நீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன 53

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
எதனால் இந்த
மாற்றம் என்று
அறியமுடியாதபடி
நீ எந்தன்
வாழ்க்கையாகிய
மாயம் என்ன....

ஆஸ்பிடலில் ஶ்ரீயை அட்மிட் செய்த ரித்வியும், ரிஷியும் இருப்புக்கொள்ளாது நடை பயின்றுக்கொண்டிருந்தனர்.. அதிலும் ரிஷி முகம் வெளிறி கண்கலங்கி கைபிசைந்துகொண்டிருந்த தோற்றம் ரித்விக்கு அதிர்ச்சியை தந்தது.. எப்போதும் கம்பீரமாய் நின்று பிரச்சினைகளை சந்திக்கும் தன் தமையன் இவ்வாறு கலங்கி நின்றதை அவனால் பார்த்துக்கொண்டிருக்கமுடியவில்லை... ரிஷி அருகே நெருங்கிய ரித்வி
“அண்ணா ஶ்ரீயிற்கு எதுவும் இருக்காதுனா... நீங்க பயப்படாதீங்க...” என்று ரிஷியின் கைகளை பிடித்து ஆறுதல் கூற ரிஷியோ தன் தம்பியை அணைத்துக்கொண்டு
“பயமா இருக்குடா... அவளை இப்படி பார்த்தும் எனக்குள்ளே ஏதோ ஒரு பயம் வந்து சுழட்டுதுடா.. எதுக்குனு தெரியலை.... எனக்கு... எனக்கு.... ஶ்ரீ... நல்லபடியா திரும்பி வரணும்டா.. எனக்கு..” என்றவனுக்கு வேறு வார்த்தைகள் வரவில்லை....
மாலை வீட்டிற்கு வரச்சொன்ன மனைவி மூர்ச்சையாகி நினைவின்றி இருந்தால் காதல் கணவனுக்கு உள்ளம் பதறத்தானே செய்யும்...
சிறிது நேரத்தில் ஶ்ரீயை பரிசோதித்த மருத்துவர் வெளியே வந்ததும் ரிஷி அவரிடம்
“டாக்டர் ஶ்ரீ...ஶ்ரீயிற்கு என்னாச்சு?? அவ... அவ... நல்லாயிருக்காளா??.... அவ... அவ... கண்முழிச்சிட்டாளா???”
“ரிஷி... எதுக்கு எவ்வளவு டென்ஷன்....??? உன் வைய்ப்புக்கு எந்த ப்ராப்ளமும் இல்லை... அவ நல்ல ஹெல்தியா தான் இருக்கா....”
“தேங்க் காட்.... ஆனா...ஆனா...அவ எதனால மயங்குனா?? அப்போ.. அப்போ...அவளுக்கு.....”
“ரிஷி இப்படி எல்லாத்துக்கும் பயப்பட கூடாது... உங்க வைய்ப் கன்சீவ்வா... இருக்காங்க... கொஞ்சம் வீக்கா இருக்காங்க... அதனால வந்த மயக்கம் தான்.... மற்றபடி எதுவும் இல்லை...” என்று டாக்டர் கூற அதுவரை பயத்துடன் கலங்கி நின்றவனின் முகம் சொல்லொணா மகிழ்ச்சியை பூசிக்கொண்டது....
“டாக்டர்... நீங்க சொல்லுறது..”
“ஆமா ரிஷி... உங்க வைய்ப் தாய்மை அடைஞ்சிருக்காங்க.....நீங்க அப்பாவாக போறீங்க...” என்று சொல்ல மகிழ்ச்சியை தாங்கிக்கொள்ள முடியாதவன் யாஹூ என்று சத்தமிட்டபடி குதித்து கையை ஆட்ட அவனது மகிழ்ச்சியை கண்ட டாக்டர்
“ரிஷி.. இது ஆஸ்பிடல்பா..” என்று சிரித்தபடி கூற அப்போது தான் இருக்குமிடம் உணர்ந்தவன் டாக்டரிடம் மன்னிப்புகோரிவிட்டு ஶ்ரீயை பற்றி விசாரிக்க
“அவங்க இன்னும் கண்முழிக்கலை..... இன்னும் கொஞ்சம் டெஸ்ட் எல்லாம் எடுக்க இருக்கு.. அதை எடுத்ததும் வீட்டுக்கு கூட்டிட்டு போங்க.. இனி தான் அவங்களை ரொம்ப கவனமாக பார்த்துக்கனும்.. இப்போ அவங்க இரண்டு உயிர்.. ரொம்ப கவனமாக பார்த்துக்கனும்... நல்ல சத்தான ஆகாரமா சாப்பிடக்குடுங்க... அவங்க மென்டல் ஹெல்த் நல்லபடியா இருக்குற மாதிரி பார்த்துக்கோங்க... மன்த்லி செக்கப்பிற்கு கூட்டிட்டு வாங்க.. இப்போ நீங்க போயிட்டு உங்க வைய்ப்பை பாருங்க...” என்று கூற டாக்டரிடம் நன்றி கூறியவன் ரித்வியிடம் கூறிவிட்டு உள்ளே சென்றவன் கட்டிலில் குழந்தையாய் கண்மூடியிருந்தவளை கண்டதும் காதல் மேலெழும்பி வழிந்தது... தன் இதயத்தில் உயிராய் கலந்தவளினுள் அவனது உயிர் என்ற எண்ணமே அவனை மெய்சிலிர்க்கவைத்தது... விரைந்து அவளது அருகே சென்றவன் அவளது முன்னிச்சியில் இதழ் பதிக்க அவனது ஸ்பரிசத்தில் மெதுவாய் கண்விழித்தவள் அவனது மகிழ்ச்சி ததும்பிய முகத்தை கண்டு
“அத்தான்... நீங்க... எப்போ...” என்றவள் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு
“அத்தான் நாம எங்க இருக்கோம்....??”
“அம்லு ....” என்றவனுக்கு வேறு வார்த்தை எழவில்லை.... மகிழ்ச்சியில் கண்கள் கலங்கிநின்றவனை பார்த்து பதறியவள் எழுந்துகொள்ள முயல ரிஷியோ
“அம்லு ஸ்ரெயின் பண்ணிக்காத... என்ன செய்யனும்னு சொல்லு.. அத்தான் செய்றேன்..”
“அத்தான் ஏன் உங்க கண்ணெல்லாம் கலங்கியிருக்கு... எதுக்கு என்னை ஆஸ்பிடலுக்கு கூட்டிட்டு வந்திருக்கீங்க?? நாம எப்போ ஆஸ்பிடல் வந்தோம்...???” என்று கேள்வி மேல் கேள்வி கேட்டவளுக்கு பதிலெதுவும் சொல்லாது அவளை வைத்த கண் வாங்காமல் ரிஷி பார்த்தபடியிருக்க அதில் கடுப்பான ஶ்ரீ அவன் தலையில் கொட்டிவிட்டு
“டேய் அய்த்தான்... கேட்டுட்டே இருக்கேன்...பதில் சொல்லாம சைட் அடிச்சிட்டு இருக்கியா???” என்று முறைக்க ரிஷியோ எழுந்து ட்ரிப்ஸ் போடப்படாத கையை எடுத்து அவளது வயிற்றில் வைக்க ஶ்ரீ அப்போதும் புரியாத பார்வையொன்றை வெளிப்படுத்த ரிஷியோ அவள் உச்சந்தலையில் செல்லமாய் முட்டிவிட்டி அவள் காதருகே சென்று மறைத்துநின்ற கூந்தலை ஒதுக்கிவிட்டு
“அம்லு... உன்னோட டாமிக்குள்ள நம்மளோட குட்டி ஏஞ்சல் வந்துட்டாங்களாம்....” என்று கூற ஒரு நொடி யோசித்த ஶ்ரீ மறுநொடியே ரிஷியை ஒரு கையால் இறுக்கமாக அணைத்துக்கொண்டாள்....
அவளுள் ஊற்றெடுத்த மகிழ்ச்சி கண்ணீராய் வெளிப்பட அதை தன் சட்டையை நனைத்த கண்ணீர் துளியினூடாக உணர்ந்தவன் அவளை தன்னிடமிருந்து விலக்கி அவளது கண்ணீரை துடைத்து விட்டவன்
“அம்லு.. அம்லு... எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்குனு வார்த்தையால சொல்லமுடியாது.. லவ் யூ அம்லு......லவ் யூ...” என்றவன் அவள் முகம் முழுவதும் முத்திரை பதிக்க அதில் மகிழ்ச்சி மட்டுமே அடங்கியிருந்தது... ஶ்ரீயிற்கு இந்த தான் தாய்மை அடைந்திருப்பதை அறிந்த நொடியிலிருந்து ஏதோ கிடைக்கப்பெறாதா வரத்தை பெற்றுக்கொண்டதாய் ஒரு உணர்வு.. தன் காதல் கணவனுடனான மகிழ்ச்சியான மணவாழ்விற்கு கிடைத்த பரிசாக உணர்ந்தாள்... தன் கையால் வயிற்றை தடவிப்பார்த்தவளுக்கு வயிற்றுக்குள்ளிருக்கும் குழந்தையும் அவளது கையை உள்ளிருந்து வருடுவதாக ஒரு உணர்வு.... அது சாத்தியமில்லாத விடயம் என்றபோதிலும் அதை அவ்வாறே உருவகித்தது தாய்மை உள்ளம்...
தன் கையால் வருடியவள் ரிஷியின் கையையும் எடுத்து தன் வயிற்றில் வைத்து அதன் மேல் தன் கையை வைத்தபடி
“பேபிமா... இது தான் உங்க அப்பா...அப்பாவுக்கு ஹாய் சொல்லுங்க...” என்று கூறிவிட்டு ரிஷியை பார்த்து
“அத்தான் நீங்களும் பேபிமாக்கு ஹாய் சொல்லுங்க... அப்போ தான் நீங்க பேசும் போதெல்லாம் ரெஸ்பாண்ட் பண்ணுவாங்க...” என்று ஶ்ரீ கூற ரிஷியோ முழித்தான்.. அவனது பாவனை பார்த்து என்னவென்று ஶ்ரீ விசாரிக்க
“அம்லு டாக்டர் இப்போ தான் குழந்தைக்கு 40 டேஸ்னு சொல்லியிருக்காங்க.. அதுக்குள்ள பேபிக்கு நான் பேசுறதெல்லாம் எப்படி கேட்கும்???” என்றவனது கேள்வியில் சிரித்த ஶ்ரீ
“அத்தான்... அதெல்லாம் கேட்கும்.. கேட்காட்டி கூட அவங்க நீங்க பக்கத்துல இருக்கதை பீல் பண்ணுவாங்க... இப்போ எல்லாம் பேபி க்ரோத் ரொம்ப ஸ்பீட்டா இருக்குனு டாக்டர்ஸ் சொல்லுறாங்க... நம்ம பேசறது நம்ம நடந்துக்கிற விதம் எல்லாமே குழந்தையோட வளர்ச்சியில் அதிக ஆதிக்கம் செலுத்துதுனு கண்டுபிடிச்சிருக்காங்க... அதனால டெய்லி நீங்க ஆபிஸ் முடிந்து வந்ததும் என்னோட வயிற்றுல உங்க கையை வைத்து பேபிமா கிட்ட பேசுங்க.. அவங்க இப்போ ரெஸ்போண்ட் பண்ணாட்டியும் இன்னும் கொஞ்ச நாள்ல ரெஸ்ட்போண்ட் பண்ணுவாங்க... “
“சரி அம்லு.. நீ சொல்றபடியே செய்றேன்....” என்றவன் ஶ்ரீயின் வயிற்றருகே குனிந்து அதில் இதழ் பதித்துவிட்டு
“ஹாய் ஏஞ்சல்... அப்பா பேசுறேன்மா.. எப்படி இருக்கீங்க?? அம்மா டாமிக்குள்ள சமத்தா இருக்கனும் ஓகேவா.. அப்படி சமத்தா இருந்தா அப்பா உங்களுக்கு டெய்லி ஒரு கிஸ் தருவேன்.. ஓகேவா..??” என்று கூறியபடி மீண்டும் ஒரு முத்தம் வைக்க ஶ்ரீயோ
“பேபிக்கு அப்படின்னோன அளவு இல்லாம கிஸ் குடுக்கிறியா அத்தான்??? பார்த்தியா பேபி வந்ததும் உன்னோட அம்லுவை மறந்துட்ட..” என்றா முறுக்கிக்கொள்ள அவளது செல்லக்கோபத்தில் சிரித்தவன்
“ என்னோட அம்லு தானே ஏஞ்சலை கொடுத்தாங்க... அவங்களை எப்படி நான் மறப்பேன்..” என்றவன் அவள் முன்னுச்சியில் இதழ் பதிக்க ஶ்ரீயோ தன் உதட்டினையும் காட்ட ரிஷியோ சிரித்தபடி அவள் கன்னமிரண்டிலும் வைக்க மீண்டும் ஒரு முறைப்பை ஶ்ரீ பரிசாக கொடுக்க அதைக்கண்டு சிரித்தவன்
“அம்லு நீ ரெஸ்ட் எடு... நான் டாக்டரை பார்த்துட்டு வர்றேன்..” என்றவன் வெளியே வந்தான்...
வெளியே நின்றிருந்த ரித்வியிடம் சில வேலைகளை ஒப்படைத்தவன் அவனை அனுப்பிவிட்டு தன் மொபைலை எடுத்து சிலரிடம் பேசிவிட்டு மீண்டும் ஶ்ரீ இருந்த அறைக்கு வந்தான் ரிஷி...
மாலை ஏழுமணியளவில் ஶ்ரீயை டிஸ்சார்ஜ் செய்ய அவளை தன் காரிலேயே வீட்டிற்கு அழைத்து வந்தான் ரிஷி...
வீடு வரும்வரை ரிஷியின் தோளில் துயில் கொண்டபடி வந்தவளை வீடு வந்ததும் முன்னுச்சியில் முத்தமிட்டு எழுப்பினான் ரிஷி..
மெதுவாக கண்விழித்தவளை கைத்தாங்கலாய் வீட்டிற்கு அழைத்துவந்தான் ரிஷி...
அப்போது ஶ்ரீ
“அத்தான் இந்த படத்துல எல்லாம் காட்டுற மாதிரி என்னை தூக்கிட்டு போகமாட்டியா அத்தான்???” என்று ஶ்ரீ கேட்க ரிஷியோ ஒரு புன்னகையை மட்டும் பதிலாக கொடுத்துவிட்டு அவளை கைத்தாங்கலாய் அழைத்து செல்வதில் மும்முரமாயிருக்க அதில் கடுப்பான ஶ்ரீ
“தத்தி.. தத்தி.. இவ்வளவு நாளாகியும் சரியாக ரொமேன்ஸ் பண்ணவும் தெரியலை... கத்துக்கவும் தெரியலை.. “ என்று முணுமுணுத்தபடி ரிஷியின் கரம்பிடித்தபடி வீட்டிற்கு சென்றவள் உள்ளே நின்றவர்களை கண்டு வாயடைத்துநின்றாள்..
திரும்பி ரிஷியை பார்க்க அவன் கண்களில் குறும்பு மின்ன நின்றிருந்தான்..
அவனை விட்டு விலகி அங்கு நின்றிருந்த தன் தந்தையிடம் சென்றவள் அவரை அணைத்துக்கொள்ள அவரும் ஶ்ரீயை அணைத்தபடி
“அம்மு... எப்படிமா இருக்க....” என்று நலம் விசாரிக்க அவரருகே வந்துநின்ற ராதாவையும் கட்டிக்கொண்டாள் ஶ்ரீ...
“தான்யா.. ரொம்ப சந்தோஷமா இருக்குமா... டாக்டர் என்ன சொன்னாங்க??” என்று நலம் விசாரிப்பதில் இறங்கிவிட அவர்களுக்கிடையில் புகுந்த அனு
“அக்கா... எனக்கு விஷ் பண்ணுக்கா..”
“உனக்கு எதுக்குடி நான் விஷ் பண்ணனும்????”
“என்ன இப்படி கேட்டுட்ட... நான் சித்தி ஆகப்போறேன்ல... அதுக்கு விஷ் பண்ணுக்கா...” என்று சொல்ல அங்கொரு சிரிப்பலை பரவியது..
ஶ்ரீயின் பெற்றொரோடு ஹேமாவின் பெற்றோரும் வந்திருக்க அப்போது கையில் இனிப்பு தட்டுடன் வந்த சுபா ஶ்ரீயிற்கும் ரிஷியிற்கு இனிப்பை ஊட்டிவிட்டார்... மற்றவர்களும் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்துவிட்டு இனிப்பை ஊட்டிவிட ஶ்ரீயையும் ரிஷியையும் சுவாமியறைக்கு அழைத்து சென்ற சுபா இருவரிடமும் ஒரு சில்லறையையும் மஞ்சள் துணியையும் கொடுத்தவர் அதை முடிந்து குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு சுவாமிபடத்தின் முன் வைக்க சொன்னார்...
அவர்களும் அது படி செய்ய இருவருக்கும் விபூதி பூசி ஆசிர்வதித்தவர் மற்றவர்களையும் அழைத்து விபூதி பூசி ஆசிர்வதிக்குமாறு கூறினார்...
அனைவரும் பூஜையறையிலிருந்து வெளியே வந்ததும் ஶ்ரீயை ஓய்வெடுக்க அனைவரும் வற்புறுத்த அவளோ சற்றுநேரம் இருந்துவிட்டு செல்வதாக கூறி தன் குடும்பத்துடன் உறவாடிக்கொண்டிருந்தாள்...
அவளது அன்னை கர்ப்பகாலத்தில் எப்படியிருக்கவேண்டும், என்னென்ன உணவுவகைகள் எடுக்கவேண்டுமென பட்டியலிட்டுக்கொண்டிருக்க ஶ்ரீயும் கடமையே என்று கேட்டுக்கொண்டிருக்க அதை கவனித்த அனு வம்பிழுக்கும் நோக்கில்
“அக்கா அம்மா என்னக்கா சொல்லுறாங்க???”
“யாருக்கு தெரியும்...” என்று ஏதோ நினைவில் சொல்லிவிட்ட ஶ்ரீ பின் நினைவு வந்தவளாக தன் அன்னையை திரும்பிபார்க்க அவரோ அவளை முறைத்துக்கொண்டிருக்க ஶ்ரீயோ மனதினுள்
“ஐயய்யோ இப்படி கோர்த்துவிட்டுட்டாளே... இப்போ தாய் குலம் விடாம பத்து நிமிஷம் பேசுமே... எப்படி தப்பிக்கிறது...” என்று யோசனையில் இறங்க அவளை காப்பாற்றவென்று அங்கு வந்தார் சுபா..
அவர் ஶ்ரீயின் அன்னையை அழைத்துக்கொண்டு சென்றுவிட அவளை பார்த்து சிரித்துக்கொண்டிருந்த அனுவை முறைத்த ஶ்ரீ
“கோர்த்தா விடுற??? இரு உன்னை இன்னொரு நாள் வச்சிக்கிறேன்....” என்று சபதமெடுக்க தன் தந்தையின் மறுபுறம் சென்றமர்ந்த அனு
“அப்பா.. இவ நிஜமாவே உங்க பொண்ணு தானாபா??” என்று ராஜேஷ்குமாரிடம் வினவ அவரோ
“ஏன்மா உனக்கு திடீர்னு இப்படியொரு சந்தேகம்???”
“உங்க பொண்ணு ஶ்ரீனா இவ்வளவு நேரத்துக்கு அமைதியா இருக்கமாட்டாளே.. அதான் கேட்டேன்...”
“அவ இப்போ என்னோட பொண்ணு மட்டும் இல்லைமா.. இந்த வீட்டோட மூத்த மருமக... அதான் கொஞ்சம் பொறுப்பு வந்திடுச்சு..” என்று ராஜேஷ்குமார் ஶ்ரீயை வாருவதற்கு அனுவுடன் கைகோர்க்க அதை அறியாத ஶ்ரீயோ
“கேட்டுக்கோ..” என்று சொல்ல
“பொறுப்பா???? ஹாஹா...அந்த பருப்பு எந்த கடையில விற்கிறாங்கனு கேட்குற ஆளுப்பா இவ..” என்ற அனுவின் கூற்றை ஆதரிக்கும் விதமாக ராஜேஷ்குமாரும்
“நீ சொல்லுறதும் வாஸ்துவம் தான்மா...” என்று ஒப்புக்கொள்ள ஶ்ரீயோ சிணுங்கியபடி தன் தந்தையிடம் செல்லமாய் கோபித்துக்கொள்ள என்று அழகிய உறவுகளின் சங்கமமொன்று நடைந்தேறியது..
இரவு உணவை முடித்துவிட்டு அனைவரும் கிளம்ப அனைவரையும் வழியனுப்பிவிட்டு ரித்வி, ஹேமா, சுபா, மூர்த்தி அனைவரும் உள்ளே சென்றுவிட ரிஷியோ ஶ்ரீயை போகவிடாது தடுத்தவன் அவள் எதிர்பாரா நேரத்தில் அவளை கைகளில் ஏந்தியவன் படிக்கட்டுக்களினூடே தங்கள் அறையை அறைந்தான்.
அறைக்குள் நுழைந்ததும் இறக்கிவிட்டவன் அணைந்திருந்த விளக்குகளை ஒளிரச்செய்தான்...
விளக்குகள் ஒளிர்ந்ததும் அந்த அறையின் அலங்காரத்தில் அதிர்ந்து நின்றாள் ஶ்ரீ...
அறை முழுவதும் குழந்தை படங்கள் ஒட்டப்பட்டிருக்க அறையின் நடுப்பகுதியின் எதிரே அமைந்திருந்த சுவற்றில் “It’s the day to celebrate.... Welcome Our little Lil princess” எழுதப்பட்டு அதன் கீழே ரிஷியும் ஶ்ரீயும் சேர்ந்திருந்த படமொன்றிரந்தது... அதுமட்டுமின்றி கட்டில் முழுவதும் விதவிதமான டெட்டி பெயார் பொம்மைகளும் விளையாட்டு பொருட்களும் குழுமியிருக்க அதோடு ஶ்ரீயிற்கு கர்ப்பகாலத்திற்கு அணியக்கூடியவாறான உடைகள், மேட்டர்னிட்டி பில்லோ மற்றும் கர்ப்பகாலத்தில் பயன்படுத்தும் இதர பொருட்கள் என்று அனைத்தும் இருந்தது....
அதோடு சிவப்புநிற ரிப்பினால் முடிச்சிடப்பட்டிருந்த டாப் (Tab) ஒன்றும் அதன் மேலே கிரீட்டிங் கார்ட்டும் ஒற்றை ரோஜாவும் ஒரு பரிசுப்பொதியும் இருந்தது...
இவை அனைத்தையும் பார்த்தபடியே உள்ளே வந்தவளை நனைத்தது ரோஜா பூக்குவியல்...
திடீரென்று கொட்டத்தொடங்கியதும் முதலில் திடுக்கிட்டவள் பின் அதை ரசிக்க அவளை பின்னாலிருந்து அணைத்தான் ரிஷி...
எப்போதும் போல் அவள் கூந்தலில் முகம் புதைத்தவன் அவளது கழுத்தில் குறுகுறுப்பை உண்டாக்க அதில் நாணி கோணி நின்றவளது செவியினருகே சென்றவன்
“அம்லு உனக்கு பிடிச்சிருக்கா...???” என்று ரிஷி கேட்க ஶ்ரீயோ ஹஸ்கி வாயிசில்
“ரொம்ப அத்தான்... எனக்கு உன்னை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு... “ என்றவளை இறுக அணைத்தவன் அவளை விடுவித்து கரம்பிடித்து அழைத்து சென்று கட்டிலில் அமரச்செய்தவன் அவள் கையினை எடுத்து தன் கையில் வைத்துக்கொண்டு
“அம்லு.. தாங்ஸ்மா... இந்த நொடி நான் எவ்வளவு சந்தோஷமாக இருக்கேன்னு வெறும் வார்த்தைகளால சொல்லமுடியாது... ஏதோ யாரும் சாதிக்கமுடியாததை சாதிச்ச மாதிரி ஒரு பீல்... சத்தியமா எப்படி அந்த பீலை எக்ஸ்பிரஸ் பண்ணுறதுனு எனக்கு தெரியலை அம்லு... “ என்றவனது கன்னத்தில் தன் கரம் பதித்தவள்
“நான் தான் அத்தான் உனக்கு தாங்ஸ் சொல்லனும்.. நாம காதலிக்க தொடங்கிய அந்த நொடியில இருந்து இப்போ வரைக்கும் எனக்கு உன்கிட்ட இருந்து கிடைச்சது காதல் மட்டும் தான்... அதோட வரையறை எதுனு எனக்கு இந்த நொடிவரை தெரியலை.. எல்லா விஷயத்துலயும் உனக்கு ஈக்குவலா தான் என்னை ட்ரீட் பண்ணியிருக்க.. வைய்ப் அப்படீங்கிறத தான்டி என்னை உன்னோட குழந்தையாக தான் ட்ரீட் பண்ணியிருக்க... நான் இந்த நொடிவரை என்னோட அப்பாவை மிஸ் பண்ணாததுக்கு ரீசன் நீ மட்டும் தான் அத்தான்... எந்த பிரச்சனைனாலும் என்னோட நியாயத்தை கேட்காமல் நீ இதுவரைக்கும் எதுவும் முடிவு பண்ணதில்லை. அதே மாதிரி நாம ஹஸ்பண்ட வைய்ப்பா இருந்தா கூட நீ என்னோட ப்ரைவசியை இன்ப்ளுவன்ஸ் பண்ணதில்லை... லைப்பை இப்படியும் அழகா ரொமேண்டிக்கா ஸ்மூத்தா விட்டுகொடுத்து வாழலாம்னு உன்கூட வாழ்ந்த இந்த கொஞ்ச நாள்ல எனக்கு புரியவச்ச... என்னதான் பிசினஸ் அதர் கமிட்மண்டஸ்னு இருந்தாலும் எனக்கான டைமை நீ எந்தவொரு ரீசனுக்காகவும் கிவ்வப் பண்ணதில்லை... எத்தனை பேருக்கு இப்படியொரு லைப் பாட்னர் கிடைப்பாங்கனு தெரியலை... ஆனா ஐயம் ரியலி லக்கி... இப்போ கூட பாரு நான் ஆசையா கேட்டன்னு எல்லாரும் போனதும் மறக்காமல் என்னை ரூமிற்கு தூக்கிட்டு வந்த...அதுல கூட உன்னோட காதல் எனக்கு தெரிஞ்சிச்சு.. எனக்கு இது போதும் அத்தான்... என்னோட கடைசி மூச்சு வரைக்கும் உன்னோட குழந்தையா இப்படியே சந்தோஷமான ஒரு வாழ்க்கை வாழனும்... அது தான் என்னோட ஆசை... என்னோட ஆசையை நிறைவேத்துவியா அத்தான்???” என்றவளை அணைத்தவன்
“இந்த ஜென்மம்னு இல்லை.. இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நானும் நீயும் இப்படியே சந்தோஷமா சேர்ந்தே வாழ்வோம்...” என்றவன் அவள் முகமெங்கிலும் முத்திரை பதிக்க அதை விரும்பி பெற்றுக்கொண்டவள் பதிலுக்கு அதையே பரிசாக அளித்தாள்...
பின் ரிஷி எழுந்து சென்று இன்னொரு பரிசுப்பொதியை எடுத்து வந்தான். அதை ஶ்ரீயிடம் கொடுத்து பிரித்து பார்க்க சொல்ல அதை பிரித்தவள் அதிலிருந்த போட்டோ பிரேமை பார்த்து அகமகிழ்ந்தாள்..
அதில் அவளது ஸ்கேன் ரிப்போர்ட் படமாக்கப்பட்டிருக்க குழந்தையின் வரைபடம் நன்றாக தெரியுமாறு எடிட்டிங் செய்யப்பட்டிருந்தது... அதில் ஒரு புறம் ரிஷியும், ஶ்ரீயும் ரிசப்ஷனன்று எடுத்துக்கொண்ட படமொன்றிருந்தது.. அதன் கீழ் “expectation overloaded...” என்றிருக்க அதன் கீழே ரிஷி கையெழுத்திட்டிருக்க ஶ்ரீயிடம் ஒரு சில்வர் நிற பேனாவை கொடுத்தவன் அவளையும் கையெழுத்திட சொன்னாள்...
அவளும் அவன் சொன்னதுபோல் செய்ய அந்த ப்ரேமை அவளிடம் இருந்து வாங்கியவன் தங்கள் படுக்கைக்கு நேர் எதிரே மாட்டினான்...
அப்போது அங்கிருந்த பரிசுப்பொதியை எடுத்த ஶ்ரீ அதை திறந்து பார்க்க அதனுள்ளே அழகிய மெல்லிய தாயும் தந்தையும் சேயும் சேர்ந்திருக்கும்படியாக ஒரு அழகிய பெண்டன் இருந்தது.. அதை கையில் எடுத்த ஶ்ரீ ரிஷியிடம் கொடுத்து போட்டுவிடச்சொல்ல அவனும் அவள் சொல்படி அவள் கழுத்தில் அணிவித்தான்.
பின் ஶ்ரீ “அத்தான் பென்டன் சூப்பரா இருக்கு..எப்போ இதெல்லாம் ரெடி பண்ண அத்தான்...??”
