நினைவெல்லாம் நீ(யே)யா_11

Advertisement

துருவன் ருத்ராவின் ஜாதகத்தை பார்த்து கைகளை எண்ணியபடி சில குறிப்புகளை எடுத்துக்கொண்டிருந்தவர் ஜாதகத்தை மூடிவிட்டு அதிர்ந்து விருதாசலத்தை பார்த்தார்.

ஜோசியரையே பார்த்துக்கொண்டிருந்த விருதாசலம்.அவரின் முகமாறுதலை பார்த்து என்ன ஜோசியரே என்ன ஆச்சு என கேட்க.

ஐயா ஜாதகம் அருமையா இருக்கு பத்து பொருத்தமும் பிரமாதமா இருக்கு. இரண்டு பேருக்கு குரு காலம் என்பதால் கல்யாணம் பண்ணலாம். இரண்டுபேரும் ஒருத்தருக்கொருத்தர் ஒத்துழச்சி வாழ்க்கையில அமோகமா இருப்பாங்க. நா இதுவரைக்கும் பாத்த ஜாதகத்திலே அம்சமான ஜாதகம்னா பாத்துக்கோங்க என ஜோசியர் கூற.

அப்ப எந்த நேரத்தில கல்யாணம் வச்சிக்கலானு பாத்து சொல்லுங்க என விருதாசலம் கேட்க.

ஐயா, அம்பாள் ஊருக்க வருவதுக்கு முன்னாடி காலையில 8_9.30 குள்ள கல்யாணம் முடிச்சா அம்பாள் மனம் குளிர ஊருக்குள்ள வந்து அருள்புரிவா.

சரி ஜோசியரே, அப்படியே செய்திடலாம் என விருதாசலம் மீனாட்சி கையிலிருந்த வெற்றிலை பாக்கு, துணி, பழம் , காணிக்கையுடன் இருந்த தட்டை வாங்கி ஜோசியருக்கு கொடுக்க, அவர் அனைவரிடம் சிரித்தபடி விடைப்பெற்றார்.

அனைவரும் கல்யாணத்திற்கு தேவையான வேலையை பார்க்க சிரித்தமுகத்துடன் உள்ளே செல்ல, பரஞ்ஜோதியும் வேலாயுதமும் கல்யாண உணவிற்கு ஆட்களை பார்க்க சென்றனர்.

குடும்பமே மகிழ்ச்சியில் இருக்க, ஆதவும் துருவனும் அதிர்ந்து இருந்தனர். சிவா ஆதவை பார்த்து வெளியே வரும்படி ஜாடை காட்டி சென்றுவிட ஆதவ் சிவாவின் பின்னே செல்ல துருவனும் தோட்டத்தை நோக்கி சென்றான். விஷ்ணு காப்புகட்டியவுடன் கல்லூரிக்கு சென்றதால் இவற்றைப்பற்றி அறியவில்லை.

ருத்ரா விஷயத்தை கேள்வியுற்று அதிர்ந்து கட்டிலில் அமர்ந்திருக்க. ஹரிணி கல்யாணத்திற்கு துணி ஏதுமில்லை என கவிதாவுடன் சண்டையிட்டுக்கொண்டிருந்தாள்.

தென்னை மரத்தில் தன் வலது காலை மடக்கி இடது காலை நிலத்தில் ஊணியபடி யோசித்துக் கொண்டிருந்த துருவனால் தனித்து எந்து முடிவும் எடுக்கமுடியாமல் ருத்ராவிற்கு அழைத்தான்.ருத்ரா எடுத்தவுடன் தோட்டத்திற்கு வரும்படி சொல்லிவிட்டு பதிலைகேட்காமல் அழைப்பை துண்டித்தான்.

தோட்டத்திற்கு வந்த ருத்ராவிடம், துருவன், விஷயம் கேள்விபட்டிருப்பணு நினைக்குறேன். நீ என்ன சொல்லுற என கேட்க.

நீ ஹரிணிய லவ் பண்ணும்போது எப்படி என்ன கல்யாணம்பண்ண முடியும் உன்னால? என எதிர் கேள்வியை கேட்டாள் ருத்ரா.

என்னால எப்பவும் உன்ன கல்யாணம் பண்ண முடியாது.ஆனா திருவிழாக்குள்ள கல்யாணம் நடக்கணும் அதனால என தன் எண்ணத்தை ருத்ராவிடம் கூறினான். ருத்ராவும் முதலில் மிரண்டு பிறது அவன் திட்டத்திற்கு ஒப்புக்கொண்டாள்.

பிறகு துருவன் பம்பு செட்டின் பக்கம் செல்ல. ருத்ரா வீட்டிற்குள் சென்றாள்.

பம்பு செட்டின் அருகே சிவாவும் ஆதவும் பேசிக்கொண்டிருக்க அவர்களை பார்த்தபடி சென்றான் துருவன்.

டேய் மச்சா ஏதாவது பண்ணி இந்த கல்யாணத்த நிறுத்துடா என ஆதவ் கூற.

என்னால எதுவும் பண்ண முடியாதுடா உன் கஷ்டம் எனக்கு புரியுது. நா என்ன பண்ண, ருத்ரா மனசுவச்சாதா நீ நினைக்குறது நடக்கும் என்று சிவா கூற. அப்பொழுது அங்கு சென்றுக்கொண்டிருந்த துருவனை ஆதவ் பாராத்தான். மச்சா இவன்கிட்ட கேட்டுபாப்போம் என கூறி.

ஆதவ் துருவனை அழைக்க, துருவன் எதுக்கு இவ கூப்பிடுறான் என ஆதவின் அருகே சென்றான்.

துருவன், எதுக்கு என்ன கூப்பிட்டிங்க என்க.

ஆதவ், நீங்க ருத்ராவ கல்யாணம் பண்ண போறிங்களா? என கேட்டான்.

வீட்ல பேசிட்டாங்க கல்யாணம் பண்ணிதா ஆகனும். ஆனா உங்கல மாதிரி ஏமாத்தி நடிக்கமாட்டேன் என ஆதவை செய்த செயலை துருவன் கேபமாக கூற.

ஆதவ், ஏமாத்தி நடிக்கனும்னு நா நினைக்கல சந்தர்பம் அப்படி அமஞ்சிடுச்சி. நா ஊருக்கு வந்ததே ஆராவ கல்யாணம்பண்ணதா என தன் கல்லூரி கால காதலையும் ருத்ராவை பிரிந்து அவன் பட்ட கஷ்டத்தையும் கூற.துருவன் சற்று ஆடித்தான் போனான்.

துருவன் சிவாவிடம் பேசிவிட்டு, தன் எண்ணத்தை ஆதவ் சிவாவிடம் கூற சிவாவிற்கு இதைவிட சிறந்த வழி ஏதும்இல்லை என தோன்ற இருவரும் துருவனின் திட்டத்திற்கு சம்மதித்தனர்.

மூவரும் ஒன்றுகூடி கல்யாண வேலைக்காக வெளியே செல்ல.ருத்ரா தன் அறையில் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தால் நாளை மறுநாள் தன் வாழ்வில் ஏற்படும் மாற்றத்தை அறியாமல்.

எப்படி இருக்குனு படிச்சிட்டு கமெண்ட் பண்ணுங்க பிரண்ஸ்.

நீ(யே)யா........?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top