நம்பிக்கை எனும் விதை - சாந்தி கவிதா

Advertisement

விடை பெற
எண்ணும் மனமே!
விடை தேட எண்ணாததேனோ??

விலகி செல்லுவதில்
உள்ள வலிமை,
நின்று
நிலைப்பதில் இல்லையா??

வாழ்க்கை எனும் வெள்ளத்தில்
கரை சேர வழியா கிட்டாது??
மனதின் வலிமை தான் உடலையும் இயக்குவதாய்;

உடல் வீழ்ந்தாலும்
மனம் உண்டல்லோ;
பகலவன் மறைவது
புது பொழுது புலரத்தான்;

நம்பிக்கை எனும் துடுப்பில்,
வாழ்க்கை எனும் படகை
நகர்த்துவாய் மனமே!!!

நம்பிக்கை என்றும் விதையே;
அதை மரமாக்குவதோ
அல்ல உரமாக்குவதோ;
உன் கையில் மனமே!!!!

-சாந்தி கவிதா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , mallikamaniv[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top