தேவதையிடம் வரம் கேட்டேன் P15

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
உறவால் உயிரானவள் எழுத தோணவே மாட்டேங்குது.:sleep:

images (9).jpg


கொடிமலரின் வீட்டின் எல்லையில் இருந்தது அந்த பெரிய ஆலமரம். பாதையை தொட்டிருப்பதால் யார் அந்த மரத்தடியில் நின்றாலும் பாதையை கடப்பவர் கண்களில் படாமல் இருப்பதில்லை.



விடிந்தால் கல்யாணமென்ற நிலையில், தன்னவனை காணாமலும், பேசாமலும் கல்யாண கனவிலும் மிதந்த கொடிமலர் தூக்கத்தை தொலைத்திருக்க, மெதுவாக நடைபோட்டவள் ஆலமர ஊஞ்சலில் அமர்ந்து வானை வெறிக்கலானாள்.



நிலவும் பாதியாகத்தான் முகம் காட்டிக் கொண்டிருந்தாள். ஆனால் கல்யாணத்துக்காக ஏற்றப்பட்ட அலங்கார விளக்குகள் தெருவெங்கும் ஜொலிக்க ஊரே திருவிழாபோல் காட்ச்சியளித்து கண்ணைக் கவர விளக்குகளை வேடிக்கை பார்க்கலானாள். கூடவே தன் அத்தானின் நியாபகமும் மனதில் அலைக்கழிக்க ஒரு பெருமூச்சு விட்டவள்



"அவர் இந்த நேரம் ஆழ்ந்த துயில் கொண்டிருப்பார்" தனக்கு தானே சமாதான வார்த்தையை சொல்லிக்கொள்ள அவள் எதிரே அவள் அத்தான் நின்றிருக்க முகம் மலர்ந்தாள்.



இருள் சூழ்ந்திருந்தால் தாவிச்சென்று அனைத்திருப்பாளோ! விளக்குகளின் ஒளியில் அவன் முகம் தெளிவாகத் தெரிய கண்களை உற்று நோக்கியவள் "பெரியத்தான் தாங்கள் இப்பொழுதா ஊருக்கு வருகிறீர்கள்" என்று மரியாதையாக எழுந்து நின்றாள்.



அவளோடு பேசிய வெற்றிவேலன் வீரவேலனை அனுப்பி வைப்பதாக கூறிச்சென்றதும் தன்னவனைக் காணப்போகும் ஆவலில் அவன் வரும் திசையை ஆசையாக பாத்திருந்தாள் கொடிமலர்.





ருத்ரமகாதேவிக்கு தூங்காப்பிடிக்கவில்லை. ஒரு மானிடரின் மேல் காதல் கொண்டது ஒன்றும் அவள் தவறில்லை. ஆனால் தான் ஒரு தேவதை என்று அவனிடம் சொல்லாமல் விட்டது தவறென்று இப்பொழுது எண்ணலானாள். அது தன்னவனை காண ஏங்கும் மனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் பொழுதெல்லாம் தோன்றுவதுதான்.



தான் நினைத்தால் நொடியில் அவன் இருக்கும் இடம் சென்று பார்த்து விட்டு வர முடியும். அவ்வாறு சென்றால் சந்திக்காமல், அவன் கைகளில் தஞ்சமடியாமல் தன்னால் திரும்பி வருவது சாத்தியமில்லை என்பதே உண்மை. அதன் பின் அவன் கேட்கும் கேள்விகளுக்கு எவ்வாறு பதில் சொல்வதென்று தான் இத்தனைநாளும் மனதை அடக்கிக் கொண்டிருந்தாள்.



ஆனால் இன்று அவனுடைய ஊருக்கே வந்து அவன் இல்லாமல் இருப்பது வெறுமையான உணர்வைக் கொடுக்க, கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்தாள்.



