நாம் எங்கே?

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
ப்ரெண்ட்ஸ்... இதுதான் நான் முதல் முதலா இந்த சைட்-ல எழுதி, என் மதிப்பிற்குரிய தோழிக்கு மட்டுமாய் பகிர்ந்து,,

மே மாதம் முதல் தேதி பதிவு.. இன்று ... உங்கள் பார்வைக்கு...


நாம் எங்கே ?

“மா ....டைம் ஆச்சு.. டிபன் ரெடியா ?” என்ற சின்னவள் குரல் கேட்டு அவசரமாக தோசைக்கல்லை பெரிய flame -கு மாற்றினேன். இன்னும் 5 நாளில் காஸ் தீர்த்திடும் .... என்ன செய்வது ? மண்டையை மிகவும் குடைந்த கேள்வி .. காலை விழிக்கும் போதே பிரச்சனை ஆரம்பம் ,

வாசலில் உள் கேட்-ல் ரெட்டை பூட்டுடன் கட்டி இருந்த சிலிண்டரை காணவில்லை . மனது பக் என்றானது ... முயன்று வரவழைத்த பொறுமையுடன் , வாசல் தெளித்து கோலமிட்டு வந்து குளிக்க சென்று , என்னவர் ஜாக்கிங் முடித்து வரும் வரை காத்திருந்தேன் . விஷயம் கூறியவுடன் ,

“நினச்சேன் .. அது இத்தனை நாள் பத்திரமா இருந்ததே அதிசயம் , எவனாவது சிலிண்டரை வெளில வப்பானடி ?”,

“இல்லங்க கேட்டோட சேர்த்து ரெண்டு பூட்டு போட்டிருந்தேன் ”... குறுக்கிட்டு “பூட்டு சங்கிலியும் போச்சா ?”, என்றவரிடம் என்ன சொல்ல ? வழக்கம் போல் திருதிருத்தேன் ..

போன மாதம், சிலிண்டரை வாஷிங் மெஷின் அருகில் வைக்கும்போது பவர் பாயிண்ட் பக்கத்திலேயே காஸ் -ஆ ? என்றது அவர்தான்...நினைவு வந்தாலும் ...வாய் மூடி மௌனி ஆனேன் . காலை வேளை , நிறைய குடும்பத் தலைவிகளுக்கு நெருப்பு நேரம் .. வேலைக்கு செல்லும் பெண்களுக்கோ ....கேக்கவே வேண்டாம் ...ம்ம் வாட் நெஸ்ட் ?

அப்பாவை அழைத்தேன் ... எனது காஸ் புக் , கார்டு எல்லாம் வாங்கிக்கொண்டு , “போலீஸ் -கு ஒரு லெட்டர் கொடுத்துட்டு FIR வாங்கணும் , அதை கொடுத்த தான் சிலிண்டர் கிடைக்கும் ” என்றார் .

“ஏன் போச்சு? எப்படி போச்சு? – லாம் கிடையாது ..எப்போதும் வாட் நெஸ்ட் தான், அனைத்திற்கும் சேர்த்து லீவ் நாளில் பாட்டு விழும் – இதுதான் எங்கப்பா ..“இதோப்பா”, மூன்று அடுப்பு மீதும் கண் வைத்துக்கொண்டே அனைத்தும் .
முடிப்பதற்குள் சின்னவள் குளித்து டிபன் கேட்கும் குரல் ..

“நீ டிரஸ் மாத்திண்டு வாடி , தட்டுல போட்டு வைக்கிறேன் ...”,

“மா நெய் ரோஸ்ட் மிளகாய் பொடி தூவி , தேங்கா சட்னி இருக்கில்ல ?” என்றவளிடம் ,

“வாடி வாயாடி, ஒரு வேலைக்கு துப்பில்லை, நாக்கு மட்டும் ஏழூருக்கு இருக்கு..” செல்லமாய் திட்டிக்கொண்டே, அவள் கேட்டதை செய்தேன்.

“புஜ்ஜிம்மா , இன்னிக்கு பாலினாமியல் -ம் , நம்பர் சிஸ்டம் -ம் ரிவைஸ் பண்ணிடலாமா?” வாய் அனிச்சையாய் கேக்க , “டீல்-மா ”..கிடைத்ததது.

அப்போதே மணி 7.40... ச்சோ .. டைம் ஆச்சே . டென்ஷன் ஆரம்பித்தது ...
லஞ்ச் box ரெடி செய்து பை சொல்லி நிமிரும் போது , மணி 8.00, பூஜை அறையில் மணி சத்தம் , வேகமாக மகாநைய்வைத்யம் எடுத்துக்கொண்டு உள் சென்று , “ அர்ச்சனை நான் பண்ணிக்கிறேன் நீங்க கிளம்புங்க ” எனவும் , தீபாராதனை காண்பித்தார் என்னவர் .. பஞ்சகச்சமும் விபூதியும் அவருக்கெனவே வடிவமைக்கப்பட்டதோ ? காலை மாலை சந்தியாவந்தனம் தப்பாது செய்யும் தேஜஸ் முகத்தில் தெரிந்தது, [ அடியே .. சைட்டா? நேரம் தெரியுமா ? மனசாட்சி குமட்டில் குத்தியது ] பார்வையை தழைத்து .. காக்கை-க்கு அன்னமிட்டு , டிபன் கொடுத்து , box கட்ட [அட என்னவரக்குங்க...] 8.40.. எனக்கு BP பார்க்கமாலேயே 140/100, ரீடிங் மனதுக்குள் தெரிந்தது ... உண்டு முடித்தவர், உடை மாற்றி, கார் சாவி கையில் எடுத்து , ஷூ மாட்டி நிமிர்ந்து என்னை ஒரு பார்வை, அடுத்த நொடி கேட் சாவி என் கையில், ஒருவழியாக அவரை வழியனுப்பி ..ப்ப்பாஹ் ..

அடுத்து ?? அர்ச்சனைக்கு கடவுள் வெயிட்டிங், மொத்தமாக இருபது நிமிடங்கள் அவருக்கு கொடுத்ததில், மனதின் டென்சன் அனைத்தும் காணாமல் போக, உடல் பாட்டரி ரீசார்ஜ் ஆனது. ஆபிஸ் கிளம்புவதற்கு உடைக்கு மாற... அம்மா வந்தார், அடுத்த தெருவில் தான் அவரது வீடு...

“என்னடி சிலிண்டர் காணோமா? அப்பா இப்போதான் சொன்னார் , எந்த கட்டைல போறவன் எடுத்தானோ தெரியலையே ?”, வந்ததும் வராததுமாய் புலம்ப ஆரம்பிக்க...

“ம்ம் .ச்சு , மா , விடுமா போயிடுத்து .. இனி பேசி என்னாகப்போறது ?, நான் கிளம்பறேன் பாத்துக்கோ ”, எனவும்,

"ஏய் .. ரெண்டு வாய் சாப்பிட்டு போடி ”

“தோசை வாத்ததே இருக்குமா , சாப்பிட்டுத்தான் கிளம்பறேன் ”

“லஞ்ச் கட்டிட்டயா?”

“ஆச்சும்மா ”, பேசிக் கொண்டே உண்டு முடித்து ,
முகம் /தலை திருத்தி, காரை வெளியே எடுத்து “வர்றேன்மா ” கூறி ஆபீஸ்–கு கிளம்பினேன் .. . பை -பாசில் போனால் 20 நிமிட பயணம்...

அலைபேசி அழைத்தது... ப்ளூ டூத்தில், "“ஹாய் மா “, என்றவள் பெரியவள் , அனிமேஷன் தான் படிப்பேன் , அதுவும் மெரிட் ஸீட் -இல் தான் என்று அடம் பிடித்து இரண்டாம் வருடம் படிப்பவள்..

"சொல்லு கண்ணா..",

"கிளம்பிட்டாயா ?, weakend நான் சொன்னது நினைப்புல இருக்கா?”

