நாயகிக்கு நாயகிகளால் ...

Advertisement

varshakavin

Well-Known Member
Birthday party அர்ஜூனும் நர்மதாவும் தன் இரட்டைக் குழந்தைகளை மாமியார் மாமனாரிடம் விட்டு விட்டு சேலத்தில் அவர்கள் வாங்கியிருந்த மூன்று நட்சத்திர ஹோட்டலுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள்... நர்மதா முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சியும் மலர்ச்சியும் கண்ட அர்ஜூன் அவளருகில் நெருங்கி ,

"ஃபர்ஸ்ட் நைட்ல ஃபெமனிஸம் பேசுன ஆள்தான நீ … சேலத்து சிங்கப் பெண்ணுக்கு பிறந்த நாள் விழா பிளஸ் பாராட்டு விழானதும் ஐயோ இப்படி ஒரு ஜொலிப்பா…"

" பின்ன என்னையப் போல நிறைய பொண்ணுங்கள எல்லாருக்கும் தெரியப்படுத்தினவங்களாச்சே… சரி சரி வாங்க .. எல்லாரும் வந்துட்டாங்களா பார்க்கணும்… " என்றவள் அர்ஜூனுடன் காரில் வந்துக் கொண்டே ஃபோன் பேசினாள்.

"ஹலோ … காவ்யா நைட் நல்லா தூங்கினியாடி… "

"ம்... ஏன் கேட்கிற … " என பிரதியுஷா கிரிவாசன் ஆரம்பித்த நியூஸ் சேனலில் வேலைப் பார்க்கும் காவ்யா கிருஷ்ணன் தான் இன்று நிகழ்ச்சி தொகுப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறாள். அவளிடம் தான் நம் நர்மதாவின் இந்தக் கேள்வி.

"இல்ல நீ நைட்டெல்லாம் தூங்காம ஆஃபிஸ் வந்து தூங்கி வழிவியாம் ….இன்னைக்கு காம்பியரிங் பண்ணும் போது தூங்கிட்டா....அதா…ன் கேட்டேன்… பை" என ஃபோனை வைத்து விட்டாள்.

புரிந்த காவ்யா , " இரு டி உனக்கு இருக்கு …" என நினைத்துக் கொண்டவள் நிகழ்ச்சிக்கு வரும் விருந்தினர்களை வரவேற்க சென்றாள்.

அதற்குள் வாசலருகே கண்ணனும் சுந்தரியும் இறங்க , அவர்கள் பின்னால் வந்த ஒரு மினி லாரியில் நிறைய மரக்கன்றுகள் வந்து இறங்கின. அதற்குள் கண்ணன் ஃபோனுக்கு சிபியிடமிருந்து அழைப்பு ,

"ப்ரோ நீங்க கேட்ட சாப்ளிங் எல்லாம் வந்து இறக்கிட்டோம் .இங்க சுந்தரிக்கு ஸ்பெஷல் அழைப்புனால அம்பது சதவீதம் தள்ளுபடி …" என சிரித்துக் கொண்டே சொல்ல ,

சுந்தரி முறைத்துக் கொண்டே , " நான் இலவசமா தான தாறேன்னு சொன்னேன் …நீங்க எப்படி காசு குறைச்சுப் போடேறேன் சொல்லலாம் … ஆமா அது என்ன சாப்புலிங் சாப்பு லிங்… " எனக் கேட்க ,

"ஏன்டி பொண்டாட்டி புள்ளய விட்டுட்டு எம் பி ஏ படிக்கப் போனேனே … அதைக் கொஞ்சமாவது யுஸ் பண்ண விடு … உன் உழைப்ப இத்தனை செடிகளுக்கும் எவ்வளவு போட்டுருக்க .. அதுல வேலை செய்த வங்க… உரம் …தண்ணி… இப்ப லாரிக்கு எவ்வளவு இருக்கு … அதெல்லாம் விட சிபி இதை தன்னோட சம்பாத்தியத்துல செய்ய நினைக்கிறார் ... அதுதான் அம்பது சதவீதம் சொன்னேன். அவருக்கும் திருப்தி நமக்கும் திருப்தி … " என்றவாறு அவளை அந்த நட்சத்திர விடுதியின் அலங்கரிக்கப்பட்ட பார்ட்டி ஹாலுக்கு அழைத்துச் சென்றான்.

இவர்கள் உள்ளே செல்ல ஆகாஷும் கனியோடு , ராஜியும் செந்திலும் ஒரே காரில் வந்து இறங்கினார்கள். ஆகாஷூம், செந்திலும் காரை நிறுத்திவிட்டு வருவதற்குள் பெண்கள் இருவரும் பேசிக் கொண்டே முன்னே நடக்க , செந்தில் தான் ,

"ஆகாஷ் இவ பேசுறது ஓகே .. ஆனா யாருகிட்டயும் வம்பு இழுத்துராம பார்த்துக்க நான் பக்கத்துலயே இருக்கணும் … நான் அவகிட்டப் போறேன் .. "

" ராஜிக்காவது வாய் பேசும் .. இவ கையில பேசும் … " என யோசித்தவன் கனி அருகில் சென்றுக் கையைப் பிடித்துக் கொண்டான்.

