நீயே என் ஆதியும் அந்தமும்

Advertisement

Kavya Narasimman

New Member
தேர்வு முடுஞ்சு ரிசல்ட் வந்துருச்சு, என்ன வழக்கம் போல நம்ம ஆதிறா தான் முதல் மதிப்பெண், மது இரண்டாவது தான். இதுல கோவத்தின் உச்சிக்கு போயிருந்தா மது. அவ அகராதியில் இரண்டாவது என்று ஒரு வார்த்தையே கிடையாது, அப்படி இருப்பவளுக்கு ஆதிரா முதலிடம் வருவதை பொறுத்துக் கொள்வாளா.... விளைவு ஆதிரா இதுக்கு அப்றம் உயிரோட இருக்க கூடாதுனு தோன்ற அளவுக்கு போயிருச்சு...


மது ஓட சின்ன வயசுல இந்த மாறி ஸ்போர்ட்ஸ்ல அவளை ஒரு பொண்ணு தோக்கடுச்சுட்டான்னு அவளை அவ தோழிகளோட சேந்து மாணபங்கம் படுத்தி அந்த ஸ்கூல்ல இருந்து தொரத்தி விட்டவ, அந்த பொண்ணு வீட்டில இதை எதிர்த்து கேள்வி கூட கேக்கல காரணம் அவ அப்பா, அவர பகச்சா அவ்ளோதான், விளைவு அந்த ஊற விட்டே போய்ட்டாங்க, இதுக்கெல்லாம் காரணம் அவங்க அப்பா அம்மா இல்லாத பொண்ணுன்னு அளவுக்கு அதிகமா செல்லம் குடுத்து கெடுத்து வெச்சுருக்காரு.

ஆதிராவ எப்பவும் தனியா பாக்க முடியாது அவளோட நண்பர்கள் எப்பவும் அவ கூட தான் இருப்பாங்க அவங்க எல்லாரையும் தாண்டி எப்படி மது அவளோட திட்டத்த செயல்படுத்த போரானு பொறுத்திருந்து பாக்கலாம்.



எரிற நெருப்புல எண்ணைய ஊத்துற மாறி அவங்க கிளாஸ்ல இணைக்கு ஒரு விஷயம் நடந்துருச்சு, ஸ்டுடென்ட்ஸ், நடக்க போற விழால பெஸ்ட் ஸ்டுடென்ட்ஸ்க்கு பரிசு குடுக்க போறாங்க, உங்க வகுப்புலயும் ஒருத்தருக்கு அந்த அவார்ட் கிடைக்க போகுது, அது யாருனு நான் சொல்ல வேண்டியது இல்லை, உங்க எல்லாருக்குமே அவங்கள நல்லா தெரியும் என்று கூற மொத்த வகுப்பும் கோரசாக ஆதிரா என்று கத்த அதை ஒப்பு கொள்ளும் விதமாக அவரும் ஆமா என்று கூற மொத்த வகுப்பும் அதை கொண்டாடியது.....

தக்க சமயம் பார்த்து ஆதிராவ பழி வாங்கணும்னு நெனச்சவளுக்கு தற்போது நடக்க இருக்கும் விழாவும் அதில் ஆதிரா வாங்கவிருக்கும் விருதும் மேலும் அவளுக்குள் வன்மத்தை தூண்டியது...


இங்க மது மனசுக்குள்ள இந்த அவர்டு கண்டிப்பா அவளுக்கு கிடைக்க கூடாது அத வாங்க அவ ஸ்டேஜ் ஏற கூடாதுனு அவளோட அல்லக்கை கிட்ட பொரிய ஆராம்புச்சுட்டா, மதுவுக்காக இல்லை என்றாலும் அவளின் பின்புலத்திற்காக அவ பின்னாடி சுத்த அவ என்ன சொன்னாலும் அதுக்கு ஆமா சாமி போட ஒரு கும்பல் உண்டு...

என்னதான் ஆதிரா படிப்புல முதல் நாளும் ஸ்போர்ட்ஸ்ல மது அளவுக்கு இல்ல, அதனால அந்த அல்லக்கைல ஒருத்தி அவ படிப்புல மட்டும் தான் ஆனா நீ படிப்பு விளையாட்டுனு எல்லாத்துலயும் கலக்குற அதனால கவலைப்படாதனு அவளை உசுப்ப

நம்ம ஆதிராவோ இதெல்லாம் பத்தி கண்டுக்கரதா இல்ல, காரணம் அவளோட குறிக்கோள் எல்லாமே கேம்பஸ் இன்டெர்வியூல தி பெஸ்ட் கம்பெனினு தொடர்ந்து பேர் எடுத்துட்டு இருக்க தீரன் குரூப்ஸ்ல பிலேஸ் ஆகறது தான்

ஒவ்வொரு வருசமும் இந்த கம்பனிக்க்கு ஒரு ஆள் தான் தேர்வு பண்ணுவாங்க அதனால அவளோட மொத்த கவனமும் இதுல தான் இருந்துச்சு...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top