நேசம் மறவா நெஞ்சம்-14Nesam Marava Nenjam

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நேசம் மறவா நெஞ்சம்



அத்தியாயம்-14



கண்ணன் குடும்பத்தினர் கோவிலிலிருந்து கிளம்பவும் அனைவரும் தங்கள் கவனத்தை வாசு சுதாவிடம் திருப்பினர்........



அழகர் வாசுவிடம் சென்று” என்னப்பா வாசு உங்க அப்பாவுக்கு போன் பண்ணிட்டியா.........”



“பண்ணிட்டேன் மாமா இப்ப வந்துருவாங்களாம் மாமா........”.என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவர்கள் இருவரும் தங்களுடைய காரில் வந்து இறங்கினர்............மறுபடியும் ஆளாளுக்கு ஒன்று பேச மீண்டும் கூட்டத்தில் சலசலப்பு தோன்றியது..........



வாசுவின் அப்பாவுக்கு ஒரு விபரமும் தெரியவில்லை..........இன்று அதிகாலையில் எழுந்து ஒரு முக்கியமான உறவினர் கல்யாணத்துக்கு சென்றுவிட்டு இங்கே வரலாம் என்று நினைத்தவர்கள் இந்த விசயம் கேள்விபட்டவர்கள் பதறியடித்து பாதியிலேயே திரும்பியிருந்தார்கள்..........



வாசுவின் அம்மாவுக்கு விபரம் தெரிந்தாலும் இப்படி திடீரென்று தாலி கட்டுவான் என்று நினைக்கவில்லை............



அங்கிருந்தவர்களில் சிலர் “ஏப்பா.......... இந்த பொண்ணு……… கழுத்துல தாலிய கட்டுன......இந்த பொண்ணை அந்த பையனுக்குன்னு தானே பேசியிருந்தாங்க.............நடுவுல உனக்கு ஏப்பா புத்தி இப்புடி போச்சு.........”



“உனக்கு அந்த பொண்ணைப் புடிச்சிருந்தா முறைப்படி அவுக வீட்டுல போயி பேச வேண்டியதுதானே...........உனக்கும் சுத்திவளச்சுப் பாத்தா முறைப்பொண்ணுதானேப்பா.................ஏதாவது பேசுப்பா ஏன் பேசாம இருக்க........இந்த பொண்ணுதான் உன்னைய இப்புடி வந்து கல்யாணம் பண்ணச் சொன்னுச்சா..............”



அங்கு நின்றிருந்த வாசுவின் உறவின பெண்கள் சிலர் வாசுவின் அம்மாவிடம் சென்று” அக்கா இந்த பொண்ணுதான் நம்ம வாசுவ மயக்கியிருக்குமுன்னு நினைக்கிறேன்கா.......”



“ஏண்டி அப்புடி சொல்லுற..... “



“இல்லக்கா கல்யாணத்தப்ப இந்தபொண்ணு பின்னாடி வந்தத நான் பாத்தேன்கா.....”

“. அப்புடியா.....”.என்று சந்தேகத்துடன் சுதாவை பார்க்க



அதுவரை தனக்கும் நடந்ததற்கும் எதுவுமே சம்மந்தமில்லாதது போல நின்றிருந்த சுதா அங்கிருந்த பெண்கள் ஏதோதோ பேச ஆரம்பிக்கவும் நிமிர்ந்து வாசுவை பார்த்தாள்......



வாசுவோ ஐய்யய்யோ இவளுக கல்யாணத்தன்னிக்கே தேவையில்லாம பேசி என்னைய இமயமலைக்கு சாமியாரா அனுப்பிவச்சுருவாளுக போலயிருக்கே........... வாசு இப்பவாச்சும் ஒழுங்கா பேச ஆரம்பிச்சுரு..........



“எல்லாரும் ஆளாளுக்கு ஒன்னு பேசாம கொஞ்சம் பேச்சை நிப்பாட்டுறீங்களா............என்னைய கொஞ்சம் பேசவுடுங்க............நீங்க எல்லாரும் நினைக்கிறமாதிரி எதுவுமே இல்ல........சுதாவுக்கு கல்யாணம் நடக்குற கடைசி நிமிசம் வரைக்கும் எதுவுமே தெரியாது.......நான்தான் அவள பின்னாடி இழுத்து கல்யாணம் பண்ணுனேன்...........எனக்கு சுதாவ ரொம்ப புடிச்சிருந்துச்சு........நான் பொண்ணுகேக்கலாமுன்னு நினைக்கும்போது அவுக வீட்ல வேற பையனபாத்து முடிக்கவும்தான் நான் இந்தமாதிரி பண்ணவேண்டியதாப்போச்சு.........இனிமே சுதாதான் என்னோட பொண்டாட்டி யாரும் தேவையில்லாம பேசாதீங்க.............”



இப்போதுதான் மாணிக்கத்துக்கும் சகுந்தலாவிற்கும் மூச்சே வந்தது .எங்கே தன் பெண் இந்த வாசுவை விரும்பியிருப்பாளோ அதனால்தான் இவன் தைரியமாக இந்தமாதிரி செய்தானோ என்று மனம் நொந்து இருந்தவர்கள்,,,,,,,,வாசு தன் வாயாலே சுதாவிற்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொன்னவுடன் தான் மனதின் பெரிய பாரமே இறங்கியது............



