தூரம் போகாதே என் மழை மேகமே !! - 83

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer



“நில்லுமா.” என்றார் காதம்பரன். “ம்ம்கும்..மாட்டேன். படகு இல்லையென்றால் நான் நீந்தியே போகிறேன். ஐயோ எனக்கு நீந்தவும் தெரியாதே. பரவாயில்லை. நீந்த தெரியவில்லையென்றால் என் அர்ஜூனுக்கு முன் நீரில் விழுந்து செத்து போகிறேன்" என்று பிதற்றிய வண்ணம் வெறி பிடித்தவள் போல கடலை நோக்கி ஓடினாள். அவள் அப்படி ஓடுவதை பார்த்த அந்த பக்க மீனவர்கள் அவளை ஓடிச்சென்று இறுக கைப்பற்றி பிடித்தனர். பின்னோடு ஓடி வந்த காதம்பரன் விளக்கம் கூற, அந்த மீனவர்கள் திகைத்து போயினர்.


“அச்சோ.. என்ன அண்ணாத்த சொல்ற, சரி வாமா. இந்த படகுல குந்து.. நாங்க அந்த பாக்கத்துல உன்ன இட்டாண்டு உடரோம் " என்றார் மீனவர்களில் ஒருவர்.


கண்ணில் ஒளி வர, அவர் சொன்னது போல ஏறி அந்த மீனவரின் படகில் அமர்ந்தாள் ஆதிரை. யார் சொல்வதையும் கேட்கும் நிலையில் ஆதிரை இல்லையென்பதை உணர்ந்த காதம்பரன் அவசரமாக விஸ்வாவின் அப்பாவிடம்" விஸ்வா மூலமாக அவன் செயலை தடுக்க முடியுமா என்று பாருங்கள் சார். நான் ஆதிரையுடன் போகிறேன். “ என்று சொல்லிவிட்டு ஆதிரைக்கு துணையாக உடன் ஏறி அதே படகில் அமர்ந்தார்.. லாவண்யாவும் , விஸ்வாவின் அப்பாவும் ஒருவாறு தலையசைத்து விஸ்வா இருந்த hospital-க்கு விரைந்து செல்லலாயினர்.


ரிதிகாவிற்கு phone செய்து பார்த்து switch off -ல் இருப்பதால், message அனுப்பிவிட்டு ஆதிரையிடம் திரும்பினார் காதம்பரன். “எதுவும் ஆகாது ஆதிரை. கவலை படாதே. சந்தனும் உடன் இருக்கிறார். அப்படி எளிதாக ஸ்லிண்டரையெல்லாம் மாற்ற முடியாது. ஆழ்கடல் என்பதால் ஒருவருக்கு இருவராக எல்லாவற்றையும் சரிபார்க்காமல் இருக்க மாட்டார்கள். தைரியமாக இரு" என்றார் .
அவர் சொல்வது காதில் விழுந்த போதும் ,விழியில் உயிர் வற்றும் அளவு கண்ணீர் வழிய எதிர் கொண்ட கப்பலையெல்லாம் காட்டி, “இந்த கப்பலா அங்கிள். இதுவா அங்கிள்" என்று பிதற்றுகிறோமென்று உணர்ந்த போதும் ஆற்றாமையுடன் கேட்டுக் கொண்டே வந்தாள் ஆதிரை.


அவளை பரிதாபமாக பார்த்த அந்த மீனவர், “ இந்தா சாமி , இந்த தண்ணிய அதுகிட்ட கொடு. ரொம்ப தவிச்சு போயிருக்குது" என்றார். நன்றியுடன் அந்த மீனவரை பார்த்த காதம்பரன் ஆதிரையை தண்ணீர் குடிக்க வைத்து ஆசுவாச படுத்தினார்.


நேரம் கடக்க கடக்க ஆதிரையின் இதயம் பல மடங்கு துடிக்க ஆரம்பித்துவிட்டது. 11 மணிக்கும் மேல் கடந்து சில நிமிடங்கள் நகரவும் ஆதிரையால் படகிலும் அமைதியாக அமர்ந்திருக்க முடியவில்லை. ஆதிரை ஒரு நிலையில் இல்லை என்பதை அறிந்ததால் அவள் கடலில் குதித்துவிடுவாளோ என்று தோன்ற காதம்பரன் ஆதிரையின் கையை இறுக பற்றியிருந்தார். ஆதிரை பொலம்புவதை நிறுத்துவதாக இல்லை. “ஐயோ .. அவரை புரிந்துக் கொள்ளாமல் எவ்வளவு தவிக்க விட்டுவிட்டேனே. என்னால் தாங்க முடியவில்லையே. எனக்காக ஒவ்வொன்றையும் யோசித்து யோசித்து செய்திருக்கும் அவருக்காக நான் இதுவரை எதையும் செய்ததில்லையே. முன் இரு ஜன்மங்களில் அவரை விட்டு நான் போனேன் என்பதற்காக இந்த ஜன்மத்தில் என்னை தவிக்க விட்டுவிட்டு போய்விடுவாரா?” என்று தொடர்ந்து பொலம்பினாள்.


இப்படி இருக்க, காதம்பரன் ஒரு கப்பலை சுட்டி காட்டி. “அதோ அந்த கப்பல்தான் தம்பி. ?” என்று அந்த மீனவரிடம் அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, சந்தன் கப்பலிலிருந்து காதம்பரனை பார்த்து கையசைக்க செய்தார்.


உடன் ஒரு பெண்ணும் வருவதை பார்த்து முதலில் புரியாமல் திகைத்த சந்தன், அவசரமாக அவர்கள் கப்பலுக்குள் ஏறி வர ஏற்பாடு செய்தார். ஆதிரைதான் முதலில் கப்பலில் ஏறினாள்.


ஏறியதும் சுற்றி இருந்த ஆட்களை நோட்டமிட்ட ஆதிரை, பார்த்தவர்களில் அர்ஜூனை கண்ணில் படாமல் போக முகம் வெளுக்க , “முத்துகுளிக்க இன்னும் யாரும் போகவில்லையே சார்" என்று சந்தனிடம் தவிப்புடன் கேட்டாள்.


சந்தன் ஆதிரையை நேரிடையாக பார்த்ததில்லையென்பதால் அவள் யார் எதற்காக வந்திருக்கிறாள், அதுவும் இந்த நடுகடலுக்குள் ஏன் வந்திருக்கிறாள் என்பது புரியாமல் சில வினாடி பார்த்தவர் அவள் கேள்வியின் தீவிரம்புரிய, “ முதல் குழு காலை 6 மணிக்கே கடலுக்கு அடியில் சென்றுவிட்டனர். அவர்கள் வந்ததும் இரண்டாவது குழு அனுப்பப்படும். நீங்க யார். என்ன ஆச்சு. உன் முகம் சரியில்லையே" என்று கேட்டார் சந்தன்.


அவர் பேசியதின் கடைசி வார்த்தைகளை விடுத்து, “அ.. அர்ஜூன்.. அர்ஜூன் கப்பலில்தானே இருக்கிறார்?” என்று அவர் உயிரே அவர் சொல்லில்தான் இருப்பது போல ஆதிரையின் விழி ஆவலாக சந்தனை பார்த்தது. அதற்குள் காதம்பரனும் கப்பலுக்குள் வர, “ சந்தன். அவள் அர்ஜூனின் மனைவி ஆதிரை.. அர்ஜூன் இன்னமும் முத்துகுளிக்க செல்லவில்லைதானே?” என்று அவரும் கவலையாக கேட்டார்.


சந்தனுக்கு சூழலில் தீவிரம் புரியவில்லையோ என்னமோ, மிகவும் இயல்பாக சாதாரணமாக பேசினார் . “ஓ அப்படியா? வணக்கம் ஆதிரை.. உங்களை பற்றி அர்ஜூன் சொல்லியிருக்கிறார். இவ்வளவு நாள் நேரில் பார்த்து பேச எனக்கு வாய்ப்பில்லாமல் போனது. “ என்று அறிமுக படுத்திக் கொள்வதுதான் முக்கியம் போல சொல்ல அதற்கு ஆதிரையிடம் பிரதிபலிப்பு இல்லாததை உணார்ந்து , “அர்ஜூன் இரண்டாது குழுவில் செல்வதாகதான் ஏற்பாடுமா. ஆனால் ஏனோ அர்ஜூன் இன்று முதல்குழுவிலே கடலுக்குள் போய்விட்டு வருவதாக சொன்னார். அவர் வருகிறே நேரம்தான். “ என்று சொல்லி புன்னகைத்தாள்.


அவர் சொல்லில் ஆதிரைக்கு தலை சுற்ற ஆரம்பித்துவிட்டது. அவள் தவித்து சரிந்து கீழே விழ காதம்பரன் அவளை கை தாங்களாக பிடித்து அங்கிருந்த ஒரு இருக்கையில் அமரவைத்தார். ‘இல்லை.. இல்லை. அர்ஜூனுக்கு எதுவும் ஆகியிருக்காது. வந்துவிடுவான். அதற்குள் மனமுடைந்து போக கூடாது' என்று தனுக்கு தானே சொல்லிக் கொண்டு முகம் வெளுக்க அமர்ந்தாள் ஆதிரை.


என்ன ஏதேன்று புரியாமல் விழித்த சந்தனிடம் திரும்பி, “அர்ஜூனும் மற்றவர்களும் தொடர்பில் இருக்கிறார்கள்தானே. அவர்கள் கடலில் இறங்கும்முன் ஆக்ஸிஜன் சிலிண்டர் சரியாக இருக்கிறாதே என்று சரி பார்த்துதானே எல்லோரையும் அனுப்பினீங்க" என்று சந்தனிட்ம கேட்டார் காதம்பரன்.


அவரை கேள்வியாக பார்த்த சந்தன், " என்ன சார். எதுவும் பிரட்சனையா? ஆக்ஸிஜன் ஸ்லிண்டர் ஒருவருக்கு இருவராக சரி பார்த்துவிட்டோம். அதனால் எந்த பிரட்சனையும் இல்லை. ஆனால் கொஞ்சம் தகவல் தொடர்பு பிரட்சனை இருக்கிறது சார். இது போல சில சமயங்களில் ஏற்படுவதுண்டுதான். கவலை பட அவசியமில்லை" என்று பொறுமையாக சொன்னார். அவர் சொல்வது கேட்டாலும் ஆதிரையாலும் சமாதனம் அடைய முடியவில்லை.


ஆதிரையை பார்த்ததும் , கப்பலின் மேல் தளத்தில் இருந்த ஒரு ஆளுக்கு வியர்க்க ஆர்மபித்தது. வேலையில் கவனமில்லாமல் ஆதிரையை திரும்பி திரும்பி பார்த்த வண்ணம் அவர்கள் பேசுவதையே கவனித்துக் கொண்டிருந்தான். யாரோ தன்னை பார்ப்பது போல உணர்ந்த உள்ளுணர்வில் , முகம் உயர்த்தி பார்த்த ஆதிரையை பார்த்ததும், அந்த ஆள் சட்டென முகம் மறைத்துக் கொண்டு தீவிரமாக வேலை பார்ப்பது போல் அவன் நடந்துக் கொண்டான். சட்டென சந்தேகம் படர, “சார். ஆக்ஸிஜன் சிலிண்டரை சரி பார்த்தவர்களுள், அவரும் ஒருவரா?” என்று அந்த ஆளை நோக்கி கையை காட்டி ஆதிரை கேட்டாள்.


அதிசயமாக ஆதிரையை பார்த்த சந்தன், “எப்படிமா தெரியும். ஆமாம் அவரும் ஒருவர்தான். நந்தா இங்கு வா?” என்று அவனை அழைத்து அறிமுகம் செய்து வைத்தார் .


அந்த நந்தாவிற்கு முகமெல்லாம் வியர்த்த போதும் , “வணக்கமா" என்று பணிவாக பதில் சொன்னான்.


அந்த ஆளுக்கு பதிலுக்கு வணக்கம் சொல்லாமல், “அங்கிள் இவர் இந்த ஆளை வேறு எங்கோ பார்த்தது போல இருக்கிறது. இவர் இவரை பார்த்தால் சந்தேகமாக இருக்கு. எ.. எனக்கு பயமாக இருக்கிறது" என்று காதம்பரனிடம் சொன்னாள் ஆதிரை.


"ஆதிரை.. உன்னுள் ஏதோ குழப்பமென்று நினைக்கிறேன். இவர் கிட்டதட்ட மூன்று வருடங்களாக நம்மோடு பணிபுரிகிறவர். எந்த தவறும் செய்திருக்க வாய்ப்பில்லைமா" என்று பொறுமையாக விளக்கம் சொன்னார் சந்தன்.


தொடர்ந்து, “ நீங்க போய் வேலையை பாருங்க நந்தா.. ஆதிரை கொஞ்சம் பதற்றத்துடன் இருக்கிறாள். தவறாக என்ன வேண்டாம்" என்று அவனை அனுப்பிவிட்டு, “ காதம் சார். என்ன ஆயிற்று இருவர் முகமும் தெளிவாக இல்லையே. ஏன் ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றி கேட்கிறீர்கள்" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே முதல் குழு முத்துக்குளிக்க சென்றவர்கள் திரும்பி வர அவர்கள்புரம் கவனம் திரும்பியது.


“சந்தன் சார். சந்தன் சார். அர்ஜூனுக்கான சிலிண்டரில் போதிய ஆக்ஸிஜன் இல்லாமல் போனது. நாங்க உங்களுக்கு தொடர்புக் கொள்ள முகவும் முயன்றோம். சீக்கரமாக அர்ஜூனை மேலே கொண்டவர ஏற்பாடு செய்யுங்க சார். அ.. அர்ஜூன் சாருக்கு..” என்று மேலேறிவந்த ஆள் பதற்றத்துடன் சொல்ல ஆதிரை , ஒரு நொடியும் தாமதிக்காமல் கப்பல் கைப்பிடி கம்பியை தாண்டி கடலில் குதித்துவிட்டாள்.


அங்கிருந்தவர்களுக்கு வந்த ஆள் சொன்னது ஒருவித அதிர்ச்சி என்றால் அதனை உள்கிரகிக்கும் முன்பே கடலில் குதித்துவிட்ட ஆதிரை பார்த்ததும் மற்றொரு அதிர்ச்சியாகி போனது.


இரண்டு நாட்களுக்கு பிறகு..


ஆதிரைக்கு ஏதோ கனவில் யார் யாரோ பேசிக் கொள்வது போல் கேட்டது. Emergency அறையில் இருப்பது போல பீப் பீப் என்ற சபதம் காதில் கேட்டுக் கொண்டே இருந்தது.


யாரோ அவசரமாக ஓடி வரும் அரவம் கேட்டது. “ நீ.. நீங்க..” என்றார்.


யாரோ பரப்பரப்புடன் "நான் . இவள் என் மனைவி.. டாக்டர் எப்படி இருக்கிறாள்.?” என்றான் அர்ஜூன்.


‘அ.. அர்ஜூனின் குரல். அவனுக்கு ஒன்றுமில்லை. நலமுடன் இருக்கிறான்' என்று ஆதிரையின் இதய துடிப்பு வேகமாக துடிக்க ஆரம்பித்தது.


“எங்கே. இந்த பெண்ணுக்கு வாழ வேண்டுமென்ற எண்ணம் இருப்பதாகவே தெரியவில்லையே தம்பி.. இரண்டு நாள் தாங்குவது கஷ்டம். என்னை மன்னித்துவிடப்பா. அது இருக்கட்டும். நீயே இப்போதுதான் கண் விழித்தாய். அதற்குள் எப்படி இங்கு வந்தாய். நர்ஸ் இந்த தம்பியை அழைத்து போய் ஓய்வெடுக்க வை..” என்று அர்ஜூனின் உடையையும் முகத்தையும் பார்த்து சொன்னார் டாக்டர்.


ஆம். அர்ஜூனும் emergency -ல் தான் இருக்கிறான். சிலிண்டரில் ஆக்ஸிஜன் குறைந்திருந்தது உண்மைதான் என்ற போதும். அதிகமாக குறைவில்லை. இரண்டாவது குழுவில் செல்ல இருந்தவன் முதல் குழுவில் செல்வதாக ஏற்பாடானதால் அதிகமாக ஆபத்து தரும் அளவு சிலிண்டரை யார் கவனமும் ஈர்க்க இல்லாமல் செய்வது அந்த நந்தாவிற்கு கடினமாகி போனது. அதனால் கடல் மேற்பர்ப்புக்கு வருவதற்கு 15 நிமிடங்கள் முன்புதான் ஆக்ஸிஜன் எல்லாம் தீர்ந்தது. மூச்சுபிடித்து அர்ஜூன் கடல்பரப்புக்கு வருமுன் காதில் ரத்தம் வர மூச்சு திணரல் ஏற்பட்டது. உடனடி நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டதால் மயக்கமடைந்துவிட்டான். இரண்டு நாள் சுயனினைவற்று இருந்த அர்ஜூன் ஆதிரையின் நிலை அறிந்ததும் அவனையும் மறந்து அவசரமாக ஓடிவந்தான்.


அருகில் நர்ஸ் வருவதை பார்த்தும் சட்டை செய்யாமல் ஆதிரையின் கட்டிலின் அருகில் ஓடிச் சென்று ஆதிரையின் கையை பற்றினான் அர்ஜூன். "ஆ.. அதிரை.. கண்ணை திறந்து பார். நான் அர்ஜூன் வந்திருக்கிறேன். என்னை விட்டுவிட்டு போய்விடாதே. ஆதிரை. என்னால் இனியொரு ஜன்மம் இதை தாங்கமுடியாது. please என்னைவிட்டு போய்விடாதே ஆதிரை.. கண்ணை திறந்துவிடு.. உன் விருப்பம் போல் நீ என்ன செய்ய நினைக்கிறாயோ அதையே செய். என்னிடம் வந்துவிடு ஆதிரை. நீ வரவில்லையென்றால் நானும் உன்னோடு வந்துவிடுவே " என்று அர்ஜூன் கண்ணீர் விட்டான்.


எதற்கும் கலங்காத அர்ஜூனுக்கு உடலில் ஒரு பாகம் இல்லாதது போல மரண வலி ஏற்பட்டு கலங்க வைத்தது. எங்கோ ஆழ்மனதில் ஒலித்த அர்ஜூனின் குரலில் ஆதிரையின் விழியோரத்தில் கண்ணீர் வந்தது. ஆதிரையின் கைப்பற்றியிருந்த அர்ஜூனின் கையினை இன்னும் கண்ணை திறக்காத ஆதிரை இறுக பற்றினாள் அதன்பிறகு அவன் கையை விடவில்லை.


அதனை பார்த்த டாக்டர், "அர்ஜூனின் bed -ஐ இந்த பெண்ணின் cabin-க்குள் மாற்றிவிடுங்க நர்ஸ்.” என்று விட்டு ஆதிரையின் விழியினை தன் கையால் இழுத்து பார்த்துவிட்டு, “நம்பிக்கையாக இருங்க அர்ஜூன். நல்ல முன்னேற்றம். ஏதோ அதிர்ச்சி மட்டும்தான். ஆனால் வாழ்வின் பிடியில்லையென்று இவ்வளவு அலட்டிக் கொண்டிருக்கிறாள். உங்கள் குரலில் அவளுக்கு வாழவேண்டுமென்ற ஈர்ப்பு ஏற்பட்டிருப்பதாக தோன்றுகிறது. அதிகம் பேசுங்க. உங்க குரலை கேட்டப்பின் எனக்குமமே நம்பிக்கை வந்திருக்கு. பார்ப்போம்" என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.


“தாங்க்ஸ் டாக்டர்" என்று அவசரமாக ஆதிரையிடம் திரும்பினான் அர்ஜூன். இரண்டு நாள் இரண்டு முழு நாட்களுக்கு பின் ஆதிரை கண்விழித்தாள். அப்போதும் அர்ஜூனின் கையை விடாமல் இறுக பற்றியிருந்தாள். எந்த காரணம் கொண்டும் விடுவதாக இல்லை.


ஆதிரையின் மனதில் அர்ஜூனின் அருகாமை போதுமென்ற எண்ணம் மட்டுமே இருந்தது. அவள் கண் விழித்த பிறகு உயிர் மீண்டது போல் உணர்ந்த அர்ஜூன், hospital என்றும் பாராமல் ஆதிரையை இறுக அணைத்தான். ஆதிரையும் அவன் மார்பில் புதைந்தாள். இருந்தும் இருவரும் ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக் கொள்ளவில்லை.


ரிதிகா அரவிந்த் யாரும் ஆதிரையின் கண்ணில் படவில்லை. அவர்கள் பேசுவதும் காதில் விழுவதாக இல்லை. அர்ஜூன் மட்டுமே அவள் கண் முழுதும் தெரிந்தான். அர்ஜூன் கண்ணில் மறைந்தால் உடல் நடுங்குவதும் , அவன் அருகிலிருந்தால் அவன் கைப்பற்றி அமைதியாக கண் மூடி கிடப்பதையுமே செய்துக் கொண்டிருந்தாள்.


"ஆதிரை .. ஏன் இவ்வளவு பயம். எனக்கு எதுவும் ஆகிவிடாது. விஸ்வாவின் செயல்களுக்கு காரணம் இருக்கிறது. அதனை நான் பிறகு சொல்கிறேன். ஆனால் இனி அவன் உன்னிடம் நெருங்க மாட்டான். ஏன் நம்மை இனி அவன் எதுவும் செய்ய முடியாது. தைரியமாக இரு" என்று அவன் சொல்வதை விழி நிமிர்த்து பார்த்த போதும் ஆதிரை ஓரிரு வார்த்தைகளை தவிர அதிகம் பேசவில்லை. அவளுக்கு இன்னமும் இது கனவாகிவிடுமோ என்ற பயமே மேலோங்கி இருந்தது.


இரண்டு நாட்கள் கழித்து hospital -லிருந்து இருவரும் discharge ஆனதும் இந்திரா எண்டர்பிரஸ்க்கு சென்றனர். ஆனால் ரிதிகாவும் அரவிந்தும் அர்ஜூனையும் ஆதிரையும் சிம்லாவிற்கு அனுப்பி வைத்து இங்கு அவர்களும் காதம்பரன் அங்கிளும் பார்த்துக் கொள்வதாக சொல்லி அனுப்பி வைத்தனர்.


நன்றியோடு அவர்களை பார்த்த போதும் அவள் உடல் நிலை பற்றி கேள்வியாக மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அர்ஜூனும் ஆதிரையும் கிளம்பினர். இந்திரபிரதேஷ் சென்று அவர்கள் அறை அடையும் வரை எந்தவித அதிகபட்சமாக எந்தவித பேட்சும் இருக்கவில்லை.


அறையினை அடைந்ததும் ஆதிரையை அர்ஜூன் இறுக அணைத்து அவள் இதழ் மீது இதழ்பதித்தான். ஆதிரை எதுவும் சொல்லவில்லை. அவனை விலக்கவுமில்லை. இருந்தும் அவனே அவளை விலக்கி நிறுத்தி, “ஆதிரை. உன்னிடம் நிறைய பேச வேண்டும். அதற்கு முன் ஒரே ஒரு கேள்வி, நான் வர தாமதமானதும் எனக்காக கடலில் குதித்துவிட்டாயே. நான் வரும் வரை காத்திருக்ககூட தோன்றாமல். என்னை உனக்கு அவ்வளவு பிடிக்குமா?" என்று ஆதிரையின் முகவாயை உயர்த்தி கேட்டான்.


அவள் எதுவும் பேசவில்லை, ஆனால் அர்ஜூனை இறுக அணைத்துக் கொண்டாள். அவள் கண்ணில் லேசான ஈரமிருந்தது. வாய் வார்த்தை வரவில்லையென்றாலும் அந்த அணைப்பு அனைத்தையும் அவனுக்கு உண்ர்த்தியது.


“ஆதிரை. உனக்கு ஒன்று தெரியுமா? நீ சென்னைக்கு சேகர் அங்கிள் சொன்னதாக சொல்லி வந்த போது முதல் பார்வையிலே, அந்த கடலில் எல்லை கடந்து சென்றாயே, அப்போதே என் மனம் உன்னை என்னவளாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்று சொல்லியது.” என்று அவன் மனம் திறந்து பேசலானான்.


கண்விழியகல அவனை நிமிர்ந்து பார்த்தாள் ஆதிரை. “ஆமாம். கண்மணி. ஆனால் சேகர் அங்கிள் உனக்கு குழந்தை இருக்கு என்றதும். எனக்கு என்னமோ போல ஆகிவிட்டது. ஒரு குழந்தையின் தாயை வேறு கண்னோட்டத்தில் பார்ப்பது தவறுதானே. ஆனால் உன்னை வேறொருவருக்கு சொந்தமானவள் என்று எண்ணியதுமே எனக்கு கோபம் வந்துவிட்டது. அந்த கோபத்திலே அன்று உன்னை காப்பாற்றிய போதும் , குழந்தையென்று ஓடிய உன்னை வெறுப்பது போல் பேசினேன். " என்றான்.


ஆச்சரியமாக அவனை பார்த்த ஆதிரை, “ஓ.. நான் திமிரென்று நினைத்தேன். என்னால் உங்கள் உடை ஈரமாகிவிட்டது என்ற எரிச்சல் என்று நினைத்தேனே!” என்றாள்.


அவள் மூக்கை பிடித்து ஆட்டி, “ உன் மனம் கள்ளம் கபடமற்றது. வேறெப்படி நினைப்பாய் . நீ அப்படி நினைக்கவில்லையென்றால்தான் ஆச்சரியம். அதன் பிறகும் அந்த interview-ல் உன்னை யாரோ போல எண்ணி பேச என்னால் முடியவில்லை. எனக்கான facebook தோழிகள் போல நீயும் இருந்துவிடுவாயோ. எச்சரிக்கையாக இல்லாததால்தான் குழந்தையோ என்று ஆற்றமை வந்தது. அதனை அறிந்திடவே என்று அறிந்திடவே உன் கோபத்தை தூண்டிவிட்டேன். ஆனால் உன் நேர்மையான பேச்சும் எதை கண்டும் பயமற்ற முகமும் எனக்கு உன் மீது மீண்டும் மயக்கம் வர செய்தது. நான் பேசிய பேச்சில் அவசரமாக உன் அறைக்கு சென்றாயே, அப்போது எங்கு கடலில் குதிக்க முயன்றது போல் ஏதேனும் தற்கொலை செய்துக் கொள்ள செய்வாயோ என்று தவித்து போனேன். அவசரமாக உன் அறை தேடி வந்தேன். ஆனால் நீ அழுதது கூட என்னால் பொறுக்க முடியவில்லை. என்னை நானே திட்டிக் கொண்டேன். அதன் பிறகும் உன் ராஜாவிற்காக தவித்ததையும் அவனை அணைத்தையும் பார்த்து எனக்கு உன்னை அணைத்துக் கொள்ள வேண்டுமென்று தோன்றியது. அதன் பிறகு சே என்ன மடத்தனம். என் எண்ணம் தெரிந்தால் என்னை சுட்டெறித்திருக்க மாட்டாய்? என்று யோசித்தேன். ஏனென்றால் அப்போது உன் மனதில் ராஜாவை தவிர வேறு யாரை பற்றியும் எதை பற்றியும் கவலை இல்லையென்று தெரிந்தது.” என்றான்


அவளும் அவனை ஆமோதித்து பேசினாள், “ உண்மைதான் அர்ஜூன். எனக்கு உங்கள் மீதும் முதலில் ஈர்ப்பு வந்ததே, அந்த படகில் நிலவொளியில் உங்கள் முகம் பார்த்த போதுதான். அப்போதும் முதல் முதலாக அறிமுகமற்ற ஆணுடன் தனிமையிலிருந்ததால் ஏற்பட்ட கிளர்ச்சி என்று என்னை சமாதன படுத்திக் கொண்டேன். என் மனமே சிறிது தடுமாற்றமுடன் இருக்கும் அந்த நிலையில் அந்த ஆற்றங்கரையில் என் நெற்றியில் பதித்த உங்களது இதழ் ஒற்றலில் என்னால் என்னை கட்டுக் கொள்ள முடியவில்லை. அன்று நீங்க என்ன செய்திருந்தாலும் , நான் தடுத்திருக்க மாட்டேன். வேறு யாரோ என்றால் என்னை தொட்ட நொடியில் தரையில் மண்ணை கவ்வும் அளவு அடித்திருப்பேன். ஆனால். ஆனால் என் மனம் எனக்கு தெரிந்துவிட்டதே. உங்கள் மனம் எனக்கு தெரியாதே. ஏதோ உணர்ச்சி வேகத்தில் என்னிடம் நெருங்கி இருந்தால், என் நிலையை நினைத்து என் மீதே கோபம் வந்தது. அதனால் என் கண்ணில் நீர் வர ஆரம்பித்துவிட்டது.” என்று அன்றைய அவள் மனனிலையை எடுத்து சொன்னாள் ஆதிரை.


“ஒ .. அப்படியா? ஆனால் அன்று உன்னை கண்டதும் என்னால் என்னை கட்டுக் கொள்ள முடியவில்லை ஆதிரை . சாரி. சென்னையில் இருக்கும் வரை வீராப்பாகவும் , திமிராகவும் பேசிய நீ, அந்த தீவுக்கு வந்ததும் உன்னையே அறியாமல் குழந்தையாகி போனாய். படபடவென்று பேசினாய். உன்னையும் அறியாமல் வந்து என் கையினை இறுக பற்றிக் கொண்டாய். முகம் உயர்த்தி நீ பேசிய போது தோன்றிய உன் முக அசைவுகள், மிக அருகில் பார்த்த உன் இதழ்கள் என்னை மயக்கமுற செய்தது. அந்த படகில் உன் அருகில் உறங்குவதற்கு தவித்த தவிப்பு எனக்குதான் தெரியும். நீ உறங்கிய பிறகு வெகு நேரம் கழித்துதான் உறங்கினேன். நீ உறங்கியதும் உனக்கே தெரியாமல் உன் பால் மனம் மாறாத முகத்தை கள்ளத்தனத்துடன் ரசித்தேன். ஆனால் நான் செய்வது தவறு என்று மனதை வெகுவாக கட்டுபடுத்திக் கொண்டிருக்கும் போது தேவதை போல் அந்த ஆற்றங்கரையில் நிற்கிறாய். நான் என்ன செய்வது. சொல்.” என்று ஆதிரையின் இதழினை நிமிட்டினான் அர்ஜூன்.


ஆதிரை வெட்கத்தில் முகம் சிவக்க, தொடர்ந்து, “ அதன் பிறகு நீ ராஜாவை பற்றிய உண்மை சொன்னாய் பார் எனக்கு அதன் பிறகு மாற்று கருத்தே இல்லை. உன்னை மணப்பதை உறுதி செய்துவிட்டேன். அதன் பிறகு உன்னை அணைப்பதில் எனக்கு எந்த வித மன உறுத்தலும் இல்லை. அதனோடு என்னை திகேந்திரன் என்று அழைத்தாயா? எப்படி என் பெயர் தெரியுமென்று யோசித்தேன். ஏனேன்னெறால் என் பெயர் ஒன்றும் இயல்பில் யாருக்கும் இருக்க கூடியதில்லை. அதன் பெயர் காரணமும் தெரியாது. அதனால் எனக்கு கொஞ்சம் குழப்பமாகதான் இருந்தது. இருந்தும் உன்னை எந்த காரணம் கொண்டும் இழக்க எனக்கு விருப்பமில்லை அதனால் என்னை மணக்கிறாயா என்று கேட்டேன். ஆனால் நீ தான் அப்போது பதிலே சொல்லவில்லை. “ என்று குறைப்பட்டான்.


அவன் வருந்துவது பிடிக்காமல் அவனை இதமாக அணைத்துக் கொண்ட ஆதிரை, “அர்ஜூன். அப்போது என் மனம் நிலையில் இல்லை. உங்களிடம் என்னை பற்றி எல்லாம் சொன்ன போதும். ஏன் சொன்னேன் என்றும் எனக்கு அப்போது புரியவில்லை. அந்த என் மழை மேகம் உங்கள் பெயரையும் ஜன்ம கதையையும் எனக்கு காட்டிக் கொடுத்துவிட்டது. ஆனால் நீங்க என் அண்ணியின் தம்பி என்று அறிந்ததும் எனக்கு கவலை வந்துவிட்டது. விஸ்வா செய்த தந்திரத்தில் என்னை தப்பாக பேசியது நீங்கதான் என்று முடிவெடுத்துவிட்டேன். அதனோடு நீங்க சென்னையில் பேசியதும் இயல்பாக சரியில்லாததால் என் மனதை மறைத்து உங்களிடம் வெறுப்பை காட்டினேன். ஆனால் சென்னைக்கு வந்ததும் உங்கள் மனைவியென்று ஆனதும் எனக்கு என்னையும் அறியாமல் மனதில் மகிழ்ச்சி. அதனோடு என்னை நினைத்து எனக்கே எரிச்சலும் கூட. ஏனென்றால் அப்போது விஸ்வாதான் உங்களை போல குரல் மாற்றி பேசினான் என்று தெரியாது. “ என்று விளக்கம் கொடுத்தாள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top