நிம்மதி காற்று

Advertisement

"பாய் சத்யா,,ஹேவ் அ சேவ் ஜர்னி" என கூறினான் ஜார்ஜ்.
சத்யாவும் சிரித்துக்கொண்டே பாய் என்றாள். "கர் ஜானே கே பாட் மெசேஜ் கரோ"(வீட்டுக்குப் போய்ட்டு மெசேஜ் பன்னு) என அவன் கூறியதற்கு தலையாட்டிவிட்டு இரயிலில் ஏறி அவளது இருக்கையில் கண்மூடி அமர்ந்திருந்தாள்.அவளது நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன.
5 வருடங்களுக்கு முன்:
"அப்பா அப்பா ப்ளீஸ் பா"
"சொன்ன புரிஞ்சிக்கோ வதிமா அதலாம் வேணாம்"
"அவகிட்டே என்னங்க கெஞ்சுக்கிட்டு இருக்கிங்க..பொட்டப்புள்ளக்கு படிப்பு எதுக்கு?" என கனகா அவளது கணவரிடம் கூறிவிட்டு சத்யவதியை நோக்கி "இங்க பாருடி.உன்ன 12வது வரைக்கும் படிக்க வச்சி இருக்கோம்ல அதுவே போதும் . இனி இந்த படிப்ப எல்லாம் மூட்டகட்டி வச்சிட்டு ஒழுங்க வீட்டு வேலய கத்துக்க பாரு. நாளப்பின்ன போற வீட்ல எங்கள குறை சொல்றா மாதிரி வச்சிகாதா" என பொறிந்து தள்ளினார்.
எப்படியோ அழுது புலம்பி சென்னையில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் கிடைத்த கல்லூரியில் சேர்ந்துவிட்டாள். அங்கே சேர்ந்த 3 மாதங்களில் அவளுக்கு தேசிய மாணவர் படையில்(NCC)யில் சேர வாய்ப்பு வந்தது.அவளது உயரம் மற்றும் எடை அதில் சேர ஏதுவாக இருந்தது.அங்கே அவளுக்கு தனி ஆளுமைத் திறன், பேச்சுபயிற்சி, கடற்படையில் உள்ள பயிற்சிகளும் ,துப்பாக்கிச் சுடுதல், தீயணைப்பு பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.அவளுக்கு அதில் ஆர்வம் மேலோங்கியது.இது யாவும் அவள் வீட்டில் தெரியாது.
3 வருடங்களுக்குப் பின் அவளது கல்லூரிப் படிப்பு முடிந்து, ஒருநாள் அவள் வீட்டில்....
"அப்பா ப்ளீஸ் பா. நா கஷ்டப்பட்டு என்சிசில சேர்ந்து ட்ரைனிங் முடிச்சி மிலிட்டரிக்கு அப்ளை பண்ணி இப்போ செலக்ட் ஆகி இருக்கேன் பா.ப்ளீஸ் என்ன போக விடுங்க பா" என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள்.சத்யவதியின் தந்தையோ அமைதியாக இருந்தார்.
கனகாவோ கோபத்தின் உச்சியில் சத்யாவின் தந்தையை நோக்கி "நா தான் சொன்னேன்லங்க இவளுக்கு படிப்புலாம் வேணாம்னு கேட்டிங்கலா?அப்படி படிச்சே ஆகனும்ன இங்க பக்கத்துல இருக்கற காலேஜ்ல படிக்க வைக்கலாம்னு சொன்னேன்ல.இப்போ பாத்திங்கலா ஏதேதோ செஞ்சி வச்சி இருக்கா" என கத்திவிட்டு சத்யாவைப் பார்த்து "இத பாருடி நா முன்ன சொன்ன மாதிரி ஒழுங்கா வீட்டு வேலையெல்லாம் கத்துக்கோ நீ படிச்ச வரைக்கும் போதும் நீ படிச்சு வேலைக்கு போய் தான் எங்கள காப்பாத்தணும்னு ஒன்னும் இல்ல அதுவும் மிலிட்டரி வேலைக்கு போய் தான் காப்பாத்தணும் ஒன்னுமே இல்ல.உனக்கு நானும் அப்பாவும் சேர்ந்து ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்க்கிறோம் கல்யாணம் பண்ணிட்டு ஒழுங்கா வாழ பாரு" என கட்டளைப்போல் கூறிவிட்டார்.
