நினைவுகளால் கிளைபரப்பி மற(றை)ந்தாயே teaser

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ் ரொம்ப நாளைக்கு பிறகு புதுக்கதையோட வந்துட்டேன். சீக்கிரம் கதையை ஆரம்பிக்கலாம்.


ஆஸ்திரேலியா கிளம்பி சென்று விளம்பர படப்பிடிப்பை முடித்துக் கொடுத்து விட்டு ஊர் திரும்பிய ரகுராமுக்கு அலைபேசியை உயிர்பித்ததும் கிடைத்த செய்தியை பார்த்து விக்ரமின் மீது கொலைவெறியோடு அவனை தேடி வந்தான்.


"என்னடா பண்ணி வச்சிருக்க?"

"என்ன பண்ணேன்?" அறியா பிள்ளை போல் முகத்தை வைத்தவாறே கேட்டான் விக்ரம்.

"நடிக்காத. உங்கப்பா டாச்சர் தாங்களனு இப்படி ஒரு செய்தியை பரப்பி விட்டிருக்க? அறிவிருக்கா?"

"எனக்கு அறிவு இருக்கா? இல்லையானு தான் உனக்கு பிரச்சினையா? இல்லாமலையா இப்படி ஒரு கம்பனியை உருவாக்கி நடத்திக்கிட்டு இருக்கேன். இதுல உனக்கு பத்து பெசன்ட் ஷேர்ஸ் வேற கொடுத்திருக்கேன். அத நெனச்சா எனக்கு அறிவில்லனு தான் சொல்லத் தோணும். நீ என்ன நினைக்கிற?"

தான் என்ன கேட்டால் இவன் எதை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றான் என்று நண்பனை முறைத்த ரகுராம் "பேச்ச மாத்தாதே. ஆன்லைன்ல பரப்பி விட்டிருக்கியே அதுக்கு பதில் சொல்லு. என் ரெபியூடேஷன் என்னாகும்? கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா?"

"உனக்கு உன் கவலை" என்று நண்பனை முறைத்தான் விக்ரம்.

விக்ரம் முறைப்பதையும் பொருட்படுத்தாமல் "உனக்கென்ன உன் அப்பா வாரம் தோறும் ஒரு பொண்ண அனுப்பிகிட்டே இருப்பாரு. எனக்கு யாரு பொண்ணு கொடுப்பா? குடும்ப குத்து விளக்கா ஒரு பொண்ண பார்த்து கட்டணும் என்று இருந்தேன். போச்சு போச்சு எல்லாம் போச்சு" நண்பனை பற்றி பேசினால் இறங்கி வரமாட்டான் என்று தன்னை எண்ணி நோவதாக புலம்பினான் ரகுராம்.

"டேய் சிரிக்கிற மாதிரி காமடி பண்ணுனு உனக்கு எத்தனை தடவ சொல்லுறது? குடும்ப குத்து விளக்காம். நம்ம ஆபிஸ்லயும் தான் ஆறடி உயரத்துக்கு ஒரு குத்து விளக்கு மூலைல நிக்கு அத கட்டிக்க. அதையும் நீ எனக்கு கல்யாணம் நடந்த பிறகு கட்டிக்க" தன் நண்பன் தன்னை பற்றி பேசாமல் அவன் நிலையை எண்ணி புலம்பும் பொழுதே அவன் எண்ணத்தை கணித்த விக்ரம் கிண்டல் செய்யலானான்.

ரகுராமுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தாலும் தனக்காக தன் தந்தையையே எதிர்க்கும் நண்பனிடம் கோபம் கொள்ள முடியவில்லை. சட்டென்றுயோசித்தவன் "மோகனாவை பத்தி யோசிக்க மாட்டியா? உனக்கு கல்யாணமாகாம அவ கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு நிக்கிறாளே. இப்படி ஒரு செய்தி வந்தா அவளுக்கு கல்யாணம் நடக்குமா?"

"நீ எதுக்கு அவள பத்தி கவலை படுற? நீ உன்ன பத்தி மட்டும் யோசி. நாளைக்கு மம்தா கூட அட் ஷூட்டிங் இருக்கு. மீடியா உன்னைத் தேடி வந்து கேள்வி கேட்டே குடைவாங்க. பிளைட்டுல வந்தது ரொம்ப டயடா இருக்குனு உன் மூஞ்சே சொல்லுது. போ போய் ரெஸ்ட் எடு. அப்பொறம் நாளைக்கு ஷூட்டிங்கில் முகம் தொங்கிப் போய்டும்" நண்பனை கலாய்த்தவாறே துரத்தியடிக்கலானான் விக்ரம்.

"நீ எக்கேடும் கேட்டுது தொலை. என்ன உன் கேம்ல இழுக்காதே" இவனிடம் இனி பேசிப் பிரயோஜனமில்லை என்று விக்ரமை திட்டியவாறு அறைக்குள் நுழைந்து கதவை அடித்து சாத்தினான்.



உள்ளே வந்த பாரதியை இன்முகமாக வரவேற்ற விக்ரம் அவளுக்கு கைகுலுக்க கையை நீட்டியவாறே அவளை கூர்ந்து நோக்க, தன் கனவில் வருபவள் நேரில் நிற்கத்தான் தன் கண் இமைகள் துடித்தனவா? என்று கண்களை கசக்கி அவளை பார்த்து அதிர்ந்து சிலையானான்.


பாரதிக்கு அவனை பார்த்து அதிர்ச்சியோ ஆச்சரியமோ இல்லை. ஆன்லைனில் விக்ரம் பரப்பி விட்ட செய்தியால் இத்தனை வருடங்கள் கழித்து அவளால் அவனை காண முடிந்ததன் விளைவாகத்தானே ரகுராம் ஆஸ்ரேலியா வந்த பொழுது அவளை தங்களது கம்பனியில் வந்து வேலை பார்க்குமாறு கேட்டதை ஏற்றுக்கொண்டிருந்தாள்.

சிறந்த டிசைனர் என்று பெயர் பெற்றாலும் பாரதியின் புகைப்படங்கள் எதுவும் ஊடகங்களில் வந்திருக்கவில்லை. பெயரை பார்த்தே விக்ரம் தன்னை வேலைக்கு எடுக்க மாட்டான் என்று எண்ணிய பாரதிக்கு அவன் அவளை பாராமலையே வேலையில் சேர்த்தது ஆச்சரியமாகத்தான் இருந்தது.

அவளை யார் என்றே தெரியாதது போல் அவன் பேசியதில் அவனுக்கு வீரியத்தை விட காரியம் தான் பெருசு என்று எண்ணினாள்.

"பக்கா பிசினஸ் மேன்" தான் என்று தன்னை பார்த்து அதிர்ந்து நின்றவனை முதல் முறை பார்ப்பது போல் பார்த்து வைத்தவள் அழகாக வணக்கம் வைத்தாள்.

எதிரே நிற்பவளின் அசைவுகள் கண்களுக்குள் நுழைந்தாலும் மூளையை எட்டவில்லை. அவளையே பார்த்திருந்தான் விக்ரம்.

தன்னை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தவன் கோபத்தில் துரத்தியடிப்பான் என்று எண்ணிய பாரதிக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான்.

அவன் கண்கள் அவளை ரசனையாக பார்ப்பதை பிடிக்காமல் தொண்டையை கனைத்தவாறே அவன் பெயரை சொல்லி அழைத்தாள்.


அவள் குரலில் கரைந்து, தெளிந்தவன் அவளை அமரும்படி செய்கை செய்தவாறே "பாரதி.... அழகான பெயர். மிஸ்ஸா? மிஸிஸ்ஸா?" அதை அறிந்துகொள்ளாமல் மண்டை வெடிப்பது போல் இருக்க கேட்டே விட்டான்.


விக்ரமின் முகத்தை உற்றுப் பார்த்தவளுக்கு அவன் பதட்டம் அப்பட்டமாக தெரிய "தனக்கு திருமணமாகி விட்டதா என்று அறிந்துகொள்வதில் இவனுக்கு அப்படி என்ன ஆர்வம்? இவன் என்னை இழிவு படுத்தியதால் எவனும் என்னை திருமணம் செய்ய துணிய மாட்டான் என்ற எண்ணமா?" கூர்ந்து பார்த்தவளுக்கு அவன் மனதை படிக்க முடியவில்லை.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top