நீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன 50

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
கண்ணால்
கைவிலங்கிட்டு
காரிகையவள்
கண்ணனவனை
காதலால்
கைது செய்தாள்.....

ரிஷியும் ஶ்ரீயும் ஆடி முடித்ததும் அனைவரும் விசிலடித்து கை தட்ட இருவரும் சிறு வெட்கத்துடன் தத்தமது இடங்களில் அமர்ந்துகொண்டனர்...
மறுபடியும் சபைக்கு நடுவே வந்த அனு
“வாவ் வாவ்... இரண்டு பேரும் சூப்பரா டான்ஸ் ஆடுனீங்க.. உங்க இரண்டு பேரோட லெக் மூவ்மண்ட், ஹிப் மூவ்மண்ட், லிப் மூவ்மண்ட், ஐ மூவ்மண்ட் எல்லாமே ஒரு டெம்போல செம்மைக்கு லிங் ஆகிச்சு... அதுலயும் எங்க மாமா யாரும் கவனிக்கலைனு எக்க அக்கா கன்னத்துல இச்சுனு ஒரு நச்சடிச்சத.... சாரிசாரி.. நச்சுனு ஒரு இச்சடிச்சதும் அதுக்கு எங்க அக்கா அவரு கையை கிள்ளுனதையும் இந்த இரண்டு கண்களும் அழகா கேப்சர் பண்ணியதை இந்த தருணத்தில் சொல்ல கடமைபட்டுள்ளேன்.. ஹௌஎவர் நாங்க எல்லோரும் உங்க அல்டிமேட் லெவல் ரோமன்ஸை நல்லாவே என்ஜாய் பண்ணோம்..... ஓகே... அடுத்த டாஸ்க் ஹேமா அக்காவுக்கு... ஹேமா அக்கா வாங்க...” என்றதும் ஹேமா எழுந்து
அனு அருகே சென்றாள்....
“ஹேமா அக்கா உங்களுக்கு கஷ்டமான டாஸ்க் எதுவும் கொடுக்க்கூடாதுனு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருக்கு... அதனால உங்களுக்கான டாஸ்க் என்னதுனா அத்தான் உங்களுக்கு எந்த டேட்ல எப்படி எந்த இடத்துல வைத்து பிரபோஸ் பண்ணாருனு நீங்க சொல்லனும்... நீங்க சொல்லுறது சரியானு அத்தான் சொல்லனும்... ஓகேவா..??” என்று அனு கேட்க ஹரியோ
“என்ன அனு இப்படி சொல்லிட்ட... சரியோ தப்போ ரித்வி கரெக்டுனு தானே சொல்லியாகனும்... இல்லைனா பின்விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்மா...” என்றவனிடம்
“என்ன மாமா அனுபவம் பேசுதா??” என்று ப்ரீதாவை கண்களால் காட்டியபடிஅனு கூறிச்சிரிக்க ப்ரீதாவோ ஹரியை முறைத்தாள்... அனைவரும் அவர்களது செல்ல ஊடலை கண்டு சிரிக்க ரவியோ
“இது தான் அண்ணா சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிறதுனு சொல்லுறது... இப்படி மாட்டிக்கிட்டீங்களே பாஸூ...” என்று கூற அங்கு மீண்டுமொரு சிரிப்பலை படர்ந்தது...
“ஓகேஓகே.. ஹேமா அக்கா... சொல்லுங்க....”
“ம்ம் சொல்லுறேன்.. நானும் ராஜ்ஜும் ஒரே காலேஜ்... அவரு என்னோட சீனியர்.... அவரு எனக்கு பிரபோஸ் பண்ண டேட் மே 28த்... 2014..அது ஒரு ப்ரைடே.... அன்றைக்கு ஈவினிங் லெக்சஸ் இருக்கவில்லை.... ஆனாலும் வீட்டுக்கு போனாலும் எதுவும் செய்யப்போறதில்லைனு காலேஜ் லைப்ரரிக்கு போனேன்.... கொஞ்சம் ரிபர் பண்ணலாம்னு சில புக்சை எடுத்து மேசைல வச்சிட்டு ரெக்ல இன்னும் சில புக்சை தேடிட்டு இருந்தேன்.... நான் கவனிக்காது விஷயம் என்னன்னா நான் வந்து கொஞ்ச நேரத்துல லைப்ரரில இருந்த எல்லாரும் அங்கேயிருந்து கிளம்பிட்டாங்க.... நானும் அதை சரியா கவனிக்கலை... அப்போ திடீர்னு லைட்ஸ் எல்லாம் ஆப் ஆகிடுச்சு... திடீர்னு ஆப் ஆனதால நானும் பயந்துட்டேன்...... அப்போ திடீர்னு ஒரு வெளிச்சம்.... நானும் அந்த வெளிச்சம் எங்கயிருந்து வருதுனு தேடுனேன்... அந்த வெளிச்சம் வந்த இடத்துக்கிட்ட போனதும் அந்த வெளிச்சம் அணைஞ்சிருச்சு.... மறுபடியும் இதே மாதிரி நடந்துச்சு...இப்படி மூன்று தடவை நடந்ததும் எனக்கும் கடுப்பாகிடுச்சு.... யார்டா அதுனு சவுண்டு கொடுத்ததும் லைட் எல்லாம் ஆன் ஆகிடுச்சி... ஆன் ஆன அடுத்த செக்கண்ட் மேல இருந்து சிவப்பு ரோஜாப்பூ கொட்ட ஆரம்பிச்சிருச்சு... வழமையா இதழ் தான் கொட்டுவாங்க.... ஆனா இங்க முழு பூவா தலைக்கு மேல இருந்து கொட்டிச்சு..... கொட்டி முடிச்சதும் யாரோட வேலையிதுனு தேடுனா யாரையும் காணோம்.... மறுபடியும் லைட் எல்லாம் ஆப் ஆனதும் திடீர்னு அந்த லைப்ரரியில இருந்த ப்ரொஜெக்டர் ஆன் ஆகி ஸ்க்ரீன்ல ஏதோ டிஸ்ப்ளே ஆகிச்சு... நானும் அந்த ஸ்க்ரீனுக்கு ஆப்போசிட்ல தான் அப்போ நின்னுட்டு இருந்தேன்... அதுல ஹலோ மிக்கி மவுஸ்னு வந்தது.... யார்டா அதுனு பார்க்க அதுல என்னோட சில ஸ்னெப்ஸ் வந்தது... அதெல்லாம் யாரே எனக்கு தெரியாமல் எடுத்த ரெண்டம் க்ளிக்ஸ்.... பிறகு you wanna know I’m .... Check ur book reference book அப்படினு ஸ்க்ரீன்ல வர நானும் டேபிள்ள ரிபரென்சுக்குனு வச்சிருந்த புக்சை எடுத்து பார்த்தேன்... எல்லா புக்கோட கவருக்கு உள்ளேயும் ஒவ்வொரு ரோஸ் இருந்தது. .... லாஸ்ட்டா இருந்த புக்குல ரோசோடோ ஒரு லெட்டர் இருந்தது... அதுல come to upstairsனு இருந்துச்சு. நானும் மேலே போனேன்.... அங்க கீ போர்டோட சார் இருக்காரு... அவரு இருந்த கெட்டப்பை இன்னும் வரை என்னால மறக்கமுடியாது.. கில்லி பட விஜய் மாதிரி கவர் ஹெட் டீஷர்ட்டோட தலையை