"அழகி… " என ஆகாஷ் கைப்பிடிக்க ,

"ஷ்.. இது என்ன ப்ப்ளிக்ல… முதல்ல அரவிந்தண்ணனுக்கு ஃபோன் பண்ணி தையல் மெஷின் பார்சல் வந்துருச்சாக் கேளுங்க … நான் கீர்த்திக்கிட்டப் பேசுறேன்.."

"அதெல்லாம் பேசியாச்சு … அங்கப் பார் அந்தப் பார்சல் எல்லாம் தையல் மெஷின் தான் , பக்கத்துல இருக்கிற பண்டல் செந்தில் அனுப்பின சில்க் காட்டன்சேலை பார்சல்.... பக்கத்துல இருக்கிறது ராம் அனுப்பின பட்டு சேலை பார்சல் … வா வா போய் உட்காரலாம் … "

இந்த விழா ஏற்பாட்டாளர் வேறு யாருமல்ல … முன்னாள் மத்திய அமைச்சரும் , கிருஷ்ணகிரி தனியார் கல்லூரி ஒன்றின் தாளாளாளருமான சக்தி கார்த்திகேயன் தான்.

அவள் ஃபோனில் , "வேதா .. காண்டீபன் அண்ணா நம்ம சைட் எழுத்தாளர்கள் எல்லாரையும் கேதர் பண்ணி உங்க ட்ராவல்ஸ் மூலமா இங்க அழைச்சிட்டு வர ஏற்பாடு பண்ணதுக்கு ரொம்ப தேங்க்ஸ்… "

"என்ன சக்தி இப்படி பேசறீங்க நம்மளை எல்லாம் மக்கள் கிட்ட கொண்டு போன சிங்க பெண் அவங்க .. எங்களால முடிஞ்சது இதுதான் .. இப்படி வாய்ப்பு ஏற்படுத்தி தந்ததுக்கு தேங்க்ஸ் பா... ஓகே ..நாங்க இப்ப சேலம் பிராஞ்சல தான் இருக்கோம் .. டைம்க்கு எல்லாரும் வந்துருவோம் … " என அவளிடம் பேசிவிட்டு வந்தவள் ,

" இந்தக் கார்த்திக் எங்க போனான் … "எனக் கணவனைத் தேட , அந்த மீட்டிங் ஹாலின் ஓரமாக , திரு மற்றும் ஆதவனுடன் ஏதோ மும்முரமாக பேசிக் கொண்டிருந்தான் .

துளசியும் தாமரையும் தள்ளி நின்றுப் பேசிக் கொண்டு இருந்தனர். கார்த்திக்குக்கு போன் செய்ய அழைப்பு சக்தியிடமிருந்து என்றதும் அவர்களிடமிருந்து விடைபெற்று வந்தவனிடம் ,

"என்ன அவ்வளவு மும்முரமா டிஸ்கஷன் .... பெண்கள் மட்டும் தான் இங்கனு சொன்னேன்ல … நீ ஜென்ட்ஸ் எல்லாரையும் அழைச்சிட்டு ரூஃப் டாப் போ… அங்க போய் பேசுங்க …"

"அது தர்மபுரில திருவோட ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்க்கு நம்ம குவாரிலருந்து நிறைய கல்லு போச்சு , ஆதவன் குவாரி ஏஜென்ஸி எடுக்கலாமானு கேட்டுட்டு இருந்தாரா… அப்படியே இங்க நின்னுட்டோம்… "

"ஷ் … இங்க வந்தும் பிஸ்னஸ் பேசுறத விட மாட்டியா.... உன்னைய என்ஜாய் பண்ண தான சொன்னேன்.... போ உள்ள இருக்கிற ஜென்ட்ஸ் எல்லாரையும் அழைச்சிட்டு கிளம்பு.... இது சிங்கப் பெண்ணுக்காக சிங்கப் பெண்கள் நாங்க எடுக்கிற விழா…" என சக்தி சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஈஷ்வரும் வர்ஷினியும் வர , பார்த்த கார்த்திக்,

"ஹேய் வர்ஷினி மேடம் வர்றாங்க … நான் அந்த ஹாலிவுட் அனிமேஷன் படம் பத்திகொஞ்சம் கேட்டுட்டு அப்புறம் ஈஸ்வரோட கிளம்புறேன் ஓகே ....," என்றவன் நகர்ந்து விட்டான்.

தலையிலடித்துக் கொண்டவள் , தானும் அவர்களை வரவேற்றுவிட்டு உணவுக்கூடம் நோக்கிச் சென்றாள் . பஃபே உணவு முறைதான் .. அங்கு ஜெயந்தி தட்டில் எல்லா உணவுகளையும் வைத்து ஸ்பூனில் எடுத்து வாயில் போட்டுக் கொண்டே , அங்கையுடனும் லலிதாவுடனும் பேசிக் கொண்டிருந்தாள். மூவரும் மேற்பார்வைப் பார்க்க அங்குக் கூடியிருந்தனர்.

அருகில் வந்த சக்தி , " ஓ.. இது தான் மேற்பார்வை பார்க்கிறதா...." மற்ற இருவரும் புன்னகைக்க ஜெயந்தி அசராமல் ,

"சக்தி … மருது ஸ்டோர்ஸ்லருந்து வந்தது எல்லாம் சரியா வந்துச்சானு பார்த்துட்டேன் … வர்றவங்களுக்கு ரிடர்ன் கிஃப்ட்டும் ரெடி … இது லலிதா வீட்டு ஸ்பெஷல் , இது அங்கை வீட்டு ஸ்பெஷல்" என ஜெயந்தி கோழி வறுவலையும் , நெய் சோறையும் சக்திக்கும் ஊட்டிக் கொண்டே சொன்னவள் ,

"நாம டேஸ்ட் பார்த்து உப்பு உறைப்பு இருக்கானு பார்க்கணும் தானே...." என கண்ணடிக்க ,

" சக்தி… கேட்டரிங் பத்தி கவலையேப் படாதீங்க … எல்லாம் பக்கா...." என அங்கையும் சொன்னாள்.

"தேங்க்ஸ் பா… நீங்க எல்லாம் சப்போர்ட் பண்ண போய் தான் என்னால இது முடிஞ்சது…"

அங்கை உடனே , "ஒரு யூத் ஐகான் … மீடியா ஐகான்க்கு தர்ற ஸ்பெஷல் பார்ட்டி .. எங்க பங்களிப்பு இல்லன எப்படி … "

" ரிடர்ன் கிஃப்ட்னதும் தான் ஞாபகம் வருது , கிஃப்ட்பேக் பண்ண சொல்லியிருந்தேன் எப்படியிருக்குனு பார்த்துட்டு வாறேன்.."

அழகாக அங்கரிக்கப்பட்ட மேடையை ஒட்டிய அறைக்கு சென்ற சக்தியைக் கண்ட அபிராமியும் அன்னக்கிளியும் அவளைப் பார்த்துப் புன்னகைத்தனர்.

அபிராமி ஒரு புதிய விலையுயர்ந்த மொபைல் டப்பாவை எடுத்துக் கொடுக்க அன்னக்கிளி அதை பரிசுப் பொருளாக தயார் செய்துக்கொண்டிருந்தாள் .அனுவின் கைவண்ணத்தில் பரிசுப் பொருள்கள் அத்தனையும் ஜொலிக்க ,

"அன்னம் கிப்ட் கவர் பிரிக்கவே மனசு வராது அவ்வளவு அழகா பண்ணியிருக்க " இப்படி நம் நாயகிகள் அனைவரும் விழா ஏற்பாட்டில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

அனைவரும் வந்தாகிற்று, சந்திரிகா , சென்னை, மும்பய் மற்றும் வெளிநாட்டில் வாழும் நம் கார்ப்ரேட் கம்பெனிகளின் நாயகிகளை ஒன்றிணைத்து அழைத்து வந்துக் கொண்டிருந்தாள். அதில் சைந்தவி , அக்ஷரா , அர்ச்சனா , அரசி , ஜனனி, வைதேகி என அனைவரும் இருந்தனர்.

அந்த ஹாலில் பாட்டுக் கச்சேரி நடந்துக் கொண்டிருக்க , சிச்சுவேஷன் சாங் எடுத்து விடுறதுல எக்ஸ்பர்ட் ஆன ஃபாத்திமா மேடமும் , சிந்து மேடமும் தான் அந்தப் பொறுப்பை எடுத்திருந்தனர்.

நட்சத்திர விடுதியின் வெளியே விழா நாயகியை மட்டுமல்ல , கற்பனையில் கண்டவர்களை நேரில் காணும் ஆவலில் நம் தள வாசகர்களும் குவிந்த வண்ணம் இருந்தனர்.

ரமணன் டியூட்டியில் இருக்க , வராவையும் , சந்தியாவையும் அழைத்து வந்தவன் ,

"என்ன இப்படி டிராஃபிக் ஜாம் ஆகியிருக்கு …"

" பின்ன மல்லிமேம்னா சும்மாவா … இல்ல அவங்களால பெருமைப்படுத்தப்பட்ட நாங்களும் சும்மாவா....எங்களை பார்க்க கூட்டம் குவியதானே செய்யும்.... " என இருவரும் ஹை - ஃபைக் கொடுக்க, செல்வி வாசலருகேயே காரில் இருந்து இறங்கி நடந்து வந்தாள். அவளிடம் அருளை விசாரிக்க ,

" வெளிய போய் பாருங்க சார் … கூட்டமா இருக்குனு ட்ராஃபிக் போலீஸ் ஒருத்தர் கிட்ட ஒழுங்குப் படுத்த பேசிட்டு இருக்கார். "

அப்போதுதான் வந்த மாயா , " டோன்ட் வொர்ரி .. நான் இப்ப தான் ஸ்ரீநிதிக்கிட்ட சொன்னேன்... இனி அவங்க அப்பா பார்த்துக்குவார்… "ஸ்ரீநிதி முதலமைச்சர் பெண்ணாச்சே … அது மட்டுமல்ல வந்த நாயகிகளிலேயே மாயா மட்டுமே திருமணம் நிச்சியத்தில் இருந்தாள்.

ரவி ஷர்மியை காரிலிருந்து இறங்கவுமே கைப் பிடித்து அழைத்து வர , செல்வி சென்றுப் பிடித்துக் கொண்டவள்,

"ரவியண்ணா இனி நான் பார்த்துக்கிறேன் கவலைப்படாதீங்க...." என பார்ட்டி ஹால் அழைத்துச் சென்றாள்.

விழாச் சிறப்பாக நடைபெற , சிங்கப் பெண் கையால் நம் சிங்கப் பெண்களுக்கு விருது தர அழைத்தாள் காவ்யா. வந்திருந்த அனைவருமே சிங்கப் பெண்கள் தான்.

அதில் சில குறிப்பிட்ட பேருக்குத்தான் இந்த விருது .அவர்களுக்கான முன்னோட்டம் அளித்து மேடையேற்றப் பட்டார்கள்.

முதலில் வாங்கியது நம்ம ஸ்குவாஷ் வீராங்கனை ப்ரீத்தி …ஆண் போல இருக்கிறாள் … அப்படி இப்படி என்ற விமர்சனங்களை எல்லாம் தூர வைத்து விட்டு உலகப் புகழ் பெற்றவள்.

அடுத்ததாக ஜெயஸ்ரீ … அத்தனைக் குழந்தைகளை அந்த வயதில் காப்பாற்றினாளே.... அவளுக்கான அங்கீகாரம் இது....

அடுத்ததாக சுந்தரி … நிறையப் படித்த பெண்கள் தான் அறிவாளிகள் , தைரியசாலிகள் என்ற வரையறையை அந்த விடிந்தும் விடியாத நேரத்திலும் கிணற்றினுள் குதித்து காப்பாற்ற போனதிலயே உடைத்தவள்…

அடுத்த விருது நம் தாமரைக்கு ..இரு பெண் குழந்தைகளுக்கு தகப்பனை இரண்டாம் தாரமாக திருமணம் செய்தது பெரிதல்ல , தேசத்திற்காக உயிரிழந்த அண்ணன் மகளை தன் மகளாக வரித்து அவளையும் தன் மகளாக ஏற்றுக் கொள்வேன் என சாதித்து அதைச் செயலிலும் காட்டிய தாமரையும் சிங்கப் பெண் தானே …

அடுத்ததாக துளசி … பனிரெண்டு வருடங்கள் முகம் பார்த்துப் பேசாத கணவன் ..... இன்னமும் தன்னை வேலை செய்பவரின் மகளாகவே பார்க்கும் புகுந்த வீடு .....(இப்படியெல்லாம் இருக்க மாட்டாங்கனு நினைக்கிறவங்களுக்கு .... இருக்கிறார்கள் என்று மட்டுமே கூற முடியும்) அத்தனையும் சமாளித்து அந்தக் குடும்பத்தை கட்டி காக்கும் துளசியும் சிங்கப் பெண் தான் …

இந்த நாயகிகளுக்கெல்லாம் நம் நாயகியால் விருதளிக்கப்பட்டுவிட்டது. அடுத்து, 'எப்போ பாரு கதைப் புத்தகமும் கையுமா திரியறா (இப்போ ஃபோனும் கையுமா) என்ற வசைமொழிகளையும் தாங்கிக் கொண்டு புத்தகம் படிக்கும் வாசகிகளும் சிங்க பெண்கள்தான்… அந்த வாசகிகளையும் எழுத்தாளர்களாக பரிணாமம் எடுக்க உதவிய நம் தளத்திற்கும் ஒரு ஸ்பெஷல் விருது …

புதிய எழுத்தாளர் .. பழைய எழுத்தாளர் என்றில்லாமல் அனைவருக்கும் கருத்திடும் .. பானுமதி ஜெயராமன் மேடம்,

இவர்கள் அத்தனை பேரையும் அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் ஜோஹர் மேடம் …

டெக்னிக்கலா என்ன பிரச்சினை வந்தாலும் உடனே பதிலளிக்கும் நம் அட்மின்களில் ஒருவரான ஹமீதா மேடம், சரயு மேடம் எல்லாருக்கும் நம் தளம் சார்பா விருது தந்து கெளரவிக்கப்பட , இறுதியில் மல்லி மேடம் நமக்கெல்லாம் தந்த Speech தான் ஹைலைட்..... (வீடியோவில் மேம் பேசினதைப் பார்த்து ரசித்துக் கொள்வோம்)

இந்தப் பாராட்டு விழாவும் பிறந்த நாள் விழாவும் கற்பனையில் என்னால் நடத்தப்பட்டு விட்டது. நிஜத்தில் …. கனவும் கை சேரும் ஃபிரண்ட்ஸ் ….

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மேடம்.

நம் நாயகிகள் எல்லாரும் வந்து வாழ்த்து சொல்லிட்டாங்க நினைக்கிறேன் …

Happy Birthday Mam…
 
Last edited:

MercyRaj

Active Member
வர்ஷா மேம் ... ... அருமையான பிறந்த நாள் வாழ்த்து ..... எப்படி மேம் ...... இதில் ஜனனி யார்னு தெரியலயே...... மற்றவங்களாம் தெரியறாங்க ...... மல்லி மேம் இனிய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
 
Hema27

Well-Known Member
Birthday party அர்ஜூனும் நர்மதாவும் தன் இரட்டைக் குழந்தைகளை மாமியார் மாமனாரிடம் விட்டு விட்டு சேலத்தில் அவர்கள் வாங்கியிருந்த மூன்று நட்சத்திர ஹோட்டலுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள்... நர்மதா முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சியும் மலர்ச்சியும் கண்ட அர்ஜூன் அவளருகில் நெருங்கி ,

"ஃபர்ஸ்ட் நைட்ல ஃபெமனிஸம் பேசுன ஆள்தான நீ … சேலத்து சிங்கப் பெண்ணுக்கு பிறந்த நாள் விழா பிளஸ் பாராட்டு விழானதும் ஐயோ இப்படி ஒரு ஜொலிப்பா…"

" பின்ன என்னையப் போல நிறைய பொண்ணுங்கள எல்லாருக்கும் தெரியப்படுத்தினவங்களாச்சே… சரி சரி வாங்க .. எல்லாரும் வந்துட்டாங்களா பார்க்கணும்… " என்றவள் அர்ஜூனுடன் காரில் வந்துக் கொண்டே ஃபோன் பேசினாள்.

"ஹலோ … காவ்யா நைட் நல்லா தூங்கினியாடி… "

"ம்... ஏன் கேட்கிற … " என பிரதியுஷா கிரிவாசன் ஆரம்பித்த நியூஸ் சேனலில் வேலைப் பார்க்கும் காவ்யா கிருஷ்ணன் தான் இன்று நிகழ்ச்சி தொகுப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறாள். அவளிடம் தான் நம் நர்மதாவின் இந்தக் கேள்வி.

"இல்ல நீ நைட்டெல்லாம் தூங்காம ஆஃபிஸ் வந்து தூங்கி வழிவியாம் ….இன்னைக்கு காம்பியரிங் பண்ணும் போது தூங்கிட்டா....அதா…ன் கேட்டேன்… பை" என ஃபோனை வைத்து விட்டாள்.

புரிந்த காவ்யா , " இரு டி உனக்கு இருக்கு …" என நினைத்துக் கொண்டவள் நிகழ்ச்சிக்கு வரும் விருந்தினர்களை வரவேற்க சென்றாள்.

அதற்குள் வாசலருகே கண்ணனும் சுந்தரியும் இறங்க , அவர்கள் பின்னால் வந்த ஒரு மினி லாரியில் நிறைய மரக்கன்றுகள் வந்து இறங்கின. அதற்குள் கண்ணன் ஃபோனுக்கு சிபியிடமிருந்து அழைப்பு ,

"ப்ரோ நீங்க கேட்ட சாப்ளிங் எல்லாம் வந்து இறக்கிட்டோம் .இங்க சுந்தரிக்கு ஸ்பெஷல் அழைப்புனால அம்பது சதவீதம் தள்ளுபடி …" என சிரித்துக் கொண்டே சொல்ல ,

சுந்தரி முறைத்துக் கொண்டே , " நான் இலவசமா தான தாறேன்னு சொன்னேன் …நீங்க எப்படி காசு குறைச்சுப் போடேறேன் சொல்லலாம் … ஆமா அது என்ன சாப்புலிங் சாப்பு லிங்… " எனக் கேட்க ,

"ஏன்டி பொண்டாட்டி புள்ளய விட்டுட்டு எம் பி ஏ படிக்கப் போனேனே … அதைக் கொஞ்சமாவது யுஸ் பண்ண விடு … உன் உழைப்ப இத்தனை செடிகளுக்கும் எவ்வளவு போட்டுருக்க .. அதுல வேலை செய்த வங்க… உரம் …தண்ணி… இப்ப லாரிக்கு எவ்வளவு இருக்கு … அதெல்லாம் விட சிபி இதை தன்னோட சம்பாத்தியத்துல செய்ய நினைக்கிறார் ... அதுதான் அம்பது சதவீதம் சொன்னேன். அவருக்கும் திருப்தி நமக்கும் திருப்தி … " என்றவாறு அவளை அந்த நட்சத்திர விடுதியின் அலங்கரிக்கப்பட்ட பார்ட்டி ஹாலுக்கு அழைத்துச் சென்றான்.

இவர்கள் உள்ளே செல்ல ஆகாஷும் கனியோடு , ராஜியும் செந்திலும் ஒரே காரில் வந்து இறங்கினார்கள். ஆகாஷூம், செந்திலும் காரை நிறுத்திவிட்டு வருவதற்குள் பெண்கள் இருவரும் பேசிக் கொண்டே முன்னே நடக்க , செந்தில் தான் ,

"ஆகாஷ் இவ பேசுறது ஓகே .. ஆனா யாருகிட்டயும் வம்பு இழுத்துராம பார்த்துக்க நான் பக்கத்துலயே இருக்கணும் … நான் அவகிட்டப் போறேன் .. "

" ராஜிக்காவது வாய் பேசும் .. இவ கையில பேசும் … " என யோசித்தவன் கனி அருகில் சென்றுக் கையைப் பிடித்துக் கொண்டான்.

"அழகி… " என ஆகாஷ் கைப்பிடிக்க ,

"ஷ்.. இது என்ன ப்ப்ளிக்ல… முதல்ல அரவிந்தண்ணனுக்கு ஃபோன் பண்ணி தையல் மெஷின் பார்சல் வந்துருச்சாக் கேளுங்க … நான் கீர்த்திக்கிட்டப் பேசுறேன்.."

"அதெல்லாம் பேசியாச்சு … அங்கப் பார் அந்தப் பார்சல் எல்லாம் தையல் மெஷின் தான் , பக்கத்துல இருக்கிற பண்டல் செந்தில் அனுப்பின சேலை பார்சல் … வா வா போய் உட்காரலாம் … "

இந்த விழா ஏற்பாட்டாளர் வேறு யாருமல்ல … முன்னாள் மத்திய அமைச்சரும் , கிருஷ்ணகிரி தனியார் கல்லூரி ஒன்றின் தாளாளாளருமான சக்தி கார்த்திகேயன் தான்.

அவள் ஃபோனில் , "வேதா .. காண்டீபன் அண்ணா நம்ம சைட் எழுத்தாளர்கள் எல்லாரையும் கேதர் பண்ணி உங்க ட்ராவல்ஸ் மூலமா இங்க அழைச்சிட்டு வர ஏற்பாடு பண்ணதுக்கு ரொம்ப தேங்க்ஸ்… "

"என்ன சக்தி இப்படி பேசறீங்க நம்மளை எல்லாம் மக்கள் கிட்ட கொண்டு போன சிங்க பெண் அவங்க .. எங்களால முடிஞ்சது இதுதான் .. இப்படி வாய்ப்பு ஏற்படுத்தி தந்ததுக்கு தேங்க்ஸ் பா... ஓகே ..நாங்க இப்ப சேலம் பிராஞ்சல தான் இருக்கோம் .. டைம்க்கு எல்லாரும் வந்துருவோம் … " என அவளிடம் பேசிவிட்டு வந்தவள் ,

" இந்தக் கார்த்திக் எங்க போனான் … "எனக் கணவனைத் தேட , அந்த மீட்டிங் ஹாலின் ஓரமாக , திரு மற்றும் ஆதவனுடன் ஏதோ மும்முரமாக பேசிக் கொண்டிருந்தான் .

துளசியும் தாமரையும் தள்ளி நின்றுப் பேசிக் கொண்டு இருந்தனர். கார்த்திக்குக்கு போன் செய்ய அழைப்பு சக்தியிடமிருந்து என்றதும் அவர்களிடமிருந்து விடைபெற்று வந்தவனிடம் ,

"என்ன அவ்வளவு மும்முரமா டிஸ்கஷன் .... பெண்கள் மட்டும் தான் இங்கனு சொன்னேன்ல … நீ ஜென்ட்ஸ் எல்லாரையும் அழைச்சிட்டு ரூஃப் டாப் போ… அங்க போய் பேசுங்க …"

"அது தர்மபுரில திருவோட ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்க்கு நம்ம குவாரிலருந்து நிறைய கல்லு போச்சு , ஆதவன் குவாரி ஏஜென்ஸி எடுக்கலாமானு கேட்டுட்டு இருந்தாரா… அப்படியே இங்க நின்னுட்டோம்… "

"ஷ் … இங்க வந்தும் பிஸ்னஸ் பேசுறத விட மாட்டியா.... உன்னைய என்ஜாய் பண்ண தான சொன்னேன்.... போ உள்ள இருக்கிற ஜென்ட்ஸ் எல்லாரையும் அழைச்சிட்டு கிளம்பு.... இது சிங்கப் பெண்ணுக்காக சிங்கப் பெண்கள் நாங்க எடுக்கிற விழா…" என சக்தி சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஈஷ்வரும் வர்ஷினியும் வர , பார்த்த கார்த்திக்,

"ஹேய் வர்ஷினி மேடம் வர்றாங்க … நான் அந்த ஹாலிவுட் அனிமேஷன் படம் பத்திகொஞ்சம் கேட்டுட்டு அப்புறம் ஈஸ்வரோட கிளம்புறேன் ஓகே ....," என்றவன் நகர்ந்து விட்டான்.

தலையிலடித்துக் கொண்டவள் , தானும் அவர்களை வரவேற்றுவிட்டு உணவுக்கூடம் நோக்கிச் சென்றாள் . பஃபே உணவு முறைதான் .. அங்கு ஜெயந்தி தட்டில் எல்லா உணவுகளையும் வைத்து ஸ்பூனில் எடுத்து வாயில் போட்டுக் கொண்டே , அங்கையுடனும் லலிதாவுடனும் பேசிக் கொண்டிருந்தாள். மூவரும் மேற்பார்வைப் பார்க்க அங்குக் கூடியிருந்தனர்.

அருகில் வந்த சக்தி , " ஓ.. இது தான் மேற்பார்வை பார்க்கிறதா...." மற்ற இருவரும் புன்னகைக்க ஜெயந்தி அசராமல் ,

"சக்தி … மருது ஸ்டோர்ஸ்லருந்து வந்தது எல்லாம் சரியா வந்துச்சானு பார்த்துட்டேன் … வர்றவங்களுக்கு ரிடர்ன் கிஃப்ட்டும் ரெடி … இது லலிதா வீட்டு ஸ்பெஷல் , இது அங்கை வீட்டு ஸ்பெஷல்" என ஜெயந்தி கோழி வறுவலையும் , நெய் சோறையும் சக்திக்கும் ஊட்டிக் கொண்டே சொன்னவள் ,

"நாம டேஸ்ட் பார்த்து உப்பு உறைப்பு இருக்கானு பார்க்கணும் தானே...." என கண்ணடிக்க ,

" சக்தி… கேட்டரிங் பத்தி கவலையேப் படாதீங்க … எல்லாம் பக்கா...." என அங்கையும் சொன்னாள்.

"தேங்க்ஸ் பா… நீங்க எல்லாம் சப்போர்ட் பண்ண போய் தான் என்னால இது முடிஞ்சது…"

அங்கை உடனே , "ஒரு யூத் ஐகான் … மீடியா ஐகான்க்கு தர்ற ஸ்பெஷல் பார்ட்டி .. எங்க பங்களிப்பு இல்லன எப்படி … "

" ரிடர்ன் கிஃப்ட்னதும் தான் ஞாபகம் வருது , கிஃப்ட்பேக் பண்ண சொல்லியிருந்தேன் எப்படியிருக்குனு பார்த்துட்டு வாறேன்.."

அழகாக அங்கரிக்கப்பட்ட மேடையை ஒட்டிய அறைக்கு சென்ற சக்தியைக் கண்ட அபிராமியும் அன்னக்கிளியும் அவளைப் பார்த்துப் புன்னகைத்தனர்.

அபிராமி ஒரு புதிய விலையுயர்ந்த மொபைல் டப்பாவை எடுத்துக் கொடுக்க அன்னக்கிளி அதை பரிசுப் பொருளாக தயார் செய்துக்கொண்டிருந்தாள் .அனுவின் கைவண்ணத்தில் பரிசுப் பொருள்கள் அத்தனையும் ஜொலிக்க ,

"அன்னம் கிப்ட் கவர் பிரிக்கவே மனசு வராது அவ்வளவு அழகா பண்ணியிருக்க " இப்படி நம் நாயகிகள் அனைவரும் விழா ஏற்பாட்டில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

அனைவரும் வந்தாகிற்று, சந்திரிகா , சென்னை, மும்பய் மற்றும் வெளிநாட்டில் வாழும் நம் கார்ப்ரேட் கம்பெனிகளின் நாயகிகளை ஒன்றிணைத்து அழைத்து வந்துக் கொண்டிருந்தாள். அதில் சைந்தவி , அக்ஷரா , அர்ச்சனா , அரசி , ஜனனிஎன அனைவரும் இருந்தனர்.

அந்த ஹாலில் பாட்டுக் கச்சேரி நடந்துக் கொண்டிருக்க , சிச்சுவேஷன் சாங் எடுத்து விடுறதுல எக்ஸ்பர்ட் ஆன ஃபாத்திமா மேடமும் , சிந்து மேடமும் தான் அந்தப் பொறுப்பை எடுத்திருந்தனர்.

நட்சத்திர விடுதியின் வெளியே விழா நாயகியை மட்டுமல்ல , கற்பனையில் கண்டவர்களை நேரில் காணும் ஆவலில் நம் தள வாசகர்களும் குவிந்த வண்ணம் இருந்தனர்.

ரமணன் டியூட்டியில் இருக்க , வராவையும் , சந்தியாவையும் அழைத்து வந்தவன் ,

"என்ன இப்படி டிராஃபிக் ஜாம் ஆகியிருக்கு …"

" பின்ன மல்லிமேம்னா சும்மாவா … இல்ல அவங்களால பெருமைப்படுத்தப்பட்ட நாங்களும் சும்மாவா....எங்களை பார்க்க கூட்டம் குவியதானே செய்யும்.... " என இருவரும் ஹை - ஃபைக் கொடுக்க, செல்வி வாசலருகேயே காரில் இருந்து இறங்கி நடந்து வந்தாள். அவளிடம் அருளை விசாரிக்க ,

" வெளிய போய் பாருங்க சார் … கூட்டமா இருக்குனு ட்ராஃபிக் போலீஸ் ஒருத்தர் கிட்ட ஒழுங்குப் படுத்த பேசிட்டு இருக்கார். "

அப்போதுதான் வந்த மாயா , " டோன்ட் வொர்ரி .. நான் இப்ப தான் ஸ்ரீநிதிக்கிட்ட சொன்னேன்... இனி அவங்க அப்பா பார்த்துக்குவார்… "ஸ்ரீநிதி முதலமைச்சர் பெண்ணாச்சே … அது மட்டுமல்ல வந்த நாயகிகளிலேயே மாயா மட்டுமே திருமணம் நிச்சியத்தில் இருந்தாள்.

ரவி ஷர்மியை காரிலிருந்து இறங்கவுமே கைப் பிடித்து அழைத்து வர , செல்வி சென்றுப் பிடித்துக் கொண்டவள்,

"ரவியண்ணா இனி நான் பார்த்துக்கிறேன் கவலைப்படாதீங்க...." என பார்ட்டி ஹால் அழைத்துச் சென்றாள்.

விழாச் சிறப்பாக நடைபெற , சிங்கப் பெண் கையால் நம் சிங்கப் பெண்களுக்கு விருது தர அழைத்தாள் காவ்யா. வந்திருந்த அனைவருமே சிங்கப் பெண்கள் தான்.