பௌர்ணமிக்கு இன்னும் ஏழு நாட்கள் இருக்கின்றன. தன்னவன் கூறியது போல் தன்னை சந்திக்க பௌர்ணமியன்று வந்து விடுவான். அன்று காட்டுக்கோவிலில் கந்தர்வ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கல்யாண கனவில் மிதந்தவளின் முகத்தில் புன்னகை எட்டிப்பார்த்தது.



தூரத்தே ஆடும் ஊஞ்சலைக் கண்டவள் தானும் ஊஞ்சல் ஆட ஆசை கொண்டது விதி என்று சொல்வதா? மெதுவாக நடை போட்டவள் கண்டது அங்கே வந்த தன் காதலன் ஊஞ்சலாடிக் கொண்டிருந்த பெண்ணை கட்டித்தழுவி முத்தம் வைப்பதையே!



அது தன்னவன் தானா என்ற சந்தேகம் எல்லாம் ருத்ரமகாதேவிக்கு தோன்றவே இல்லை. நொடியில் அவர்களை அணுகியவள் வந்த வேகத்தோடு கத்தியை கொடிமலரின் நெஞ்சை நோக்கி வீசி இருந்தாள்.



தன்னவனின் மனதில் இன்னொரு பெண்ணுக்கு இடமா? காதல் என்ற தீ பொறாமையாக பற்றி எரிய, சிறிதும் யோசிக்காமல் கத்தியை வீசி இருந்தாள் ருத்ரமகாதேவி.


ஏதாவது புரியுதா?:geek::LOL::p
 

banumathi jayaraman

Well-Known Member
யம்மா டுவிஸ்ட் ராணி மிலா டியர்?
என்னம்மா இப்படி குழப்பறீங்க?
போன அப்டேட்-ல வீர வேலனை வெற்றி வேலன் இனி பார்க்கப் போவதில்லைன்னு சொன்னீங்க
சரி அவன் கதை முடிஞ்சதுன்னு பார்த்தால் இந்த Precap-ல கொடி மலரின் மீது ருத்ர மஹாதேவி கத்தி வீசினாள்ன்னு சொல்றீங்க
யாருதான் இறந்தாங்க?
ஏற்கனவே பூமிக்கு வந்து துன்பப்படும் ருத்ர மஹாதேவிக்கு இந்த சாபங்கள் மூலம் இன்னும் என்னென்ன துன்பங்கள் வருமோ?
சீக்கிரமா வந்து சொல்லுங்க
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
யம்மா டுவிஸ்ட் ராணி மிலா டியர்?
என்னம்மா இப்படி குழப்பறீங்க?
போன அப்டேட்-ல வீர வேலனை வெற்றி வேலன் இனி பார்க்கப் போவதில்லைன்னு சொன்னீங்க
சரி அவன் கதை முடிஞ்சதுன்னு பார்த்தால் இந்த Precap-ல கொடி மலரின் மீது ருத்ர மஹாதேவி கத்தி வீசினாள்ன்னு சொல்றீங்க
யாருதான் இறந்தாங்க?
ஏற்கனவே பூமிக்கு வந்து துன்பப்படும் ருத்ர மஹாதேவிக்கு இந்த சாபங்கள் மூலம் இன்னும் என்னென்ன துன்பங்கள் வருமோ?
சீக்கிரமா வந்து சொல்லுங்க
ஹாஹாஹா கதையே ராஜாகாலத்துல நடக்குது எப்படியும் இப்போ யாரும் உசுரோட இறுக்க வாய்ப்பில்லை யாரு இறந்தா என்ன பானுமா?;);){mila escaped}
ருத்ரமகாதேவியோட நிலைமைக்கு அவளே தான் காரணம் epi படிக்கும் போது புரியும். டீசர்ல ட்விஸ்ட்டுக்கான குட்டி இன்போர்மசன் வச்சிருக்கேன் கவனித்தீரா?:geek::geek:இல்லையென்றால் விட்டு விடவும் கதையில் புதிர் விலகும்.:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top