண்ட்ஸ்......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top