சத்யாவிற்கு கண்களில் இருந்து கண்ணீர் கன்னத்தை நனைத்தது.சத்யாவின் அப்பா அவளின் தலையை கோதிவிட்டு "வதிமா அப்பா சொல்றத கேளுடா. உனக்கு வேளைக்கு போணும்னா இங்க பக்கத்துல இருக்கிற கம்பெனிக்கு போ. மிலிட்டரி வேணாம்டா.அதலாம் ஆம்பள பசங்களுக்கு தான் சரியா இருக்கும். பொட்டபுள்ளய மிலிட்ரிக்கு அனுப்பிட்டேனு நாளு பேரு நாளு விதமா பேசுவாங்க. அது மட்டும் இல்லாம அதுல உயிருக்கு உத்ரவாதமும் இல்ல" என பொறுமையாக எடுத்துரைத்தார்.
சத்யா கண்களை துடைத்துக் கொண்டுப் பேச ஆரம்பித்தாள் " அப்பா மிலிட்ரிகாரங்க இல்லனா நாம இப்போ இப்படி இருந்திருக்க மாட்டோம். அவங்க எல்லைல நின்னு நமக்காக தான் இரவும் பகலும் குளிர்லயும் வெயிலையும் மழையிலும் உழைக்கிறாங்க.அவங்களாம் அங்க கஷ்டப்படலான நம்ம இங்க நிம்மதியா வாழ முடியாது.எனக்கும் அவங்கள ஒருத்தியா இருக்கனும்னு ஆசையா இருக்கு.நா உங்க கூட இல்லையேனு வருத்தப்படாதிங்க பா. நா நம்ம தாய்நாட்டுக்காக சேவை செய்ய போறேன்னு நினைங்க உங்களுக்கு கவலையோட பெருமை தான் அதிகமா இருக்கும்.இன்னிக்கு இருக்கறவங்க நாளைக்கு இருப்பாங்காளானு தெரியாது.அப்படிப்பட்ட இந்த உயிர் என்னோட தாய்நாட்டைக் காக்க போனா எனக்கு சந்தோஷம் தான் பா. என்னால நம்ம நாட்டு மக்கள காப்பத்த முடியும்னா என் உயிர விடுறது கூட எனக்கு மகிழ்ச்சி தான் பா .இப்போ இருக்குற பொண்ணுங்களா எத்தனையோ துறைகள சாதிக்கிறாங்க பா. எத்தனையோ வீட்ல பெண்பிள்ளைகள் தான் அவங்க வீட்ட பாத்துக்கறாங்க.நானும் உங்க ரெண்டு பேரையையும் பாத்துக்க விருப்ப படுறேன் பா.அது என்னோட கடமையும் கூட.ஒரு பையன் இருந்திருந்தா உங்கள எப்படி பாத்துப்பானோ அத விட நா உங்கள நல்ல பாத்துப்பேன். நா மிலிட்ரில சேர்ந்து நா செத்துப்போன கூட நம்ம நாடு உங்கள பாத்துக்கோம் பா. அப்புறம் நாலு பேரு நாலு விதமா பேசிட்டே தான் இருப்பாங்க.மிஞ்சி மிஞ்சி போன நாலு நாளு பேசுவாங்க அதுக்கு அப்புறம் அவங்களாம் பக்கத்து வீட்ட பத்தி பேச போய்டுவாங்க . நம்ம வாழ்க்கையை நம்மக்காக தான் பா வாழனும் அவங்களுக்காக இல்ல.அப்பறம் அம்மா !மத்த பொண்ணுங்கள மாதிரி அடுப்பங்கரையை கட்டிட்டு நா வாழ விரும்பல.நா நம்ம நாட்டுக்காக ஏதாவது செய்யணும்னு நெனைக்கிறேன் என கூறி முடித்தது தான் தாமதம் கனகா சத்யாவின் கன்னங்கள் பழுக்க அறைந்திருந்தார்.
