அருமையான பதிவு மிலா
.வாணன் குடும்ப தொழிலை பற்றி தெரிந்து கொள்ளும் வரை பொறுமையாக நடந்து கொள்ள,அதை அவன் பலவீனமாக நினைத்து பாலாம்பிகையின் பேரன்கள் திமிராக நடந்து கொள்வதும்,வேலையில் இருந்து நீக்கிய பிறகும் யூனியன் மூலம் வேலை நிறுத்தம் வரை செல்வதும்,பணத்தை கையாடல் செய்ததை கூறி ஊழியர்களை அடக்குவது அருமை
.
யாரோ விட்ட சாபத்துக்கே இந்த நிலமை,வாணன் பழி வாங்க நெனச்சா என்ன ஆகுமோ
. பாலாம்பிகை வாய தொறக்காம போறது தான் அவ குடும்பத்துக்கே நல்லது
.
குடிச்சுட்டு நடந்த எதுவும் வாணனுக்கு ஞாபகம் இல்லையா
.ஏற்கனவே குற்றவுணர்ச்சியில் இருப்பவனிடம் நடந்ததை சொல்லாமல் மறைத்ததோடு,வாணனை மன்னித்து ஏற்றுக்கொண்டாள்....
வாணன் தன் தாயின் மனநிலை பாதிக்க காரணமான நிலாவை பழிவாங்க திருமணம் செய்ய,
நிலா தாயின் வைத்திய செலவுக்காக திருமணம் செய்ய,வாணன் நல்லவனாக நடித்து அவள் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவது இவன் ஹீரோவா,வில்லனா என நினைக்க வைக்குது
வாணன்,நிலா பிரிவுக்கு பிறகு நடப்பவை எல்லாம் எதிர்பாராத திருப்பங்கள்.லேகாவின் வரவு, சுசிலா குணமாவது,நிலா,லேகாவின் மகள் என்ற உண்மையும்,வாணன் பழிவாங்க நினைத்த ஈஸ்வரனின் மகள் நிலாவும் நாயகி நிலாவும் ரெட்டை குழந்தைகள் என்ற உண்மையும் அக்கா என நினைத்து தங்கையை பழி வாங்கியதை எண்ணி துகிலனின் குற்றவுணர்ச்சி
.
வளைகாப்புக்கு வாணனிடம் வேலை செய்தவர்களை லேகா அழைத்து நிலாவுக்கு ஏற்பட்ட களங்கத்தை நீக்குவது என விறுவிறுப்பு
.
நிலாவை சமாதானம் செய்தால் தான் தன்னோடு பேச வேண்டும் என சுசிலா கூற வாணன்,நிலாவை சமாதானம் செய்ய எடுக்கும் முயற்ச்சி எப்படி இருந்தவன் இப்படி ஆகிட்டான்னு தோனுது
. குழந்தைகளின் விழாவில் வைர கழுத்தணி கொடுத்து,காதலையும் சொல்லி அசத்திட்டான்
.
அருமையான கதை.நிறைவான முடிவு. வாழ்த்துக்கள் மிலா
.