நான் இனி நீ epilogue by Kokila amma

Kokila Amma

Well-Known Member
#1
'டைட்டன் எனக்கு ரொம்ப பயமா இருக்கு' தீபனின் பயந்த குரல்.

'எனக்கு ரொம்ப பயமா இருக்கு தீப்ஸ்' அனுவின் நலிந்த குரல்.

'எப்படி அவுங்களை நம்ம பேஸ் பண்ண போறோம்.எவ்வளவோ பிரச்சனை பேஸ் பண்ணனும் போது கூட நான் இப்படி பயந்தது இல்லை. ஆனா இந்த பிரச்சனை நினைச்சா இரண்டு நாளா தூக்கமே வரவில்லை' தீபன் ராகாவின் மனதின் கூக்குரல்.

'தீபன், ராகா இரண்டு பேரும் இதுக்கே பயந்தா எப்படி. இன்னும் நீங்கள் பார்க்க வேண்டியது நிறைய இருக்கு. எவ்வளவு பெரிய பிரச்சனை எல்லாம் ஈஸியா சால்வ் பண்ண உங்களால இந்த பிரச்சினையை ஃபேஸ் பண்ண முடியாதா?'. சக்ரவர்த்தியின் ஆறுதல் குரல்.

'யாம் பேற்ற துன்பம் பெருக நீயும்' உஷா அம்மாவின் நக்கல் குரல்.

'Deepes and Raga. Go get ready it's getting late' Deepika's strict voice

இங்க ஆளாளுக்கு பயப்படுவதற்கு காரணம் என்னன்னா இன்னைக்கு தீபன் ராகா ஓட பொண்ணு தீபிகாவின் parents teachers meeting. வயது 5.அதுக்குதான் இந்த பில்டப்


கடந்த ஐந்தாண்டுகளில் நடந்த நிகழ்வுகள், உங்கள் பார்வைக்கு


மிதுன் ஹாஸ்பிடலில் பேசிய ஒவ்வொரு விஷயமும் தீபனின் மனதை மிகவும் பாதித்தது. நான் அப்படி என்ன செய்தேன், ஏன் இப்படி மிதுன் பேசினான் என்று யோசித்துக் கொண்டிருந்த பொழுது, நாகா கூறிய விவரங்களை கேட்டு தீபனால் ஜீரணிக்கவே முடியவில்லை.

நாகா கூறியது மாடலின் கொலைக்கும் மிதுனுக்கு சம்பந்தம் இருப்பதாகவும், மிதுன் நிறைய பேரிடம் அப்பாவின் பெயரை சொல்லி லஞ்சம் வாங்கியதாகவும் அதை அவன் சுவிஸ் பேங்க் அக்கவுண்ட்டில் வைத்துள்ளதாகவும் நாகா கூறினான்.

எப்படி உணர்கிறோனம் என்று திபனால கூறமுடியவில்லை.

மிதுன் மனதளவில் இவ்வளவு கெட்டவனாக இருப்பான் என்று தீபன் கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை.

தான் இத்தனை நாளாய் என்ன செய்தேன் மிதுனுக்கு எப்படி இவ்வளவு நாள் கவனிக்காமல் இருந்தேன். இப்பொழுது தீபனின் மனதில் மிதுனின் மேல் சிறிதும் இரக்கம் இல்லை.

அந்த நேரத்தில் தான் டாக்டர் வந்து மிதுன் brain dead என்று கூறினார்.

இதைக் கேட்டதும் தீபனுக்கு அப்பாவும் அம்மாவும் எப்படி இதைத் தாங்கிக் கொள்வார்கள் என்ற எண்ணம்தான் வந்ததே ஒழிய மிதுன் மேல் சிறிதும் பாசம் வரவில்லை.

அதனால் டாக்டரிடம் இந்த ஹாஸ்பிடலில் யாருக்கேனும் உறுப்புகள் தானம் தேவைப்பட்டால் மிதுன் உறுப்புகளை தானம் செய்வதாக எழுதிக் கொடுத்தான் டாக்டரிடம்.

ஆம் இருக்கும் போது பயன்படாது இறந்த பின் பயன்படட்டும்.

உஷா மிதுன் தீபனை கொலை செய்ய முயற்சி செய்ததை சக்ரவர்த்தியிடம் கூறி இருந்தால் அவரும் பெரிதாக மறுப்பு தெரிவிக்காமல் உறுப்புகள் தானம் செய்ய சம்மதித்தார்.

