நீ இருக்கும் நெஞ்சம் இது …16

Advertisement

Pragathi Ganesh

Well-Known Member
கிருஷ்ணாவிற்கு தாலி கட்டும் நேரம் வரை, இருந்த மனநிலை, சந்தோஷம் முற்றிலும் மாறியது, தன் அக்காவை தனியே சந்திப்பதற்காக சூழ்நிலையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

கிருஷ்ணாவின் நிலை தான் இப்படி என்றால், கண்மணி நிலை இன்னமும் மோசம், ஒருவேளை இவங்க அக்காவுக்கு, நம்மள பிடிக்கலையா என்று பலதும் எண்ணி சஞ்சலம் உற்றாள். இங்கு சந்தோஷ் என்ன ஆச்சு வசுக்கு? இன்னிக்கு தான் இப்படி இருக்காளா? இல்ல கொஞ்ச நாளா இப்படி இருக்காளா? நம்ப சரியா கவனிக்கலையா என்று மூவருமே வாசுகி நினைத்துக்கொண்டிருக்க…

இங்கு வாசுகியோ, தனியே ரூமில் அடைந்து கொண்டு, தன்னையும் வதைத்து கொண்டு, மற்றவர்களையும் வைத்துக்கொண்டிருந்தாள். யசோதாவோ, இருதலைக்கொள்ளி என்பார்களே, அதுபோல், ஒரு பக்கம் மகன், இன்னொரு பக்கம் மகள், இருவருமே இரு கண் போல், இப்படி இருக்க, வந்திருந்த சொந்தங்கள், அனைவரும் வாசுகியை, பற்றி கேட்க அவளுக்கு தலை வலி, என்று சொல்லி அனைவரையும் சமாளித்துக் கொண்டிருந்தார்.

சந்தோஷமான மனநிலையில், ஆரம்பித்த திருமணம், அனைவர் மனதிலும் ஒரு சஞ்சலத்தோடு, ஒருவழியாக, நல்லபடியாக திருமணம் முடிந்து, கிருஷ்ணாவும், கண்மணியும், மறுவீடு செல்வது குறித்து, பேச்சு வரவும், கிருஷ்ணா இன்னும் ரெண்டு நாள்ல நான் வேலைக்கு போய் ஆகணும், பசங்களுக்கு எக்ஸாம் வருது, லீவு எடுக்க முடியாது தப்பா நினைக்காதீங்க. அடுத்த மாசம், கண்டிப்பா வருவோம் என்று சொல்லி அந்த பேச்சை அத்துடன் முடித்தான்.

தன் அக்காவை மனதில் கொண்டு, யசோதா விற்கும், பிரபாகரனுக்கும், சங்கடம் ஆகியது. யசோதா, கண்மணியின் அம்மா மீனாட்சியிடம், நீங்க ஒன்னும் சங்கட படாதீங்க என்று சொல்லி சமாளித்தார். ஆனாலும், பெண்ணை பெற்றவர்களுக்கு, ஏனோ, மனது சமாதானம் ஆகவில்லை, அதிலும், கண்மணியின் கலங்கிய முகம் பார்த்து அப்படியே தயங்கி நின்றனர்.

அதிலும் நாத்தனார் வாசுகி, மணமேடையில் சடங்கு முடியும்வரை, நின்றதோடு சரி, இந்த பக்கம், அதற்குப்பின் இங்கு வரவும் இல்லை, யாருடனும் சிரித்து பேசவுமில்லை. ஏனோ, மீனாட்சிக்கு ஒப்பவில்லை.

இதனை, கவனித்த கிருஷ்ணா, கண்மணி, அவளுடைய அம்மா, அப்பா, மூவரையும் தனியே அழைத்துச் சென்று, சேரில் அமர வைத்து, தானும் அமர்ந்து கொண்டு, உங்களுடைய மனநிலை எனக்கு புரியுது, நானும் ஒரு அக்காவோடு, பிறந்தவன்தான் இப்போ, உங்களுக்கு “ஒரு வாக்கு தரேன் கண்மணி கண்ணுல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வராது” நீங்க சந்தோஷப் படுற மாதிரி, நீங்க நாங்க சந்தோஷமா வாழ்வோம் நீங்க கவலைப்படக் கூடாது. உங்க பொண்ணு தான், எங்கள நல்லா பாத்துக்கணும், என்று சொல்லி சூழ்நிலையை இலகுவாக்க முயன்றான்.

இந்த வார்த்தை, கண்மணியின் பெற்றோர்களுக்கு, மனதில் நிம்மதியை தந்தது. மணிகண்டன் அதுக்கு என்ன மாப்பிள, உங்களையும், உங்க குடும்பத்தையும் பார்த்துதான், எங்க பொண்ணு, உங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சோம்.

உங்கள் காசு, பணத்தை, பார்த்து இல்ல. நீங்களும் என் பொண்ணும், சந்தோஷமா இருக்கணும், இதைவிட வேற என்ன வேணும். எங்களுக்கு, உங்க குடும்ப சூழல், ஏதோ சரி இல்லைன்னு புரியுது, என்னன்னு நாங்க கேட்க மாட்டோம். ஆனா, சீக்கிரம் சரி பண்ணு பாருங்க, என்று அவர் சொல்லவும், ஒரு அதிர்வோடு, கிருஷ்ணா அவர் முகத்தைப் பார்க்கவும், அதை கண்டு கொள்ளாமல் மீனாட்சியிடம் கண்ணை காட்டி கிளம்பச் சொன்னார்.

மீனாட்சி, மகளிடம் வந்து சொல்லிக் கொள்ளவும், கண்மணி, மீனாட்சியை கட்டிக்கொண்டு ஒரே அழுகை, இதை பார்த்த கார்த்திக்கும், அழ ஆரம்பித்தான். மீனக்ஷி, மகளை சமாதானப்படுத்தி, அவன் கண்ணை துடைத்து, கண்மணி இன்னைல இருந்து இது உன்னுடைய குடும்பம், எந்த பிரச்சினையாக இருந்தாலும், சரி பன்னி விட்டுக்கொடுத்து போகணும், எல்லாருமே ரொம்ப நல்லவங்களா, இருக்காங்க, ரொம்ப சிரமப்பட வேண்டும் படனும், அப்படின்னு உனக்கு அவசியம் இருக்காது.

இங்கு இப்படி இருக்க, அங்கு சந்தோஷ், தாத்தா, பாட்டி மூவரும்,வாசுகியிடம் மல்லுக்கட்டி கொண்டிருக்க, சந்தோஷின் அம்மா, சந்தோஷ வாசுகியை, முதல்ல சமாதான படுத்து, என்று சொல்லிவிட்டு, அவர்களுக்கு தனிமை கொடுத்து, விமல் யையும், ஸ்ருதியையும் அழைத்துச் சென்றுவிட்டனர்.
 

banumathi jayaraman

Well-Known Member
கிருஷ்ணா ரொம்பவே பாவம்
அதைவிட கண்மணி பாவம்
அடியேய் வாசுகி நீயெல்லாம் ஒரு அக்காவா?
வாழ்க்கையில் ஒரு முறை வரும் நிகழ்வு கல்யாணம்
அதைக் கூட உன் ஒரே தம்பி சந்தோஷமா அனுபவிக்க விடாமல் செய்துட்டியே
வாசுகிக்கு ஓவர் கொலஸ்ட்ரால்
யசோதாவும் சந்தோஷும் சரியில்லை
 

Saroja

Well-Known Member
ரொம்ப நல்லா இருந்த
கல்யாண வீட்டில் கவலபட
வச்சுட்டா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top