நீ இருக்கும் நெஞ்சம் இது …10

Advertisement

Pragathi Ganesh

Well-Known Member
கண்மணியை பார்த்துக்கொண்டிருந்த, கிருஷ்ணா திடீரென்று மாமா என்றான் சத்தமாக! அந்த “சத்தத்தில் சடன் பிரேக் போட்டு சந்தோஷ் காரை நிறுத்த” எல்லோரும் கிருஷ்ணாவை பார்த்தனர்.

அதற்கு கிருஷ்ணா “அந்த மெயின் ரோட்டில் இருக்க ஐஸ்கிரீம் பார்லர் கிட்ட வண்டிய நிறுத்துங்க” என்று சொன்னதும்…

ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதமாக அதிர்ந்தனர், சந்தோஷுக்கு இவன் ஏதோ நம்பல வெச்சு பிளான் பண்ணிட்டான் . கண்மணிக்கு ஐயோ! நம்ப இவர இங்கதான மொத மொதல்ல பார்த்தேன். ஒருவேளை, அவரும் நம்பல பார்த்திருப்பாரோ? என்று சந்தேகம் வந்தது. இப்ப கேட்டா என்ன சொல்றது, இவர்கள் இப்படி யோசித்துக் கொண்டிருக்கும்போதே.

விமல் “ஐ ஐஸ்கிரீம்” என்று சந்தோஷமாக குதிக்கவும், சந்தோஷ் முடிஞ்சு போச்சு, நம்ப என்ன சொன்னாலும், இனிமேல் யாரும் கேட்க மாட்டாங்க. இருந்தாலும், நீ அலர்ட் ஆகிககோ, என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு, ஐஸ்கிரீம் பார்லரில் காரை நிற்பாட்டினன். கடைசியாக காரிலிருந்து கடைசியாக இறங்கிய கிருஷ்ணா மாமா என்றான்.

மறுபடியும் என்னடா? ஒன்னு இல்ல மாமா, ஒரு ஹெல்ப் எனது ஹெல்ப் ஆ….! என்ன மாமா, எனக்கு நீங்க பண்ணலைன்னா யார் பண்ணுவா? எனக்கிருக்கும் ஒரே மாமா, வேற வழி, சொல்லுடா.

அது ஒன்னும் இல்ல மாமா, அம்மாகிட்ட” நாங்க வர, அரை மணி நேரம் ஆகும்,” அதனால, எங்களுக்கு வெயிட் பண்ணாம…

கடையில போய், “ புடவை செலக்ட் பண்ணிட்டு இருக்க சொல்லுங்க”

நாங்க பின்னாடி, வந்து ஜாயின் பண்ணிக்கிறோம், அப்படின்னு சொல்லிடுங்க , என்று அசராமல் ஒரு குண்டை தூக்கி போட்டான்.

மாமா என்னடா, என்ன மட்டும், கொத்துவிட்டு நீ போற? மாமா, இந்த வீட்டுக்கு மாப்பிள, நீங்க அதுக்கு, உங்களுக்குன்னு, ஒரு கெத்து இருக்கு, அந்த கெத்தா விடாம, அம்மாகிட்ட தம்பியா இல்லாம, இப்போ எங்க வீட்டு மாப்பிள்ளை, அதிகாரமா சொல்லிட்டு, வாங்க பார்க்கலாம், என்று சொல்லிவிட்டு நைசாக கிருஷ்ணா நழுவி கொண்டான்.

உள்ளே நுழைந்த, “கிருஷ்ணா நேராக கண்மணியின் பக்கத்தில் அமர்ந்துவிட” கண்மணி சுவரோடு, சுவராக ஒட்டிக்கொண்டாள். அதற்கு, கிருஷ்ணா பார்த்து, பார்த்து இப்படியே சுவரை தாண்டி, அந்த பக்கம் போய் விழுந்திட போற, “கொஞ்சம் ஃப்ரீயா உட்காரு”. உன்ன கடிச்சு சாப்பிட மாட்டேன் என்று சொல்லிவிட்டு அவளை “பார்வையால் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்” அவள் இவனை பார்க்காமல், தன் படபடப்பை மறைக்க ஸ்ருதியிடம் விளையாடிக்கொண்டிருந்தாள்.

இது வேலைக்காகாது, என்று முடிவெடுத்த கிருஷ்ணா.

சந்தோஷ் வரவும், கண்மணியின் பக்கமாக சரிந்து, அவளை உரசிக்கொண்ட, அவள் மடியில் இருக்கும், ஸ்ருதியை தூக்கி கொஞ்சிக்கொண்டே, மாமா உங்க பொண்ணு, உங்கள ரொம்ப நேரமா, தேடிட்டு இருக்கா, நான் என்ன காணாமல போயிட்டேன்? நான் இங்க தான் டா இருக்கேன்.

இவ்வளவு கலவரத்திலும், வாசுகி இதற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்று “செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தாள்”

சந்தோஷுக்கு இப்போதுதான், ஒன்று உறைத்தது,வாசுகி காலையிலிருந்து ஏன் ஒரு மாதிரி இருக்கா? ஏதாவது உடம்பு சரி இல்லையோ? வீட்டுக்கு போன உடனே மொதல்ல கேட்கணும்.

சந்தோஷுக்கு, வாசுகியை மிகவும் விரும்பி கல்யாணம் கொண்டான். சின்ன வயதில் இருந்து பார்த்ததால் தன் அக்கா மகள் தன்னைவிட யாருக்கு நன்றாக தெரியும். வாசுகி சிறிது, முகம் மாறினாலும் கண்டுபிடித்துவிடுவான், இன்று சிறிது கவனக்குறைவாக இருந்துவிட்டான். இந்த “சின்ன கவனக்குறைவு, பின்னால் இவன் வாழ்க்கையில் ஒரு சூறாவளி கிளப்பப் போகிறது” என்று அறியாமல் ஏதோ, சின்ன விஷயம் என்று சாதாரணமாக நினைத்துக்கொண்டான். சில விஷயங்கள், அப்பொழுதே, பேசி சரி பண்ண வேண்டும். இல்லாவிட்டால், அது பெரிதாக, சரி பண்ண முடியாத, அளவுக்கு போய்விடும்.

சந்தோஷ், வாசுகியிடம் பாப்பா வாங்கு, என்று சொன்னவுடன், சரி என்று அவளும் ஸ்ருதியை வாங்கிக் கொண்டாள்.

கிருஷ்ணா, கண்மணியின் பக்கத்தில், இன்னும், இன்னும் நெருங்கி அமர்ந்தான். இதைப் பார்த்த, சந்தோஷ் விட்டால், அந்த “பொண்ணு மடியில், ஏறி உட்கார்ந்து விடுவான்” போல அவன் சொல்வதற்கு ஏற்ப, கிருஷ்ணா அவ்வளவு நெருங்கி உட்கார்ந்திருந்தான். என்ன ஸ்மல் கண்மணி, என்ன பர்ஃப்யூம் போடுற, ஒன்னும் இல்லையே, என்றால் படபடப்பாக. கண்மணி இப்ப போனா, நாம இதோட “ நிச்சயதார்த்தம் அன்னைக்கு தான் பார்க்க முடியும்” ப்ளீஸ் என்ன நிமிர்ந்து பாரு, என்ற அந்த குரலுக்கு, கண்மணி நிமிர்ந்து அவனைப் பார்த்தால் அதில், சந்தோஷமான கிருஷ்ணா

இந்த பாட்டு, கேட்டு இருக்கியா, கண்மணி என்ன பாட்டு?

“சேலை கட்டும் பெண்ணுக்கொரு

வாசம் உண்டு கண்டு கொண்டேன்

கண்களுக்குள் பள்ளி கொண்டேன்”

என்று மெல்லிய குரலில் பாடினான்.,கண்மணி “அவன் முகத்திலிருந்து பார்வையை திருப்ப முடியாமல் இருக்க” மீண்டும

“ வேணா வேணா விழுந்திடுவேனா

கண்கள் கண்டால் கவிழ்ந்து விடுவேனா

ஒரு முறை சிரிக்கிறாய்

என் உயிரினை பறிக்கிறாய்

கண்கள் ரெண்டும் அணுகுண்டா

கத்தி குள்ள பூச்செண்டா”

என்று பாட. இங்கு கண்மணிக்கு, தான் அவஸ்தை ஆனது, இதைப் பார்த்துக்கொண்டிருந்த, சந்தோஷம் இன்னுமாடா, ஐஸ்கிரீம் வரல, இவன் ஏதாவது “ ஐஸ்கிரீம் கொண்டு வருபவனுக்கு காசு கொடுத்து ஒரு ஒருமணி நேரம் கழித்து கொண்டுவரச் சொல்லி இருப்பான்” இல்லன்னா

இவன், இங்க சாவகாசமா, “பாட்டு கச்சேரி நடத்திட்டு இருக்கான்” என்றும் புலம்பும் போது, சரியாக ஐஸ்கிரீம் வர, அனைவரும் ஐஸ்கிரீம் சாப்பிட. கிருஷ்ணா, சீக்கிரம் சாப்பிடுங்க, அப்புறம் லேட் ஆயிடும், லேட் ஆனா, அப்புறம் “நீங்கதான் காரணம் எல்லார்கிட்டயும் சொல்லிடுவேன்” என்று சொல்ல,சந்தோஷ அடப்பாவி, வாயின் மேல் கைகளை வைத்து பார்த்துக்கொண்டிருந்தான்.
 

banumathi jayaraman

Well-Known Member
என்னம்மா இப்படி ஒரு குண்டைத் தூக்கி அலுங்காமல் போடுறீங்க
சந்தோஷ் ரொம்பவே பாவம்பா
வாசுகி மனசுக்குள்ளே என்ன இருக்குன்னு இவன் உள்ளே புகுந்தா பார்க்க முடியும்?
அடேய் கிருஷ்ணா
நீ ரொம்பத்தான் பண்ணுறேடா
ஹா ஹா ஹா
சந்தோஷ் மாமாவை ஐஸ்க்ரீம் சாப்பிட விடுடா
 

Pragathi Ganesh

Well-Known Member
என்னம்மா இப்படி ஒரு குண்டைத் தூக்கி அலுங்காமல் போடுறீங்க
சந்தோஷ் ரொம்பவே பாவம்பா
வாசுகி மனசுக்குள்ளே என்ன இருக்குன்னு இவன் உள்ளே புகுந்தா பார்க்க முடியும்?
அடேய் கிருஷ்ணா
நீ ரொம்பத்தான் பண்ணுறேடா
ஹா ஹா ஹா
சந்தோஷ் மாமாவை ஐஸ்க்ரீம் சாப்பிட விடுடா
:LOL::LOL::LOL:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top