Harini paramasivam
Member
முன்கதைச் சுருக்கம்:
மிர்த்துனா மற்றும் மிதுன் இருவருக்கும் இரண்டு அந்நியர்களுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அது விருப்பமற்ற நிச்சயதார்த்தமாக இருந்தது. ஆனால் மிர்த்துனா தனது குடும்பத்தின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக திருமணத்திற்கு ஒப்புக்கொண்டாள். ஆனால் மிதுனுக்கு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் தனது வாழ்க்கையை முடிக்க விருப்பமில்லை. அவன் கல்லூரியில் ஒரு பெண்ணை காதலித்ததாக கூறினான்.
நினைவுகள் -7
மிதுன் இனியாவை நேசித்திருப்பார் என்ற குழப்ப நிலையில் ஹரிஷ் இருந்தார் ..
ஹரிஷ்: இருவரும் காதலித்தீர்களா?
மிதுன்: இல்லை, நான் இன்னும் என் காதலை அவளிடம் வெளிப்படுத்தவில்லை. எனது முன்மொழிவுக்குப் பிறகு அவள் எப்படி நடந்துகொள்வாள் என்று எனக்குத் தெரியவில்லை. எனவே, நான் அந்த தருணத்திற்காக காத்திருக்கிறேன்.
ஹரிஷ்: ஓ கே..
திடீரென்று மிதுனின் தாய் அவர்களை
அழைத்தார். நாள் நன்றாக கழிந்தது. மேலும் ஹரிஷ் தனது வீட்டிற்குத் திரும்புகிறார்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு. மிதுனின் காதலி பற்றி தெரியாமல் ஹரிஷால் தனது வழக்கமான வேலையைச் செய்ய முடியவில்லை. எனவே, ஹரிஷ் மிதுனின் வீட்டிற்குச் சென்று அவரது ஒருதலைக் காதலைப் பற்றி கேட்க திட்டமிட்டார்.
அலுவலக வேலைகளை முடித்ததும்,மாலையில் ஹரிஷ் மிதுனின் வீட்டிற்கு செல்கிறார்.
மிதுனின் தாய் ஹரிஷை வரவேற்றார். ஆனால் மிதுனின் பெற்றோர் மிகவும் மனச்சோர்வடைந்துள்ளனர்.
ஹரிஷ்: நீங்கள் இருவரும் மனச்சோர்வடைந்திருக்கிரீர்கள் என்று நினைக்கிறேன், என்ன நடந்தது?
மிதுனின் தந்தை: ஆமாம், எங்கள் மகன் மிதுனைப் பற்றிய கவலை தான்.
ஹரிஷ்: ஏன் என்ன காரணம்?
மிதுனின் தந்தை: அவனது திருமணத் திட்டம் நின்றுவிட்டது, அந்த பெண் மிதுனை திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை என்று கூறிவிட்டாள்.
ஹரிஷ்: அவள் ஏன் அப்படி சொன்னாள்?
மிதுனின் தந்தை: மிதுனுக்கு தன்னைப் பிடிக்கவில்லை என்று சொன்னாள். எனவே, இந்த திருமணத்தை நிறுத்த அவள் விரும்பினார். அது அவளுடைய தவறு அல்ல, அது எங்கள் தவறு. நாங்கள் எதை சொன்னாலும் மிதுன் செய்வான். அதேபோல் இதையும் நாங்கள் நினைத்தோம். ஆனால் அது உண்மையல்ல, இது அவனுடைய வாழ்க்கை , அவன் சொந்தமாக முடிவெடுக்க வேண்டும், அவனின் விருப்பமே முக்கியம் என்னும் ஒரு பெரிய பாடத்தை நாங்கள் கற்றுக்கொண்டோம்.
ஹரிஷிற்கு தெளிவாக புரியவில்லை.
மிதுனின் தந்தை: அவன் யாரை விரும்புகிறான் என்பது பற்றி எங்களுக்கு ஒரு யோசனையும் இல்லை. ஒரு பெற்றோராக எங்களுடைய ஒரே ஆசை என்னவென்றால், அவன் எப்போதும் அவனது வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
ஹரிஷ்: சரி அப்பா. எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். அவன் நன்றாக இருப்பான். இப்போது, மிதுன் எங்கே?
மிதுனின் தந்தை: அவன் மாடி அறையில் இருக்கிறான். நீ போய் அவனுடன் பேசு.
