நித்தமும் தவிக்கிறேன் நீயின்றி 19

Bharathi Nandhu

Writers Team
Tamil Novel Writer
#1
நித்தமும் தவிக்கிறேன் நீயின்றி

அத்தியாயம் 19

மயூரியின் வாழ்க்கைக்காகவும் அவளின் பிடிவாதத்தை வீழ்த்தும் விதமாகவும், அவளை திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பதற்காக முதியோர் இல்லத்திற்கு செல்வதாக வள்ளி கூறினார்..மறுபக்கம் அவளின் நிராகரிப்பையும் நம்பிக்கை இழந்து விட்டதாக அவள் சொல்லியதை தாங்கமுடியாமல் கதிரும் விஷ்ணுவும் ஊருக்கு கிளம்ப தயாராக இருந்தனர்.. எல்லாவற்றுக்கும் மேலாக உயிராய் நினைத்த தனது மகள் அவர்கள் போவதை எண்ணி வருந்துவதை கண்டு கண் கலங்கினாள்..அவள் சூழ்நிலைக் கைதியாய் நிற்க, அந்நேரம் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட வள்ளி அவளிடம்,

" விஷ்ணுவை கல்யாணம் பண்ண சம்மதமா..?? " என்று கேட்டதும் சில நொடிகள் சிலையாக நின்றவள் பின்
அவர்களிடம்,

" சரி " என்ற சின்ன தலையை அசைப்பை கொடுப்பதற்குள் வள்ளிக்கு யுகம் போல நிமிடம் கழிந்தது..

தன் திட்டம் வெற்றியடைந்து விட்ட திருப்தியில் வள்ளி இருவரையும் கட்டாயப்படுத்தி உள்ளே அழைத்துச் சென்றார்.. மயூரிகா அவளது அறையில் தன்னுடைய இயலாமையை எண்ணி வருந்த, அந்நேரம் அறைக்குள் நுழைந்த விஷ்ணு,

" மயூரி உங்களுக்கு இந்த மேரேஜ்ல சம்மதமா..?? " கேட்டவனின் குரலில் இருந்த பரிதவிப்பை புரிந்தவள்,

' நீங்களாவது கேட்டீங்களே ' என மனதில் நினைத்து விட்டு மௌனமாக நின்றாள்..

" யாருடைய வற்புறுத்தலுக்காகவும்
நம்ம மேரேஜ் பண்ணிக்கிட்டா நம்மளோட வாழ்க்கை நல்லா இருக்காது..எப்போவாவது நமக்கு கல்யாணம் பண்ணி வச்சவங்கள பார்த்து உங்களால் தான்னு சொன்னால் அவங்களால கூட தாங்கிக்க முடியாது.. ஒரு உறவுக்கு அடிப்படையே புரிதல் தான்..அந்த புரிதலோட நம்ம பந்தம் ஆரம்பிக்கனும் " என்றவனை ஆச்சரியத்தில் பார்க்க,

அவன் மேலும் " நீங்க என்னை புரிஞ்சிக்கும் போது என்னோட மொத்த கடந்த காலத்தையும் நான் சொல்றேன்..உங்க வாழ்க்கை துணையாக இல்லாமல நண்பனாவது என்ன உங்களுக்கு பிடிக்குமா..?? "

" ம் " என்றாள் ஒற்றை பதிலுடன்..

" இந்த உறவோடு நம்ம வாழ்க்கைய ஸ்டார்ட் பண்ணலாம்..நமக்கான இடைவெளி நீங்களா குறைக்கிற வரைக்கும் கணவன்னா எந்த உரிமையையும் நான் எடுத்துக் மாட்டேன் " நிதானமாக சொல்ல அவனையே மெய்மறந்து கவனித்தாள்..

" ஹதிதிக்கு நல்ல அப்பாவா, உங்களை புரிஞ்சிக்கற கணவன்னா நான் எப்பவும் இருப்பேன் " பேசிக்கொண்டே அவளை அணைத்துக் கொண்டான்..

ஒரு நொடி பிரம்மித்தவள் அவனின் அணைப்பில் உருகினாள்..பத்து நிமிடங்களில் நீடித்த பின் அவளை விடுவித்து,

" உங்களோட பதில் எனக்கு கிடைச்சிடுச்சி.." அறையை விட்டு வெளியேறினான்..

விஷ்ணு அவளை அணைக்கும் போது அவள் காட்டாத எதிர்பார்ப்பே போதுமானதாக இருந்தது..ஒரு நொடியில் அதிர்ந்தாலும் அடுத்து நொடியே அவனை விலக்க முயற்சிக்காமல் இழைந்து கொடுத்தாள்..

மயூரிக்கும் அவர்களுடைய விருப்பத்தை அவள் மீது துணித்தவர்களுக்கு அவளின் மனதை அறிய யாரும் முற்படவில்லை.. அதனாலே கோபமாக இருந்தவளை விஷ்ணு, அவளின் அனுமதி வேண்டி நின்றது நிம்மதி தந்தது‌.. இவற்றை எல்லாம் தாண்டி அவனின் நெருக்கம் அவளுக்கு கோபத்திற்கு பதிலாக பூரிப்பை கொடுத்தது..

நெடுநேரமாகியும் வராத விஷ்ணுவைக் நினைத்து கதிரும் வள்ளியும் பரபரப்பாக ஹாலில் நடக்க,

கதிர் " மயூரி ஒத்துக்கிட்டா கூட இவன் ஒத்துக்க மாட்டேன் போலயே..!! " சந்தேகமாக வினாவ,

" நானே டென்சன்ல இருக்கேன்..நீ வேற ஏன் பா அபசகுணமா பேசற..?? "

" இந்த கல்யாணம் யாரு நினைச்சாலும் நிக்காது மேம்..நம்ம நடத்தி காட்டறோம் "

" போனவன இன்னும் காணோமே..!! " என்று புலம்ப,

" கரெக்டான நேரத்துக்கு செமையா ஸ்கோர் பண்ணீட்டீங்க " அவரை புகழ்ந்து பேச,

" தேங்க் யூ ஐடியா பெல் "

" தப்பி தவறி கூட நாம சேர்ந்து போட்ட ப்ளான்னு சொல்லிடாதீங்க " என்று கெஞ்சியவனை,

" அதெப்படி சொல்லுவேன்..நானும் தானே மாட்டுவேன் "

" அட ஆமால‌.." இரகசியமாக பேசிக்கொண்டு புன்னகைக்க,

கந்தசாமி, " எந்த எல்லையை பிடிக்க இரகசியமா பேசுறீங்க..?? "

வள்ளி " விஷ்ணு இன்னும் வரலையே அத பத்தி பேசிட்டு இருக்கோம்..இல்லை டா கதிர்ர்ர்ர் " என்றதும் அவனும் ஆமாம் சாமி போட்டான்..

அந்நேரம் விஷ்ணு சரியாக வர இவர்கள் கேட்பதற்கு முன்பே அவன்,

" மேரேஜ் சிம்பிள்ளா கோவில்ல வச்சிக்கலாம் சார்..ரிஷப்ஷன் கூட க்ராண்டா வேணாம் "

வள்ளி, " ஏன் பா..?? "

" மேரேஜ்க்கு வரவங்க என்னை அசிங்க படுத்தறாத நினைச்சி மயூரிய அவமானம் படுத்துவாங்க..அந்த மாதிரி நடக்க நாமளே வாய்ப்பு கொடுக்க வேணாம் " என்றவனை கந்தசாமியும் சரி என்றார்..

ஹதிதி , " ஹீரோ..அம்மா என்கிட்ட பேசவே மாட்டறாங்க..ப்ளீஸ் பேச வைங்க " கெஞ்சியவளை தூக்கிக்கொண்டு மீண்டும் அறைக்கு சென்றான்..

சோஃபாவில் அமர்ந்து எங்கையோ வெறித்து பார்த்திருந்தவள்,

" ம்மா " என்ற அழைப்பில் சுய நினைவு அடைந்து அவளை காண,

" சாரி மா.. இனிமேல் உங்க கிட்ட எதுவும் மறைக்க மாட்டேன் " அவளிடம் தாவி கொண்டாள்..

" தப்பு பண்றப்போ இருக்க தைரியம் அதை ஒத்துக்கும் போதும் இருக்கனும்.. நீங்க தப்பு பண்ணது மட்டுமில்லாமல் அதை என்கிட்ட இருந்து மறைக்கவும் செஞ்சி இருக்கீங்க..?? " அவளின் தவறை சுட்டிக் காட்ட,

" சாரிமா.. ஹீரோ கூட உங்ககிட்ட சொல்லலாம்னு சொன்னாரு..நான் தான் வேணாம்னு சொல்லிட்டேன் " என்றதும் அவனை மென்மையாக பார்க்க,

" நீங்க தப்பு பண்ணா எப்பவாது நான் திட்டி இருக்கேனா..?? "

" இல்ல..ப்ளீஸ் ஹீரோவையும் நீங்க திட்டாதீங்க..!! " இறைஞ்சியவளை விஷ்ணுவும் இரசித்தான்..

" தப்பு நீங்க மட்டும் பண்ணல.. உங்க ஹீரோவும் சேர்ந்துதான் பண்ணிருக்காரு..அப்போ ரெண்டு பேருக்குமே பனிஷ்மென்ட் இருக்கு..!! " என்று சொன்னவளை கண்டு இவனும் முழித்தான்..

ஹதிதி, " என்ன பண்ணனும்..?? " சோகமான குரலில்,

" ஒரு ரவுண்ட் போயிட்டு வரலாம் " என்றதும் ஹதிதி உற்சாகமானாள்..

கந்தசாமியும் வள்ளியும் இருவரும் சம்மதித்து விட்ட மகிழ்ச்சியோடு திருமண நாளை குறிக்க சென்றுவிட்டனர்..கதிரும் அவர்களுடன் செல்ல, மூவர் மட்டுமே அவ்வீட்டில் நிறைந்திருந்தனர்..யாரும் இல்லாததால் இவர்களும் வெளியே ரவுண்ட் போக ரெடியாகினர்..

இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் என்றதும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்..அடுத்த நாள் முதல் மயூரி மற்றும் விஷ்ணு தனிமைக்காக இருவரும் செல்ல ,ஹதிதியை கதிருடன் அனுப்பி வைத்தனர்.. தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்தி நிஹாரிகாவிடம் பேச முயற்சித்து முயன்று தோற்றுப் போனான்.. ஒருநாள் வேண்டுமென்றே மறுபடியும் ஹதிதியை லேட்டாக அழைத்துச் செல்ல அப்பொழுது வகுப்பறையில் இருந்த நிஹாரிகா இவனை பார்த்து முறைக்க,

" சாரி நிகா..வர வழியில வண்டி பஞ்சர் ஆகிடுச்சு " சோகமாக சொன்னவனை கூர்ந்து கவனிக்க அவன் கூறியதை பொய் என்று அப்பட்டமாக தெரிந்தது‌..

" ஸ்டாஃப் ரூம் கிட்ட வெயிட் பண்ணுங்க சார்..உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் " என்றதும் இவனும் சிரித்துக்கொண்டே அங்கு சென்றான்..இவளின் கிளாஸ் ஹவர்ஸ் முடிந்ததும் அவனை தேடி செல்ல இவள் வருவதைக் கண்டதும் அவன்,

" கண்ணுல கத்தி
சண்டை கையில கம்பு
சண்டை கன்னத்தில்
முத்த சண்டை வரியா
வரியா

மொத்தத்தில்
இந்த சண்டை நிக்காதா
குத்து சண்டை ஒத்தைக்கு
ஒத்தையா நீ வரியா வரியா..!!

ஹே நீ நீ நீ நீ
என்னோட இஷ்டம் " பாடலை முணுமுணுக்க அதைக் கேட்டவளுக்கு காதில் புகை வராத குறையாக எரிந்து கொண்டிருந்தாள்..

" இனிமேல் லேட்டா கூட்டிட்டு வந்தீங்கனா அவங்க அம்மா கிட்ட மறுபடியும் பேச வேண்டிய தான் இருக்கும் " எச்சரித்து விட்டு திரும்பியவளைப் பார்த்து,

" ஹே நீ நீ நீ நீ
இல்லாம கஷ்டம் " மீண்டும் பாட அவனைக் கொலை வெறியில் பார்த்து விட்டு நகர்ந்தாள்..

மீண்டும் பள்ளியில் இருந்து ஹதிதியை அழைத்து வரும்போது வெகு சீக்கிரமாகவே நிஹாரிகாவின் வீட்டிற்கு சென்றான்.. அங்கு இவனைக் கண்டதும் அதிர்ந்தவள் அவனிடம்,

" எதுக்கு இங்க வந்து இருக்கீங்க..?? " சீற்றத்துடன் பேச,

ஹதிதி, " அத்தை எனக்கு ரொம்ப பசிக்குது " என்றாள்‌..

அவள் அத்தை என்று கூப்பிட்டதை கவனிக்காமல் பாசமாக கூட்டிக்கொண்டு உள்ளே செல்ல , இவனை உள்ளே அழைக்காத கடுப்பில் அவளை திட்டிவிட்டு இவனும் சென்றான்..

ஹாலில் அமர வைத்து விட்டு ஹதிதி உண்பதற்காக பாலும் பிஸ்கட்டும் எடுத்துக்கொண்டு வந்தாள்.. மகிழ்ச்சியோடு அவளுக்கு ஊட்டி விட,

" எனக்கு கொஞ்சம் தண்ணி வேணும் " அவளோ அசையாமல் உட்கார்ந்து இருக்க, அவன் வெறுப்பேற்றும் விதமாக மீண்டும் மீண்டும் கூற எரிச்சலுடன் கிச்சனுக்கு சென்றாள்.. அவனும் பின்னே சென்று அவளை சுவரோடு சாய்த்து நின்று அவன்,

" நான் உன்னை எவ்வளவு லவ் பண்றேன்னு உனக்குத் தெரியும் இல்ல.. இந்த ரெண்டு வருஷமா உன்னை தேடி அலையாத இடம் கிடையாது ஆனா நீ இந்த ஊருக்கே வருவேன் நான் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை..நான் இந்த ஊருக்கு வந்து ரெண்டு வருஷமா ஆச்சி..என் காதல அழிச்சவன் இருக்கான்னு நான் வரவே இல்ல, ஆனால் என்னோட உயிரை காப்பாற்றிய ஒருத்தருக்காக இங்க நான் வந்தேன்‌.." என்றான் ஏக்கத்துடன்..

இரண்டு வருட இடைவெளியில் அவன் இவளை விட்டு பிரிந்திருந்து அனுபவித்த துன்பங்கள், வேதனைகள் எல்லாம் அவன் கூற அவள் கண்களிலும் நீர் சுரந்தது..அடுத்து விஷ்ணுவுக்கும் இவனுக்குமான நட்பை விளக்கியதோடு மட்டுமல்லாமல் மயூரிகாகவும் இவர்களால் கடத்தப்பட்டு கடைசியில் உயிர் பறிக்கப்படும் நேரத்தில் ஹதிதியின் அப்பாவால் உயிர் காப்பாற்றப்பட்டதையும் பழைய நினைவுகள் மறந்து வாழ்ந்து கொண்டிருப்பதையும் கூறினான்..அடுத்து இரண்டு வருடங்களுக்கு முன்பே இவர்களுடன் மயூரியும் விஷ்ணுவும் பிணைக்கப் பட்டிருக்கிறார்கள் என்ற உண்மையையும் கூறினான்..

" இனிமேல் நீ என்ன முடிவு எடுக்குறீயோ..எடுத்துக்கோ..நான் கெளம்பறேன் " அவரிடம் சொல்லிவிட்டு வேகமாக ஹதிதியையும் கூட்டிக் கொண்டு சென்றாள்..

சிம்பிளாக மேரேஜ் நடப்பதால் நிஹாரிகாவைத் தவிர யாருக்கும் அழைப்பு கொடுக்கவில்லை..அவளும் இவர்களின் கோரிக்கையை ஏற்று மயூரிகாவுடன் முதல் நாளே வந்து அவளுடன் தங்கினாள்.. இந்த கல்யாணத்தில் எல்லாரையும் விட உற்சாகமாக திரிந்து கொண்டிருந்தவள் ஹதிதி தான்..

விடியற் காலை பொழுதில் ஐந்தரை மணிக்கு எல்லாம் எழுந்து ரெடியாகினர்..மயூரிகா சிவப்பு வண்ண பட்டுப்புடவையில் இயற்கையாகவே மை விட்டது போன்று இருந்த கண்களுக்கு மேலும் மை தீட்டி, நெடுநெடுவென வளர்ந்திருந்த கூந்தலுக்கு மல்லிகை பூ சரமாக சூழ்ந்து, உடைக்கு ஏற்றது போல ஆபரணங்கள் அணிந்து, நெற்றியில் சிவப்புக்கல் பொட்டு வைத்து ஒப்பனைகள் அதிகம் இன்றி பேரழகியாக ஜொலித்தாள்..நிகாரிகாவும் அவளுக்கு திருஷ்டி சுத்தி கழுத்தில் மை இட்டாள்..

மற்றொரு அறையில் விஷ்ணுவும் பட்டு வேஷ்டி சட்டையுடன் ரெடி ஆகி,ஹதிதியை கூட்டிக் கொண்டு வந்தான்.. இருவரையும் கண்டதும் வள்ளிக்கு கண்கள் குளிர்ந்து போனது..

மயூரியின் மனம் நெருடலாக இருந்தாலும் ஹதிதியின் உற்சாகம் அவளை அதிலிருந்து மீட்டது.. அனைவரும் இரண்டு காரில் கோயிலுக்கு செல்ல கதிரும் நிஹாரிகாவை சைட் அடித்துக் கொண்டே வந்தான்..

முதலில் விஷ்ணு அமர்ந்து சில சம்பிரதாயங்கள் செய்ய அடுத்து மயூரியை அழைத்து சடங்குகளை தொடர்ந்தனர்.. முகூர்த்த நேரம் நெருங்கியதும் ஐயர் சூரியபகவானையும் கடவுளையும் தரிசித்துவிட்டு அவனிடம் கொடுக்க முழு மனதுடன் அவளின் கழுத்தில் தாலி கட்டி தன் மனைவியாக்கினான்.. மூன்றாவது முடிச்சு போட வந்த நிஹாரிகாவை புன்னகையுடன் தடுத்து அவனே மூன்றையும் போட்டான்..

மயூரியின் முகம் முழுவதும் குழப்ப ரேகையே படர்ந்திருந்தது..அதனை விஷ்ணு கவனித்தாலும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அமர்ந்திருந்தான்.. கல்யாணம் முடிந்ததும் கந்தசாமி மற்றும் வள்ளியிடம் ஆசீர்வாதம் பெற்றனர்..இருவரும் மனதார வாழ்த்திவிட்டு கண்கலங்கினார்..

பரபரப்புக்கு பஞ்சமில்லாத போலீஸ் ஸ்டேஷனில் தம்பதியினர் ஒருவர் வந்து அங்கிருந்த உயர் அதிகாரிகளிடம்,

" சார் என் பொண்ணு தொலைஞ்சி போய் ரெண்டரை வருஷம் ஆகப்போகுது.. எப்பதான் சார் கண்டுபிடிப்பீங்க..?? " ஆற்றாமையுடன் அவர் கேட்க,

" என்ன சார் பொண்ணு காணோம்னு ஒரு வருஷத்துக்கு அப்புறம்தான் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கீங்க..!! அப்போ உங்களுக்கே தெரிஞ்சி இருக்கு உங்க பொண்ணு யாரு கூடவோ ஓடி போயிட்டாங்கனு.. எதுக்கு சார் எங்க டைமை வேஸ்ட் பண்றீங்க..?? "

" இல்ல சார் அவ கண்டிப்பா அப்படி பண்ணி இருக்க மாட்டாள் " அழுதுகொண்டே தன் மகளை விட்டு கொடுக்காமல் பேச,

" சரி சரி கிளம்புங்க கிடைச்சா நாங்க கால் பண்றோம் " அஜாக்கிரதையாக கூறவும் இருவரும் மீண்டும் எங்கே கேட்பது என்று தெரியாமல் வெளியே வந்தனர்..

மரத்தடியில் அமர்ந்து தன் பாக்கெட்டில் இருந்து பாஸ்போர்ட் சைஸ் போட்டோவில் இருந்த தன் மகளை பார்த்து, , " என்ன மன்னிச்சிடு மா.. நீ இல்லாம உன்னை தேடி நாங்க ரொம்ப கஷ்டப்படறோம்..எங்க இருந்தாலும் எங்க கூட வந்துடு மா " அவர் கண்களில் சுரந்த நீர் அந்த போட்டோவில் விழுந்தது..

பன்னிரண்டாம் வகுப்பில் எடுக்கப்பட்ட போட்டோவில் புன்னகை குறையாமல் சிரித்துக்கொண்டிருந்தாள் மயூரிகா..

என்ன நடக்கும் என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்..

...தவிப்பு தொடரும்‌...
 
Nilaajothi

Active Member
#4
மயூரி மனம் அறிந்து விஷ்ணு அவளிடம் திருமணதிற்கு சம்மதம் கேட்ப்பது அவளுக்கு மனம் நிம்மதி அளிக்கிறது, இந்த திருமண திட்டம் வள்ளி, கதிர் போட்டது அருமை, விஷ்ணு, மயூரி திருமணம் இனிதாக நிறைவுற்றது அருமை, மயூரியின் தந்தை அவளை காணாமல் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதும், கவலை படுவதும், அவள் மகள் அவருக்கு கிடைப்பாளா, கதிர், நிகா நேசம் எப்பொழுது நிறைவேறும், (y)(y)(y):love::love::love:
 
#5
நல்லபடியாக திருமணம் முடிந்து விட்டது. இனி என்ன பிரச்சனை வரும் என்று தெரியல.
 
Bharathi Nandhu

Writers Team
Tamil Novel Writer
#8
மயூரி மனம் அறிந்து விஷ்ணு அவளிடம் திருமணதிற்கு சம்மதம் கேட்ப்பது அவளுக்கு மனம் நிம்மதி அளிக்கிறது, இந்த திருமண திட்டம் வள்ளி, கதிர் போட்டது அருமை, விஷ்ணு, மயூரி திருமணம் இனிதாக நிறைவுற்றது அருமை, மயூரியின் தந்தை அவளை காணாமல் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதும், கவலை படுவதும், அவள் மகள் அவருக்கு கிடைப்பாளா, கதிர், நிகா நேசம் எப்பொழுது நிறைவேறும், (y)(y)(y):love::love::love:
Thaqqqqqqqqqqq soooooo muchhhhhh
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes