நினைவெல்லாம் நீ(யே)யா_13

Advertisement

ஹாய் பிரண்ஸ்,

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபஒளியை போல் நம் வாழ்விலும் துன்பங்கள் அகன்று, ஒளியாகிய இன்பம் என்றும் ஒளிரட்டும்

***************

ஆதவ், சிவா, துருவன் மூவரும் நகை கடைக்கு சென்று அங்கிருந்த ஊழியரிடம் ஆதவ் தாளி காட்டுங்க என்க. அவர் எந்த வகையின தாளி சார். நாட்டார், செட்டியார், என அடுக்கிக்கொண்டே போக மூவருக்கும் இது முதல் அனுபவம் என்பதால் ஒருவரை ஒருவர் பார்த்தபடி எதடா வாங்கனும் என்றான்? ஆதவ்.

மச்சா எனக்கெண்ண அனுபவமா இருக்கு எதயாவது வாங்குடா? என்றான் சிவா.

சார் என்ன திருட்ட கல்யாணமா? என ஊழியர் கேட்க.

இல்லங்க வீட்டார் முன்னாடிதா நடக்கபோகுது. கல்யாணத்துக்கு வரிங்களா? என துருவன் கடுப்புடன் முரைத்தபடி கேட்க.

இல்ல சார், என ஊழியர் அரண்டுகூற.எதாவது குடுங்க மனது ஒத்துபோனா பேதும் எல்லா தாளியும் ஒண்ணுதா என ஆதவ் ,அவனுக்கு பிடித்த ஒன்றை எடுத்துக்கொண்டு கூடவே ருத்ராவிற்கு மோதிரமும், கொலுசும் வாங்கிகொண்டு பணசெலுத்த சென்றனான்.


அப்பொழுது உள்ளே நுழைந்த விஷ்ணு துருவன் கண்ணில்பட தப்பவில்லை.

இவன் எங்க இங்கே என எண்ணியபடி விஷ்ணுவை மறைந்திருந்து கவனித்தான்.

நேரே ஊழியரிடம் சென்ற விஷ்ணு, கடைகாரிடம் ஏதோ பேசிவிட்டு அவர் கொடுத்த பொருளை வாங்கிக்கொண்டு சட்டென கிளம்பிவிட்டான்.

இதனை பார்த்த துருவன் என்னத்த கொண்டு போறா? வீட்ல இருந்து ஏதாவது வாங்கிட்டு வர சொல்லிருப்பாங்க போல உடனே வந்து உடனே போயிட்டான். நல்லவேள நம்மல இங்க பாக்கல போலிசா இருந்தாலும் யாருக்கெல்லா பயபட வேண்டியதா இருக்ககு உஸ்..ஸ்ஸ் என பெருமூச்சை விட்டான்.

வீட்டில் ருத்ராவிற்கும் துருவனுக்கும் நலங்கு வைக்க துருவனை தேட, அவன் அங்கு அவன் இல்லாததால், கயல் துருவனுக்கு அழைத்தார்.

ஹலோ, சொல்லுங்க மா என துருவன் கேட்க.

எங்கடா இருக்க நலங்கு வைக்கனும்னு தெரியும்ல எங்க போன? என கயல் படபடவென கேட்க.

அம்மா ஒரு வேல விஷயமா வெளிய வந்திருக்க. கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வந்திடுவேன் மா.

சீக்கிர வா தாத்தாகிட்ட என்னால பேச்சு வாங்க முடியாது என பேனை வைத்தார்.

மச்சா முடிஞ்சிதா. போலமா என துருவன் சிவாவின் மேல் கைப்போட்டுக்கேட்க.

ஆதவன், முக்கியமான பொருள வாங்கிட்டோம் ஆனா முக்கியமான ஆள எப்படி சமாளிக்கிறது. அவள நெனச்சா. எனக்கு, இப்பவே கண்ண கட்டுதுடா என சோகமாக கூற.

காலேஜ்ல எத்தன பொண்ணுங்க உன் பின்னாடி சுத்தனாங்க. அதல யாரோட சாபம்னு தெரியலையே கோபால் தெரியலையே..என சரோஜா தேவிபோல் சிவா சொல்ல.

எல்லா நேரம்டா நேரம். என கையை தூக்கி மேலே பார்த்தான்.

டேய் , நலங்கு வைக்கனும்மா வீட்ல இருந்து போன் வந்திடுச்சி வாங்கடா போகலாம் என துருவன் அவர்களை அழைத்துக்கொண்டு தனது ஜுப்பை வீட்டை நோக்கி செலுத்தினான்.

வீட்டிற்கு செல்ல அங்கு வீடே கல்யாண கோலம் பூண்டிருந்தது. வாயிலை வாழைமரங்களும், தென்ன பாளைகளும் அழகு சேர்க்க, சூரியன் வாழை இலைகளுக்குள் தன்னுடைய கதிர்களை மறையநினைத்து தோற்றுப்போனது. வீடுகள் முழுவதும் வண்ண விளக்குகள் பகலிலே ஒளிர ,மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

என்னடா மச்சா நம்ப வீடா இது இப்படி மாறிபோய் இருக்கு? என வியந்தபடி சிவா துருவனிடம் கூறியபடி உள்ளே சென்றான்.

துருவன் உள்ளே வந்தவுடன் பலர் ராட்டினங்களாய் சுற்றி கட்டளையிட சோர்ந்து போனவன். கயலின் விளிப்பில் அறையின் உள் சென்றான்.

சுற்றங்கள் சூழ பெண் வீட்டார் மாப்பிளை வீட்டார் என தங்களுக்குள் போட்டி இட்டுக்கொண்டு இரு பிரிவாக அமர்ந்தனர். ருத்ரா துருவனின் குடும்பத்தினர்.

மீனாட்சி வேலைப்பாடுடைய நாற்காலாயில் இருவரையும் அருகருகே அமர செய்து நலங்கை முதலில் துடங்கி வைத்தார். பின்பு ஒவ்வொருவராக நலங்கு வைத்து முடிக்க. ஐயர் நிச்சய பத்திரம் வாசிக்க கயல்- கார்திகேயனும்,
விருதாசலம் - மீனாட்சியும் நிச்சய தட்டை மாற்றிக்கொண்டனர்.இனிதே நிச்சயம் முடிய.


"யாரோ யாரோடி உன்னோட புருச
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்..."


என பாடல் முழங்க ஹரிணியும் தேன் மொழியும் பாடலுக்கேற்ப ஆடத்தொடங்கினர். அவர்களுடன் இணைந்து இன்னும் பல தோழிகளும் ஆட விழாவில் மகிழ்ச்சிக்கு குறையில்லாமல் போனது.

துருவனின் காதில் ருத்ரா, நீ சொன்னப்படிதானே எல்லா நடக்கும்? எனக்கு காலையில இருந்து மனசு ஒரே படபடப்பா இருக்கு என கூற. அங்கிருந்த ருத்ராவின் அத்தைமார் ஒருவர் ருத்ரா மாப்பிளகிட்ட அப்பறம் பேசிக்கலாம் இதுகப்பறம் உன் கூடதான இருக்கபோறாரு. இப்ப கொஞ்ச வெக்கப்பட்டு உட்காருமா என கூற.

ருத்ரா முகத்தை விருப்பத்தின் பொருட்டு சிரித்து விட்டு அமர்ந்திருந்தாள்.

கடவுளே இவளுக்கு மட்டும் எங்களோட பிளான் தெரிஞ்சிது நா அவ்வளதா என துருவன் மனதோடு கூறிக்ககொண்டான்.

கடைசி பாடலுக்கு ஹரிணி ருத்ராவை அழைக்க, தேன் துருவனை அழைத்து ஆட சொல்ல இருவரும்
அமைதியாக நின்றதால், இவர்களே அவர்களை சுற்றிவந்து ஆடி முடித்தனர். நிச்சய கலாட்டாக்கள் இனிதே முடிய அனைவரும் விருந்திற்கு சென்றனர்.


வெளிஆட்கள் சாப்பிட்டு செல்ல, வீட்டினர் அனைவரும் சாப்பிட தொடங்கினர்.ஹரிணியும், தேனும் அவர்களுக்கு பரிமாற. மீனாட்சி விஷ்ணு எங்க கவிதா என மருமகளை கேட்டார்.

தெரியல அத்த, காலையில இருந்து பாக்கவே இல்ல. என கூற.

சிவா அவனுக்கு போன் போடு காலயில சாப்பிடாமகூட எங்க போனா? என மீனாட்சி வருத்தபட.

என்ன காலையில இருந்து வீட்ல இல்லையா நா கடையில பாத்தனே என துருவன் சந்தேகப்பட, அப்பதா அவ மொபைல் ஆப்ல இருக்கு, ஒருவேல காலேஜ் போயிருப்பானு நினைக்குற என சிவா கூற.

துருவனுக்கு விஷ்ணுவின் மேல் முதல் முதலில் சந்தேகம் கிளர்ந்தது.

படிச்சிட்டு கமெண்ட் பண்ணுங்க...

நீ(யே)யா....?

 
Nice epi dear.
Thrilling ah irruku. Thodarnthu epi kodungo.suspense thangala.

Sure sis kadipa thodarinthu epi poduran Tq for your commence.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top