"என்னடி நினச்சிட்டு இருக்க நீ, அவரு எவ்வளவு பொறுமையா சொல்றாரு நீ என்னன்னா பக்கம் பக்கமா பேசிட்டு இருக்க" என கனகா பேசிக்கொண்டிருக்கும்போதே சத்யாவின் அப்பா சுந்தர் போதும் நிறுத்து கனகா அவ தான் இவ்வளவு தன்னம்பிக்கையோடு தெளிவா சொல்றல அவ போகட்டும் "நீ போயிட்டு வாம்மா" எனக் கூறினார்.
சத்யா சுந்தரை அணைத்துக்கொண்டாள்."நீ போ மா .என் பொண்ணு இவ்ளோ தெளிவா யோசிச்சு முடிவு எடுக்கறதப் பார்த்தா சந்தோஷமா இருக்கு" என கூறினார்.
அப்போது பக்கத்து சீட்டில் இருந்த பெண்மணி ஒருவர் "தானி முட்டுக்கோ ஒத்து.இக்கட கூச்சோ"(அத தொடாதே.இங்க உட்காரு)என தன் குழந்தையிடம் கூறிக்கொண்டிருந்தார்.சத்யா எவ்ளோ மொழி பேசுரவங்க இருக்காங்க.எவ்ளோ கலாச்சரங்க இருக்கு இங்க.இவ்ளோ வேற்றுமைகள் மத்தியிலும் நம்ம எல்லாரும் எவ்ளோ ஒற்றுமையா இருக்குறோம் என தன் நாட்டை பற்றி பெருமையாக எண்ணிக்கொண்டு நிகழ்காலம் வந்தாள்.இரயில் அவள் சொந்த ஊரான மதுரையில் வந்து நின்றது.அவள் இரயில் நிலையத்தில் இருந்து அவளது வீட்டிற்கு பயணமானாள்.
அங்கே அவளது வீட்டிலோ கனகா தன் மகள் வருவதற்காக ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்.அப்போது அங்கே வந்த பக்கத்து வீட்டுக்காரி பார்வதி "என்ன அக்கா சத்யா வரதுக்காக இந்த ஏற்பாடா?" என நக்கலாக வினாவினாள்.
கனகாவோ அவளை கண்டுகொள்ளவே இல்லை.பார்வதியே மறுபடியும் "ஏன் அக்கா பொம்பள புள்ளய போய் மிலிட்டரிக்கு அனுப்பி இருக்கீங்களே,நீங்களாச்சும் அதலாம் வேணாம்னு சொல்ல கூடாதா" என்று வினவினார். அதற்கு கனகா பார்வதி "இன்னிக்கு நம்ம நிம்மதி ஆஹ் சுவாசிக்கிற காற்று என் பொண்ண போல இருக்கிற மிலிட்டரி காரங்களால தான்.ஹான்,அப்புறம் இப்போல்லாம் பொண்ணுங்க நிலாக்கே போறாங்க நா இங்க மிலிட்டரிக்கு தான அனுப்பி வச்சேன்" என நெற்றிப்பொட்டில் அடித்தார் போல் பதில் கூறினார்.அங்கே சத்யா வாசலில் ஆனந்த கண்ணீருடன் நின்றுகொண்டிருந்தாள்.
 

Geetha sen

Well-Known Member
சத்யவதி தான் விருப்பபட்டதை செய்ய ஆரம்பிச்சுட்டா, பெற்றோரும் உற்ற துணை.
அருமை :love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top