“இப்போ தான் அம்லு.. டாக்டர் நீ கன்சீவ் ஆகியிருக்க விஷயத்தை சொன்னதும் உன்னை சப்ரைஸ் பண்ணனும்னு தோணுச்சு... அப்போ இதெல்லாம் ரித்விகிட்ட சொல்லி ரெடி பண்ணேன்... இந்த செயினும் என்னோட ப்ரெண்டோட ஜூவலரி ஸாப்ல பார்த்தது சட்டுனு நியாபகத்துல வந்திடுச்சு.. அவன்கிட்ட பேசி இதையும் டிலிவர் பண்ண அரேன்ஜ் பண்ணேன்... எல்லாம் ஹஸ்ட் த்ரீ ஹவஸ்ல ரெடி பண்ணிட்டேன்..”
“நீ தான் இந்த மாதிரி பிளானிங் டிசிஷன் மேக்கிங்கில் அல்ட்ரா லெஜன்ட்டுனு தெரியுமே... அதெல்லாம் சரி எதுக்கு இந்த டாப்???”
“அது நீ சாங்ஸ் கேட்க... இந்த மாதிரி நேரங்கள்ல நல்ல சாங்ஸ் அன்ட் மூவிஸ் பார்க்கனுமாம்.. அதுக்கு தான் இது...”
“ஹாஹா.. அதுக்கு தான் டி.வி. டாப்டொப் எல்லாம் இருக்கே.. எதுக்கு இது தனியா....??”
“இது என்னோட ஏன்ஜலுக்கு சோ நோ ஆப்ஜக்ஷன்ஸ்..”
“அது என்ன ஏன்ஜல்...அப்போ நீ பெண் குழந்தைனே முடிவு பண்ணிட்டியா அத்தான்??”
“அப்படினு இல்லை அம்லு... ஆனா ஏன்ஜல்லா இருந்தா சூப்பராக இருக்கும்....இங்க நம்ம வீட்டுல இரண்டு பேருமே ஆண் வாரிசு அப்படீங்கிறதுல அம்மாவுக்கு சின்ன வருத்தம்... அப்பா மூன்றாவதா பெண்குழந்தை பெற்றுக்கலாம்னு சொன்னதுக்கு அம்மா அதுவும் ஆண்வாரிசா போயிடுமோனு பயத்துல இரண்டே போதும்னு சொல்லிட்டாங்களாம்.... ஆனா அம்மாவுக்கு பொண்ணுங்கனா ரொம்ப பிடிக்கும்... உன்னையும் ஹேமாவையும் கூட அவங்க இந்த தாங்கு தாங்குறதுக்கு அது தான் காரணம்...”
“ஆமா அத்தான் நானும் அத்தையை கடுப்பேத்த எவ்வளவு ட்ரை பண்ணியும் கடைசியில பல்பு வாங்குனது தான் மிச்சம்... ஆனா ரித்வி அத்தானோ நீங்களோ ஏதாவது செய்திட்ட ராதா பார்ட் டூ ஆகி லெப்ட் அன்ட் ரைட் வாங்க ஆரம்பிச்சிர்றாங்க...”
“ஹாஹா அவங்க அப்படி தான் அம்லு... அதுனால தான் ஏன்ஜல் வேணும்னு சொன்னேன்...”
“அப்போ பையன் பிறந்தா என்ன பண்ணுவீங்க???”
“ஹேய்.. எனக்கு எந்த குழந்தைனாலும் ஓகே.... பொண்ணா இருந்தா ரொம்ப ரொம்ப ஹாப்பியா இருக்கும்... மற்றபடி எனக்கு குழந்தைல எந்த பாகுபாடும் இல்லை...”
“ம்ம்ம்... பேபி நல்லா கேட்டுக்கோ அப்பா சொன்னதை .... நீ குட்டிப்பையனா இருந்தா அம்மா செல்லமா தான் இருக்கனும்..... ஏஞ்சலாக இருந்தீங்கனா நீங்க அப்பா செல்லம்... ஓகேவா...” என்று தன் வயிற்றில் கை வைத்தபடி ஶ்ரீ பேச ரிஷியோ அவளை கவனித்துக்கொண்டிருந்தான்...
இவ்வாறு அளவளாவிக்கொண்டிருந்தவர்கள் சற்று நேரத்தில் கண்ணயர்ந்தனர்....
நாளைய விடியலில் ஆரம்பிக்கப்போகும் பிரச்சனைகளை இனி இருவரும் எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றனர்???
பிரச்சினைகள் சோதனைகளாயிருக்குமா இல்லை வேதனைகளாய் மாறி காயங்களாய் வடுக்களாய் தங்கியிருக்க போகின்றதா???
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அனு சந்திரன் டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top