அதில் சில குறிப்பிட்ட பேருக்குத்தான் இந்த விருது .அவர்களுக்கான முன்னோட்டம் அளித்து மேடையேற்றப் பட்டார்கள்.

முதலில் வாங்கியது நம்ம ஸ்குவாஷ் வீராங்கனை ப்ரீத்தி …ஆண் போல இருக்கிறாள் … அப்படி இப்படி என்ற விமர்சனங்களை எல்லாம் தூர வைத்து விட்டு உலகப் புகழ் பெற்றவள்.

அடுத்ததாக ஜெயஸ்ரீ … அத்தனைக் குழந்தைகளை அந்த வயதில் காப்பாற்றினாளே.... அவளுக்கான அங்கீகாரம் இது....

அடுத்ததாக சுந்தரி … நிறையப் படித்த பெண்கள் தான் அறிவாளிகள் , தைரியசாலிகள் என்ற வரையறையை அந்த விடிந்தும் விடியாத நேரத்திலும் கிணற்றினுள் குதித்து காப்பாற்ற போனதிலயே உடைத்தவள்…

அடுத்த விருது நம் தாமரைக்கு ..இரு பெண் குழந்தைகளுக்கு தகப்பனை இரண்டாம் தாரமாக திருமணம் செய்தது பெரிதல்ல , தேசத்திற்காக உயிரிழந்த அண்ணன் மகளை தன் மகளாக வரித்து அவளையும் தன் மகளாக ஏற்றுக் கொள்வேன் என சாதித்து அதைச் செயலிலும் காட்டிய தாமரையும் சிங்கப் பெண் தானே …

அடுத்ததாக துளசி … பனிரெண்டு வருடங்கள் முகம் பார்த்துப் பேசாத கணவன் ..... இன்னமும் தன்னை வேலை செய்பவரின் மகளாகவே பார்க்கும் புகுந்த வீடு .....(இப்படியெல்லாம் இருக்க மாட்டாங்கனு நினைக்கிறவங்களுக்கு .... இருக்கிறார்கள் என்று மட்டுமே கூற முடியும்) அத்தனையும் சமாளித்து அந்தக் குடும்பத்தை கட்டி காக்கும் துளசியும் சிங்கப் பெண் தான் …

இந்த நாயகிகளுக்கெல்லாம் நம் நாயகியால் விருதளிக்கப்பட்டுவிட்டது. அடுத்து, 'எப்போ பாரு கதைப் புத்தகமும் கையுமா திரியறா (இப்போ ஃபோனும் கையுமா) என்ற வசைமொழிகளையும் தாங்கிக் கொண்டு புத்தகம் படிக்கும் வாசகிகளும் சிங்க பெண்கள்தான்… அந்த வாசகிகளையும் எழுத்தாளர்களாக பரிணாமம் எடுக்க உதவிய நம் தளத்திற்கும் ஒரு ஸ்பெஷல் விருது …

புதிய எழுத்தாளர் .. பழைய எழுத்தாளர் என்றில்லாமல் அனைவருக்கும் கருத்திடும் .. பானுமதி ஜெயராமன் மேடம்,

இவர்கள் அத்தனை பேரையும் அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் ஜோஹர் மேடம் …

டெக்னிக்கலா என்ன பிரச்சினை வந்தாலும் உடனே பதிலளிக்கும் நம் அட்மின்களில் ஒருவரான ஹமீதா மேடம், சரயு மேடம் எல்லாருக்கும் நம் தளம் சார்பா விருது தந்து கெளரவிக்கப்பட , இறுதியில் மல்லி மேடம் நமக்கெல்லாம் தந்த Speech தான் ஹைலைட்..... (வீடியோவில் மேம் பேசினதைப் பார்த்து ரசித்துக் கொள்வோம்)

இந்தப் பாராட்டு விழாவும் பிறந்த நாள் விழாவும் கற்பனையில் என்னால் நடத்தப்பட்டு விட்டது. நிஜத்தில் …. கனவும் கை சேரும் ஃபிரண்ட்ஸ் ….

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மேடம்.

நம் நாயகிகள் எல்லாரும் வந்து வாழ்த்து சொல்லிட்டாங்க நினைக்கிறேன் …

Happy Birthday Mam…
Wow!!! chance ehh இல்லை Sema sema creativity... Asathitinga ponga
 
fathima.ar

Well-Known Member
வர்ஷா மேம் ... ... அருமையான பிறந்த நாள் வாழ்த்து ..... எப்படி மேம் ...... இதில் ஜனனி யார்னு தெரியலயே...... மற்றவங்களாம் தெரியறாங்க ...... மல்லி மேம் இனிய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Ippadikku in idhayamm
 
banumathi jayaraman

Well-Known Member
வாவ் சூப்பர் சூப்பர் வர்ஷாகவின் டியர்
அனைத்து ஹீரோயின்ஸ்ஸையும் வைத்து அழகான வெகு அருமையான ஒரு கதம்ப மாலை தொடுத்துள்ளீர்கள்
பிறந்த நாள் காணும் இனிய மல்லிகா டியர் நாயகிக்கு என்னுடைய மனமார்ந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், மல்லிகா டியர்
@mallika
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top