மாணிக்கம் இந்த பையன் வாசு வேலைவெட்டி இல்லாம சும்மாதான ஊரஊர சுத்திக்கிட்டு இருந்தான்..அவனுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இந்த மாதிரி செய்வான்........என்று ஏகத்திற்கும் கோபப்பட்டார்.அழகர்தான் அவரை வந்து சமாதானப்படுத்தி

“இனி என்ன பண்ணுறது நடந்தது நடந்து போச்சு.......இது உன் பொண்ணோட வாழ்க்கைப்பா.........அவுக்கூட நாம போயி மல்லுக்கட்ட முடியுமா........ஒரு ஊருல இருக்கோம் நம்ம பொண்ணும் அங்கே தானப்பா வாழப்போகனும்......”



“அதுவரைக்கும் பரவாயில்லப்பா......ஆத்தா சூதானமா இந்த பையன் நம்ம சுதா கழுத்துல தாலிய கட்டவும் டக்குன்னு நம்ம கயல கண்ணனுக்கு பொண்டாட்டி ஆக்கிருச்சு..........நமக்குகூட இந்த யோசனை தோனிருக்காதுப்பா.......அந்த நேரத்துலயும் ஆத்தா எப்புடி சூதானமா யோசிச்சி இருக்குன்னு பாரேன்..........இதுனால அந்த குடும்பத்துக்கும் ஒரு விசனமும் ஏற்படாம காப்பாத்தி குடுத்திருச்சுப்பா........”.



“இல்லன்னே இருந்தாலும் எனக்கு மனசு ஆறல.........”



“பரவால்ல விடுப்பா.........விடுப்பா.......”

..ஏனென்றால் அழகரின் மனைவி பேச்சிதான் சுதாவின் பின்னால் நின்றிருந்தார்,.........சுதா பின்னால் நகர்ந்ததையும் வாசு கண்ணனிடம் ஏதோ கூறியபடி தாலி கட்டியதையும் அவர் தன் கணவரிடம் கூறியிருந்தார்........



அதனால் தான் அழகர் இந்த சுதாவின் சம்மதம் இல்லாமல் இந்த கல்யாணம் நடைபெற்றிருக்காது என்ற முடிவுக்கு வந்தவர்.மேலும் திடிரென வேறொருவரின் கையில் தாலி வாங்கிய கயல் மயங்கி விழுந்ததையும் ஆனால் இந்த பொண்ணோ எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் யாராவது கேட்கும்போது மட்டும் கண்ணை மூடிக்கொண்டு அழுது மற்றநேரம் சாதாரணமாக இருப்பதையும் கவனித்திருந்தார்.............



மாணிக்கத்தின் தாய்க்கும் இது ஏற்கனவே தெரிந்ததால்தான் அவர் சட்டென்று முடிவுசெய்து கயலை கண்ணனுக்கு மனைவியாக்கியிருப்பார் என்றும் நினைத்தார்..........இப்பொழுதும் இவ்வளவு பேர் பேசும்போதும் காந்திமதி அமைதியாக நிற்பதை கண்டவர் சாதாரணமாக தன் குடும்பத்தை யாராவது ஏதாவது பேசிவிட்டு சென்றாலே சண்டைக்கு அழைப்பவர் இன்று பேசாமல் அமைதியாக நின்றதே அவருக்கு சந்தேகத்தை கிளப்பியது.........



வாசுவின் தந்தையோ.......இது எப்படி நடந்தது..........நம்ம மகனுக்கு இந்த அளவுக்கு தைரியம் இருக்கா........இந்த பய........வெட்டி பந்தா காட்டிக்கிட்டு சும்மா உதார்விட்டுகிட்டுதானே திரிஞ்சான்.............சின்னவனுக்கு மாதிரி இவனுக்கு கூறுபத்தாதே........... இவனே ஒரு தெண்டம்.......இனி இவன நம்பி ஒரு பொண்ணு வேறயா.............. அவருடைய மனைவி அவனுக்கு பொண்ணுபாக்கலாம் என்று சொல்லும்போது கூட வெட்டிபயலுக்கு எப்படி பொண்ணுபார்ப்பது என்று நினைத்துதான் அந்த கடையை இவனுக்கு பார்த்தார் அதுவும் கண்ணனுக்கு கைமாறவும் இப்ப என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருந்தவருக்கு இப்ப என்னடா புதுப்பிரச்சனை..................



இந்தபய ஊள்ளுருலயே பொண்ணு எடுத்துருக்கானே..........இந்த புள்ளைய ஒழுங்கா வச்சுக்குவானா.............என்னமாச்சும் பிரச்சனை வந்தா ஊள்ளுருல நமக்கு இருக்குற கொஞ்சநஞ்ச மானமும் கப்பலேறிருமே............... இப்ப என்ன பண்ணுறது..............



வாசுவும் ஏதேதோ சொல்லி தன் அம்மாவையும் அப்பாவையும் சமாதானப்படுத்தினான்........பின் அனைவரும் ஒருவாறு பேசிமுடித்து சுதாவை அவர்கள் வீட்டிற்கு கூட்டிச்செல்ல முடிவுசெய்தனர்........



சௌந்தரமும் சகுந்தலாவிடம் பேசி ஆறுதல் கூறி............. காந்திமதியிடம் “அத்தே........இந்த வாசுவோட அம்மாவுக்கு ஆசை கொஞ்சம் அதிகம் அதுனால சேத்த சீரையும் நகையையும் சுதாவுக்கே குடுத்திருவோம்..........நம்ம கயலுக்கு அடுத்த அறுவடையில வார வருமானத்துல சீரு செஞ்சுக்கலாம் அந்த அத்தாச்சியும் எதையும் எதிர்பாக்கமாட்டாங்க..........நம்ம புள்ளைய தங்கமா தாங்குவாங்க............நீங்க என்னத்தே நினைக்குறீங்க........”..



“நான் என்னத்தா நினைக்கப்போறேன் இந்தா அவளோட அம்மாவும் அப்பாவும் இருக்காங்க...............அவுகட்ட பேசிக்கத்தா.........”



சகுந்தலா பதறியபடி “என்னத்தே யாருவுட்டோ கல்யாணம் மாதிரி பேசுறீக......”..



“இல்ல சகுந்தலா அருணக்கூப்புடு நான் வீட்டுக்குப் போறேன்.........நீங்க எவ வீட்டுக்குனாலும் போயி சீர இறக்கிட்டு வாங்க...........நான் எம்பேத்தி கயலுகிட்ட அப்புறமா போன்ல பேசிக்குறேன்...........நான் கிளம்புறேத்தா............”



“என்னக்கா அத்த இப்புடி பேசிட்டு போறாக...........”



“சரி விடு சகுந்தலா இங்கன நடந்தது நமக்கே மனசு ஆறல......... அவுக பெரிய மனசவுக தானே......... அதான் கொஞ்சம் ஓஞ்சு போயிட்டாங்க............. ரெண்டு மூனு நாளு போனா தன்னால சரியாயிருவாக.......வா நம்ம போயி அடுத்த வேலைய பாப்போம்................”.
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அங்கு கண்ணன் கடைக்கு சென்றவுடன் தாமரை மல்லிகா கயல் மூவருக்கும் தங்கள் வீட்டைச் சுற்றி காட்டினர் ராமரும் முத்துவும்.........



ராமருக்கும் முத்துவுக்கும் பெண் மாறியது அறிந்து முதலில் திக் என்று இருந்தாலும் கயல்தான் பெண் என்று தெரிந்தவுடன் ரொம்ப சந்தோசமாக இருந்தது............... ஏனென்றால் சுதாவை பெண் பார்த்தபோதும் நேற்று இரவும் அவளிடம் பேச முயன்றபோது அவள் முகத்தை திருப்பிக்கொள்ளவும் அவர்கள் இருவருக்கும் மனதுக்குள் சுருக்கென்றது.... அண்ணன்தான் தங்களிடம் பேசாமல் அமைதியாக இருக்கிறார் என்றால் வருகிற அண்ணியும் இப்படி இருக்கிறார்களே என்று வருத்தத்துடன் இருந்தவர்களுக்கு கயல் மணப்பெண்ணாக மாறியது மகிழ்ச்சியே அளித்தது..........பெண்பாத்த போதே கயல் இவர்கள் இருவரிடமும் நன்கு பேசி பழகி இருந்தாள்............ ராமருக்கோ நல்லவேள அண்ணன் இந்த வீட்டுலயே பொண்ணு எடுத்தாங்க........வேற வீட்ல பொண்ணு எடுத்தா நாம எப்படி மல்லிகாவ பாத்திருக்கமுடியும்.........(அப்பா ராமா உனக்கு உன் கவலை..........)





இவர்களின் வீடு கயலின் வீட்டைப்போல ஓட்டுவீடுதான்.........இருந்தாலும் நல்ல பெரிய வீடாக இருந்தது. மேலே மச்சுவச்சு அங்கும் ஒரு பெரிய அறை இருந்தது......அதைத்தான் கண்ணனின் அறை என்று முத்து சொன்னான்............கீழே நல்ல பெரிய முத்தம் வைத்து மழைநீர் விழுவதற்கென்று நான்குபுறமும் தகரம் வைத்து தண்ணீர் பிடிப்பதற்கு ஏதுவாக இருந்தது.........”. அண்ணி மழைபெருசா வரும்போது இங்க நின்னு குளிச்சா சூப்பரா இருக்கும் அண்ணி........”என்று முத்து கூற....



மல்லிகா “ஏன் எங்க வீட்டுலயும்தான் இது மாதுரி இருக்கு............”



“இருக்கு ஆனா இப்புடி தகரம் வச்சா இருக்கு........மழை வரும்போது நீங்க குளிக்கமுடியுமாக்கும்.......”



“முடியாது......ஆனா எங்க வீடுதான் சூப்பர்......”.



“இல்ல எங்க வீடுதான் சூப்பர்........”



“இல்ல எங்க வீடுதான்.........” என்று முத்துவும் மல்லிகாவும் வம்பிழுத்துக் கொண்டிருக்க தாமரை மல்லிகாவை அதட்ட......... ..தாமரையையும் கயலையும் முத்து வேறு அறைக்கு கூட்டிச்சென்றான்..........



ராமர் மல்லிகாவிடம் “ ஏய் ஜாமூன் எங்க வீடுதான் சூப்பர்ன்னு ஒத்துக்கோ.........நாளபின்ன நீ இங்கதான வந்தாகனும்.............”



“நாளபின்ன நா ஏன் உங்க வீட்டுக்கு வரணும்................”



“அது வந்து.......... அது வந்து......... இது உங்க அக்கா வீடுல்லயா............. அப்ப அவுக பாக்க நீ அடிக்கடி வரமாட்டியா..................அதச் சொன்னேன்..........”



“அதுவா அப்ப............சரி......ஆமா என்னைய ஏன் ஜாமூன்னு கூப்புடுறீங்க.........ஒழுங்கா மல்லிகான்னு கூப்புடுங்க.................வேணாம் ........வேணாம் ......நீங்க எதுக்கு என்னைய கூப்புடனும்.........”



“நான் கூப்புடாம வேற எவன்டி உன்னைய கூப்புடுவான்” என்று முணுமுணுக்க..............



“என்ன சொன்னீங்க................”



“ஒன்னுமே சொல்லல..............”.



“அப்ப சரி வாங்க...... இதுல உங்க ரூம் எது.........”.அங்கிருந்த அறைகளை கைகாண்பித்து கேட்க........



அங்கிருந்த ஒரு அறையை கை காட்டியவன்.......”.ஆமா அது என்ன எப்ப பாத்தாலும் வாங்க போங்கன்னு கூப்புடுற.........ஒழுங்கு மரியாதையா மாமா இல்ல இல்ல மச்சான்னு சொல்லு........”



“என்னது மாமா மச்சானா......... எங்க அக்காவ கல்யாணம் பண்ணுனாதான் மாமான்னு சொல்லுவேன் அதுமாதிரி என்னைய கல்யாணம் பண்ணப்போற முறைமாப்புளயதான் மச்சானு சொல்லுவேன்........”



“அப்படி எத்தன முறைமாப்புளடி உனக்கு இருக்காங்க...........”



“அத ஏன் இப்புடி மொறச்சுக்கிட்டே கேக்குறீங்க.........அது இருக்காங்க ரெண்டு மூனு பேரு........”.



“ரெண்டு மூனு பேரா............”(.ஒருத்தனே இருக்கக்கூடாது. இதுல ரெண்டு மூனு பேருன்னா ..........)”. ஆமா அவனுக என்ன பண்ணுறானுக........”



“எல்லாரும் டவுனுகளுள பெரிய படிப்பு படிக்குறானுக......”( ஆமா .ஒவ்வொருத்தரும் ஒன்னாவது மூனாவது நாலாவதுல............)



ராமனுக்கோ பக் என்றது......ஒரு வேளை அவனுக எல்லாம் டாக்டர் இஞ்சினியராக இருப்பானுகளோ.........”அவனுக உங்க வீட்டுக்கு ஒயாம வருவானுகளா.......”



“லீவுக்கு லீவு கண்டிப்பா வந்திருவானுங்க வந்தாங்கன்னா.......... என்னைய விட்டு நகரவேமாட்டானுங்க.......என்னையவே சுத்தி சுத்தி வருவானுக......”

(அடிப்பாவி அவன எப்படியெல்லாம் உசுப்பேத்துற...........).



ராமருக்கு புஸ்ஸு புஸ்ஸு என்று கோபம் வந்தது..........இவ எப்படி அவனுககிட்ட பேசலாம்................ இவளை....ஏதோ சொல்லவரும் முன் முத்து ஓடி வந்து” அண்ணே ஒன்னைய அம்மா கூப்புடுறாங்க “என்று சொல்ல.....



“ம்ம்ம் இந்தா போறேன்............”

மல்லிகா முத்துவோடு பேசிக்கொண்டே கயலைத் தேடிச் செல்ல

ராமர் அவளை முறைத்தபடி தன் அம்மாவைத் தேடிச் சென்றான்..........

கயல் தாமரையோடு பேசிக்கொண்டு கொல்லைப்புறத்தில் நின்றாள்............ “அக்கா இந்த எடம் நல்லாயிருக்குள்ள........”.



“ஆமாடி நீங்க கடைக்கு போயி காயே வாங்க வேணாம் போலயிருக்குடி...... இங்கனயே எல்லா காயும் போட்டிருக்காங்க...........ஆனா வீடும் நம்ம வீட்டோட பெரியவீடா தாண்டி இருக்கு.......நான் அன்னைக்கு வரும்போது கூட நல்லா பாக்கல......... உங்க அத்தையும் பாவம்டி ............ வீட்டுல ஆடு, மாடுக,கோழின்னு இம்புட்டையும் பாத்துக்கிட்டு வீட்டு வேலையும் செஞ்சுக்கிட்டு ஒரு மனுசவுக எம்புட்டு வேலையதான் பாப்பாங்க........... நீ அவுகளுக்கு கொஞ்சம் ஒத்தாசயா இருக்கனும்டி...........”.



“அதுக்கென்னக்கா நம்ம வீட்டுல என்ன வேலையா பாக்காம இருந்தேன்.........அதெல்லாம் பாத்திருவேன்கா........ ஆனா ஓரே ஒரு பிரச்சனதாக்கா..........”.



“அது என்னடி.........”



“பாத்ரூம் மட்டும்தான்கா.......... இந்த கொல்லப்புறத்துல கட்டுயிருக்காங்க......... நைட்டுல எப்புடிக்கா.............போறது........ பயமாயிருக்காது........”



“அதுக்கென்னடி பயம் எங்க வீட்டுலயும் அப்படிதானடி இருக்குது........... ஒன்னோட மாமியார இல்லைன்னா ஒன் வீட்டுக்காரர துணைக்குக் கூட்டிட்டுப்போ............ நானெல்லாம் அப்புடிதான்டி கல்யாணம் ஆன புதுசுல கூட்டிக்கிட்டு போனேன்..............”



(என்னது இந்த ஐயனார துணைக்கு கூப்புடுறதா...................... வேணாம் கயலு வேணாம் ..............நாம இந்த அத்தக்கூடவே படுத்தம்னா அவுகளயே துணைக்கு கூப்புடுக்கலாம்............ அக்காட்ட சொல்லவேணாம் அதுக்கு வேற திட்டினாலும் திட்டும்........)
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அங்கு கண்ணன் கைகள் வேலைபாத்துக் கொண்டிருந்தாலும் மனதில் தன்னை ஒரு பெண் மறுத்த கோபம் கனன்று கொண்டே இருந்தது......... என்னய விட அந்த வாசுபய எந்த விதத்துல ஒசந்துட்டான்........... நம்மள நேராபாத்து கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட பொண்ணே வேணாமுன்னு சொல்லிருச்சே......... இந்த பொண்ண நாம வம்படியா கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்துருக்கோம்................ இது என்னப் பண்ணும்.......நான் என்ன பொண்ணு அழகாயிருக்கனும் இல்ல அம்புட்டு நகநட்டோட வரணும் நினச்சமா...........அம்மாட்ட அனுசருச்சு போகனும்தான நினச்சோம்


ஆனா இந்த பொண்ண பாத்தா ரப்பு ராங்கியா இல்லாம கொஞ்சம் பயந்த சுபாவம் உள்ள பொண்ணாத்தான் தெரியுது........... இல்லனா நாம கல்யாணம் பண்ணுன ஒடன கத்தி கலாட்டா பண்ணாம பொத்துன்னு மயக்கம் போட்டு விழுகுது..............இங்க வீட்டுக்கு கூப்புட்ட ஒடனேயும் கலாட்டப்பண்ணாம அழுதுகுட்டு நம்ம கூட கிளம்பிருச்சு................ ஆனாலும் எந்த புத்துல எந்த பாம்பு இருக்குமுன்னு தெரியாது......... நாம கொஞ்ச நாளைக்கு இந்த புள்ளக்கிட்ட ஸ்டிக்டாதான் இருக்கனும்( ஆமா இப்ப ரொம்ப கலகலப்பா இருக்குறமுன்னு நினப்பு.................).. கல்யாணம் தான் இப்புடி நடந்துச்சுன்னுனா இனிமேயாச்சும் அந்தபுள்ள மனசு கோனாம நடந்துக்கனும்..........நம்மள மனசார ஏத்துக்கணும்....... நாம ஏதாச்சும் பண்ணப்போயி அந்த புள்ள கோவுச்சுக்குட்டு அவுக அம்மாவீட்டுக்கு போயிட்டா நம்ம அம்மா நம்மள கொன்னேபுடும்............. ஆனா இந்த புள்ள எம்புட்டு அழகா இருந்துச்சுல............என்று கயலை மனதிற்குள் ரசித்தவன் நேரம் 10 ஆகவும் வீட்டிற்கு கிளம்பினான்................



இங்கு கண்ணன் வீட்டில் அனைவரும் சாப்பிட்டு படுக்கப்போக தாமரை கயலை அழகாக அலங்கரித்து சாவித்திரி கொடுத்த சேலையை கட்டிவிட்டுக் கொண்டிருந்தாள்.........


“இங்கபாரு கயலு இனிமே நீ ஒன்னும் சின்னபுள்ள இல்லப்புரியுதா........... வீட்டுல இருக்கயில சேலைய கட்டிப் பழகு......... இங்க மூனு ஆம்பளைங்க இருக்காங்க.........எப்பவுமே அத ஞாபகத்துல வச்சுக்கணும் ........ஒன் வீட்டுகாரர பாத்தா கொஞ்சம் கோவகாரரு மாதிரி தெரியுது...........”


(தெரிஞ்சுருச்சா........அது உனக்கும் தெரிஞ்சுருச்சா பாத்த உனக்கே தெரியும் போது......... இரண்டு தரம் திட்டுவாங்குன எனக்குத் தெரியாதா................). (டேய் கண்ணா என்னடா உன்னய இப்புடி ஊரே சேந்து கோபக்காரன்னு முடிவுபண்ணிட்டாங்க............).


“என்னடி நான் இம்புட்டு பேசுறேன்....... நீ எதுவுமே பேசாம இருக்குற.........”

“அது ஒன்னுமில்லக்கா சேலைய எப்புடி கட்டிப்பாக்குறதுன்னு....... .யோசிச்சுகிட்டு இருக்கேன்........”.

“ஏண்டி அதுதான் போன்லயே இருக்குலடி.........யூடுப்புல பாத்து கட்டவேண்டியது தானேடி.............. ஆமா உன்னோட போன் எங்க........”

“அது வேற எதுக்கு லக்கேஜ்ன்னு வீட்டுலயே போட்டுடேன்க்கா.......”

“அது உனக்கு லக்கேஜா........... மறந்துட்டேன் சொல்லு.....இப்புடியெல்லாம் தத்து பித்துன்னு ஒன்புருசன்கிட்ட போயி உளராத................ புரியுதா...........”


“ம்ம்ம்..............”.என்றவள்.........மனதிற்குள் நான் இன்னையில இருந்து மவுன விரதம்பா............இல்ல இல்ல இந்த ஐயனாருகிட்ட மட்டும் தாம்பா மவுனவிரதம் நம்மலால சாப்புடாம கூட இருக்கலாம் ஆனா பேசாம இருக்க முடியாது........... ஆனா ஒன்னால சாப்புடாமயும் இருக்க முடியாது......இப்ப என்ன செய்யலாம்....... என்று யோசித்துக் கொண்டிருந்தவளை.........தாமரை கண்ணனின் அறைக்குள் விட்டு கதவை சாத்திவிட்டுச் செல்ல.............


அறைக்குள் நுழைந்த கயல் அந்த ரூமை சுற்றிப்பார்த்தவள்...........அப்பா எவ்வளவு பெரிய ரூமா இருக்கு..........ஆனா இவ்வளவு பெரிய ரூம்ல.......நடுவுல பெரிய மரக்கட்டில் ஒரு மர அலமாரி ஒரு டேபிள் ஒரு சேர் அந்த டேபிள்ல ஒரு லாப்டாப் ஒரு சட்டை ஹாங்கர்..............நம்ம கொண்டு வந்த ஒரு பேக் ...............எண்ணி நாலே பொருளு ...........அப்புடியே கப்பு சிப்புன்னு இவ்வளவு அமைதியா இருக்கு..............கீழே ரெண்டு ரூமு சும்மாதான இருக்கு ........எப்புடியாச்சும் அத்தகிட்ட கேட்டு அந்த ரூமுல ஒன்னு கேட்டு வாங்கிரனும்......... அதுவும் அந்த டிவிகிட்ட ரூமதான் கேக்கனும் என்று யோசித்தவள்..........என்னடா இந்த சேலை ஒருமாதிரியா இருக்கு என்று நினைத்து தன்.பேக்கை திறந்து பார்த்தவள்.......... அதிலிருந்த நைட்டியை எடுத்தவள்......... அக்கா அவுக முன்னாடிதான சேலை கட்டிக்கிட்டு இருக்கனும் சொன்னாங்க...........இப்பதான் யாரும் இல்லயே என்று நினைத்து நைட்டியை மாற்றியவள் சேலையை மடித்து பேக்கில் வைக்கப் போனவள் அந்த பேக்கில் ஏதோ நோட்டு புத்தகம் தட்டுப்படவும் அதை எடுத்துப் பார்த்தவள்.............. அது மல்லிகாவின் ரெக்கார்டு நோட்டு எனத் தெரியவும்............. அவளுக்கு அப்போதுதான் படம் வரையாதது ஞாபகத்திற்கு வந்தது........... இவ ஏன் நம்மகிட்ட ஒரு வார்த்தை கூடச் சொல்லாம வச்சிருக்கா..........என்று நினைத்தவள்....விறுவிறுவென்று கட்டிலுக்குச் சென்றவள் அந்த நோட்டயும் மல்லிகாவின் புக்கயும் விரித்து அதில் ஏற்கனவே மார்க் பண்ணியிருந்த படங்களை வரைய ஆரம்பித்தாள்................... அவள் வைத்திருந்த பூவும் அவளுடைய பின்னலும் அடிக்கடி முன்னால் விழுந்து அவளுக்கு தொந்தரவு தரவும் தலையில் இருந்த ஏர்பின்களை எடுத்து அந்த பூவை எடுத்து அங்கிருந்த மேஜையில் போட்டவள்...........தன் ஜடையை கொண்டையாக மாற்றினாள்............


வீட்டிற்கு வந்த கண்ணனை அவன் அம்மா..........” என்ன கண்ணா மணி இப்ப என்னாச்சு..........வீட்டுக்கு வர இம்புட்டு நேரமா...........”.



“இல்லமா கொஞ்சம் வேலை அதிகமா இருந்துச்சு........”



“சரி சரி வாப்பா சாப்புட........”.



“இல்லம்மா நான் சாப்புட்டேன்.......நீங்க எல்லாரும் சாப்புட்டீங்களா........”.வாய் பேசினாலும் கண் கயலை தேடியது.......




“எல்லாரும் சாப்புட்டாச்சுப்பா........நீ போப்பா.......மருமக மேலதான் இருக்கா............”



கண்ணனோ மனதிற்குள்...... வீட்டுல எல்லாரும் தூங்கிட்டாங்க...... இப்ப போயி நீ ஏதாவது பேசுனினா அவ கத்திஊர கூட்ட ஆரம்பிச்சுருவா.........ஏற்கனவே ரெண்டுதரம் அவ கத்துனதே போதும் அதுனால காலையில இருந்து இருந்தமாதிரி மூஞ்சிய வெறப்பா..........வச்சுக்கா............என்று தன் முகத்தை கோபத்துடன் இருக்கிற மாதிரி வைத்தவன்................



தன் அறைக்குள் நுழைந்தவன் கயலைப் பார்த்தவன் திருதிருவென்று முழித்தான்............





 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
என்னடா இது ஒன்னு இந்த பொண்ணு தூங்கிகிட்டு இருக்கும்இல்லைனா அழுதுகிட்டு இருக்குமுன்னு நினைச்சுவந்தா.............இந்தபுள்ள என்னமோ எழுதிகிட்டுல்ல இருக்கு..............



அறைக்குள் நுழைந்தவன்............. தன் ரூமைச்சுற்றி பார்த்தவன்........டேபிள் மேல் அவள் வைத்திருந்த பூ , ஏர்பின்கள்......அவள் கட்டியிருந்த சேலை பாதி மடித்தும் மடிக்காமலும் அந்த பேக்கின் மேல் கிடந்தது...........



கட்டிலில் இருந்த தலகாணி அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடந்தது........ கட்டிலைச் சுற்றி நோட்டு புத்தகம் விரித்தபடி ஸ்கேல் பென்சில் ரப்பர் என அவளைச் சுற்றி கிடந்தன.............



கட்டிலின் அருகே சென்றவன் அவள் என்ன செய்கிறாள் என்று பார்க்க அவள் ஏதோ படம் வரைவது போல தெரியவும் ஆமா இது என்ன ரெக்கார்டு நோட்டு மாதிரி இருக்கு..................... அம்மாடி இவ காலேஜ்தான படிக்குறதா நெனச்சோம்.....................



தன் அருகில் யாரோ நிற்பது போல தெரியவும் மெல்ல நிமிர்ந்து பார்த்தவள்................ கண்ணனைப் பார்த்து அதிர்ந்தவள்........... இவரு எப்ப ரூமுக்குள்ள வந்தாரு............கதவ தொறந்த சத்தமே கேக்கலயே................... என்று நினைத்து டக்கென்று..........கட்டிலில் இருந்து கீழே இறங்கினாள்............



“என்ன பண்ணிக்கிட்டு இருக்க...............”.



அவள் பேசாமல் தலை குனிந்து நிற்கவும்.........(டேய் நான் இன்னைக்கு மவுன விரதம்.......).



அவளை நிமிர்ந்து பார்த்தவன்..........ஆமா பஸ்ட் நைட் ரூமுகுள்ள ஒரு பொண்ணு இப்புடியா இருப்பா..........படத்துல எல்லாம் வேற மாதிரியில்ல காமிக்குறாங்க............ இந்த புள்ள என்னனா பூவ கொண்டு போயி அந்த டேபுளுக்கு வச்சுருக்கு தலையில வச்சிருந்தா மட்டும் இப்ப இங்க என்ன நடக்க போகுது.......... டேய் மொத அவ மனச ஒன்பக்கம் மாத்து....... அப்புறம் அந்த பூவ நீயே எடுத்து அவ தலையில வச்சுவிடலாம்...................



என்ன இந்த ஐயனாரு நம்மள இப்புடி மொறைக்குறாரு......(..ஏய் மொறைக்கலப்பா...........ரசிக்குறாரு.....)..



“என்ன கேள்வி கேட்டா பதில் சொல்லமாட்டியா............”

ஒழுங்கா பதில சொல்லிரு கயலு அவரு பாட்டுக்கு நம்மள சப்புன்னு அறைஞ்சுப்புடாம..................” அது வந்து…………அது வந்து..........இது என் தங்கச்சியோட நோட்டு..............அவ ஏற்கனவே படம் வரைஞ்சு தரச்சொன்னாலா.................இன்னைக்கு வரஞ்சு தரதா சொன்னேன் இன்னைக்கு இப்புடி நடந்துப்போச்சா.............. அதுதான் இப்ப வரையுறேன்.............. இன்னும் ரெண்டே ரெண்டுப் படம் மட்டும் தான் ...........சீக்கிரமே வரஞ்சு முடிச்சுருரேன்..........”.



“ம்ம்ம்.........”.என்றவன் ஸ்ஸ்ஸ் அப்பாடி இது இந்த நோட்டு இவ தங்கச்சியோடதா...........ஒரு வேளை பள்ளிக்கூடம் படிக்குற பிள்ளைக்குதான் தாலி கட்டிடோம்ன்னு ஒரு நிமிசம் பயந்து போயிட்டோம்............என்று பெருமூச்சு விட்டவன்........சட்டையை கழற்றி ஹாங்கரில் போட்டவன்... பனியனோடு..கைலியை மாற்றிக்கொண்டு துண்டோடு கொல்லைப்புறத்திற்கு சென்றான்............

அவன் சட்டை கழற்றியதையோ கொல்லைப்புறம் சென்றதையோ கவனிக்காமல் கயல் தன் கவனம் முழுவதையும் படம் வரைவதில் செலுத்தினாள்..........

அறைக்குள் நுழைந்த கண்ணன் அங்கு கயலின் கால் புறமாக்கிடந்த தலகாணியை எடுத்து தலைக்கு வைத்து கையை இருபுறமாக தலைக்கு கீழே வைத்து கட்டிலின் ஒரு ஓரமாக படுத்திருந்தவன் கயலின் அழகை ரசித்துக் கொண்டிருந்தான்..............



மேலும் ஒரு இருபது நிமிடம் கழித்து படத்தை வரைந்துமுடித்தவள் ......”..ஸ்ஸ்ஸ்” என்று நிமிர்ந்தவள்.......கண்ணனை பார்த்து..........

“ஐயோ.......... அம்மா” என்று கத்தினாள்............



“ஏய் ......... என்ன.......என்னாச்சு......”



“நீங்க என்ன இப்புடி இருக்கீங்க........”..



“எப்புடி..........”



“சட்டையில்லாம..........”



“ஏன் .........இருந்தா...... என்ன........”



“நீ மட்டும் நைட்டியோட இருக்க............”.



அப்போதுதான் தன்னைப் பார்த்தவள்..........அப்போதுதான் அவளுக்கு தாமரை சொன்னது ஞாபகத்துக்கு வர.......உடனே தன்சேலையை எடுத்து தன் மேல் போட்டுக்கொண்டாள்.......



“ஏய் இப்ப என்ன பண்ணுற.........”



“இல்ல எங்க அக்கா சொன்னாங்க.......... உங்க முன்னாடியும் உங்க தம்பிங்க முன்னாடியும் சேலைதான் கட்டிக்கச் சொன்னாங்க..........”.



“என் முன்னாடி நீ இந்த ரூமுக்குள்ள நைட்டிப் போட்டிக்கலாம்....... இந்த மாதிரி நைட்டியா இருந்தா....... இன்னும் கொஞ்சநாள் கழிச்சு நீ வீட்டுக்குள்ளயே போட்டுக்கலாம்......... இப்பனா வீட்டுக்கு நம்மள பாக்க ஆளுங்க வந்துகிட்டே இருப்பாங்க..........சரி சரி .........படு.....”



“இங்கயா......”



“இங்கயில்லாம..........வேற எங்க படுப்ப.....”

“இல்ல அத்தகிட்ட ஒரு பாயி வாங்கிட்டு வரவா..........”

“உன்னைய..........”என்றவனுக்கு கோபம் ஏறத் தொடங்கியது........நம்மள நம்ம அம்மாகிட்ட மாட்டிவிடாம விடமாட்டா போலயிருக்கே.........


“ஏய் இங்கபாரு நானும் ஒன்கிட்ட ஒன்னையும் எதிர்பார்க்கல........நீயும் என்கிட்ட ஒன்னையும் எதிர் பாக்கக்கூடாது புரியுதா.............”



நம்மகிட்ட என்ன இருக்கு இவருகிட்ட குடுக்க..........ஆனா....... “அப்ப ஒரு போன் பண்ணிக்கவா.............”



“இப்பவா.........யாருக்கு இந்நேரத்துல..........”




“எங்க அம்மாவுக்குதான்..............”



“எதுக்கு........”



“நீஙகதான் உங்ககிட்ட ஒன்னையும் எதிர்பாக்ககூடாதுன்னு சொல்லிட்டீங்கள்ள அதுனால காலையில 8 மணிக்கு எங்க ஊருல இருந்து இங்க பஸ்ஸு வருமா..........அதுல எனக்கு மூனு நேரத்துக்கு சாப்பாடு குடுத்துவிடச் சொல்லுறேன்............... எங்க அப்பத்தா தான் நீங்க சொல்லாம என்னைய அங்க வரக்கூடாதுன்னு சொல்லிருச்சே..............”

“ஏய்..........மூச்.........வாயே திறக்கக் கூடாது............ இங்கே பேசாம படு............என்றவனுக்கு தலை சுற்றியது...........”

காலை ஆறு மணி..........கண்ணை திறந்த கண்ணனுக்கு தன் மேல் பூமாலை ஒன்று கிடப்பது போல இருந்தது..........அதே நேரம் கண்விழித்த கயல்.........என்னடா இது இப்புடி ஒரு தலகாணி மேல கால போட்டு இருக்கோம் .....நம்ம தலகாணி நல்லா மெத்து மெத்துன்னு தானே இருக்கும் ஆனா இப்புடி கல்லு மாதிரி இருக்கு...............

இனி............?
தொடரும்..............
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top