நீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன?? டீசர்

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
வணக்கம் நட்பூஸ்...

நீ எந்தன் வாழ்க்கையான மாயமென்ன கதை ஆரம்பித்ததிலிருந்து ஒரு டீசர் போடனும்னு தோணிட்டே இருந்தது... சோ அதான் ஒரு சின்ன டீசர்....
படிச்சிட்டு எப்படி இருந்ததுனு சொல்லுங்க...


“ என்னால முடியலை அனு.... கடக்கின்ற ஒவ்வொரு நொடியும் என்னோட பயத்தை அதிகரிச்சிக்கிட்டே இருக்கு...ஏதாவது தப்பா நடந்திருமோனு பயமா இருக்கு.....உங்க அக்காகிட்ட இன்னும் எவ்வளவு நாள் நடிக்கமுடியும்னு எனக்கு தெரியலை... ஆனா அவகிட்ட ஒன்னுமில்லாதது போல் நடிக்கிறது அவ்வளவு சுலபம் இல்லை... இப்பவெல்லாம் அவளை சமாளிக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு...” என்று அனுவிடம் புலம்பிய ரிஷியை ஆறுதல் படுத்தினாள் அனு.
“மாமா உங்க நிலைமை எனக்கு புரியிது... ஆனா இதைத்தவிர வேறு வழியில்லை...நாம இந்த விஷயத்தை மறைத்து வைத்திருப்பது தான் எல்லாருக்கும் நல்லது... ஏதும் தப்பா நடக்காது மாமா... நல்லதே நடக்கும்னு நினைப்போம் மாமா...”
“எப்படிமா நினைக்கிறது??? எல்லாமே நெகடிவ் ரிசால்டா இருக்கும் போது பொசிடிவ்வா நினைக்க தோன்றவில்லையே... என்னதான் மனது நல்லதே நினை என்று சொன்னாலும் மூளை அந்த அபாயத்தை நினைவூட்டி பயமுறுத்துதே... ஒருகட்டத்துல செத்துர்லாம்னு தோனுது...” என்று விரக்தியின் உச்சத்தில் ரிஷி பேச அவனது பேச்சில் பதறிய அனு
“ஐயோ மாமா... என்ன பேசுறீங்க... நீங்களே இப்படி தளர்ந்துட்டீங்கனா நாங்க என்ன பண்ணுவோம்??? நீங்க தான் மாமா எங்களோட பலம்... இந்த விஷயம் நம் வீட்டுல தெரிஞ்சிருந்தா இன்னேரம் என்னென்ன அசம்பாவிதம் நடந்திருக்கும்னு என்னால யூகிக்க கூட முடியல... உங்களால தான் வீட்டுல எல்லோரும் நிம்மதியா இருக்காங்க.... அக்கா கூட தன்னோட பிரச்சனைகள் எதுவும் தெரியாது பாப்பா வரப்போகுது அப்படீங்கிற சந்தோஷத்துல இருக்கா... இதுக்கெல்லாம் காரணம் நீங்க தான்...இதுவரை எல்லாம் நல்லபடியா தான் போய்கிட்டு இருக்கு.. இனிமேலும் அப்படியே போகும்னு நம்புவோம் மாமா... உங்களோட காதல் அக்காவை அந்த ஆபத்திலிருந்து மீட்டுரும் மாமா... என்னை நம்புங்க... இந்த மெடிக்கல் மிராக்கல் அப்படீனு சொல்லுவாங்களே... அதே மாதிரி அக்காவும் பிழைத்து வருவா.... நீங்க பயப்படாதீங்க...”
“எனக்கு உங்க அக்காவை பார்க்கும் போது ஏதோ அவ என்னை விட்டு கொஞ்சம் கொஞ்சமா தூரமாகிட்டு போறதாவே தோணிட்டே இருக்கு.... நைட்டில் இதை நினைச்சாலே தூக்கம் வர மாட்டேன்குது..... அதைவிட கொடுமை உங்க அக்கா பாப்பா பற்றி பேசும் போது என்னால் அவ அனுபவிக்கிற சந்தோஷத்தை பார்த்து வெளிவரும் என்னோட உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு.... எனக்கு வாரிசை விட உங்க அக்கா தான் முக்கியம்... அதனால தான் ஆரம்பத்துலேயே அபார்ட் பண்ணலாம்னு சொன்னேன்... ஆனா அவ தான் பிடிவாதம் பிடித்து அந்த கருவை தன் வயிற்றில் சுமந்திட்டு இருக்கா... ஆனா அது இவளுக்கு எமனாகப்போகுது....... இந்த கொடுமை யாருக்கும் வரக்கூடாது..... அவ சிரிக்கும் போதெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்கு இந்த சிரிப்பை பார்க்கும் கொடுப்பினை இருக்கு அப்படினு தோன்றி என்னை சித்தம் கலங்க வைக்கின்றது... ஏதோ ஒரு கூடை நெருப்பை யாரோ அள்ளி என் தலையில் போட்ட மாதிரி இருக்கு... ஒவ்வொரு நாளும் என்ன நடக்குமோ ஏது நடக்குமோனு பயந்து பயந்தே நாட்கள் போகுது...ஆனால் ஒன்று சொல்லுறேன்....உங்க அக்காவுக்கு ஏதும் நடந்தா அடுத்த நிமிஷம் நான் உயிரோடு இருக்க மாட்டேன்...”
“ஐயோ மாமா... ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க... ஏதும் தப்பா நடக்காது என்னை நம்புங்க... அக்காவும் பாப்பாவும் நல்லபடியா திரும்பி வருவாங்க....”
“எனக்கு என் தானு நல்லபடியா திரும்பி வந்தா போதும்.... வேற எதுவும் வேணாம்...” என்று அவன் அதீதக்காதல் அவன் பேச்சில் வெளிப்பட அதைக்கேட்டு நெகிழ்ந்துவிட்டாள் அனு...
“அனு உன்னோட சீப் தானுவோட ரிப்போர்ட்சை பார்த்துட்டு என்ன சொன்னாங்க?? ஏதும் ஆல்டனேட்டிவ் சஜஸ்ட் பண்ணாங்களா??” என்று ஏதேனும் வைத்தியம் அவளை சரிப்படுத்திவிடாதா என்ற நப்பாசையில் கேட்க அனுவோ
“இல்லை மாமா... ஆல்ரெடி சொன்னது தான் டுவென்டி பர்சன்ட் தான் பிழைப்பதற்கு சான்சஸ் இருக்குனு சொல்லிட்டாங்க... அப்புறம் மாமா அவுஸ்ரேலியாவில் கய்னோ சர்ஜன் ஒருத்தவங்களை காண்டக்ட் பண்ணிருக்காங்க.... அவங்க இன்னும் ஏதும் சொல்லை... அவங்களோட ஸ்டேட்மன்டை வைத்து தான் முடிவு பண்ணனும்னு சொல்லிருக்காங்க... அக்காவோட பிளட் பிரஷரையும் அடிக்கடி செக் பண்ணிக்க சொன்னாங்க... அவங்க டென்ஷன் ஆகக்கூடாது... ரொம்ப கவனமாக பார்த்துக்க சொன்னாங்க மாமா... நான் பிரஷர் மெஷின் கொண்டு வந்துருக்கேன்...நீங்க அடிக்கடி செக் பண்ணி எனக்கு அப்டேட் பண்ணுங்க...”
“ஓகே அனு.... நான் உனக்கு அப்டேட் பண்ணுறேன்... இன்னும் வேற யாருக்காவது இந்த விஷயம் தெரியுமா??”
“இல்லை மாமா உங்களையும் என்னையும் தவிர வேற யாருக்கும் இந்த விஷயம் தெரியாது... வேறு யார் மூலமும் அக்காவுக்கு விஷயம் தெரிஞ்சிரக்கூடாதுனு சொல்லலை மாமா...”
“அது தான் சேப்டீ... உங்க அக்கா கேள்வி கேட்டே எல்லா உண்மையையும் கறந்திருவா... அப்புறம் விஷயம் கைமீறி போயிரும்..”
“இன்னும் மூன்று மாதம் தான் மாமா... அதுவரைக்கும் அக்காவை சமாளிங்க... இதை உங்ககிட்ட சொல்லத் தேவையில்லை... உங்களை விட யார் அக்காவை இவ்வளவு ஸ்மார்ட்டா சமாளிக்க முடியும் சொல்லுங்க..” என்று சூழ்நிலையை மாற்ற அனு தன் அக்கா புராணத்தை தொடங்க
“அது மறுக்க முடியாத உண்மை... அவளை சமாளிக்க ஒரு நாளைக்கு பத்து போத்தல் ரெட்புல் குடுத்தாலும் பத்தாது...”
“அதுதான் மாமா அக்கா....அவ எதை எப்போ எப்படி செய்வானு யாராலேயும் கெஸ் பண்ணமுடியாது... ஆனா நம்மை சுத்தலில் விட்டுருவா...” என்று ஶ்ரீ பற்றிய நியாபகத்தில் பேசினாள் அனு..
இவர்களது உரையாடலை கதவின் மறைவில் இருந்து கேட்டுக்கொண்டிருந்தாள் ஶ்ரீ....
அனு கூறியது போல் ஶ்ரீ என்ன செய்யப்போகிறாள்??? எப்போது செய்யப்போகிறாள்??? எப்படி செய்யப்போகிறாள்???
 

banumathi jayaraman

Well-Known Member
அய்யய்யோ, ஸ்ரீ எல்லாத்தையும் கேட்டுட்டாளே?
ஸ்ரீ பாவம்ப்பா
புள்ளத்தாச்சி வேற
எப்படியாவது அவளைக்
காப்பாத்திடுங்க, அனு டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top