ஹரிஷ்: சரி அப்பா.
ஹரிஷ் மிதுனின் அறைக்குள் நுழைகிறான்.
மிதுன்: ஏய், நீங்கள் எப்போது வந்தீர்கள்?
ஹரிஷ்: இப்போது தான், உன்னைப் பார்க்க வந்தேன். நிறுத்தப்பட்ட திருமணம் குறித்து உங்கள் அப்பா சொன்னார். என்ன நடந்தது?
மிதுன்: அன்று, இந்த திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை மற்றும் எனது கல்லூரி காதலைப் பற்றி நாம் பேசியதையெல்லாம் அவள் கேட்டுக்கொண்டிருந்திருக்கிறாள். அதை நான் கவனிக்கவில்லை. நான் ஒருவரை காதலித்துக்கொண்டிருக்கிறேன் என்று அவள் முடிவு செய்துவிட்டாள். எனவே இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்று கூறிவிட்டாள். திருமணம் நிறுத்தப்பட்டது நல்லதே. அவள் ரத்து செய்யாவிட்டால், நானே இந்த திருமணத்தை நிறுத்தியிருப்பேன்.
ஹரிஷ்: ஆம் நீங்கள் சொல்வது சரிதான். திருமணம் ஒரு நகைச்சுவை அல்ல. அது இரண்டு உயிர்களின் மகிழ்ச்சி.
மிதுன்: ஆம், நீங்கள் சொல்வது சரிதான். நான் என் காதலை அவளிடம் எப்படி முன்மொழியலாம் என்னும் எண்ணத்தில் இருக்கிறேன்.
ஹரிஷ்: யாருக்கு?
மிதுன்: என் காதலிக்கு, என் கல்லூரி தோழி.
ஹரிஷ்: சரி சரி. நீங்கள் தவறாக என்னாவிட்டால், அவளுடைய பெயரைச் சொல்லுங்கள். அவளுடைய பெயரை அறிய நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன்.
மிதுன்: இல்லை ஹரிஷ். எல்லாம் சரியாக நடந்த பிறகு, நான் நிச்சயமாக அவளை உங்களுக்கு அறிமுகப்படுத்துவேன். அதற்கு முன், தயவுசெய்து அவளைக் கவரவும் முன்மொழியவும் ஒரு யோசனை கூறுவீர்களா? நான் அதைப் பற்றி நீண்ட நேரம் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
ஹரிஷ்: கடைசியாக அவளை எப்போது சந்தித்தீர்கள்? அவளுடைய தொலைப்பேசி எண் உங்களுக்குத் தெரியுமா?
மிதுன்: கடைசியில், அவளை என் கல்லூரியில் சந்தித்தேன். ஆம் என்னிடம் அவளுடைய எண் இருக்கிறது.
ஹரிஷ்: அவளைத் தொடர்புகொண்டு உங்கள் காதலை வெளிப்படுத்துங்கள்.
மிதுன்: இல்லை நான் அதையும் முயற்சித்துவிட்டேன், ஆனால் அவளுடைய குரலைக் கேட்ட பிறகு என்னால் நிலையாக இருக்க முடியவில்லை, என்னால் ஒரு வார்த்தை பேச முடியவில்லை.
அவரது காதலி மிர்த்துனாவாகா இல்லையென்றாலும் குறைந்தபட்சம் மிதுனின் வாழ்க்கை எவ்வாறு இருக்கிறது என்பதைப் பற்றி அவள் தெரிந்துக்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்றும் ஹரிஷ் திட்டமிட்டார். எனவே ஹரிஷ் ஒரு யோசனை தருகிறார் ..
ஹரிஷ்: உங்கள் கல்லூரி வகுப்பு நண்பர்களை ஒன்றுகூட்டி ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்யுங்கள். அங்கு உங்கள் காதலை முன்மொழியுங்கள்.
மிதுன்: ஆம் இது ஒரு சிறந்த யோசனை. அதற்கேற்ப ஏற்பாடு செய்கிறேன். மிக்க நன்றி ஹரிஷ்.
ஹரிஷ்: சரி, ஆல் தி பெஸ்ட்.
மிதுன்: நன்றி, இந்த வார இறுதியில் இதற்கு ஏற்பாடு செய்கிறேன்.