உஷா அம்மாவுக்கு தான் ஒழுங்காக பிள்ளைகளை வளர்க்கவில்லை என்று வருத்தப்பட்டார். எல்லா இந்த அரசியலினால் தான் என்று இந்த கட்சி அரசியலை வேறுத்தார்.

தீபனும் அப்படி ஒரு முடிவுக்கு தான் வந்தான்.

சக்ரவர்த்தியிடம் தீபனும் உஷாவும் கூறிவிட்டார்கள் இதோடு அரசியல் போது என்று. ஐந்தாண்டு முடியும் போது முற்றிலும் அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டு வந்து விட வேண்டும் என்று.

அதன்படி கடந்த நான்கு ஆண்டுகளாக தீபன்‌ , ராகா அவர்கள் மகள் தீபிகா எல்லோரும் வசிப்பது அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில். ஆறு மாதங்களுக்கு முன்பு தான் சக்ரவர்த்தியும் உஷாவும் அவர்களுடன் இணைந்து கொண்டார்கள்.

தீபன் தமிழ்நாட்டில் உள்ள தங்களின் கல்லூரி பிஸ்னஸ் எல்லாம் பொறுப்பானவர்களிடம் ஒப்படைத்திருதான். அதில் இருந்து வரும் வருமானத்தில் ஒரு பகுதியை மட்டும் தங்களின் பிற்காலத்திய தேவைக்கு வைத்துக்கொண்டு மீதியை ஒரு trust மூலமாக ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படுகிறது.

இந்த ஐந்தாண்டுகளில் தீபன் D village அனைத்து‌ தென் மாநிலங்களில் ஆரம்பித்து அதன் பொறுப்புகளை அந்த பகுதியில் வாழும் மக்களிடமே குடுத்து விட்டு கணக்கு வழக்குகளை பார்க்க காதர் ‌நாகா தர்மாவை‌மேற்பார்வையாளர்களாக நியமித்தான். அதில் இருந்து வரும் லாபத்தில் பாதி அந்த மக்களுக்கு மீதி காதர் நாகா தர்மாவுக்கும்.

அமெரிக்காவில் வாசித்தாலும் தன்னால் முடிந்த உதவிகளை நாகா தர்மா மூலமாக மறைமுகமாக செய்து கொண்டு தான் இருந்தான். அந்த டீ கடைகாரருக்கு Chennai D-villagein cook பதவியை வழங்கினான்.


தமிழ்நாட்டில் இருந்தால் தன் மகள் தீபிகாவுக்கு யார் மூலமாக தங்களின் பழைய வாழ்க்கை அதாவது தான் jailலில் இருந்து, ராகாவின் பேட்டி எதுவும் எந்த சூழ்நிலையிலும் தெரிய கூடாது என்பதே முக்கிய காரணம். As father and mother are real hero and heroine for children.

தீபிகாவை சாதாரண குழந்தையாக பண்புடைய சராசரி குழந்தையாக வளர்க்க வேண்டும் என்பது ஒரு காரணம். Without any shades of money.

தீபிகாவிக்கு எந்த காலத்திலும் தங்களின் அரசியல், பணம் , செல்வாக்கு எதுவும் தெரியக்கூடாது என்று உறுதியாக இருந்தான்.

தங்கள் இருக்கும் இடம் நெருங்கிய நண்பர்கள் தவிர யாருக்கும் தெரியாமல் பார்த்து கொண்டான். தங்கள் கடந்த கால விரோதிகளால் தீபிகாவிக்கு ஆபத்து வரக்கூடாது என்று எண்ணினான்.

அதனால் தாரா, லோகேஷ்வரன், புனித் ,தேவ் ,நீரஜா, காதர் நாகா தர்மா எல்லோரும் நேரம் கிடைக்கும்போது அமேரிக்கா வந்து போவது என்று தீர்பானது.

அமெரிக்காவில் ஒரு grocery store வைத்து ராகாவின் உதவித் நடத்தி கொண்டு வருமானத்தை பெருக்கிக் கொண்டு குடும்பத்தையும் பெருக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறான்.

Can we change the genes?
தீபிகா‌ கொஞ்சம் சேட்டைகார குழந்தை தான்.

அதுதான் parents teachers meeting போக ராகாவும் தீபனும் பயப்படுவது.

நான் இனி நாம்
நீ இனி நாங்கள்
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes