நேசம் மறவா நெஞ்சம் - 2 nesam marava nenjam

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நேசம் மறவா நெஞ்சம்

அத்தியாயம்-2


"ஏய் மாப்ளே"
"கண்ணா!!, கண்ணா!!"
தன்னை யாரோ கூப்பிடுவதை உணர்ந்து அக்கம் பக்கம் திரும்பி பார்த்தான் கண்ணன்.


கண்ணன் ஆறு அடி உயரமும் தீர்க்கமான கண்களும் உழைப்பால் முறுக்கேறிய கை, கால்களும், சற்று கருத்த நிறம் உடையவன். சிரிக்க காசு கேட்பவை போல அழுத்தமான உதடுகளும், அகன்ற நெற்றியும், முறுக்கிய மீசையும், மேல் நோக்கி வாரிய தலையும், வேட்டி சட்டை போட்டு முறுக்கோடு இருப்பவன்.


தன்னை கூப்பிட்ட குரலை அடையாளம் கண்டு, "'மாமா நல்லாயிருக்கீங்களா 'இங்க என்ன மாமா மாலை வாங்க வந்தீங்களா"

"ஆமா மாப்பிள ஊருல இன்னைக்கு எட்டாம் திருவிழா சாமி வெள்ளி ரதத்தில் ஊர்வலம் வரும் நம்ம வீட்டு மாலை தான் முதல்ல போடுவாங்க அதான் பெரிய மாலையா வாங்க டவுனுக்கு வந்தேன். நீங்க என்ன மாப்ளே இங்க" கண்ணனை கூப்பிட்ட அழகர் கண்ணனின் தந்தை மாரிமுத்துவின் நெருங்கிய நண்பர்.

இருவரும் சிறுவயதில் இருந்து நண்பர்கள். அவருக்கு கண்ணன் வீட்டு சூழ்நிலை நன்கு தெரியும். கண்ணனின் தந்தை மாரிமுத்து ஒரு அப்பாவி. அவருக்கு பெற்றோர்கள் இல்லை. அவருக்கு இரண்டு தங்கைகள் அவர்களை திருமணம் செய்து கொடுத்து நீண்ட நாட்கள் கழித்து திருமணம் செய்தவர். அவர் மனைவி சாவித்திரி. திருமணம் முடிந்தது முதல் குடும்பத்திற்காக உழைத்து தங்கள் நாத்தனார் இருவருக்கும் குழந்தை பேறு, காதுகுத்து, சடங்கு, என எல்லா நல்லது கெட்டதும் இன்று வரை முகம் சுழிக்காமல் செய்து வருகின்றார். ஆனால் அவர் நாத்தனார் இருவருக்கும் அண்ணனின் வருமானத்திலே ஒரே குறி.

இவர்களுக்கு மூன்று ஆண்பிள்ளைகள். மூத்தவன் கோகுல கண்ணன், அடுத்தவன் கோதண்ட ராமன், கடைசியில் முத்து. கண்ணன் அக்ரிகல்சர் படித்து உள்ளூரிலே படித்த படிப்பை வீணாக்காமல் விவசாயம் செய்து வருகிறான்.
அவன் தலையெடுத்த பின்னரே தன் அத்தைகளின் எண்ணங்களை உணர்ந்து தன் தந்தையை எவ்வாறெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்று புரிந்து கொண்டான். கடைசியில் அவர்களின் அத்தைகளுக்கு தாங்கள் குடியிருக்கும் தங்கள் வீட்டின் மீதும், தோட்டத்தின் மீது ஆசை வந்தை உணர்ந்து அதன் பிறகு சுதாரித்து எந்த வருமானத்தையும் காட்டாமல் அதிக கடன் இருப்பதை போலவே காட்டினான். வீட்டுக்கடன்,நிலக்கடன் வாங்கியே விவசாயம் செய்து வருவது போலவும் அதிக நஷ்டம் வருவது போலவும் காட்டினான்.
அதனால்தான் அவன் வீட்டிற்கு எந்த ஒரு ஆடம்பர பொருளும் வாங்காமல் தேவைக்கு ஏற்ப சிக்கனமாக செயல்பட்டான். மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவர் தந்தை மாரடைப்பால் இறந்ததால் குடும்ப வரவுசெலவு தன் கையில் எடுத்து கொண்டான்.

சொந்த தன் அத்தைகளே தன் தந்தையை ஏமாற்றுவதை பார்த்து சொந்தங்களின் மீது வெறுப்புடன் இருந்தான். அவன் அம்மா சாவித்திரி உழைப்பிற்கு அஞ்சாதவள்.கிராமத்தில் பிறநது சூது வாது அறியாதவள் மகன் பெரிய படிப்பெல்லாம் படித்திருப்பதால் தன் பெரிய மகன் சொல்வதே வேதவாக்கு. சிறியவன் காலேஜில் முதல் வருடமும் கடைசி மகன் பக்கத்தூரில் பத்தாம் வகுப்பும் படிக்கிறார்கள்.

இருவருக்கும் அண்ணன் மீது மிகு‌ந்த பாசம். கண்ணன் அதிகம் பேசாவிட்டாலும் எங்கு சென்றாலும் அவர்களுக்கு தேவையான ஏதாவது ஒரு பொருள் அவனிடம் கண்டிப்பாக இருக்கும்.

"அண்ணே நல்லாயிருக்கீங்களா?"
தன் பின்னால் சாவித்திரி குரல் கேட்டு திரும்பிய மாரிமுத்து "ஆத்தா தங்கச்சி நல்லாயிருக்கியாத்தா".
...... ஏதோ இருக்கேண்ணே
மாப்ளே ஏன் இந்த ஆத்தா இப்படி மனசு உடைஞ்சு பேசுது".
சும்மாதான் மாமா. அம்மா மேலுக்கு சுகமிள்ள அதான் அம்மாவை இங்க ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு வந்தேன். அதோட இங்க விவசாய ஆபிஸில் ஒரு சின்ன வேலை அதான் முடிச்சிட்டு போயிரலாம்னு வந்தேன் மாமா வேலை முடிஞ்சிருச்சு. அப்புறம் திருவிழா எப்படி மாமா போகுது. "
" திருவிழாவுக்கு என்ன மாப்ளே குறைச்சல். நல்லா நடக்குது. நீங்க தான் எப்ப திருவிழாவுக்கு கூப்பிட்டாலும் வேலை வேலைன்னு சொல்றீங்க. ஆத்தா தங்கச்சி நீயாச்சும் வரலாம்ல".

" எங்கண்ணே இவனுக்கும் வயசு 27 ஆச்சு. வீட்டுக்கு ஒரு மருமக வந்தா
நிம்மதியா எங்க வேணும்னாலும் போகலாம், வரலாம் இப்பவீட்டிலயே வேலை சரியாயிருக்குண்ணே".
" அப்படியே உங்க மாப்பிள்ளைக்கு ஒரு பொண்ணு பாருங்கண்ணே. இந்த வருசத்தில் கல்யாணம் பண்ணலைன்னா அடுத்து 5 வருஷம் கல்யாணம் பண்ணக்கூடாதுன்னு ஜாதககாரர் சொல்றாரு"
( பாப்போம் கண்ணாத்தா என்ன வழி விடுதுன்னு)



" மாப்ளே எங்க ஊரு கண்ணாத்தா தெய்வத்தை ஒருமுறை வந்துகும்பிடுங்க அந்த வருஷமே உங்களுக்கு மாலை கழுத்துல விழுகும் பாருங்க மாமா சொல்றேன்". இதை கேட்டவுடன் சாவித்திரிக்கு மனதில் ஒரு சந்தோஷம் ஏற்பட்டது.

" ஏப்பா கண்ணா ஒரு தவணை போய் சாமி கும்பிட்டு மாலை போட்டுட்டு எனக்கும் உருவம் வாங்கி போடனும்(கோவிலில் சிறிய வெள்ளியில் என்ன உருவம் வேண்டுமோ அது கிடைக்கும். சிறிய அளவில் கண், கை, கால், முழுஉருவம் போன்றவை இருக்கும்) நேர்த்திக்கடன் இருக்கு அதோட கண்ணுக்கு நம்ம முத்து பயலுக்கு மாவிளக்கு வைக்கனும்பா போயிட்டு உடனே சாமி கும்பிட்டு வந்துரலாம்".