பின்னர் மிதுன் அவர்களின் கல்லூரி நண்பர்களை ஒன்றுகூடுவதற்கான ஏற்பாடுகளை செய்கிறார். அவர் தனது வகுப்பு தோழர்கள் அனைவருடனும் இணைக்க முடியவில்லை. ஆனால் அவர் யாருடனெல்லாம் தொடர்பில் இருக்கிறாரோ அவர்களை அழைத்தார்.
கடற்கரையில் இரண்டு நாட்களுக்குப் பிறகு
மிர்த்துனா: Hi ஹரிஷ். எனது கல்லூரி வாழ்க்கையைப் பற்றி சொன்னேன் அல்லவா. இந்த வார இறுதியில் இனியா என்னை கல்லூரி நண்பர்கள் அனைவரும் சந்திக்கலாம் என அழைத்தாள். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
ஹரிஷ்: ஓ, நீங்கள் அங்கே மிதுனைப் பார்ப்பீர்கள் அல்லவா?.
மிர்த்துனா: ஆமாம், அது என் கடந்த காலம்,
இப்போது எனது திருமண விழாவிற்கு அனைவரையும் அழைக்கப்போகிறேன்.
ஹரிஷ்: சரி. இந்த சந்திப்பிலிருந்து நீங்கள் மிதுனின் வாழ்க்கையைப் பற்றி மிகவும் குழப்பமடைந்தீர்கள், அதற்கு சில தீர்வுகளைப் பெறலாம் மற்றும் அவரது வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
மிர்த்துனா: ஆமாம். எனது வகுப்பு தோழர்கள் அனைவரையும் பார்க்க ஆவலாக உள்ளேன்.
அடுத்த நாள் ஹரிஷ் மிதுனை தொலைப்பேசியில் அழைத்து சந்திப்பிற்கான அவரது திட்டங்களைப் பற்றி கேட்டார்.
மிதுன்: என்னால் முடிந்தவரை அனைவரையும் அழைத்துவிட்டேன். ஆனால் நான் வருவேன் என்று எதிர்பார்த்த எனது நெருக்கமானத் தோழிக்கு மட்டும், கொஞ்சம் வேலை இருக்கிறதாம், அவள் வர முயற்ச்சிக்கிறேன் என்று கூறிவிட்டாள்.
ஹரிஷ்: சரி, விடுங்கள். மற்றவர்கள் சரியாக வருகிறார்கள் அல்லவா பிறகு ஏன் வருந்துகிறீர்கள்.
மிதுன்: ஹரிஷ்! அவள் இல்லாமல் நான் எப்படி என் காதலைக் கூறுவேன் அவள் தான் மிகவும் முக்கியம்.
இப்போது ஹரிஷ் மிதுனின் காதலி இனியா தான் என்பதில் உறுதியானான் , மேலும் அவன் ஒரு தவறான யோசனையை அளித்ததாக உணர்கிறான், இது மிர்த்துனாவை மிகவும் பாதிக்கும் என வருந்தினான்.
ஹரிஷ்: அவள் உங்கள் நெருங்கிய தோழி தானே அவள் நிச்சயமாக வருவாள். கடந்த காலத்தை மறந்து விடுங்கள். புதிய தொடக்கத்திற்குத் திட்டமிடுங்கள்.
ஹரிஷ் தான் தவறு செய்ததாக உணர்கிறான், அவன் மிர்த்துனாவை மேலும் மேலும் காயப்படுத்துகிறான் என வருத்தமடைந்தான்.
சந்திப்பு நாள் வந்தது, ஞாயிற்றுக்கிழமை மாலை எல்லோரும் வந்துவிட்டார்கள் இனியாவும் வந்தாள். இனியாவைப் பார்த்ததும் மிதுன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறான்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனைவரையும் சந்திப்பதில் எல்லோரும் மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள், இந்த தயாரிப்புகளுக்கு மிதுனுக்கு நன்றி தெரிவித்தார்கள். எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. திடீரென்று மேலிருந்து மலர் பொழிவு வந்தது எல்லோரும் வானைப் பார்க்கிறார்கள். கடைசியில் மிதுன் தன் பெண்ணின் முன் மண்டியிட்டு முன்மொழிகிறான். அவனது முன்மொழிவைப் பார்த்து அனைவரும் ஆச்சரியப்படுகிறார்கள், மிர்த்துனா முற்றிலும் அதிர்ச்சியடைகிறாள்.
மிதுன் யாரை முன்மொழிகிறான்? அவன் காதலை அந்த பெண் ஏற்றுக்கொள்வாளா ??

Last edited: