தோள் சேர்ந்த பூமாலை ... Book release

Advertisement

ShanviSaran

Well-Known Member
Tamil Novel Writer
வணக்கம் நட்பூக்களே .... நான் படித்தது ஆங்கில இலக்கியம் … என் கல்லூரி தோழி ஒருவளால் ரமணியம்மா புத்தகம் அறிமுகம் .அதைத் தவிர வேறு தமிழ் நாவல்கள் படித்ததே இல்லை.

என் மகன் வயிற்றில் உருவான போது ஆரம்பித்த எம்.ஃபில் படிப்பை என் மகள் பிறக்கும் போது … நிறைவு செய்தேன்... படிப்பு முடிந்ததும் திரும்ப அவர் புத்தகங்கள் அனைத்தும் வாங்கி குவித்து விட்டேன். என் வீட்டருகே இருந்த பிரபல ஷாப்பிங் மாலில் வாராவாரம் சனிக்கிழமை குழந்தைகளை அழைத்துக் கொண்டு செல்வது வழக்கம். என் கணவர் குழந்தைகள் விளையாட்டுப் பிரிவுக்கு அழைத்துச் சென்று விட்டால் நான் அங்கிருந்த புத்தகக் கடைக்குள் நுழைந்து விடுவேன்.

அந்தக் கடை உரிமையாளரின் மனைவி தான், 'மேடம் இவங்க புக் நிறைய பேர் வாங்குவாங்க … நீங்களும் படிச்சுப் பாருங்கனு மல்லிகா மணிவண்ணன் என்ற மிகப் பெரிய எழுத்தாளரை அறிமுகப்படுத்தினர்.

நான் வாங்கிய முதல் புத்தகம் 'என் வாழ்வு உன்னோடு 'ப்பா என்ன ஒரு எழுத்து….. பிரதியுஷா கிரிவாசன் படித்த எனக்கு அவர் எழுதிய அத்தனையும் படிக்கும் ஆசையில் … புத்தகமாக வந்த அனைத்தும் வாங்கி விட்டேன்.

வேறு என்ன எழுதியிருக்கிறார்கள் என்று ஆன்லைனில் தேட …. புதையல் தான் எனக்கு … மல்லி மேம் கதைகள் அத்தனையும் படித்தவள் … சரி மற்றவர்கள் கதையும் படிக்கலாம் எனத் தேடி தேடி எல்லா எழுத்தாளர்களையும் படிக்க ஆரம்பித்து … நான் படித்ததை மற்றவர்களுக்கும் பகிர்ந்து ... இன்று நானே எழுதுவேன் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.... எழுதியது புத்தகமாக … அதுவும் அவர் எழுத்துக்கள் அச்சேறிய இடத்திலேயே என்பதை இன்னும் நம்ப இயலவில்லை.

மொத்தத்தில் மல்லிகை தோட்டத்தில் தான் இந்த மலரின் வாசமும் …. அவங்க கதையைப் படிக்க வந்த இடத்தில் தான் .. முகநூல் நட்புகளும் … தள நட்புகளும் அறிமுகம் … அவங்களால மட்டுமே எனக்கு இது சாத்தியமாயிற்று.

எனக்கு உறுதுணையாக இருந்த இத்தள தோழியர்… முகநூல் தோழமைகள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் மகனை ஈன்ற போது கிடைத்த அதே மகிழ்ச்சி … இன்று என் முதல் புத்தகத்தை வெளியிடும் போதும் …. அத்தனைக்கும் காரணமான மல்லிகா மேடம் க்கு என் நன்றிகள் ….

' தோள் சேர்ந்த பூமாலை' இப்போது உங்கள் கைகளிலும் … பூமாலையை படித்து ரசித்து கருத்துக்களை தெரிவித்து ஊக்கம் அளித்த அனைவருக்கும் என் நன்றிகள் ….

'எல்லா புகழும் துன்பத்திலும் இன்பத்திலும் தோள் கொடுத்த மல்லியக்காவிற்கே….
 
Last edited:

D.Deepa

Well-Known Member
உங்கள் ஹுரோயின் ரெம்ப இன்னசன்ட் சொல் றத ஏத்துக்க முடியல உங்கள் ரெண்டு கதை நான் படிச்சேன் ஒரு குழந்தை இருக்கிறது மாதிரி வரும் சோ அதுக்கு தகுந்த மாதிரி ரெஸ்பானாஸா பிஹேவ் பண்றமாதிரி காட்டுங்க எழுத்து நடை நல்லா இருக்கு ஆனா ஹுரோயின் ஏத்துக்க முடியல சாரி இது என் தனிப்பட்ட தாழ்மையான கருத்து
 

ShanviSaran

Well-Known Member
Tamil Novel Writer
உங்கள் ஹுரோயின் ரெம்ப இன்னசன்ட் சொல் றத ஏத்துக்க முடியல உங்கள் ரெண்டு கதை நான் படிச்சேன் ஒரு குழந்தை இருக்கிறது மாதிரி வரும் சோ அதுக்கு தகுந்த மாதிரி ரெஸ்பானாஸா பிஹேவ் பண்றமாதிரி காட்டுங்க எழுத்து நடை நல்லா இருக்கு ஆனா ஹுரோயின் ஏத்துக்க முடியல சாரி இது என் தனிப்பட்ட தாழ்மையான கருத்து
கண்டிப்பா நீங்க சொல்றத திருத்திக்குவேன் சிஸ்... நிறைய பேர் சொன்னது தான். நன்றி சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top