நித்யா சிவா வின் அவள் எரிகின்றாள்

mallika

Administrator
#1அவள் எரிகின்றாள்…!

உச்சிவரியில் இருந்து
கால் கொலுசு வரை - அத்தனை
நகையணிந்து…

அத்தனை ஒப்பனைகள்
செய்து…
கைகளில் மருதாணிச்சிவப்பும்
கன்னங்களில் நாணச்சிவப்பும
போட்டியிட…

கையில் மலர் மாலையுடன்
மணமேடை நோக்கிச்சென்றவளை
காமிராக்கள் தவிர்த்து
எத்தனை கண்கள் - தம்
நினைவு பெட்டிக்குள்
சிறையெடுத்துக்கொண்டன…

அங்கிருந்த எத்தனை வாய்கள்
திறந்தபடி மூடாதிருந்தன… .
ஆம்… அவள் அத்தனை அழகானவள்…
பண்பிலும், குணத்திலும் கூட
அவளை மிஞ்ச ஆளில்லை…
அப்படியிருந்தும் - சில
வாய்கள் புரளி பேசத்தான் செய்தன…

அவள் தந்தையை உறவினர்
பொறாமையாய்
பார்க்க…

அவள் உதடுகளும், கண்களும்
சின்னச்சிரிப்பை நீண்ட நேரமாய்
தத்தெடுத்திருந்தன…

மங்கள வாத்தியங்கள் முழங்க
தலைகுனிந்து தாலியை வாங்கிக்கொண்டு
பெற்றவனை பார்க்க - அவன்
கண்களில் நீர்த்துளி
அவள் உதடுகளில் வரும்போதிருந்த
அதே மாறாத புன்னகை.

வந்தவரெல்லாம் வாழ்த்தி
விடைபெற்றனர் - அப்போதும்
அதை புன்னகை…

யாருக்கு தெரியும்…?
அந்த மாறாத புன்னகையின்
பின்னும் அத்தனை வலிகள்
இருக்க கூடும் என…

வலிகளை மறைக்க
சிரிப்பு வேலி போட்டுக்கொண்டவள்
அவள் ஆசை, கனவுகளை
எல்லாவற்றிற்கும்
மனதுக்குள்ளே சிதை வைத்து விட்டு
மறுபடியும் தீக்குளிக்க வந்தாள் - என
யாருக்கு தெரியும்… ?நித்யா சிவா
 
Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
#2
யாருக்குத் தெரியும்?

எரிந்ததாய் நினைத்தவள் மீண்டும்
ஃபீனிக்ஸாய் பிறப்பாளென
யாருக்குத் தெரியும்?

கருகிய கனவுகள் மெய்ப்பட
கணவன் களம் கொடுப்பான் என
யாருக்குத் தெரியும்?

புறணி பேசும் பந்தங்கள்
பின்னாளில் பூமாலை போடுமென
யாருக்குத் தெரியும்?

கொற்றவன் துணையிருக்க கொற்றவை
வெற்றிமாலை சூடுவாளென
யாருக்குத் தெரியும்?

//

கவிதைக்கு தலைப்பு
அவள் எரிகின்றாளா? எனக்கென்னவோ
அவள் எரிக்கின்றாள் என்றுதான் எடுத்துக்கொள்ள முடிகிறது.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes