தூரம் போகாதே வெண்ணிலவே....24(இறுதி பதிவு)

Advertisement

Ambal

Well-Known Member
தாமத்திற்கு மன்னிக்கவும் தோழிகளே...
இந்த கதையோட நிறைவு பகுதிக்கு வந்துவிட்டோம் தோழிகளே...கதைக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தோழிகளே...கதையின் நிறைகுறைகளை பகிரவும் தோழிகளே...சீக்கிரம் வேறு ஒரு கதையுடன் வருகிறேன்...



தூரம் போகாதே வெண்ணிலவே....24(இறுதி அத்தியாயம்)




:):):):)
 
Last edited by a moderator:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான நாவல்,
காயத்ரி டியர்

அழகான சூப்பரான ஒரு குடும்ப நாவல்
பெற்றால்தான் அப்பா அம்மாவான்னு தன்னை ஆதரித்த அண்ணாமலையை அப்பாவாக சுவீகரித்து அவரையும் உறவாக மதியழகி பேணியது வெகு அருமை
அடுத்த நாவலுடன் சீக்கிரமா வாங்க, காயத்ரி டியர்
 
Last edited:

n.palaniappan

Well-Known Member
தாமத்திற்கு மன்னிக்கவும் தோழிகளே...
இந்த கதையோட நிறைவு பகுதிக்கு வந்துவிட்டோம் தோழிகளே...கதைக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தோழிகளே...கதையின் நிறைகுறைகளை பகிரவும் தோழிகளே...சீக்கிரம் வேறு ஒரு கதையுடன் வருகிறேன்...



தூரம் போகாதே வெண்ணிலவே....24(இறுதி அத்தியாயம்)



மூன்றாண்டுகளுக்கு பிறகு,

வானவில் இல்லம் விழாக் கோலம் பூண்டிருந்தது.இன்று ராமலிங்கம்,மஞ்சுளா தம்பதியரின் சஷ்ட்டிபூர்த்தி அதை வேந்தன் சிறிய விழா போல ஏற்பாடு செய்திருந்தான்.வள்ளியம்மை தான் வருபவர்களை வரவேற்றுக்கொண்டிருக்க வேந்தனோ மற்ற ஏற்பாடுகளை பார்த்துக்கொண்டிருந்தான்.மஞ்சுவின் அறையில் அழகி மஞ்சுவை அலங்கரிக்கிறேன் என்ற பெயரில் படுத்திக் கொண்டு இருந்தாள்

"அத்த இந்த கல் வச்ச அட்டிகையை போடுங்க...உங்க புடவைக்கு இது எடுப்பா இருக்கும்..."என்று கூற மஞ்சுவோ,

"போதும்மா இதுக்கு மேல நான் எதையும் போட மாட்டேன்...."என்று கழுத்தில் பழைய நெக்கலஸை போட்டுக்கொண்டு அடம்பிடித்தார்.அவரை முறைத்த அழகி,

"அத்த இது ரொம்ப பழசா இருக்கு..இது புதுசு இத போடுங்க..."என்று கூற,

"நீ என்ன சொன்னாலும் அவ அந்த நெக்லஸ கழட்ட மாட்டா..."என்றபடி வந்தார் வள்ளி,

"ஏன்..."என்று அழகி புரியாமல் கேட்க,

"ம்ம் அது என் மவன் வாங்கிகொடுத்தது...அதான்..."என்று நமட்டு சிரிப்புடன் கூற அதற்கு அழகாக வெட்கப்பட்டார் மஞ்சுளா.

"அய்யோ அத்த அழகா வெட்கபடுரீங்க..."என்று கூற வள்ளியோ,

"எவ்வளவு நாள் ஆச்சு என் மருமவ வெட்கபடுறத பார்த்து..."என்று திர்ஷிட்டி சுத்தினார்.

"அம்மா..."என்றபடி வந்தான் வெற்றிமாறன்.வேந்தன் அழகியின் மூன்று வயது மகன்.அவனைக் கண்டவுடன் வள்ளி,

"என்னடா கொள்ளுபேரா உங்க அம்மாக்கு ஜூஸ்ஸா...."என்று நக்கலாக கேட்க அவரை முறைத்துவிட்டு தன் அன்னையிடம் திரும்பி,

"அம்மா இந்த ஜூஸ் குடிங்க..."என்று தன் பிஞ்சு கரங்களில் உள்ள டம்பளரை தாயிடம் நீட்ட அவ்வளவு பெருமை அழகிக்கு டம்பளரை வாங்கி அவள் கீழே வைத்துவிட்டு மகனை அள்ளி முத்தமிட,

"அம்மா...என்னை தூக்காத பாப்பாக்கு வலிக்கும்..."என்று தன் அன்னையின் சற்று மேடிட்டு இருந்த வயிறை தடவிய வாரே கூற,

"சரிடா செல்லம் தூக்கல...அம்மாக்கு ஒரே ஒரு முத்தா கொடுங்க..."என்று கன்னம் காட்ட மகனோ,

"நீ முதல்ல இந்த ஜூஸ்ஸ குடிப்பியாம்...அதுக்கப்புறம் நான் உனக்கு முத்தா கொடுப்பேனாம்..."என்று வியாபாரியின் மகன் என்று நிருபிக்க சிரிப்பு தாளவில்லை அழகிக்கு,

"அதான் சொல்லிட்டான்ல முதல்ல அந்த ஜூஸ்ஸ குடி...இவன் அவன் அப்பன மிஞ்சிடுவான்..."என்று கன்னவழித்து சொல்ல,

"அம்மா குடிங்க..."என்று காரியத்தில் கண்ணாக இருக்க இதற்கு மேல் மகன் விடபோவதில்லை என்பதை உணர்ந்தவள் குடித்துவிட்டு மகனிடம் நீட்ட அவனோ தான் கூறியது போல தன் அன்னையின் இரு கன்னங்களிலும் முத்தம் கொடுத்துவிட்டு சென்றான்.

அலங்கரிக்கப்பட்ட மேடையில் ராமலிங்கமும்,மஞ்சுளாவும் அமர வைக்கப்பட மற்ற சடங்குள் இனிதே தொடங்கியது.வள்ளியம்மைக்கு மகன் மருமகள் முகத்தில் தெரிந்த மலர்ச்சியைக் கண்டவருக்கு மனது நிறைந்து போனது.அழகியியும்,வேந்தன் தன் மகனுடன் ராமலிங்கம்,மஞ்சுளா தம்பதியருக்கு நீர் ஊற்ற அக்காட்சியை அழகாக பதிவு செய்தது புகைப்பட கருவி.

பக்கத்தில் உள்ள அழகியின் வீடும் அலங்கரிக்கப் பட்டு அங்கு தான் சமையல் வேலைகள் நடந்துகொண்டிருந்தன.அண்ணாமலை தான் விருந்திர்க்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்க.

"தாத்தா...."என்று தன் பின்னிலிருந்து மழலையின் கோபக்குரலைக் கேட்டு வேகமாக திரும்ப அங்கே அவரை முறைத்துக்கொண்டு நின்றான் வெற்றிமாறன்.அவனைக் கண்டதும் அசடு வழிந்தார் அண்ணாமலை அதை பொருட்படுத்தாமல் அவருக்காக ஒரு நாற்காலியை இழுத்து வந்தவன்,

"உக்காருங்க...உங்கள ரொம்ப நேரம் நிக்கக்கூடாதுனு சொல்லிருக்கேன்ல்ல..."என்று அதிகாரமாக கூற அந்த பிஞ்சின் மிரட்டலுக்கு கட்டுப்பட்டவர் சென்று நாற்காலியில் அமர,

"தாத்தா நீங்க சொல்லுர பேச்சே கேக்குறது இல்ல...இருங்க அம்மாவையும்..."என்று கூறி முடிக்கும் முன்,

"ஐயா சாமி...தெரியாம செஞ்சுட்டேன் இனி செய்யமாட்டேன்....அம்மாக்கிட்ட சொல்லிடாதய்யா..ஏன் கண்ணுள்ள...."என்று அவனிடம் கெஞ்ச அங்கு அண்ணாமலையின் கீழ் வேலை செய்பவர்கள் அனைவரும் இந்த காட்சியைக் கண்டு கண்ணகள் கலங்க நின்றனர்.அவர்களது நினைவு எல்லாம் ஒருவருடத்திற்கு முன்பு,

அண்ணாமலைக்கு உடம்புக்கு முடியாமல் போக என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்த அவர்களது வேலையாட்கள் வேந்தனுக்கு தகவல் தர மருத்துவமனை வந்தவன் வாயிலில் அமர்ந்திருந்த மரகத்திடம்,

"என்னம்மா ஆச்சு..."என்று விசாரிக்க அவரோ,

"தெரியல தம்பி திடீர்னு அண்ணாச்சி மயங்கி விழுந்துட்டாரு..."என்று கலங்கியவரே கூற மருத்துவமனை உள்ளே சென்றவாரே கேட்டவன் அண்ணாமலை அனுபதிக்கப்பட்டிருக்கிற அறையில் இருந்து மருத்துவர் வெளியில் வரவும் அவரிடம் சென்றவன்,

"டாக்டர் இப்ப எப்படி இருக்காங்க..."என்று கேட்க அந்த மருத்துவரோ வேந்தனிடம்,

"நீங்க அவருக்கு சொந்தாமா தம்பி..."கேட்க,

"ஆமாம் அவரு என்னோட மாமா..."என்றான்.

"ஓ அப்படியா தம்பி...அவருக்கு பிபி ரொம்ப அதிகமா இருந்திருக்கு அதுக்கு சரியான வைத்தியம் பண்ணல...இது அவரோட முதல் மாரடைப்பு...இவர் ஆள் கொஞ்சம் திடகாத்திரமா இருந்ததால ரொம்ப பாதிப்பு இல்ல...இனியும் கவனிக்கலனா அவருக்கு பக்கவாதம் வந்திடும்....கொஞ்சம் கவனமா பாத்துக்குங்க...."என்றுவிட்டு செல்ல அவரது வேலையாட்கள் அனைவரும் அழவே தொடங்கிவிட்டனர்.அனைவரையும் ஒரு குடும்பம் போல பார்த்தவருக்கா இந்த நிலை என்று மரகதம் புலம்ப,இரண்டு நிமிடம் தடுமாறிய வேந்தன் மனதில் சில முடிவுகளை எடுத்துவிட்டு அழகிக்கு அழைக்க அவளோ இவனின் அழைப்பிற்காக காத்திருந்தவள் போல கைபேசியை எடுத்தவள்,

"என்னங்க அண்ணாச்சிக்கு எப்படி இருக்காரு...."என்று வரிசையாக கேள்விகளை அடுக்கினாள்.அவளும் வேந்னுடன் வர இருந்தவள்,கிளம்பும் நேரம் மகன் மாடிபடிகளில் கீழே விழுந்து வைக்க அவளால் எங்கும் செல்லமுடியாத நிலை.மகனுடன் இருந்து மகனை கவனித்தாலும் நினைவு முழுவதும் அண்ணாமலையின் மேலே இருந்தது.தந்தை போல் நின்று தன்னை வழி நடைத்தியவர் அவருக்கு எதுவும் ஆகக்கூடாது என்று கடவுளை வேண்டிக்கொண்டிருக்க வேந்தனின் அழைப்பு வந்ததும் வரிசையாக கேள்விகளை தொடுக்க அவனிடம் இருந்து பதில் வராமல் போக,

"ஹலோ...லயன்ல இருக்கீங்கலா..."என்று இவள் கத்த,

"ஏய் இருடி...முதல்ல என்ன பேசவிடு..."என்று கூறியவன் அவரின் உடல்நிலையைக் கூற அதற்கு பதறியவள்,

"என்னங்க நீங்க இப்படி சொல்ரீங்க...இதுக்கு தான் அப்பவே சொன்னேன் தனியா எல்லா வேலையும் செய்யாதீங்கனு...நம்ளோட இருங்கனு சொன்னாலும் கேக்கறது இல்ல..."என்று பதற,

"இனி நம்மக்கூட தான் இருப்பாங்க...நீ நான் சொல்ரத முதல்ல காது கொடுத்து கேளு..."என்று அவளது வாயை அடக்கி அவளிடம் சில காரியங்களை செய்ய சொல்லி கூறிவிட்டு அங்கு இருந்த வேலையாட்களிடம் தனது முடிவைக் கூற அவர்களும் மகிழ்சியுடன் அவனது முடிவை ஏற்றனர்.

இரண்டு நாட்கள் கழித்து அண்ணாமலை வீடு திரும்லாம் என மருத்துவர் கூற அவரை அழைத்துக்கொண்டு சிவகங்கை வந்து தன் வீட்டின் முன் வண்டியை நிறத்த புரியாமல் பார்த்த அண்ணாமலையிடம்,

"நீங்க பார்க்கிறது புரியுது வாங்க சொல்லுறேன்..."என்று கூறி அழைத்து செல்ல அங்கே அவர்களுக்காக மொத்த குடும்பமும் காத்துக்கொண்டிருக்க இவர்களை கண்டவுடன் வாசலுக்கே வந்திருந்தார் ராமலிங்கம்.

"வாங்க..."என்று வரவேற்ற ராமலிங்கம் அவரை உள்ளே அழைக்க அவர்களுடன் உள்ளே வந்தவரை,

"வாய்யா...நாங்க எல்லாரும் இருக்கோம்ன்றத மறந்திட்டியா...உடம்ப பாத்துக்க மாட்ட..."என்று வள்ளி கடிந்தவரே அவருக்கு தண்ணீர் தர அண்ணாமலை சற்று கலங்க அதை உணர்ந்த வள்ளியம்மை,

"இப்ப என்த்துக்கு கலங்குற...ஏன் நான் உன் மேல கோப்படக்கூடாதோ...அதுக்கு எனக்கு உரிமையில்லயோ..."என்று வள்ளி ஒரு ஒப்பாரியே வைக்க பதறிய அண்ணாமலை,

"என்ன அம்மா நீங்க இப்படி சொல்லிட்டீங்க..."என்று பதற

"நீ சொல்லாட்டியும் என் புள்ள தான்..."என்றவர் மஞ்சுவிடம் திரும்பி,

"இங்க என்னத்த வாய் பாக்குறவ...போய் எல்லாருக்கும் காப்பி எடுத்துட்டுவா..."என்று அதட்டல் போட,

"சரி அத்த..."என்றவாரு உள்ளே சென்றார் மஞ்சு.வேந்தன் வந்ததலிருந்து தன் மனைவியை தேட அவள் வெளியில் சென்றிப்பதாக ராமலிங்கம் கூற ஒரு நிமிடம் கோபம் கனன்றது வேந்தனுக்கு தான் வரும்போது அவளை இருக்க சொல்லிருக்க அவள் மாறாக வெளியில் சென்றிருந்தாள்.அவளுக்காகவே ஒரு ஸ்கூட்டி வாங்கி பழக்கியிருந்தான் வேந்தன்.

"இந்த வெள்ளச்சிக்கு வண்டி வாங்கி கொடுத்தது தப்பா போச்சு..."என்று மனதில் புலம்ப வீடினுள் நுழைந்தாள் அழகி,வந்தவள் நேராக அண்ணாமலையிடம் வந்து,

"அப்பா...எப்படி இருக்கீங்க..."என்று கேட்க அவளது அப்பா என்ற அழைப்பிலேயே அதிர்ந்தவர் அவளைக் காண,

"நான் உங்கள அப்பானு கூப்பிடலாமில்ல..."என்றாள் அவளது கேள்வியில் கலங்கிய அண்ணாமலை,

"கூப்பிடும்மா...நீ எப்போதும் எனக்கு பொண்ணு மாதிரி தான்..."என்றார்.அவரின் முன் மண்டியிட்டு அமர்ந்தவள் அவரிடம் ஒரு காகிதத்தை நீட்ட அதை வாங்கி படித்தவருக்கு பதில் வரவில்லை அவர் முன் ஒரு பேனா நீட்டபட எந்தவித கேள்வியும் கேட்காமல் அழகி தந்த பத்திரத்தில் கையெழுத்து போட்டார்.அவர் கையெழுத்து போட்டவுடன் அழகி,

"இப்ப நான் உங்களுக்கு பொண்ணு மாதிரி இல்ல பொண்ணுதான்..."என்று அழுத்தமாக கூற அவளது கைகளை பற்றியவர் ஆம் என்பதை போல தலையாட்ட,

"இனி நீங்க எங்கேயும் போகக்கூடாது எங்க கூடதான் இருக்கனும்..."என்று கூற மறுத்து கூறவந்த அண்ணமலையை தடுத்தவள் கணவனிடம் திரும்பி,

"என்னங்க பக்கத்துவீட்ல தான் அப்பா இருப்பாங்க எல்லாம் ரெடி செஞ்சாச்சு...நீங்க உங்க மாமனாருக்கிட்ட சொல்லி புரியவைங்க எனக்கு வேலையிருக்கு..."என்றுவிட்டு செல்ல பார்க்க வேந்தனோ,

"என்ன அதிகாரம் தூள் பறக்குது..."என்று நக்கலாக கூற அழகியோ,

"இனி அப்படி தான்..."என்றுவிட்டு சென்றாள்.

அழகி சென்ற பின்பு அண்ணாமலையிடம் திரும்பியவன் அவர் இன்னும் அதிர்ச்சியில் இருப்பதை உணர்ந்தவன் அவர் கைகளைப் பற்றி,

"மாமா..."என்று அழைக்க அவனது தொடுகையில் தன்னுறவு பெற்றவர் வேந்தனை சங்கடமாக நோக்கி,

"தம்பி அது ஏதோ சின்ன பொண்ணு.."என்று கூறவர அவரை தடுத்தவன்,

"உங்க பொண்ணு மாமா அவ...அவ எது செஞ்சாலும் அவளுக்கு நான் உறுதுணையா இருப்பேன்...நீங்க தேவையில்லாம மனச உழட்டாதீங்க..."என்றவன் தனது முடிவை கூறி விட்டு அவரை பார்க்க அவரோ யோசனையுடன் இருக்கவும்,

"என்ன சம்பந்தி இது யோசனை பண்ணிகிட்டு நீங்க இங்க தான் தங்குறீங்க அவ்வளவு தான்..."என்று கூற அண்ணாமலையோ,

"இல்ல என்னால கேட்டரிங்க விடமுடியாதுங்க சம்பந்தி..."என்று மறைமுகமாக தனது சம்மதத்தை தர,

"உங்கள கேட்டரிங்க விட சொல்ல மாமா...நீங்க மேல் பார்வைமட்டும் பாருங்க...மத்த நான் பார்த்துக்கேறேன்..."என்றான்.அதிலிருந்து இதோ இப்போது வரை அனைத்தையும் பார்த்துகொள்பவன் மேற்பார்வை மட்டும் அண்ணாமலையே.

"என்ன மரகதம் கனவு காண ஆரம்பிச்சிட்டியா..."என்று அண்ணாமலையின் கனீர் குரலில் நிகழ்வுக்கு வந்தார் மரகதம் அசடு வழிய அவரை ஒரு முறைத்துவிட்டு சென்றார் அண்ணாமலை.இதோ எந்த அன்பைக் கொண்டு இந்த வீட்டைக் கட்டினரோ வேதாச்சலமும்,மாணிக்கமும் அதே போல தான் அங்கு இருப்பவர்கள் மனதும் அன்பால் பிணைக்கப்பட்டிருந்தது.பொறாமை என்ற கருப்பை நீக்கி அன்பால் வண்ணம் சேர்த்தனர் அனைவரும்.

இதோ விழாவும் சிறப்பாக முடிய தனது அறையில் இருந்து நிலவை ரசித்துக் கொண்டிருந்த வேந்தனை பின்னால் இருந்து இரு கரம் அணைக்கவும்,

"ஓய் வெள்ளச்சி...என்னடி..."என்று குழைய அவளை முன் பக்கம் கொண்டு வந்து தன் கை வளைவில் வைத்தவன் அவளது ஐந்துமாத வயிற்றை தடவி,

"என்ன சொல்லுரா என் பொண்ணு..."என்றான்.

"ம்ம்...உங்க பொண்ணு சொல்ரது இருக்கட்டும்...உங்க பையன் அடம் தாங்கல...கதை சொன்னா தான் தூங்குவானாம்...இன்னக்கி அப்பாவோட போயாச்சு..."என்று கூற அவளது தடையை தன் புறம் திருப்பியவன்,

"போதும் டி பையன் புராணம் என்னையும் கொஞ்சம் கவனி..."என்று அவளது கூந்தலில் முகம் புதைத்துக் கூற,

"ஆசைய பாரு கருவாயனுக்கு..."என்று சொன்னாலும் அவனது அதரங்களில் அழுந்த முத்தமிட அது போதுமானதாக இருந்தது போலும் கணவனுக்கு அவளது முத்தத்தை ஆழ்ந்து அனுபவித்தவன்.அவளது இடைவளைத்தவாரே மீண்டும் வானை நோக்க,

"என்ன அங்க பாக்குரீங்க..."என்றாள்.

"ம்ம்...என்னோட நிலாவ விட அந்த வானத்து நிலா ஜொலிப்புக் கம்மி தான்..."என்று அவளது கன்னம் பற்றி கூற அவனைப் பார்த்து அழகாக சிரிக்க

"தூரம் போகாதே வெண்ணிலவே...என் வெண்ணிலவே..."என்று காதலாக உறைத்தான் அழகியின் வேந்தன்.அவனது வெண்ணிலவும் அவனை இறுக அணைத்து "எங்கும் செல்லமாட்டேன் மன்னவனே...என் மன்னவனே.."என்று பாட அவர்களது காதலைக் கண்டு அந்த வானத்து நிலவுதான் வெட்கப்பட்டு மேகங்களில் மறைந்து கொண்டது.

சுபம்.
நண்றிகள்
 

Saroja

Well-Known Member
ரொம்ப அருமையான பதிவு
வேந்தன் குடும்பம் சூப்பர்
அண்ணாமலையை அப்பாவா
மாத்தியாச்சு
மகனும் வந்துட்டான்
இனி மகள் வரப்போறா
ஆனந்தமான முடிவு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top