“ அப்பா வருவாரா தெரிலடா”,

“சரி அவரை விடு , நான் நீ குட்டிம்மா .ஓ.கே -வா?” " ஐனோக்ஸ்-ல 4.00P.M. ஷோ புக் பண்ணறேன் ..மா”,

“சரி” அரைமனதாய் ..உடனே ”சாப்டியா கண்ணா ?”,

“ஆச்சும்மா ... மா I’m sure you will enjoy.. தனோஸ் வரும்போது மாஸ் .. இது வேற லெவல் படம்மா . . செமையா இருக்கு ”,

அவளுக்கு தக்கவாறு “எத்தனை சூப்பர் ஹீரோஸ் இதுல மேல மேல போறங்கடி ? “ எனவும் , “மா அது சஸ்பென்ஸ் .. நான் சொல்லவே மாட்டேனே , life stone – கூட தானோஸ் கிட்ட வந்துடுச்சும்மா”,

“எப்பிடிடி?"

“படம் பாத்து தெரிஞ்சுக்கோ , நாம போறோம் .. சரியா ?”

சிரித்துக்கொண்டே .."ஓகே டா", என்றேன் .

பொறுப்பான பெண் . தனக்காக மட்டுமல்லாது மொத்த வீட்டுக்காகவும் சேர்த்து யோசிப்பவள் . சின்னவள் பேரழகி என்றால் .. பெரியவள் தேவதை ...மக்களை நினைத்தவுடன் டென்ஷன் குறைந்து , ஆபீஸ் சென்று வேலையில் ஈடுபட்டேன் .

டீ டைம்-ல் . மீண்டும் தலை தூக்கிய கேள்வி

நான் எங்கே ?

மென்பொருள் மேலாண்மை செய்ய படித்தவளா ,
பெண்ணியம் பேசியவளா ,
சிந்தையில் சிவப்பு சித்தாந்தம் தாங்கியவளா?
இரு மக்களுக்கு தாயா ?,
என்னவரின் காதலியா ?,
பெற்றோரின் மகளா ?
நல்ல தோழியா?
கேள்வி மட்டும் பிரதானமாய் ….

மீண்டும் வேலையில் மூழ்கி , முடித்து கிளம்பி ….
வண்டியை ஸ்டார்ட் செய்ததும், அனிச்சையாய் டாஷ்போடில் ஒட்டியிருந்த ஈஸ்வரனை பார்த்தேன் …ஸ்படிக லிங்கம், .. என் முகம் காண்பித்தது …

"நீயே நான்...நானே நீ
உன்னுள்ளே நானிருக்க எதை தேடுகிறாய்?
நான் எனக்காக எதுவும் செய்வதில்லை..
ஆனாலும், அனைத்துமாய் நான் இருக்கிறேன்...
நீயும் அதுவே..."
என்றது ..
திகைத்து விழித்து சுற்றும் பார்த்தேன்.
அன்பே சிவம் அன்பே சத்தியம் - அர்த்தம் புரிந்தது...
மீண்டும் முழு உத்வேகத்துடன் நான் ....

Dedicated to all Working Women [at home or/and at office]

பெண்கள் தின நல்வாழ்த்துகள்

aadhi...
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஏற்கனவே படித்த
பதிவாகயிருந்தாலும் மீண்டும்
படிக்க நல்லாவே இருக்கு,
ஆதிலக்ஷ்மி டியர்

அனைவருக்கும் என்னுடைய
இனிய மகளிர் தின
நல்வாழ்த்துக்கள்
 
Last edited:

Chitrasaraswathi

Well-Known Member
அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் வேலைக்கு செல்லும் மகளிர் நிலையை. வீடு ஒத்துழைப்பு கொடுத்தால் பெண்கள் எதையும் சாதிப்பார்கள் என்பதற்கு உதாரணம் நீங்கள். மகளிர் தின வாழ்த்துகள் சகோதரி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top