Bhuvana
Well-Known Member
தேன் மற்றும் லவங்கப்பட்டை மருத்துவ நன்மைகள் :
1. ஒரு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் லவங்கப்பட்டை தேன் போட்டு காலை உணவிற்கு முன் குடிக்க வேண்டும்.இதனை தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பு கரைவதுடன், மேலும் கொழுப்பு சேராமலும் இருக்கும்.
2. தினசரி தேனையும் இலவங்கப் பட்டைப் பொடியையும் சாப்பிடுவது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் நம் உடலை வைரஸ் தாக்குதலில் இருந்தும் காக்கும்.
3. ஒரு கப் தண்ணீருடன் 2 ஸ்பூன் லவங்கப்பட்டை தேன் சேர்த்து சாப்பிட கொலஸ்ட்ரால் அளவு குறைந்திடும். தொடர்ந்து சாப்பிட நல்ல பலன் தெரியும். சுத்தமான தேன் தினமும் உணவுடன் சாப்பிட கொலஸ்ட்ரால் மூலம் வரும் தொந்தரவுகள் குறையும்.
4. ஒரு ஸ்பூன் இலவங்கப் பட்டை பொடியை ஒரு கப் நீரில் போட்டு கொதிக்க விடவும். அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து குடிக்க வேண்டும். இது சருமத்தை இளமையாகவும் மென்மையாகவும் வைப்பதுடன், முகத்தில் சுருக்கங்கள் வருவதை தடுக்கிறது.
5. இரண்டு ஸ்பூன் தேனை எடுத்து பட்டைத்தூளுடன் சேர்த்து சாப்பிட்டு வர அஜீரணக்கோளாறு சரியாகும். அசிடிட்டி இருப்பவர்களும் இதனைச் சாப்பிடலாம். ஜீரணிக்க கடினமாக இருக்கும் உணவினை சாப்பிட்டவுடன் பட்டைத்தூளை தேனுடன் சாப்பிடுவது ஜீரணத்தை தூண்டி கடினமான உணவை ஜீரணிக்க உதவும்
இலவங்கப்பட்டை கலந்த தேனை (Cinnamon Honey) வெதுவெதுப்பான நீரில் கலந்து அருந்தி வரும்போதும் இந்த நன்மைகள் கிடைக்கும்.