Sasideera
Well-Known Member
வணக்கம் நண்பர்களே!
என்னோட முதல் முயற்சி! சின்ன சின்ன கவிதைகள் எல்லாம் இங்க சைட்ல முன்னாடி போட்டு இருக்கேன்! ஆனால் கதையா எழுதியது இதான் முதல் முறை! இதை கதை என எல்லோரும் ஒத்துக் கொள்ள வேண்டும்! ஒரு புக் கிடைக்குமே என்று கலந்து கொண்டேன்! இந்த இடத்தில் எல்லா எழுத்தாளர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்! ஒரு எபிலாக் எழுதவே ஒரு வாரம் ஆனது! அதிலும் யோசிச்சு டைப் பண்ண கண்ணை கட்டுச்சு! ஆனால் நீங்க எல்லாம் இந்த அளவிற்கு எழுதும் போது பிரமிப்பே! அதனால என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் உங்களுக்கு!சரி இதை எல்லாரும் படித்துட்டு கருத்து சொல்லுங்க! மீ வையிட்டிங்! @Joher @umasaravanan @ThangaMalar @Sundaramuma @banumathi jayaraman
***************நான் இனி நீ!!!***********
5 வருடங்களுக்கு பிறகு!!!
ராகதீபம் அறக்கட்டளை திறப்பு விழா!
மத்திய உள்துறை அமைச்சர் சக்கரவர்த்தியின் தலைமையில்!!!
ஆம்! முன்பை விட இன்னும் முக்கிய பதவியில் இருக்கிறார்! இத்தனை வருட அரசியல் உழைப்பிற்கு அவருக்கு கிடைத்த சன்மானம் இது! அரசியலில் சாணக்கியனாக சக்கரவர்த்தி சாதித்தது! எப்போதும் போல் பின்னால் இருந்து நடத்தி கொடுத்தது தீபனே!
தீபன் சக்கரவர்த்தியில் சக்கரவர்த்தி என்பது தந்தை கொடுத்த அடையாளம்! தனிமனிதனாக அவன் தொழிலில் ஆயிரம் சாதிக்கலாம் அவன் புகழ் அடையலாம்! ஏன் அரசியலில் ராஜ தந்திரனாக கூட இருக்கலாம்! ஆனால் என்றுமே தந்தையை முன்னே நடக்க விட்டு அவரைப் பின்பற்றி அவர் வழி நிற்பவன்! அவரின் நிழலாக இருக்கும் தவப்புதல்வன்!
இன்றைய நாளில் எந்த ஒரு நல்ல விஷயத்தையும் ஊக்குவிக்க முன்னோடியாக ஒரு தலைவர் தேவை! அப்படியாக தான் சக்கரவர்த்தியை இதன் திறப்பு விழாவில் தீபன் முன்னிறுத்தினான்!
இந்த திறப்பு விழாவில் அரசியல் இல்லை! முழுக்க முழுக்க மக்களுக்காக!
ஒரு முறை அந்த டீக்கடைக்காரருக்கு தீபன் உதவி செய்த போதே ராகாவினுள் இப்படி ஒரு எண்ணம் இது போல நிறைய பேருக்கு ஏன் செய்ய கூடாது என, அதற்கு உருவம் கொடுத்து இன்று நிற்க வைத்தது அவளின் தீபனே!
இல்லாதவர்க்கு இருப்பவர் உதவ முன் வந்தால் உலகில் இல்லாமை ஏன் இருக்க போகிறது! ராகா இதை சொன்ன போது தீபனுக்கு பெருமையே! சொன்ன உடனே குடும்பத்தினருடன் ஆலோசித்து அதற்கான முயற்சியில் இறங்கிவிட்டான் தீபன்!
படைத் தளபதி பக்க பலமாக இருக்க மன்னனுக்கு தோல்வி ஏது! தீபனுக்கு நாகா தர்மா என இரட்டை படைத் தளபதி இருக்க கேட்கவும் வேண்டுமா!
தீபன் மற்றும் ராகாவின் தொழில் இலாபத்தில் தான் இந்த அறக்கட்டளை! உஷா மற்றும் தாரா தான் நிர்வகிக்கின்றனர். முதலில் இருவருமே ஒத்துக் கொள்ளவில்லை! ராகா தான் வலியுறுத்தி ஒத்துக் கொள்ள வைத்தாள்!
ஏனெனில் இந்த அறக்கட்டளை மூலம் கல்வி, மருத்துவம், முதியோர்களுக்கு மற்றும் பெண்களுக்குத் தேவையான உதவிகள் என எல்லா வகையிலும் உதவுமாறு நிறுவப்பட்டது!
மிகவும் பரபரப்பாக கூட்டமும் பிரபலமும்! வந்தவர்களை உஷாவும் தாராவும் வரவேற்க, தீபனும் லோகேஸ்வரனும் முக்கிய பிரமுகர்களிடம் பேசிக் கொண்டிருந்தனர்.
தேவ், புனித் பந்தி நடைபெறும் இடத்தை மேற்பார்வையிட, காதர் அண்ணாவும் உடன் இருந்தார்.
நீரஜா மற்றும் ஆர்த்தி ராகாவுடன் திறப்பு விழாவிற்கான பூஜை ஏற்பாடுகளை கவனித்து கொண்டு இருந்தனர்.
மேள தாளம் முழங்க அந்த இடமே களைகட்டியது.. இந்த ஆடம்பரம் எல்லாம் புகழுக்கான விளம்பரம் இல்லை, ஏழை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய இப்படி ஒரு இடம் இருப்பதை தெரியப்படுத்தவே இந்த கோலாகலம்.
பாதுகாவலர்கள் சூழ அவரின் சிறப்பு வண்டியில் சக்கரவர்த்தி வந்து கொண்டிருந்தார்.
நாகா வந்து கதவைத் திறக்க இறங்கியது சிபி சக்கரவர்த்தி.
தீபன் ராகாவின் தலைமகன். அவன் பின்னால் சக்கரவர்த்தி இறங்கினார்.
ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டி சட்டையில், கழுத்தில் தங்க செயின் ஒரு கையில் வைர பிரேஸ்லெடும், இன்னொரு கையில் வாட்சும் அணிந்து சக்கரவர்த்தியின் பிரதிபலிப்பாக இறங்கினான்.
கூட்டம் என்றாலே அலர்ஜி என்ற குழந்தைகளின் மத்தியில் இந்த கூட்டம் எல்லாம் என்னை ஒன்றும் செய்யாது என்பது போல அவன் தந்தையின் மிடுக்குடன் விழா நடைபெறும் இடத்தை நோக்கி நடந்தான்.
சிபி நடந்து வருவதைப் பார்த்து எல்லோரும் அங்கே கூடினர். தாரா, உஷாவிற்கு பேரனைப் பார்த்ததும் கையில் அள்ளிக் கொள்ள ஆர்வம் இருந்தாலும் முகம் கொள்ளாத புன்னகையோடு அவனையே பார்த்துக் கொண்டு இருந்தனர்.
அருகே வந்ததும் சக்கரவர்த்தி பேரனை கையில் ஏந்த சிபி ரிப்பன் வெட்டி ராகதீபம் அறக்கட்டளையை திறந்து வைத்தான்.
அந்நிகழ்வே சொன்னது எனது மகன்கள் அரசியலில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் என் பேரன் கண்டிப்பாக இருப்பான். அவனின் நிழலாய் இருந்து நான் அவனை வழிநடத்துவேன் என சக்கரவர்த்தி கூறுவது போல இருந்தது.
ரிப்பன் வெட்டி உள்ளே வந்ததும் பெண்கள் விளக்கேற்றி வைத்து விழாவை சிறப்பித்தனர்.
சிபி அதன் பிறகு முழு நேரமும் லோகேஸ்வரனோடு தான் இருந்தான்!
விழா நடந்த இடத்தில் அனைவரும் கிளம்பியதும் எல்லோரும் ஆசுவாசமாக அமர்ந்த போது புனித் தீபனிடம், "மச்சான் நீ இன்னும் ட்ரீட் மற்றும் பார்ட்டி வைக்கலடா".
தீபனோ குழம்பி எதற்கு டா ட்ரீட்?
மச்சான் நீ லவ் பண்றேன் என சொன்ன அப்பவே ட்ரீட் கொடுக்கிறேன் என எங்களை கூட்டிட்டு போனீங்க.. ஆனால் அங்க போனதும் நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டு எங்களை விரட்டி விட்டுட்டீங்க. இப்ப கல்யாணம் ஆகி சிபியும் பொறந்தாச்சு ஆனால் இன்னும் நீ தரலடா என சோகமாக சொல்ல...
தீபன் அவனை முறைக்க மற்றவர்கள் சிரித்தனர்... ராகாவோ அந்த நாளின் ஞாபகத்திற்கே சென்று தீபனை ரசித்து கொண்டு இருந்தாள். அவள் மீதான அவன் அக்கறையை அவளும், அவன் மீதான புரிதலை அவளும் உணர்ந்த ஒரு நாள் அல்லவா அது!
தீபனும் அவள் பார்வையை உணர்ந்து கண்ணடிக்க அவள் புன்னகை இன்னும் பெரிதானது.
சக்கரவர்த்தி விழா முடிந்ததும் சிறிது நேரத்தில் கிளம்பி விட, மற்றவர்கள் வந்தவர்களை உபசரித்து விழாவினை முடித்து வீடு வந்து சேர மதியம் ஆனது.
தீபன் மற்றும் ராகா அவர்கள் அறைக்கு செல்ல,
உஷா சிபியோடு மிதுன் அறைக்கு சென்றார்!
இன்னும் ஆழ்ந்த துயிலில் தான் இருக்கிறான். சமீபமாக தான் அவன் உடல்நிலையில் சற்று முன்னேற்றம்!
பணம், பதவி, புகழ், மது, மாது ஆசை யாரை விட்டது மிதுனை விட! அவன் முழுக் கெட்டவன் ஆக தான் என்ற தலைமை ஆசை தானே!
என்ன எதிரியை எதிரில் பார்க்காமல் தன் உறவுகளையே எதிரியாக உருப்போட்டுக் கொண்டான்.
கடைசி முறை நினைவு தப்பும் போது 'என்னை கொன்று விடு' என அவன் பேசியது தீபனை ரொம்பவே வருத்தியது.
இப்போது எல்லாம் தினமும் சில நேரம் எல்லோருமே அவனிடம் பேசினர்.
சில சமயம் தீபனுக்கு ' டேய் அண்ணா' என்ற அழைப்பிற்கு பிறகு பேச்சு வராது.
எதிரியை மன்னிக்கும் அளவிற்கு நமக்கு துரோகியை மன்னிக்க வரவில்லையே!
ஆனாலும் தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடுமே!
எப்படியோ ஏதோ ஒரு இடத்தில் தவறிவிட்டான்! மறக்க முடியவில்லை எனினும் மன்னித்து விட்டான்.
அதுவும் ராகாவின் முயற்சியே! எல்லாரிடமும் பேசி புரிய வைத்தாள்.
நீங்க மிதுனை முக்கியமாக நினைத்து அனைத்தும் செய்தாலும் முன்னிறுத்தினாலும் அவர் அதை உணரவில்லை.
இப்ப இந்த நிலையில் அவர் ஆழ்மனம் நிர்மலமாக இருக்கும்.
அவரை விட்டு விலகாமல் நம்ம எல்லோரும் எல்லா நிலையிலும் அவர் உடன் இருப்போம் என புரிய வைங்க!
ஒரு மகனாக ஒரு அண்ணனாக அவங்க உங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை புரிய வைங்க!
அரசியல் பற்றி அதிகம் இல்லாமல் இந்த குடும்பத்திற்கு அவர் எவ்வளவு முக்கியம் என உணர வைங்க என அவள் கூறியதும் அவர்களும் செய்தனர்.
அவள் சொல்லி செய்தாலும் அவனிடம் பேசும் போது தீபன், சக்கரவர்த்தி, உஷா பல சமயங்களில் அவன் நிலைமைக்கு வருந்தவே செய்தனர்!
ஆரம்பத்தில் அவன் மீண்டு விட வேண்டும் என முழு நம்பிக்கையில் எல்லோரும் இருந்தாலும் அவன் நினைவு திரும்பி வரும் போது எப்படி இருப்பான்! பழைய மாதிரி எல்லோரையும் எதிரியாக பாவிப்பானா அல்லது உறவாக நேசிப்பானா என்பது குறித்து மனதோரம் சிறு கலக்கமே!
உஷாவிற்கு இந்த குடும்பம் சிதைவதில் விருப்பம் இல்லை என்பதை விட என் மகனை தவற விட மாட்டேன் என்ற எண்ணமே அதிகம்!
அதற்காகவே அவனுடன் இன்னும் அதிக நேரம் செலவழித்தார்!
சிபியையும் உடன் வைத்துக் கொண்டு அவனின் அன்றாட நிகழ்வுகளை மிதுனிடம் பேச வைத்தனர்.
மற்றவர்களை விட உஷாவிற்கு மிகுந்த நம்பிக்கை அவனை என் மகனாகவே மீட்டெடுப்பேன் என்று! அதனால் முன்பு இருந்த கலக்கம் இப்போது இல்லை!
மனதினை அமைதிப்படுத்த நல்வழிப்படுத்த தாயை விடவும் சிறந்தவர் உண்டோ!
தம்பியுடையான் படைக்கு அஞ்சான்! அதை மிதுனும் விரைவில் உணரும் காலம் வருமோ!
வீடு வந்ததும் களைப்பில் ராகா உறங்கி விட, அவளறியாமல் தீபன் இருவருக்கும் பெட்டி அடுக்கிக் கொண்டு இருந்தான்!
விழாவில் ராகா மகிழ்வுடன் இருந்தாலும் அவளுள் வேறேதோ சிந்தனை ஓடியதை தீபன் கண்டு கொண்டான்.
அதை முன்னிட்டே இந்த திடீர் பயணம்! அறக்கட்டளை ஏற்பாடு, தொழில், அப்பாவின் பொதுக் கூட்டங்களின் ஏற்பாடு என இருவருமே ரொம்ப ஓடிக் கொண்டிருந்தனர்.
இருவருக்குமே ஆளை விழுங்கும் அளவிற்கு வேலை இருந்தாலும் இந்த இடைவேளை தேவைப்படுகிறது! ஒரு இரண்டு நாள் பயணமாக ஏற்பாடு செய்தான்!
பெட்டி அடுக்கி முடிந்ததும் அவனும் அவளை மெதுவாக இழுத்து தன் மேல் சாய்த்து அணைத்தாற் போல படுத்துக் கொண்டான்!
படுத்தாலும் ஒரு கையில் அவளை அணைத்தாற் போல தாங்கி மறு கையால் அவனின் ஆசை மச்சத்தை வருடபடியே, என்ன யோசிக்கிறா இவ, என்னவா இருக்கும்னு அவனுக்குள் சிந்தனைகள்! அதோடு களைப்பில் உறங்கியும் விட்டான்!
மாலை நெருங்கவும் தீபன் முன்னே எழுந்து ரெடி ஆகி, அவளை எழுப்பினான்.
ராகா! ராகா! டைட்டன் எழுந்திரு!என அவளை உலுக்க, மெதுவாக கண் விழித்து என்ன தீப்ஸ்? எதுக்கு இப்ப எழுப்பற?
எழுந்து ரெடி ஆகி வா ராகா! வெளியே கிளம்பணும்
எங்கே தீப்ஸ்?
அதெல்லாம் போகும் போது சொல்றேன்.
முதலில் சீக்கிரம் ரெடி ஆகி வா... டைம் ஆகுது.
எங்கே என சொல்லமாட்டானாம், தூங்குறவளை எழுப்பி விட்டு அதிகாரத்தை பாரு என அவள் முனுமுனுத்துக் கொண்டே ரெடி ஆகி வந்தாள்.
தீபனும் புன்சிரிப்புடன் அவளை அழைத்துக் கொண்டு கீழே வர உஷா ஹாலில் இருந்தார்.
ஆன்ட்டி சிபி எங்கே?
அவன் என்னமோ இன்னைக்கு ரொம்ப நேரம் விளையாடிட்டு இப்ப தான் மா தூங்குறான்.
எதாவது சாப்பிட்டானா ஆன்ட்டி? இன்னைக்கு அவனை சரியாகவே நான் கவனிக்கவில்லை என வருந்த...
அதனால என்னமா நான் சாப்பிட வைத்து தான் தூங்க வைத்தேன்.
சிபி, அவன் அப்பா மாதிரி அடம் இல்லை சமத்து குட்டி. என் சொல் பேச்சு கேட்கிறான் என பேரனை பெருமைப்படுத்தி மகனுக்கு ஒரு குட்டு வைக்க, தீபன் பொய் கோபத்தோடு தாயை முறைத்துக் கொண்டு இருந்தான்.
உஷா, சரி! நீங்க இன்னும் கிளம்பவில்லையா?
தீபனோ இதோ கிளம்பிட்டோம் மா..
பத்திரமா இருங்க! எதாவது என்றால் உடனே கால் பண்ணுங்க!
லோகேஸ்வரன் அங்கிள் வெளியூர் போய் இருக்கார்! அதனால ஆன்ட்டியை இங்க வர சொல்லி இருக்கேன்.
சரி டா! நீங்க பத்திரமாக போயிட்டு வாங்க!
ராகாவோ, எங்கே? எனும் விதமாய் அவன் புறம் திரும்ப, அவனோ அவளிடம் ரகசியமாக இரண்டாவது ஹனிமூனுக்கு உன்னை கடத்திட்டு போறேன்! வா! என கண்ணடிக்க, அவளோ வெட்கச் சிவப்பை மறைத்து அவனை முறைத்துக் கொண்டு கிளம்பினாள்.
இருவரும் வெளியே வந்தால் காரின் அருகே நாகா மற்றும் தர்மா நின்று கொண்டு இருந்தனர். ராகாவிற்கு சிரிப்பு வர தீபனோ அவர்களை முறைத்து கொண்டே, டேய் இங்க என்னடா பண்றீங்க ?
நாகா தான் , உங்கள ஏர்போர்ட்ல விட்டுட்டு வரோம் என்றான் .
தீபனோ, அதெல்லாம் ஒன்னும் வேணாம் நாங்களே போறோம் .
இவனுங்களும் அவங்க பொண்டாட்டி கூட வெளிய போக மாட்றானுங்க நம்பலையும் போக விட மாட்றானுங்க என முணுமுணுக்க ,ராகாவின் சிரிப்பு பெரிதானது.
தீபன் அவளை முறைத்து அவர்களை எப்படியோ சமாளித்து ஏர்போர்ட் கிளம்புவதற்குள் ஒரு வழி ஆனான். காரில் வரும் போது மௌனமே ஆட்சி செய்தது.
மூணார் D - Village !!!
தீபனின் கனவான D - Village இப்போது பெரும்பாலான இடங்களில் பிரபலம் .
நகரின் பரபரப்பான வாழ்க்கையில் இருந்து எல்லாரும் ஓய்வு எடுக்க கிராமத்தையும் காட்டையும் தேடுகின்றனர். அப்படி மனதிற்கு அமைதியும் ஒரு வகையான இதமும் கொடுக்கும் இடமாக இப்போது இந்த குடில்கள் பிரபலமாகின.
அதிலும் கேரளா,கூர்க் ,கர்நாடகா என ஒரு சில குடில்கள் மணமானவர்களுக்கு தேனிலவு இடமாக இன்னும் அதிக ஸ்பெஷல்.
அவர்களின் தனிமைக்கும் அவர்களின் நேரத்தை ரம்மியமாக்கவும் மலைகளுக்கு நடுவில் சுற்றிலும் பசுமையும் குளிரும் சூழ்ந்த இடத்தில் அருவியின் ஓரத்தில் இந்த குடில்கள் தனித்துவமாக இருக்கும்.
அதில் மூணாறில் தீபனின் பிரத்யேகமான குடிலுக்கு வந்தனர்.
ரூமிற்கே சாப்பாடு வர வைத்து சாப்பிடும் வரை இருவரும் பெரிதாக பேசிக் கொள்ளவில்லை .
இருவரும் கட்டிலில் ஓய்வாக அமர்ந்ததும் தீபன் தான் ஆரம்பித்தான்.
ராகா!
சொல்லு தீப்ஸ்!
என்னாச்சு உனக்கு ? பங்க்ஷன்ல நல்லா தான் இருந்த ஆனா அப்ப அப்ப
ஏதோ யோசிக்கற ? அப்படி என்ன யோசனை?
அவள் அமைதியாக இருக்கவும் ... ராகா ! என தீபன் அழுத்தி கூப்பிட !
ஒண்ணுமில்லை தீப்ஸ் !
சொல்லு ராகா !
உனக்கு அரசியலில் இன்ட்ரெஸ்ட் இருந்து எனக்காக வேணாம் னு விட்டு கொடுத்தியா தீப்ஸ் ?
இவ்ளோ வருஷம் இல்லாம இப்ப ஏன் இப்படி ஒரு எண்ணம் உனக்கு? என தீபன் கேட்க
இல்ல தீப்ஸ், இதைப் பற்றி முன்னாடி நாம் பேசி இருக்கோம். இன்னைக்கு விழாவிற்கு வந்தவங்க எல்லோரும் உன்கிட்ட இதைப் பற்றி பேசினதும் என்னவோ suddenly i felt confused!
ஒருவேளை என்னோட தனிப்பட்ட ஆசைகளால் என்னால உனக்கு விருப்பம் இருந்து இந்த அரசியல் பொது வாழ்க்கை விட்டு கொடுத்தாயோ என ஒரு எண்ணம்!
அவள் இப்படி சொன்னதும் இன்று விழாவில் இதைப் பற்றி மற்றவர்கள் கேட்டது அவனுக்கு நினைவு வந்தது!
அரசியல்வாதிகளில் ஒருவர், ஏன் தீபன் தனிமனிதனாக தொழில் சாம்ராஜ்யம் மூலம் உனக்கு செல்வாக்கு அதிகம் இருக்கே! கூட அரசியல் பலமும் இருக்கே! நீ ஏன் நிற்க கூடாது!என கேட்க
இன்னொருவரோ எப்படியும் மிதுன் திரும்பி வந்தாலும் அவரை ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகமே! அதற்கு இப்ப அவரோட நிலைமையை உங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு இறங்கலாமே!
இன்னும் ஒரு சிலரோ தொழிலதிபனாக இந்த மாதிரி உதவிகள் செய்வதற்கு பதவியில் இருந்து செய்தால் மக்களுக்கு நல்லதா போச்சு நமக்கும் நல்லா இருக்கும் என கூற!
இது போல ஒவ்வொருவரும் பேச அதை சக்கரவர்த்தியும் கவனித்தார், தீபனோ அதை ஒரு பொருட்டாக மதிக்காமல் சிரிப்புபோடு கடந்து விட்டான்.ஏனெனில் எல்லோருக்கும் அவன் விளக்கமளிக்க முடியாது! அதற்கு அவனுக்கு அவசியமும் இல்லை!
ஆனால் இவளை இந்த விஷயம் இப்படி குழம்ப செய்யும் என்பது தீபன் எதிர்பாராதது!
அவள் தீபனின் பதிலுக்காக அவனையே பார்க்க,
தீபன், ராகா! இங்க வா! என அழைத்ததும் அவன் அருகில் நெருங்கி அமர்ந்தாள்!
அவன் அவள் கைகளை எடுத்து தனக்குள் பொத்தி வைத்து அவளை ஆறுதலாக அணைத்தபடி பேசினான்!
ராகா! இதான் கடைசி தடவை இதைப் பற்றி நாம் பேசுவது! இது இப்ப அவசியமும் கூட!
எனக்கு எப்பவுமே இந்த அரசியல் பதவி புகழ் இதில் விருப்பம் இல்லை!
ஆனால் அப்பாவுக்கு பின்னாடி இருந்து அவருக்கு எல்லாம் நடத்தி கொடுப்பது எனக்கு பிடித்து இருந்தது!
மனிதர்கள், சூழ்நிலையையும் பணத்தையும் கையாள நான் கற்றுக் கொண்டதே இப்படி தான்! அதனால இதிலே அப்படியே நான் இறங்கிட்டேன்! இதை தாண்டி எனக்கு வேற எண்ணம் இல்லை!
அது மட்டுமில்லாமல் அரசியல் தொழில் என எப்படி இருந்தாலும் எங்க அம்மா குடும்ப அமைப்பை கலைய விட்டது இல்லை! அதனால் எனக்கும் எப்போதும் அப்படி ஒரு நிறைவான குடும்ப வாழ்க்கை வாழணும் என எண்ணம்!
ஜெயிலில் இருந்து வெளியே நான் வந்த பிறகு அப்பாவும், என்ன முடிவு பண்ணி இருக்க என கேட்டார்.
அப்ப நான் அவர்கிட்ட எனக்கு இதெல்லாம் வேணாம் பா! இதில் எனக்கு விருப்பமும் இல்லை! எனக்கு ராகா போதும் பா! எப்பவும் போல நான் உங்க கூட இருக்கேன்னு சொன்னேன்.
என்ன போட்டியே இல்லாத இடத்தில் நான் விட்டுக் கொடுப்பது போல மிதுன் நினைத்து விட்டான்!நாளைக்கு அவன் கண்டிப்பாக எழுந்து வருவான் அவன் என்ன முடிவெடுத்தாலும் சரி அவன் பின்னாடி கண்டிப்பா நான் இருப்பேன்! இது அவன் விருப்பப்பட்டாலும் இல்லைன்னாலும்...
இன்னைக்கு பேசினால் போல இன்னும் நிறைய நடக்கும்! அப்ப இதெல்லாம் நீ மைண்ட் பண்ணாத! அதனால தான் இப்ப இவ்வளவு சொல்றேன்!
என்ன ஓகே வா!
அவளுக்குள் இப்போது ஒரு தெளிவு!
தீபனிடம் குறும்பாக, ஏன் தீப்ஸ் நம்ம ஒருத்தர் மேல ஒருத்தர் இருக்க காதலை உணர, ஒருத்தர் ஒருத்தரை புரிந்து கொள்ள வாழ்ந்து பார்க்கணும் என சொன்னல இப்ப அதெல்லாம் உணர்ந்து விட்டாயா?
அவனும் அவளின் குறும்பை அறிந்து, அது மட்டும் தான் ராகா இன்னும் உணரவில்லை! ஒருவேளை நம்ம புரிதலை உணர இந்த ஒரு பிறவி போதாதோ என்னவோ! எனக் கூறி கண்ணடிக்க...
உடனே அவனே, வாழ்க்கை என்னவோ நிறைவாக தான் இருக்கு இன்னும் ஒரு குறை மட்டும் தான், அதுவும் சீக்கிரம் நிறைவேறிடும் என நினைக்கிறேன்!
என்னவோ என அவள் நிமிர! அவள் பார்வை அறிந்து, சிபி எப்படியும் அவங்க தாத்தா பாட்டிங்களுக்கு இருக்கான்! ஆனால் எனக்கு இந்த ராட்சசி போல ஒரு பெண் குழந்தை வேணுமே!
ராகாவோ! ராஸ்கல் என முனுமுனுத்து அவன் பேச்சை கவனியாதது போல அவனிடம் இருந்து விலகினாள்!
ஏய்! ராகா! எங்க போற! அதான் சீக்கிரம் நிறைவேறிடும் என சொன்னேனே! அப்புறம் என்ன வா! என கள்ளத்தனமாக சிரித்தான்.
ராகாவோ! அவளின் வெட்கம் மறைத்து நான் போய் ஸ்விம் பண்ண போறேன் என ஓடி விட்டாள்!
தீபன் அவளை விரட்ட எந்திரிக்க அவனுக்கு போன் வந்தது! அதை பேசி முடித்து அவனும் உடை மாற்ற அறைக்கு வந்தான்.
அப்போது மீனோடு மீனாக ராகா நீந்துவதைப் பார்த்தான்!
முதல் முறை தேனிலவு சென்ற போது அந்த கடலுக்கு அடியில் அண்டர் வாட்டர் ரூமைப் பார்த்து அவள் குதூகலித்ததை வைத்து இங்கு மூணாறில் கண்ணாடியால் செயற்கையாக அவன் குடிலுக்கு மட்டும் பிரத்யேகமாக கட்டினான்!
அப்படியே கட்டிலில் மல்லாக்க படுத்து கொண்டு அவள் நீந்துவதையே ரசித்துக் கொண்டிருந்தான்!
இவள் மட்டும் போதுமே! இவளுடனான என் வாழ்க்கை மட்டும் போதுமே! வேறு என்ன வேண்டும் எனக்கு!அதைத் தவிர இந்த பதவி, பணம், புகழ் அதிகம் சந்தோஷம் தருமா என்ன?
நிலவொளியில் நீந்தியபடி நீ!!!
அதிலே உன்னுள் உறைந்தேன் நான்!!!
என்னை ஏறெடுத்தும் பார்க்காமல் நீ!
திரும்பி என்னை பார்த்திடுவாயா என நான்!
என்னை அலட்சியப்படுத்தும் நீ!
உன்னை அசராமல் பார்க்கும் நான்!
என்னை பணயம் வைத்த நீ!
உன்னை சிறை எடுத்த நான்!
என்னை நிமிர்வால் அசத்தும் நீ!
உன்னை ரசிக்கவே நான்!
என்னை விலக்கி நிறுத்தும் நீ!
உன்னை விடாமல் துரத்தும் நான்!
என்னை வெறுக்கும் நீ!
உன்னை விரும்பும் நான்!
என்னை மயக்கும் மச்சக்காரி நீ!
உன்னை முத்தத்தால் கிறங்க வைக்கும் காட்டேரி நான்!
என்னை கோபப்படுத்தும் நீ!
உன்னை குளிர்விக்கும் நான்!
என்னை நெகிழ வைக்கும் நீ!
உன்னை தைரியப்படுத்தும் நான்!
என்னை எதிர்பார்க்கும் நீ!
உன்னை காயப்படுத்தும் நான்!
என்னை வேண்டாமென நீ!
உன்னை யாசிக்கும் நான்!
என்னை கர்வப்படுத்தும் நீ!
உன்னை நிறைவாக்கும் நான்!
என்னை தடுமாற வைக்கும் நீ!
உன்னை நெருங்கும் நான்!
என்னை காக்கும் நீ!
உன்னை நம்பும் நான்!
என்னை மீள வைக்கும் நீ!
உன்னை கௌரவிக்கும் நான்!
என்னை அரவணைக்கும் நீ!
உன்னில் அடைக்கலமாக நான்!
என்னை வெற்றி பெற வைத்த நீ!
உன்னிடம் தோற்கவே நான்!
என் வாழ்க்கையாக நீ!
உன் நம்பிக்கையாக நான்!
என்னை மீட்டும் ராகமாய் நீ!
உன்னில் ஒளிரும் தீபமாக நான்!
நீ நான் என்பது நாமாக மாற்றியது காதலா அல்லது புரிதலா!
காதலின் புரிதலை உணர முடிவில்லா வாழ்க்கையில் இன்னும் உன்னுடன் வாழ்ந்து பார்த்திடவே விழைகிறேன்!!
நீ இனி நானாக!
நான் இனி நீயாக!
நாம் இனி காதலாக!
அவன்:: நான் இனி நீயா!
அவள்:: நீ இனி நானா!
காதல்:: டேய் நான் எங்கே டா? முதல்ல இருந்து ஆரம்பிக்கிறானுங்களே!
உன்னைத் தான் தேடிட்டு இருக்கோம்!!

Last edited: