'நெஞ்சமெல்லாம் அலரே !!' - 60

Advertisement

Priyaasai

Active Member
Suprt
எழிலோ கட்டுபடுத்தமுடியாமல் வயிற்றை பிடித்து கொண்டு சிரிக்க தொடங்க, கண்களில் நீர் வந்த பின்பே தன்னை மட்டுபடுத்தியவன், "சா சாரி தானே மச்சி..!! நீ இவ்ளோ ஆசை படும்போது அதை மறுக்குறது நம்ம நட்புக்கு நான் செய்கம் அதனால..." என்று இழுத்தவன் ஓரவிழியால் அலரின் உணர்வுகளை அவதானித்தபடி "ஓகே டா சாரி கேட்க நான் ரெடி..!!! ஆனா அதுக்கு உன் தங்கச்சி ஒத்துப்பாளான்னு தெரியலையே" என்றிட அலர்விழியின் விழிகளோ அவன் வார்த்தைகளில் மேலும் திகைப்பில் விரிய,


வெற்றியோ "ஏன் ஒத்துக்கமாட்டா, அவ எப்பவும் நீதி, நேர்மை பக்கம்டா எனக்கு நீ பண்ணின அநியாயம் மட்டும் தெரிஞ்சது அவளே சொல்லுவா" என்று சிவந்த விழிகளுடன் அவனிடம் சூளுரைத்தவன் அலரிடம் திரும்பி "அமுலு ஒழுங்க இவனை என் காலுல விழுந்து மன்னிப்பு கேட்க சொல்லு" என்று கூற..,


அவளோ பதறிப்போய் இருக்கையில் இருந்து எழுந்தவள் "இல்லை இல்லைண்ணா, அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்" என்றவளின் பார்வை அவளையுமறியாமல் எழில் மீது படிய முகத்தின் செம்மை அதிகரித்தது .


'ஏன் அமுலு இந்த அண்ணனை விட உனக்கு அவன் முக்கியமா போயிட்டானா..??' என்று கரகரத்த குரலில் கேட்கவும்..,


"ண்ணா அப்படி எல்லாம் இல்லை" என்று அலர் கைகளை பிசைந்து கொண்டு நிற்க,


"அப்படி கேளு மச்சி, "ஓகே சொல்லுடி குள்ளச்சி உங்க அண்ணன் தானே ஒரே ஒரு முறை சாரி கேட்கிறேனே"என்று அட்டகாசமான சிரிப்பினூடே அவளிடம் கேட்க,


'டேய் மானத்தை வாங்காத' என்று பல்லைகடித்தவள் ஓங்கி அவன் வாயில் பட்டென்று ஒன்று வைத்து வெற்றியிடம் திரும்பி "அண்ணா இல்லைண்ணா.. அதெல்லாம் வேண்டாம்" என்றவளுக்கு என்ன சொல்வதென்று புரியாமல் போக, இதழ்கள் துடிக்க அலைபாய்ந்த விழிகளுடன் முகத்தை திருப்பி கொள்ள..,


அதை கண்ட எழிலின் புன்னகை மேலும் விரிய..., அலரிடம், "ஏன்டி ஏன் வேணாம்ன்னு சொல்ற.., உனக்கு தெரிஞ்சி சிலதுன்னா தெரியாம நான் அவனுக்கு நிறைய கொடுமை பண்ணி இருக்கேன், அப்படிதானே மச்சான் என்று வெற்றியிடம் கண் சிமிட்டியவன் அவன் முறைப்பை பொருட்படுத்தாமல் தொடர்ந்து, "ஐ அக்ரி அண்ட் ஐ ரிக்ரெட் கண்டிப்பா நான் சாரி சொல்லியே ஆகணும்" என்றவாறு வெற்றியின் புறம் திரும்ப...,


அவன் சட்டையை பிடித்து இழுத்தவள், "ஐயையோ அண்ணா அவருக்கு பதிலா நான் மன்னிப்பு கேட்கிறேன்.., சாரி மன்னிச்சிடுங்க" என்றவள் 'ப்ளீஸ் நீங்க கிளம்புங்க' என்று கூற..,


"ஏன் அமுலு அண்ணனை விட நேத்து வந்தவன் உனக்கு முக்கியமா போயிட்டான் இல்லை என்று விரக்தியுடன் கேட்டவன், "சார் என் காலுல விழுந்தா அவன் கவுரவம் பாதிக்கும்ன்னு நினைக்கிற நீ இந்த அண்ணனோட கவுரவம் போனது பத்தி யோசிக்கலை இல்லை" என்று வருத்தத்துடன் கேட்க, ,


"அச்சோ அண்ணா அது.. அது வந்து அப்படி.., ண்ணா நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லண்ணா" நான் கேட்டா என்ன அவர் கேட்டா என்ன நாங்க ரெண்டு பெரும் வேற வேற இல்லையே அதான் நான் கேட்குறேன் மன்னிச்சிடுங்க..!! நீங்க ஏன் இப்படி யோசிக்கறீங்க..??" என்றாள் உண்மையான பரிதவிப்புடன்.


அதற்க்கு நேர்மாறாக எழிலோ அவளிடம், "நீ பிறக்குறதுக்கு முன்னாடி இருந்தே அவன் தான் எனக்கு எல்லாம் ஆனா இன்னைக்கு நீ அவனையே பீல் பண்ண வச்சிட்ட இல்லை.., எங்க ரெண்டு பேருக்கு நடுவில் நீ யாருடி என்று அவளை ஒற்றை புருவம் உயர்த்தி பார்த்தவன் இனி உன்னோட பர்மிஷசன் எனக்கு தேவையே இல்லடி குள்ளச்சி என் நண்பன் தான் முக்கியம் அவன் ஆசையை நிறைவேத்துறது தான் என் வாழ்க்கை லட்சியம்" என்று அலரிடம் வெற்றிக்காக பேச,


வெற்றியின் நெஞ்சம் நிறைந்து போனது நண்பனின் வார்த்தைகளால்..!! கண்களில் ஈரம் கசிய பெருமிதத்துடன் எழிலை பார்க்க,


அலர்விழியோ "டேய் வேண்டாம் என் பொறுமையை சோதிக்காத" என்று நெற்றியை பிடித்து கொண்டவளுக்கு எவ்வாறு அவனை அடக்குவது என்று தெரியாமல் விழிக்க


எழிலோ அடிக்குரலில் அவளிடம், "ஏண்டி அன்னைக்கு உன் கையை தட்டி விட்டதுக்கே உன்னை அடிச்சி கொடுமை படுத்துறேன்னு சீன் க்ரியேட் பண்ணினவன் தானே..,அதுவும் இப்போ கன்னத்தை கடிச்சி வச்சி கொடுமை படுத்துறதை வேற கண்கூடா பார்த்திருக்கான் ஆதான் கொடுமை படுத்துற நான் எப்படி சாரி கேட்டேன்னும் தெரிஞ்சிக்கட்டும்..." என்றவன் வெற்றியின் புறம் திரும்பி,


மச்சான் நீ என்ன பண்ற "என் மாமனார் கிட்ட போய் உங்க மாப்பிள்ளை.." என்று ஆரம்பிக்கவுமே "இல்லல்ல ண்ணா அப்படி எல்லாம்" என்றவாறே அவன் வாயை தன் கரம் கொண்டு அடைத்திருந்தாள் அலர்விழி.


அலரின் முகச்சிவப்பும் பதட்டமும் நொடிக்கொருதரம் எழிலை தொட்டு மீளும் அவள் பார்வையும் அதன் பரிதவிப்பும் புதிதாய் இருக்க.., வெற்றியின் பார்வை எழில் புறம் திரும்பியது.., அங்கே அடக்கமாட்டாத அவன் சிரிப்பும் அவனது விழிகளில் வழிந்த குறும்பும் மெல்ல பிடிபட..,


"சரி சரி வேண்டாம் நீ ஏன் இவ்ளோ பதட்டமாகுற, ஓகே நான் எதுவும் கேட்கலை" என்றிட, வெற்றியின் பதிலில் அதற்கு மேல் அலர்விழியால் அங்கு நிற்க முடியாமல் போனது. "நான் சப்பாத்தி போடுறேன்ண்ணா" என்று சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள்.


அவள் உள்ளே செல்லவுமே வெற்றியிடம், "அப்புறம் மச்சி உன் தங்கச்சியும் உள்ள போயிட்டா", என்று இருகரங்களையும் தலைக்கு மேல் உயர்த்தி நெட்டி முறித்தவன் சுற்றத்தை ஒருமுறை உறுதி படுத்திக்கொண்டு, "சாரி கேட்க ஆரம்பிக்கட்டுமா..??" என்று வில்லங்கமான குரலில் கேட்க


எழிலின் குரலில் இப்போது முழுதாக அவனை கண்டுகொண்ட வெற்றி, "இல்லை அதெல்லாம் ஒன்னும் வேணாம்"


"எது வேண்டாமா..?? இவ்ளோ நேரம் சாரி சொன்னாதான் ஆச்சுன்னு நின்ன..!! இப்போ என்ன வேண்டாம்ன்னு சொல்ற..?? அப்படியெல்லாம் நீயே ஒரு முடிவுக்கு வரக்கூடாது மச்சி, ஏன்னா இப்போ நான் சாரி கேட்கிற மூட்க்கு வந்துட்டேன்" என்று எழில் அவன் அருகே நகர்ந்து அமர்ந்து அவன் தோளில் அழுத்தமாய் கரம் கோர்க்க..,


அவன் வார்த்தைகளில் வெற்றியின் முகத்தில் வியர்வை அரும்புகள் பூக்க, எச்சிலை விழுங்கியவாறு, "அதுக்கு..?" என்று நடுங்கும் குரலில் கேட்டவன் கண்களில் பீதியுடன் எழிலை பார்க்க,


"என்ன மச்சான் எனக்கு இருக்கிற ஒரே பிரெண்ட் நீ..., இத்தன வருஷத்துல இப்போதான் முதல் முறை நான் சாரி கேட்கணும்ன்னு எதிர்பார்க்கிற..," என்று மீண்டும் அவனிடம் நெருங்கி அமரவும்..,


"அதனால" என்று பதறிக்கொண்டு இருக்கையில் இருந்து எழுந்து விட்டான் வெற்றி, அவன் முகத்தில் அப்பட்டமாய் அச்சம் வழிய சுற்றும் பார்க்க யாரும் அவன் உதவிக்கு இல்லது போனதை உணர்ந்தவன் மெல்ல நகர்ந்து வாயில் அருகே சென்றான்.


"என்ன மச்சி இப்படி சொல்ற..?? நான் பண்ணின மொத்த தப்புக்கும் ஒருமுறையாவது உன்கிட்ட சாரி கேட்டாதான் என் மனசு ஆறும், இங்க பசங்க இருக்காங்க நீ வா நாம ரூ..." என்றவாறு வெற்றியின் கரத்தை பிடிக்கவும்..,


பொங்கி விட்டான் வெற்றி "அடச்சை , கருமம் புடிச்சவனே விடுறா கையை" என்று அவனிடம் இருந்து கரத்தை விடுவித்தவன்.., வியர்வை ஆறாக பொங்கிய நிலையில் படபடத்த நெஞ்சை நீவி விட்டவாறே, "சாரி கேட்கிறானாம் சாரி..., யாருக்கு வேணும் உன் சாரி, அதையெல்லாம் என் தங்கச்சி கிட்ட கேட்கிறதோட நிறுத்திக்க கிட்ட வந்த அவ்ளோ தான்" என்று திரும்பியவன் வாயிற்படியில் கால் இடறி விழ..,


'பார்த்து மச்சான்' என்று எழில் அவனுக்கு கை நீட்ட, "டேய் டேட்டேடேய் அங்கேயே நில்லு..," என்று இன்னும் பீதி அகலாத முகத்துடன் கூற,


"மச்சான் கால்ல ரத்தம் வருது பாரு இரு" என்று வெற்றியை தூக்க முற்ப்பட,


வேகமாக பின்னோக்கி நகர்ந்த வெற்றி "டேய் மேல கைவச்ச ஒரே வெட்டுதான்..!! என்று சீறியவன், "ஐயோ தாமரை உன் புருஷனை எப்படியாவது காப்பாத்து" என்று மனதினுள் மனைவியிடம் மன்றாடியவன், தட்டு தடுமாறி சமாளித்து எழுந்து நிற்கும் முன்னமே வெற்றியை தூக்கிய எழில் உள்ளே செல்ல முற்ப்பட,


"டேய் அநியாயம் பண்ணாதடா இனிமேல் சத்தியமா சாரி கேட்டு வர மாட்டேன்" என்றவாறே அவனிடம் இருந்து துள்ளி இறங்கியவன், 'ஆளை விடுடா சாமி' என்று அடுத்த நொடி எழிலை திரும்பியும் பாராமல் குழந்தைகளையும் விட்டுவிட்டு ஓட்டம் எடுத்திருந்தான்.


அவன் ஓட்டத்தில் எழுந்த அட்டகாசமான சிரிப்புடன் "மச்சான் பசங்களை விட்டுட்டு போற..??" என்று கேட்டவனின் கேள்விக்கு கூட பதிலளிக்காமல் பின்னங்கால் பிடரியில் இடரும் அளவு இருந்தது வெற்றியின் ஓட்டம்.


புன்னகை மாறாமல் செல்லும் அவனையே பார்த்துக்கொண்டிருந்த எழில் திரும்பவும் அங்கே அலர்விழியோ இடுப்பில் கரம் பதித்து அவனை கடுமையாக முறைத்துகொண்டிருந்தாள்.


"ஏன்டி உனக்கும் சாரி கேட்கணுமா..?? நேத்து கேட்டது பத்தலையா.?? என்றவாறு கடிகாரத்தை பார்த்தவன்,


'சரி டைம் இருக்கு வா' என்று அவளை அழைக்க..,


அதை கண்டு பதறியவளோ சமையலறையினுள் ஓடி மறைய..."சாரியா வேணும் சாரி இனி கேட்டு வாங்க இருக்கு உங்களுக்கு..!!" என்று மனதினுள் கருவியவன் ஆடை மாற்ற அறையினுள் சென்றிருந்தான்.
Super
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top