தூரம் போகாதே என் மழை மேகமே !! - 85

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
“இனி பேசிக் கொண்டிருக்க என்னால் முடியாது என் கண்மணி" என்று சரசமாக ஆதிரையின் காதருகில் கிசுகிசுத்தான் அர்ஜூன். அவன் சொல்லில் மெய் சிலிர்க்க வாய் வார்த்தை வரவில்லையென்றாலும் அவனை விட்டு விலகி சென்று கட்டிலில் குதிகாலிட்டு அமர்ந்தாள் ஆதிரை.


நாணல் உன் மெய் என்றேன்.. நாவில் பொய் என்றாய்… !!
நறை உன் மணம் என்ரேன்.. நகை கொண்டு தலை குனிந்தாய்!!
ஏனென்றேன்.. நாணமென்றாய்!!
கைதொட்டு, காதல் என்றேன்.. நானுமென்றாய்!!
நெருங்கி இருக்கவா என்றேன்.. நெருங்கி இறுக்க வா என்றாய்!!
காதல் புரிந்து கன்னத்தில் முத்தமிட்டேன்!!
மறுமுறை என்றாய்!!
இதுதான் நாணமா?? நகைத்துவிட்டேன்..
மெய் சேர்ந்த பின்னும் நாணுமா?? காதருகே முணுமுணுத்தாய் !!
உன் வினவல் சரி என்பதற்குள் இம்முறை நீ தந்து என் வாயடைத்தாய்!!
போதையில் நான் சற்று நாணித்தான் போனேன்!!
-அரிகிருஷ்ணன்



விடிகாலை இனிதே புலர்ந்தது. ஆதிரையும் அர்ஜூனும் இணைந்து ஆதிரஜ்னாக மாறி போயிருந்தனர்.


அடுத்த பௌர்ணமி மலர, ஆதிரையும் அர்ஜுனும் தீவிற்கு சென்று கையோடு சிவனையும் விளக்கையும் தனிவிமானம் மூலமாக இந்திரபிரதேஷுக்கே கொணர்ந்து வந்துவிட்டனர். சிவனும் பார்வதியும் இல்லாமல் அந்த தீவும் கடலில் மூழ்கி போனது. அர்ஜுன் முடிவடுத்த படி சந்திரகுளிர் குகை கோவிலுக்கான பாதை அமைக்கபட்டு வெளிஉலக மக்களின் குறைகளை போக்கியது. பால் அருவி பலவித நோய்களை குணமாக்கி அந்த கோவில் உலக பிரசித்தி பெற்றது.


விஸ்வாவின் பெற்றோர்கள் அவனை வெளி நாட்டுக்கு அழைத்து சென்றுவிட்டனர். மருத்துவத்தாலும் ,லாவண்யாவின் தொடர்ந்த அன்பினாலும் அவன் உள்ளம் மாறி லாவண்யாவையே திருமணம் செய்துக் கொண்டான். ஆனால் மீண்டும் இந்தியா வருவதை அவன் நினைக்கவில்லை. லாவண்யாவும் விஸ்வாவை நினைக்க விடவில்லை. அவர்கள் வாழ்க்கை இனிதே நகர்ந்தது.


ஆதிரை ஊர் மக்களுக்கு வைத்தியம் பார்க்க அல்லோபதியோடு அந்த ஊர் மக்களின் மருத்துவ வழக்கத்தையும் பயின்றாள் . இரண்டு மாதத்திற்கு ஒருமுறையாவது மருத்துவ செலவு செய்ய முடியாத ஏலை மக்களுக்கு தமிழ் நாடு வந்து இலவச மருத்துவ முகாமிட்டு மருத்துவம் செய்து வந்தாள். அர்ஜூன் வழக்கம் போல சென்னை செல்வதும் மீண்டும் இந்திரபிரதேஷ் வருவதுமாக ஓடிக் கொண்டிருந்தான். காஞ்சிபுரத்தில் கட்டப்பட்ட வீடுகள் சந்திரகுளிர் பிரட்சனை சரியானதால் ஊர் மக்கள் இந்திரபிரதேஷைவிட்டு போகாதால் குழந்தைகள் காப்பகமாகவும் , ஆதரவற்றவர்கள் இருப்பிடமாகவும் மாறி போனது.


அரவிந்த் மீண்டும் அகழ்வாராய்ச்சி பணியில் சேர்ந்து ராஜஸ்தானில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தான். உடன் சென்றிருந்த ரிதிகாவும் , fashion துறையில் இன்னும் பல ஆடைகள் design செய்து வந்தாள். அதுவும் அவளது மலர்களால் ஆன திருமண வரவேற்பு ஆடைகளுக்கு மிகுந்த வரவேற்பு இருக்க அதிலே பலவித மலர்களாலும் துணிகளாலும் design செய்து fashion துறையில் அவளுக்கென்று பெயர் வாங்கினாள்.


அர்ஜூனும் ஆதிரையும் இரு ஜன்மங்களுக்கும் சேர்ந்து இந்த ஜன்ம வாழ்க்கையை மகிழ்வுடன் வாழ்ந்தனர். இடையில் குட்டி அர்ஜூனும் குட்டி ஆதிரையும் பிறந்தனர்.


இப்படியாக எல்லோர் வாழ்க்கையும் தெளிந்த நீரோடை போல ஒருவரையும் பாதிக்காமல் இனிமையாக நகர்ந்தது.


******************************************************சுபம்**************************************​

Author Note
=========

வணக்கம் நண்பர்களே!

இந்த கதையை இறுதி வரை படித்த அனைவருக்கும் என் நன்றி.

நிறைய spelling mistakes இருந்தது. அதெல்லாம் பொருட்படுத்தாம கதைய படிச்சதுக்கு நன்றி. அடுத்த story எழுதும் போது உங்களோட comments- அ நினைவு வச்சி எழுதுறேன்.

இந்த கதை எழுத நா ரொம்ப research பண்ணேன். அது waste ஆகலனு நினைக்கிறேன். என்னோடு கதையோட output எனக்கு திருப்தியா இருந்தது.

once again , Thanks for your continuous support.

இப்படிக்கு,
யோகி
 

Janavi

Well-Known Member
நிறைய suspense ah ஆரம்பித்து, மூன்று ஜென்மத்து கதையை தொய்வில்லாமல் அருமையாக கொண்டு போனீங்க.... Thanks sis.... Eagerly waiting for your next story....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top