நினைவெல்லாம் நீ(யே)யா_9

Advertisement

அனைவரும் வீட்டில் ஒன்றுகூட அப்பொழுது அங்கு வந்த ருத்ராவையும், ஹரிணியையும் பார்த்து மீனாட்சி திருஷ்டி சுற்றுபோட, துருவன் விஷ்ணுவின் காதில் மச்சி, சமயா இருக்காடா என்றாம். விஷ்ணுவால் அதை ஆமோதித்து ஆகும்படி ஆகிவிட்டது ஹரிணியின் தோற்றத்தை பார்த்து.

விருதாசலம், பத்து மணிக்கு காப்பு கட்டனும் இப்பவே மணி ஒண்பது இருபது எல்லாரும் ரெடியா கிளம்பலாமா என கேட்க.

எல்லாரும் ரெடி வீட்டபூட்டிட்டு கிளம்பவேண்டியருத்துதா என கூறினார் மீனாட்சி.

துருவன் விஷ்ணுவிடம் மச்சா உன் தங்கச்சிய என் கூட அனுப்புடா.

அதிர்ந்தபடி விஷ்ணு ஏய், நா அவளுக்கு அண்ணாடா.

அடி சீ, என் கூட கோவிலுக்கு அனுப்பசொல்லுறேன் டா.

ருத்ராஅக்கா தானே உன்கூடவருவாங்க அவங்கள எப்படி சமாளிக்கறது.

அத நா பாத்துகிற, நீ உன் தங்கச்சிய மட்டும் கரெக்ட் பண்ணு.

அவ உன்கூட போகசொன்னா வருவாளாடா?

கண்டிபா வர மாட்டா, அவள கடத்திதா கொண்டுபோகனும்.

டேய் நீ போலீஸ் டா, என்ன இப்படி எல்லா பேசுற.

என்ன பண்ண உன் தங்கச்சி என்ன இப்படி ஆகிட்டா.

அப்ப வீட்ல பேசி கல்யாணம் பண்ண வேண்டியது தானே?

யார உன் தங்கச்சிய தானே, பக்கத்திலே போகமுடியல இதுல கல்யாணம் வேற, உருப்படுறாமாரி ஐடியா செல்லுடா.

சரி நா பூசணிகிட்ட பேசுறேன் நீ அக்காகிட்ட பேசு என்றபடி விஷ்ணு ஹரிணியை நோக்கி சென்றான்.

ருத்ராவின் அருகே சென்ற துருவன், ருத்ரா. நீ விஷ்ணுகூட கோவிலுக்கு போறியா?

ஏன் நீ எங்க போற?

வலகையின் சுட்டு விரலால் புருவத்தை நீவியபடி, இல்ல ஹரிணிகூட கோவிலுக்கு போலானு இருக்க.

லவ் சொல்லிட்டியா என்றாள் ஆச்சரியமாக.

இன்னும் இல்ல அதுக்குதா விஷ்ணுகிட்ட ஹெல்ப் கேட்டுயிருக்க.

சரி நா விஷ்ணுகூட போயிடுறேன். சீக்கிரமா லவ்வ சொல்லுற வேலைய பாருங்க போலிஸ்கார் என்றாள் சிரித்தபடி.

அனைவரும் காரில் கிளம்ப விஷ்ணுவும் துருவனும் பைக்கில் காத்துக்கொண்டிருந்தனர்.

விஷ்ணுவின் வண்டியில் ஏறிய ருத்ராவை பார்த்த ஹரிணி, அக்கா நீ எப்பவும் அந்த வண்டிலதானே போவ இன்னக்கு என்ன இந்த வண்டில.

ஏய் புடவையில பூசணிமாதிரி இருக்க உன்னஎல்லா வண்டில கூட்டிட்டு போகமுடியாது. ரோட்ல போறவங்க வரவங்க எல்லாரும் என்னபாத்து சிரிக்கவா என வண்டியை கிளப்பிக்கொண்டான் விஷ்ணு.

வேறுவழியின்றி துருவனின் வண்டியில் ஏறினாள் ஹரிணி.

டிரைனிங் எல்லா முடிஞ்சிதா என்றபடி வண்டியை செலுத்தினான் துருவன்.

ம்ம்... இந்த மாசத்தோட முடியுது. வேடிக்கை பார்த்தபடி கூறினாள்.

அப்பறம் என்ன பண்ணலானு ஐடியா? பிரண்ட் மிரரை பார்தபடி கேட்க.

MD பண்ணலானு இருக்க, தாத்தாகிட்ட கேட்கனும்.

இப்படி படிச்சிட்டே இருந்தா கல்யாணம் எப்பதா நடக்கும்?

ஹரிணி கோப குரலில் என் கல்யாணத்துக்கு உனக்கெண்ண அவசரம்?

உன்னுக்கு கல்யாணம் ஆனாதா எனக்கும் கல்யாணம் ஆகும் என்றான் தாபகுரலில். அவனை முரைத்த ஹரிணி பேச எழ.


இவர்கள் வருவதைப்பார்த்த வேலாயுதம் வண்டியை நிறுத்தி, தம்பி வீட்ல எல்லாரும் இருக்காங்களா? என்க. இவர்களை பார்த்து சிரித்த துருவன் இல்ல ஐயா எல்லாரும் கோவிலுக்கு போய் இருக்காங்க. வாங்க அங்க போயிடலாம் என வழியில் பேசியபடி கோவிலுக்கு சென்றனர்.

கோவிலுக்கு வெளியே வண்டியை நிறுத்திய துருவனைப்பார்த்த வேலு
தம்பி சீக்கிரம் உங்களுக்காகதா ஐயா காத்திகிட்டு இருக்காரு உள்ள போங்க என கூற.வேலு அண்ணா வேலாயுதம் அங்கிள் வந்திருக்காங்க அவங்கள உள்ள கூட்டிட்டு வாங்க என்றபடி விரைந்து உள்ளே சென்றனர் துருவனும் ஹரிணியும்.

துருவனும் ஹரிணியும் வந்தவுடன் காப்புகட்டிய கொம்பை குடும்பத்தினர் அனைவரும் பிடித்து குழியில் நிற்கவைத்து அதை தொட்டு வணங்கினர்.

மைக்கில் பெரியவர் ஒருவர் ஊர்ல காப்பு கட்டியாச்சி இனி உள்ளூர் ஆளுங்க யாரும் வெளியபோகாதிங்க என தன் கரகரகுரலில் கூறினார்.

வேலாயுதத்தை பார்த்த பரஞ்சோதி வாடா என்ன இவ்வளவு லேட்டா வர சீக்கிரம் வந்திருந்தா காப்புகட்டினத பாத்து இருக்கலாம்ல

காப்பு கட்டிருப்பாங்கனு வந்தா நீங்க இப்பதா காப்பு கட்டுறிங்க, இனி நாங்க எப்படி வீட்டுக்கு போறது. என்றார் கவலையுடன்

என்னபா வேலா எங்க வீட்டில இருக்கமாட்டியா அதுவும் உன் வீடுதானே மூணு நாள் இருந்திட்டு திருவிழாவ பாத்துட்டு போப்பா என தன் காந்தகுரலில் கூறினார் விருதாசலம்.

இல்ல அப்பா என குழைய.

என்னமா சாந்தி நாங்க யாரோ ஆயிட்டோமா உன் புருஷனுக்கு எங்க வீட்டில எல்லா தங்க மாட்டானாமா என்றபடி வந்தார் மீனாட்சி.

இல்லமா , நாங்க இங்கையே தங்கறோம் என வேலாயுதமும் சாந்தியும் சேர்ந்தே கூறினர்.

அதற்குள் கூட்டம் சலசலக்க என்ன என்றபடி பார்க சென்றனர் அனைவரும்.

பூசாரி கையில் வேப்பிலையுடன். என்ன தாயி எதுக்கு இப்ப வந்திருக்க என்ன விஷயம்? சொல்லி என வேப்பிலையை ஆட்டி ஆட்டி கேட்க.

என்னடா, திருவிழா அப்பமட்டுதா நா உங்களுக்கு தெரிவேனா. மத்த நேரத்தில ஒருத்தனாவது வரிங்களாடா..

என்ன தாயி இப்படி சொல்லிட்ட உன்ன வணங்காம நாங்க என்ன செய்திருக்கும். என்றபடி மீனாட்சி முன்வர.

என் இடத்தில கல்யாணம் நடந்து எத்த வருஷம் ஆகுது. ஊரு வழக்கத்த ஏன்டா மிறுணிங்க என ஆடிக்கோண்டே கூற.

மன்னிச்சிரு தாயி, இனி ஊர்ல எல்லார் கல்யாணமும் உன் இடத்திலதா நடக்கும் என மீனாட்சி கைகூப்பி கூற.

இந்த திருவிழா முடியரதுக்குள்ள உன் வீட்ல ஒருத்தருக்கு என் இடத்து கல்யாணம் பண்ணிவை என்றபடி நிலத்தில் சரிந்துவிழுந்தார் அப்பெண்.

ஊரார்கள் சலசலப்புடன் மீனாட்சி என்ன செய்வது என தெரியாதபடி அதிர்ந்து குடும்பத்தினரை பார்த்தார்.

படித்துவிட்டு மட்டும் செல்லாமல் கமெண்ட் பண்ணுங்க நண்பர்களே....


நீ(யே)யா......?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top