நீயே என் ஆதியும் அந்தமும்

Advertisement

Kavya Narasimman

New Member
நம்ம சின்ன வயசுல இருந்து நம்மள சுத்தி நடக்கற விசயத்துல இருந்து நிறைய கத்துக்குறோம். இன்னும் சொல்ல போனா அனுபவ பாடமே சிறந்த ஆசான்னு சொல்லுவாங்க. நம்ம வாழ்க்கை எப்பவுமே ஒரு புரியாத புதிர் தான். எப்ப என்ன நடக்கும்னே தெரியாது. நம்ம வாழ்க்கைல நடக்கற கசப்பான விஷயம் இன்னொருத்தருக்கு வெறும் தலைப்பு செய்தி, ஆனா அது நமக்கு ஆயிசுக்கும் ரணமா மனசுல இருக்கும்


இந்த கதைல இரு வேற சூழ்நிலைல வழந்தவங்க வாழ்க்கைல ஒன்னு சேந்து எப்படி வாழ்க்கை படகுல பயணிக்கறாங்கனு பாப்போம். அவங்க அந்த படகுல பயணிக்க துடுப்பா காதல் தான் கூட்டிட்டு போக போகுது. கடல்ல வர புயல் மாரி அவங்க வாழ்க்கைல வர கஷ்டத்த எப்படி சமாளிச்சு மேல வராங்கனு பாக்கலாம்...







அம்மு இன்னும் என்ன பன்னீட்ருக்க காலேஜ் வேன் வந்துரும் சீக்கிரமா கீழ வானு சொல்லிட்டு தன் செல்ல மகளை காலேஜ்க்கு அனுப்ப லஞ்ச் பேக் ரெடி பன்னீட்ருக்கறது தான் நம்ம இளவரசியோட அம்மா.


என்ன கமலா அதெல்லாம் நம்ம பொண்ணுக்கு சொல்லனுமா அவ எப்பவும் அவளோட விஷயத்துல கரெக்ட்டா இருப்பான்னு தெரியாதா. இது இந்த இளவரசியின் தந்தை மூர்த்தி.


இதோ வந்துட்டன் மா, என்ன மா உன் பொண்ணு பத்தி உனக்கு தெரியாத நான் எப்ப காலேஜ்க்கு தாமதமா போயிருக்க, அது எனக்கு தெரியாதா என்ன, என்று உச்சி முகர்ந்தவர், இன்னைக்கு செமஸ்டர் தேர்வு... எப்பவும் போல சிறப்ப எழுத வாழ்த்துக்கள்.


புன்முருவலுடன் தன் பெற்றோரிடம் ஆசி பெற்று கிளம்பினால் நம்ம நாயகி ஆதிரா. வெள்ளை நிற சுடிதார், பிங்க் ஷால், அளவான அலங்காரம். பார்ப்பவர்களை ஒரு நிமிடம் திரும்பி பார்க்க வெக்கும் அளவுக்கு அழகு. பிரம்மன் படைப்பின் மிகச்சிறந்த படைப்பு இவள் என்று கூறினால் அது மிகை ஆகாது... சர்வ லக்சணம் பொருந்திய பேரழகி... பள்ளி பருவத்தில் இருந்து இவள் அழகில் மயங்காதாவர் இல்லை... காதலில் விருப்பம் இல்லை என்பதை விட பெற்றோர் விருப்பம் என்று இருப்பவள் இவள்... அதனால் இதுநாள் வரை தன்னை விரும்புகிறேன் என்று கூறியவர்களின் மனது நோகாமல் மறுத்து விடுவாள்... இவள் குணத்திலும் பேரழகி தான்...


ஆதிரா வழக்கம் போல நண்பர்கள் கிட்ட பேசிட்டு தேர்வு எழுதும் அறைக்கு போனா. எப்பவும் போல இந்த தடவயும் அவளுக்கு தேர்வு சுலபமாகவே இருந்தது. தேர்வு எழுதி முடுச்சுட்டு நண்பர்கள் கூட்டம் காலேஜ் கேன்டீன் சென்றனர்.


ஆதிரா எக்ஸாம் எப்படி பண்ண இந்த தடவவும் நீதான் கிளாஸ்ல முதலிடம் வரனும், என்று நண்பர்கள் ஆறாவரம் செய்ய, அந்த இடமே குதுகழதுக்கு பஞ்சமில்லாது இருந்தது.


ஆதிரா, வீனா, ராம், ஷ்யாம், வைபவ் இவங்க அஞ்சு பேரும் சின்ன வயசுல இருந்து நண்பர்கள். இவங்க எல்லாரும் ஒரே அப்பார்ட்மென்ட்டில் இருப்பதால், சின்ன வயசுல இருந்து ஒரே ஸ்கூல்.


எல்லாரும் எப்பவும் ஒன்னாதான் சுத்துவாங்க, +2ல கூட ஒன்னா கம்ப்யூட்டர் சயின்ஸ் தான் செலக்ட் பண்ணாங்க, அதே மாறி ஒரே காலேஜ்லயும் பொறியியல் படிக்க சீட் கெடச்சுருச்சு.


நல்லதுன்னு இருந்தா அங்க ஒரு கெட்டது இருக்கும்னு சொல்லுவாங்க அந்த மாறி ஆதிரா வகுப்புல முதலிடம் வாங்கரனால எப்பவுமே ரெண்டாவது இடத்துக்கு வர மதுவுக்கு இவள கண்டாவே ஆகாது. எப்படா சந்தர்ப்பம் அமையும்னு காத்துகிட்டு இருப்பா, ஆனா நம்ம ஆதிராக்கு அதெல்லாம் பெரிய விஷயமே இல்ல.



நீ நல்லா படுச்சா நல்லா மார்க் வாங்க போற இதுல போட்டி போட என்ன இருக்குனு விலகி போயிருவா... மது பொறந்ததுல இருந்து எல்லாத்துலயும் முதல் இடத்துல இருக்கணும்னு ஆசை படுபவள்.... அவள் அப்பா அரசியலில் ஒரு முக்கிய புள்ளி... அதிலும் அவருக்கு அவர் மகள் என்றால் கொள்ள பிரியம்.... அவள் ஆசை படுவதை நிறைவேற்றி வைப்பது தான் இவரின் முதல் கடமை... மகளின் விருப்பதிற்காக கொலை செய்ய கூட தயங்க மாட்டார்....

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு அதே போல தான்.... அளவுக்கு மீறிய பாசமும் ஆபத்தை விளைவிக்கும்.... இந்த அதிக பாசம்தான் இவர்கள் எல்லாருடைய வாழ்க்கையை மாற்ற போகிறது... இதுனால இவங்க எவ்ளோ கஷ்ட பட போறாங்கன்னு பாக்கலாம்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top