" சரி மாமா பேசிகிட்டு இருங்க நான் போய் அம்மாவுக்கு மெடிக்கல்ல மாத்திரை வாங்கியாரேன்".

" சரி மாப்ளே ஆத்தா சாவித்திரி வா அங்க போய் உட்காருவோம்". பக்கத்தில் உள்ள ஹோட்டலில் அமர்ந்து டீ, குடித்தார்கள்.

" சாவித்திரி நம் மாப்ளைக்கு ஏத்தாப்புல நம்மூர்ல என் நண்பன் மக ஒன்னு இருக்கா...... ஆன பொண்ணு டிகிரிபடிக்கல".

" ஆமா பொண்ணு படிச்சு என்ன வேலைக்கா போக போகுது. வீட்ல ஒரு பொண்ணு வந்து விளக்கேத்தனும் அண்ணே. ஒரே ஆம்பள பிள்ளைகளா இருக்குள்ள ஒரு பொண்ணு மகாலட்சுமி மாதிரி வந்தா போதும்ணே. பொண்ணு யாருண்ணே நல்ல தெரிஞ்ச குடும்பமா?.

"ஆமா, சாவித்திரி அந்த பொண்ணோட அப்பாவும், அம்மாவும் ரொம்ப நல்லவங்க, சூது வாது அறியாதவங்க ஆனா அஞ்சும் பொம்பள பிள்ளைங்க. ஒரு பிள்ளைக்குத்தான் கல்யாணம் ஆகியிருக்கு. அடுத்த பொண்ணுக்கு வரன் பாக்குறதா என்கிட்ட சொன்னான். அந்த பொண்ணை பத்தி எனக்கு தெரியாது ஆனா அந்த பொண்ணோட அம்மாவும், அப்பத்தாவும் ரொம்ப நாளா தெரியும். ரொம்ப நல்லவங்க.

ஒரே ஒரு ஆம்பள பிள்ளை ஆன அவன் ரொம்ப சின்ன பையன். பொண்ணு அவுக அம்மா மாதிரி குணமாயிருக்கமுன்னு நினைக்கின்றேன். (நல்லா தெரியுமாக்கும்.....?).
"அம்மா, போலாமா.. ?". "மாமா கிளம்பவா வயல்ல கொஞ்சம் வேலை இருக்கு... "
"சரிண்ணே, சாயங்காலம் நாங்க வந்து சாமிகும்பிட்டு நேரம் இருந்தா வீட்டுக்கு வாரோம். இல்லைன்னா இன்னொரு நாளைக்கு வாறோம். அண்ணியை ரொம்ப கேட்டதா சொல்லுங்க. பயலுக ரெண்டு பேரும் என்ன பண்றாங்க".
"எங்கம்மா பெரிய பையன் விவசாயம் வேணாம்னு மெட்ராஸ்க்கு போய் வேலை பாக்கிறான். சின்னவன் இப்பத்தான் படிக்கிறான். எனக்கொரு பொண்ணுயிருந்தா நம்ம மாப்பிள்ளைக்கு முடிச்சிருப்பேன். ஆனா அந்த குடுப்பினை தான் எனக்கு இல்லாம போச்சு. சரிம்மா சாயங்காலம் 5 மணிக்கு வெள்ளித்தேரை இழுக்க ஆரம்பிச்சுருவாங்க. நீங்க போய் மத்தவங்களையும் கூப்பிட்டு சீக்கிரம் வந்திடுங்க.
"நிறைய நிகழ்ச்சி நடக்கும். பாட்டு கச்சேரி வள்ளி திருமணம் நாடகம், பட்டி மன்றம் ஆடல்பாடல் எல்லாம் நாலு வீதிக்கும் நாலுநிகழ்ச்சி நடக்கும். நாலையும் பாக்கவே விடிஞ்சிரும்".
"சரிசரி வரவா மாப்ளே உங்க அத்த வேற திட்ட ஆரம்பிச்சா வாய மூடாம திருவிழாவுக்கு வந்தவங்க முன்னாடி என் மானத்தை வாங்குவா.வரவாம்மா".

" பாத்து மாமா போயிட்டு வாங்க சாயங்காலம் பாக்கலாம..... "

"பாக்கலாம்..........யாரை...?? "
....... தொடரு‌ம்..!!
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top