கவர்பண்ணிக்கிட்டு கூலிங்கிளாசோட நிற்கிறரு..... யார்டா இது அடிக்காத வெயிலுக்கு கூலிங்கிளாஸ் போட்டுட்டு நிற்கிறானு நான் பார்த்துட்டு நிற்க சார் பாட்டு பாடுறாரு..... எனக்கு பஸ்ட் எதுவும் புரியலை... பிறகு தான் ராஜ் ப்ரொபோஸ் பண்ணுறானே புரிந்தது.. நான் அவரை பார்த்துட்டு இருக்கும் போது நான் எதிர்பாராத நேரத்துல என் முன்னுக்கு மண்டியிட்டு ரோசை நீட்டிட்டார் ......... எனக்கு என்ன பண்ணுறதுனு புரியலை...... ஆனா அந்த நோடியில என்னோட மனசு அந்த ரோசை வாங்கி சொன்னதும் எதுவுமே சொல்லாம அந்த ரோஸை வாங்கிட்டேன்.... ஆனா அதுக்கு பிறகு எனக்கு என்ன பேசுறது செய்றதுனு தெரியலை..... ஆனா ராஜ் ஒரு கிப்டை கொடுத்து அதை திறந்து பார்க்கச்சொன்னாரு. திறந்து பார்த்தப்போ அதுக்குள்ள கெட்பரி சாக்லேட் இருந்தது.. அதை பார்த்துட்டு நான் அவர்கிட்ட என்னதுனு கேட்டதும் அவரு எங்கம்மா செல்லியிருக்காங்க... எந்த நல்ல விஷயமாக இருந்தாலும் ஸ்வீட்டோட ஆரம்பிக்கனும்னு.... என்னோட ப்ரபோசலை ஆக்சப்ட் பண்ணுறேன்னா நீ இதை பிரிச்சி சாப்பிடு... இல்லைனா திருப்பி கொடுத்துட்டு போயிருனு சொன்னாரு.... எனக்கு அப்போ என்ன சொல்லுறதுனு புரியலை... பாக்சை எடுத்துட்டு எதுவும் சொல்லாமல் போயிட்டேன்....” என்றவளை இடைநிறுத்திய அனு
“அக்கா வெயிட்..... வெயிட்..... ரித்வி அத்தான் நீங்க வாங்க.... மிச்சத்தை நீங்க சொல்லுங்க....” என்று ரித்வியை அழைக்க எழுந்து வந்தவன் மீதிக்கதையை கூற ஆரம்பித்தான்...
“ஹேமா எதுவும் சொல்லாமல் சாக்லேட் பாக்சை வாங்கிட்டு போனதும் எனக்கு இவ என்ன சொல்ல வர்றானு புரியலை.... அங்க லைப்ரரியில எனக்கு ஹெல்புக்கு இருந்த ப்ரெண்ட்ஸ் இரண்டு பேரும் வந்து என்னடா சொன்னான்னு கேட்க நானும் நடந்ததை சொன்னேன்... அதுக்க அவனுங்க டேய் சாக்லேட்டை யாராவது திருப்பி கொடுக்க சொன்னாங்கனா திருப்பு கொடுப்பாங்களாடானு என்னை கலாய்க்க எனக்கு கடுப்பாகிடுச்சு...அவனுங்களை திட்டிட்டு நான் அங்கேயிருந்து கிளம்பிட்டேன்.... ஒரு வாரம் என்னை கண்டுக்காமல் சுத்தல்ல விட்டவ ஒரு நாள் நான் கேண்டின்ல இருக்கும் போது வந்தவ எனக்கு முன்னால இருந்த சீட்டுல உட்கார்ந்தா... நானும் அவ என்கிட்ட ஏதோ பேச தான் வந்திருக்கானு ஆவலா அவளை பார்த்துட்டே இருந்தேன்.... ஆனா அவ என்னை கண்டுக்கலை.... அவளோட பேக்கை திறந்து ஒரு கேட்பரி சாக்லேட்டை எடுத்தவ அதை பிரித்து மெதுவா சாப்பிட ஆரம்பிச்சா.... நானும் அவ சாப்பிடுற அழகை ரசிச்சு பார்த்துட்டு இருந்தேன்.... அப்போ அவளோட மொபைலை எடுத்து பேச ஆரம்பிச்சா.... அப்போ அவ என்ன சொன்னான்னா நிஷி நல்ல விஷயத்தை கொண்டாடனும்னா ஸ்வீட்டோட தான் கொண்டாடனும்... நானும் இப்போ அதான் ஸ்வீட்டான காட்பரி சாப்பிட்டுட்டு இருக்கேன்..... அதாவது எனக்கு பிடிச்சதை சாப்பிட்டு எனக்கு பிடிச்சதை ஆக்சப்ட் பண்ணபோறேன்.... ஓகேடி.. உனக்கும் ஓகேனா நீயும் சாப்பிடு....அப்படினு சொல்லிடாடு போனை கட்பண்ணிட்டு அவ பேக்ல இருந்து இன்னொரு சாக்லேட்டை எடுத்து மேசையில வச்சிட்டு எழுந்து போயிட்டா....எனக்கு ஒன்னும் புரியலை.... யோசிச்சதும் தான் அவ என்னோட பிரபோசலை ஆக்சப்ட் பண்ணிட்டானு புரிஞ்சிது... அதுக்கு பிறகு அவளை மீட் பண்ணி அவ கண்ணை பார்த்து என்னோட லவ்வை வார்த்தையால சொன்னேன்.... அலளும் மீ டூனு சொல்லி என்னோட லவ்வை ஆக்சப்ட் பண்ணிட்டா......”
“வாரே வா...... சூப்பர்பா.... அக்கா நீங்க வேற லெவல்... அத்தான் நீங்க பாட்டு பாடி பிரபோஸ் பண்ண அந்த ரொமேண்டிக் சீனை நாங்க மறுபடியும் ஒருதடவை பார்க்க ஆசைபடுறோம்.. அதுனால ப்ளீஸ் எங்களுக்காக ஒரு தடவை அந்த சீனை ரீப்ளே பண்ணுங்களேன்....”என்று அனுகூறியதும் அங்கிருந்த தன் நண்பனிடம் சொல்லி அவனது அறையிலிருந்ந அவனது கீபோர்டை எடுத்துவர கூறியவன் அதை எடுத்து வந்ததும் அதை இசைத்தபடி பாடத்தொடங்கினான்...

கொஞ்சம் உளறிக்
கொட்டவா கொஞ்சம்
நெஞ்சை கிளறிக்காட்டவா
கொஞ்சம் வாயை மூடவா
கொஞ்சம் உன்னுள் சென்று
தேடவா
கொஞ்சம் வழியை
கேட்டேன் அடி
கொஞ்சம் கொஞ்சம்
வலிகள் தருகிறாய்
நீ திரைகள்
மாட்டினால் உள்
அறைகள் பூட்டினால்
உன் இதயமூளையில்
நானே இருப்பேன் நீ
திரைகள் மாட்டினால்
உள் அறைகள் பூட்டினால்
உன் இதயமூளையில்
நானே இருப்பேன்

கொஞ்சம் உள்ளம்
சிந்திடு கொஞ்சம் கொஞ்சம்
என்னுள் வந்திடு கொஞ்சம்
பார்வை வீசிடு கொஞ்சம்
கொஞ்சம் உண்மை பேசிடு

கொஞ்சம் திறக்க
சொன்னேன் அடி கொஞ்சம்
கொஞ்சம் மறைக்க பார்க்கிறாய்
ஓ ஓஹோ ஓ

காக்கை தூது
அனுப்பிடு காற்றாய்
வந்து உன் கூந்தல்
கோதுவேன் ரெக்கை
ஏதும் இன்றியும் தூக்கி
கொண்டு விண்ணில்
ஏறுவேன்
இன்னும் ஜென்மம்
கொண்டால் உன்
கண்முன் தோன்றி
இம்சை பண்ணுவேன்
ஓ ஓ ஹோ
என் இதயக் கூட்டிலே
உன் இதயம் கோர்க்க வா
ஈருயிரை சேர்க்க வா
ஒன்றாகிட வா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அனு சந்திரன் டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top