தேவதையிடம் வரம் கேட்டேன் P14

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
download (20).jpg

அக்ஷையோடு ஆடும் மதியை கண்டு அசோக் சாம்ராட் யார் என்று பாஸ்கரிடம் விசாரிக்க அக்ஷய் கல்யாணம் செய்துகொள்ள போகும் பெண் என்று சொல்ல



"சற்று நேரத்துக்கு முன்னால் தான் கல்யாணத்தை பற்றி கேட்டேன். கண்டிப்பாக பண்ணுவேன் என்றானே ஒழிய அந்த பெண்ணை அழைத்து வந்துள்ளேன் என்று ஒரு வார்த்தையாவது சொல்லவில்லை" என்று பாஸ்கரை முறைக்க,



"நாம் சொல்லும் படி செய்ய அவன் ஒன்றும் நான் பெற்ற மகன் இல்லையே!" என்றாள் பெரியன்னை சமேலி.



அசோக் சமராட்டின் இரண்டாம் மனைவி என்று சொன்னாலும் முறைப்படி முதல் மனைவியை விவாகரத்து செய்து மணந்ததால் கெத்தாக சமூகத்தில் சுற்றிக் கொண்டிருந்தவர் அக்ஷையை கணவர் வீட்டுக்கு அழைத்து வந்து என்னுடைய மகன் என்றதும் ஆடித்தீர்த்து விட "உன்னை விவாகரத்துய் செய்வேன்" என்றதும் தான் அடங்கினார்.



அன்று முதல் அக்ஷையை கண்டால் ஆகாது. அக்ஷையை காணும் பொழுதெல்லாம் வார்த்தையால் குதருபவள். கணவனின் முன்னிலையில் நல்ல அன்னையாக வேஷமிட்டுக் கொண்டிருந்தாலும் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் அக்ஷையை மட்டம் தட்டும் வேலையை அழகாக செய்து கொண்டிருந்தாள்.



இன்றும் தன் மகனில்லையே! என்று சொல்லி மறை முகமாக அக்ஷையின் அன்னையையும் தாக்க,



"அது சரி. நீ பெத்ததுங்க பண்ண கொடுமையை தாங்கிக் கிட்டு அமைதியா இருந்ததே பெரிய விஷயம். பொறுமைல அப்படியே அவங்க அம்மா போல. அந்த புண்ணியவதி கொடுத்து வச்சவ யாருக்கும் தொந்தரவு இல்லாம போய் சேர்ந்துட்டா" அசோக் சிரிக்க



"அப்போ நான் இன்னும் சாகலானு சொல்ல வாரீங்களா?" சமேலி எகிற



"புரிஞ்சா சரி" என்று முணுமுணுத்த அசோக் "போய் கல்யாண வேலைய பாரு டி" கோபமாக சொல்ல கண்ணை கசக்கியவாறே இடத்தை காலி செய்தாள் சமேலி.



பாஸ்கர் "ஆ" வென வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருக்க



"அந்த பொண்ண பத்தி சொல்லுடா" என்று ஆரம்பித்த அசோக் சாம்ராட் மதியழகியை பற்றி எல்லா தகவலையும் பாஸ்கரிடம் வாங்கி கொண்டார்.





"பாயோ! பேகனோ! தோஸ்தோ!{சகோதராசகோதரிகளே, நண்பர்களே} இன்று என் மூத்த மகன் அஜய்யின் மெகந்தி இந்த சந்தோசமான நிகழ்வன்று இன்னுமொரு சந்தோசத்தை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்" மைக்கை கையில் பிடித்துக் கொண்ட அசோக் பேச அனைவரும் அவரை சூழ்ந்துகொண்டனர்.



"மதியழகி இங்க வா.. மா..." மதியழகியை அழைத்து அருகில் நிறுத்திக் கொண்ட அசோக் சாம்ராட்.
images (10).jpg



"இந்த தெற்கு தேவதை, என் மகம் அக்ஷையின் மனம் கவர்ந்த பேரழகி மதியழகி" என்று அறிமுகப்படுத்த ஒரு கணம் பேரமைதிநிலவிய பின் கரகோசத்தோடு வாழ்த்துக்கள் ஒலிக்க ஆரம்பித்தன.



"அமைதி, அமைதி... இன்று அக்ஷய் மதியின் நிச்சயதார்த்த விழாவும் கூட அதை அவர்களுக்கே தெரியாமல் ஏற்பாடு செய்து இருக்கிறேன். அக்ஷய் வந்து என் மருமகளுக்கு மோதிரம் அணிவி..." என்று உத்தரவோடு நகர்ந்துகொள்ள மதியழகியின் அருகில் வந்த அக்ஷய் அவளின் கண்களையே பார்த்திருந்தான்.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அட போங்கப்பா
எங்கே பாரு மாற்றாந்தாய் கொடுமைதானா?
இவளுக பெத்தால்தான் பிள்ளை
இல்லாட்டி அடுத்தவளுக்கு பிறந்தால் அவன் மட்டமா?
நல்லவேளை அசோக் சாம்ராட் நல்ல அப்பாவா தெளிந்த மனசோட இருக்காரு
அக்ஷை பிழைச்சான்

மதியழகிக்கு போட்டிருக்கும் நடிகை யாருப்பா?
நல்லா இருக்காங்க
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top