தூரம் போகாதே என் மழை மேகமே !! - 81

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer



சிம்லாவில் இறங்கியதும் "airport-க்கு எப்படி போக வேண்டும் தாத்தா?” என்று உடன் வந்த பெரியவரை கேட்டாள் ஆதிரை.


அதுவரை எதுவும் கேட்காமல் உடன் வந்த அந்த தாத்தா அவளிடம், “ஏன் கேட்கிறாமா.. இந்த நேரத்தில் எங்கே போகிறாய். இது போல அர்ஜுன் தம்பி பௌர்ணமி நாட்களில குதிரையில் இரவில் காட்டின் அழகை பார்ப்பது வழக்கம். அது போல செல்ல விரும்புகிறாய் என்று நினைத்துதான் உன்னை அழைத்துவந்தேன். நீ வேறு எங்கோ போவதாக சொல்கிறாயே?! உன்னை இப்படி தனியாக அனுப்பினால் வீட்டில் நான் என்ன பதில் சொல்ல முடியும்?. பேசாமல் இந்திரபிரதேஷ் போய்விட்டு பிறகு யாருடனாவது வாங்கமா. “ என்று பொறுமையாக எடுத்து சொன்னார்.


'ஏற்கனவே நள்ளிரவை கடந்துவிட்ட நிலையில் இன்னும் மூன்று மணி நேரத்தில் விடியவே ஆரம்பித்துவிடும். அதனால் பயமேதுவும் இல்லை. ’ என்று மனக்கணக்கு போட்டு, “தாத்தா.. அவர். அவரிடம் இருந்து எந்த தகவலுமில்லை. நான்.. என்னால் மட்டும்தான் அவர் சென்ற தீவுக்கு போக முடியும். என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. அதனால் நான் உடனே சென்னை செல்ல வேண்டும். வீடு சென்று வர நேரமில்லை. எனக்கு அவர் எப்படி இருக்கிறார் என்று அதே நினைவாக இருக்கிறது. சிம்லாவிலிருந்து சென்னை போக இன்னும் 1 மணி நேரத்தில் flight இருக்கிறது. இப்போதுதான் நான் அதற்கு என் phone மூலமாக பதிவும் செய்தேன். அதனால் எனக்கு வீடு சென்று திரும்ப நேரமில்லை. இப்போது போக முடியவில்லையென்றால் நாளை மறுனாள்தான் அடுத்த flight இருக்கிறது. புரிந்துக் கொள்ளுங்கள் தாத்தா. எனக்கு எப்படி போக வேண்டும் என்று மட்டும் வழி சொல்லுங்க" என்று கண்ணில் துளிர்த்துவிட்ட நீரை துடைக்கவும் தோன்றாமல் கேட்டு முடித்தாள் ஆதிரை.


அவளது கண்ணீர் அவரது மனதை இளக்கியதோ, “சரி. இங்கேயே இருமா.. நான் போய் நம்ம car எடுத்து வர சொல்றேன். நானும் உடன் வந்து flight ஏத்திவிட்டுவிட்டு வரேன். சென்னையிலையும் யாரையாவது வந்து உன்னை அழைத்து செல்ல ஏற்பாடு செய்ய சொல்லிவிட்டு வருகிறேன்.” என்று குதிரைலாயத்திற்கு அருகிலிருந்து சிறு அறையில் ஆதிரையை அமர வைத்துவிட்டு சென்றார்.


அவர் சொன்னதற்கு , “ சரிங்க தாத்தா" என்று நிம்மதி பெருமூச்சுவிட்டாள். ஆனால் அதற்குள் அர்ஜூனின் நினைவு பேரிருளாக அவளை பயமுருத்த அர்ஜூனின் phone-க்கு phone செய்தாள். ring போன போதும். யாரும் எடுக்கவில்லை. பாட்டி சொன்னபடி பௌர்ணமியும் முடிந்துவிட்டது. ஆனால் அர்ஜூன் phone எடுக்கவில்லை. ஒரு வேளை phone அவர் கையிலில்லையா? இல்லை என் மீது இருக்கும் கோபத்தில் phone எடுக்க மாட்டேன் எங்கிறானா?’ என்று பலதும் எண்ணி களக்கமுற்றாள். பின் "அர்ஜூன். எங்கே இருக்கிறீர்கள். உங்களை பார்க்க நான் சென்னை வந்துக் கொண்டிருக்கிறேன். என்னிடம் பேசுங்க. இன்னும் என் மீதும் போபமா? தீவிலிருந்து வந்துவிட்டீர்களா?” என்று ஒரு message அனுப்பினாள். அதற்கும் பதிலேதும் வரவில்லை.


அதற்குள் car-உடன் வந்த தாத்தா "வாமா. போகலாம்" என்று அவளை அழைத்து சென்று flight-ல் ஏற்றியும்விட்டார். சென்னையில், யாரோ மூர்த்தி என்பவர் ஆதிரைக்காக airportக்கு வந்து அழைத்து செல்வார் என்று விளக்கம் கொடுத்துவிட்டு கிளம்பியும்விட்டார்.


flight-ல் ஏறி அமர்ந்த போதும் , அர்ஜூனிடமிருந்து எந்த தகவலுமில்லாமல் இருக்க ஆதிரை தவியாய் தவித்துக் கொண்டு உறக்கம் கொள்ளாமல் பலதையும் கற்பனை செய்து பயந்துக் கொண்டிருந்தாள். சென்னையில் இறங்கியதுமே இந்திரபிரதேஷிலிருந்து phone வந்தது.


“ஆதிரை.. என்ன அவசரம். அர்ஜூன் பத்திரமாக அந்த தீவிலிருந்து வந்துவிட்டான். இரவில் தூங்கிக் கொண்டிருப்போமென்று காலையில்தான் தகவல் தந்தான். அதற்குள் நீ பயந்து சென்னைக்கே ஓடிவிட்டாயா? ஒரு நாள் கூட அவனுடன் பேசாமல் இருக்க முடியாதா? உனக்கு phone செய்தானா? இல்லையா?” என்று கேலி பேசினாள் ரிதிகா.


அவள் சொன்னதும் பெருமூச்சுவிட்ட ஆதிரை, “அ.. அது அண்ணி.. அவர் எனக்கு phone எதுவும் செய்யவில்லை. அந்த தீவை பற்றிதான் உங்களுக்கு தெரியுமே. அதுதான் பயந்துவிட்டேன். அவருக்கு எதுவுமில்லையென்பதே நிம்மதி.. இப்போது இன்னும் airport -ல் தான் இருக்கிறேன். நான் இந்திரா enterprise -க்கு போய் அவரை நேரிலே பார்த்துவிட்டால் எனக்கு இன்னும் நிம்மதியாக இருக்கும். நான் அவரை பார்த்ததும் மீண்டும் அழைக்கிறேன் " என்று புன்னகையுடனே சொன்னாள்.


“சரி சரி. அர்ஜூன் முத்துகுளிக்க போயிருப்பான். நாளை அல்லது நாளை மறுனாள்தான் சென்னைக்கு வருவான். அதற்கும் பயப்படாமல் அறையிலே பாதுகாப்பாக இரு" என்றாள் ரிதிகா.


“ஓ. அவரை இப்போது பார்க்க முடியாதா? சரிங்க அண்ணி. நீங்க சொன்னது போலவே செய்கிறேன்" என்றுவிட்டு phone -ஐ வைத்தாள் ஆதிரை.


‘இந்திரபிரதேசுக்கு phone செய்து பேச தெரிகிறது. ஆனால் எனக்கு phone செய்ய தோன்றவில்லை. என் message -க்கும் எந்த தகவலுமில்லை.’ என்று கோபமுடன் phone -ல் அர்ஜூனின் எண்ணை வெறித்தாள். ‘இருக்கட்டும். அப்படி என்ன பதில்கூட சொல்ல தோன்றாத கோபம்' என்று தன்னுள்ளே முனுமுனுத்துவிட்டு airport -லிருந்து வெளியில் வந்தாள்.


அவள் வரவும் ,”வாங்கமா?” என்று அவளது கைப்பையை தன் கையில் வாங்கிக் கொண்டு வந்து நின்றார் ஒரு நடுத்தர வயது மனிதர்.


யாரென்று புரியாமல் சில நொடி நின்று , சிம்லாவில் தாத்தா சொன்ன மூர்த்தியோ, என்று எண்ணி, “நீங்கதான் மூர்த்தியா?” என்று கேட்டாள்.


ஒரு நொடி பின்னால் திரும்பி பார்த்த அந்த மனிதர், “ஆமாமா. வாங்க. Car எடுத்து வந்திருக்கிறேன். போகலாம்" என்றார்.


ஆதிரையும் உடன் நடந்தாள். அர்ஜூன் பாதுகாப்பாக இருக்கிறான் என்று நிம்மதி இருந்த போதும் தன்னிடம் தகவல் தராததால் கோபமாக இருந்த ஆதிரை அர்ஜூனை திட்டி ஒரு நெடிய message-ஐ type செய்த வண்ணம் அவர் பின்னோடு நடந்தாள். அவள் கவனம் நிகழ்வில் இல்லாததால் எந்த எச்சரிக்கை உணர்வும் இல்லாமல் அமைதியாக காரில் ஏறி அமர்ந்துக் கொண்டு அர்ஜூன் பதில் சொல்ல கூடுமென்று phone -ஐயே வெறித்து பலமுறை பார்த்துக் கொண்டிருந்தாள். சில நிமிடம் பார்த்து பதில் வராததும் மீண்டும் சலிப்புற்று phone-ஐ விலக்கி காரிலிருந்து வெளி பாதையை பார்த்தாள்.


போன முறை வந்த பாதைக்கும்செல்லும் பாதைக்கும் ஏதோ மாற்றம் தோன்ற "இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் மூர்த்தி சார்" என்று கேட்டாள்.


“இன்னும் 20 நிமிடத்தில் போய்விடுவோமா. களைப்பாக இருந்தால் படுத்துக் கொள்ளுங்கள்" என்று இலவச ஆலோசனை சொன்னார் அந்த மூர்த்தி என்பவர்.


சென்னை வழி தெரியாது என்ற போதும் முன்பு airport -க்கும் இந்திரா enterprise -க்கும் போக எடுத்துக் கொண்ட நேரத்தைவிட இப்போது அதிகம் போல தோன்ற ஆதிரைக்கு லேசாக சந்தேகம் வந்தது. அதனோடு போகும் வழியும் சென்னை போக்குவரத்து போலல்லாமல் highway போல தோன்ற ஆதிரைக்கு லேசாக அச்சம் பரவியது. அதனை வெளிக்காட்டாமல், இயல்பாக ,”இது என்ன சாலை . இந்த பக்கம் வந்த நினைவில்லையே" என்று கேட்டாள்.


அதற்கு "இ… இது சுற்று வழிமா. நெரிசல் இல்லாமல் இருக்கும் அதனால் இந்த பக்கம் அழைத்து வந்தேன்" என்று சொன்ன அந்த மனிதரின் முகத்தை கூர்ந்து கவனித்தாள் ஆதிரை.


ஏசி கார். ஆனால் அவருக்கு முத்து முத்தாக வியர்த்திருந்தது. ஆதிரைக்கு புரிந்து போயிற்று எதிலோ மாட்டிக் கொண்டது போல தோன்றியது. உடனே அர்ஜூனுக்கு phone செய்ய நினைத்தாள். ஆனால் அவன் phone எடுக்க மாட்டான் என்பது உணர்ந்து ஒரு குறுந்தகவல் மட்டும் அனுப்பிவிட்டு, இந்திரபிரதேசுக்கு phone செய்தாள்.


“ஹலோ அண்ணி.. நா..” என்று ஆதிரை பேசிக் கொண்டிருக்கும் போதே அந்த முன் இருக்கையிலிருந்த மனிதருக்கு வேறு phone வந்தது. அதில் யார் என்ன சொன்னார்களோ,சட்டென திரும்பிய அந்த மனிதர் ஆதிரையின் முகத்தில் ஏதோ spray அடித்தார். இது போன்ற ஒன்றை எதிர் பார்த்திருந்ததாலோ என்னமோ ,”ஏய் என்ன செய்கிறாய் ?” என்று கேட்ட போதும் மூச்சை உள்ளிழுக்காமல் மயக்கம் வருவது போல் நடித்து காரின் இருக்கையில் விழுந்தாள்.


“சார். நீங்க சொன்னது போல செய்துவிட்டேன். ஓ.. சரிங்க சார்" என்று phone -ல் சொன்னான் அந்த காரோட்டி. பின் காரை ஓரமாக நிறுத்தி ஆதிரையின் கையிலிருந்த phone -ஐ வாங்கி switch off செய்தான். மீண்டும் காரை செலுத்தியவன் சில நிமிடங்களில் ஒரு பெரிய வீட்டின் சுற்று சுவரை தாண்டி நிறுத்தினான். யாரோ தன்னை தூக்குவதை உணர்ந்த ஆதிரை அறைமயக்கம் போல கண்ணை திறக்க முயன்று யாரேன்று பார்த்தாள்.


"விஸ்வா..” என்று நினைத்தவள் மீண்டும் கண்களை மூடிக் கொண்டவள், “இவனுக்கு எப்படி நான் airport-ல் இருக்க கூடுமென்று தெரியும். அதனோடு சொல்லி வைத்தார் போல ஒருவனை என்னை கடத்தி வரவும் அனுப்பியிருக்கிறானே. எப்படியும் அர்ஜூனுக்கு தகவல் சொல்லியாயிற்று கோபமிருந்தாலும் , இது போன்ற நேரத்தில் விளையாட்டாக இருக்க மாட்டான். airport camera -ல் இந்த மூர்த்தி வேடமிட்டு வந்தவனின் கார் எண்ணும் அவன் முகமும் பதிவாகியிருக்கும் . police க்கு தகவல் கொடுத்து என்னை தேடி வரக் கூடும். அதுவரை இந்த விஸ்வாவிடம் சேதமில்லாமல் தன்னை பாதுக்காத்துக் கொள்ள வேண்டும். முன்பு போல் அல்லாமல் தன் உடல் வெகுவாக தேறியிருக்கிறதே' என்று எண்ணி பழைய கராத்தே அசைவுகளை மனதில் ஒருமுறை ஓடவிட்டாள். கட்டிப் போட்டால் எப்படி தப்புவது என்று பல படங்களிலும் discovery channel -லிலும் பார்த்ததை நினைவு கூர்ந்தாள்.


அந்த பெரிய பங்களா போன்ற வீட்டின் ஓரறையின் படுக்கையில் அவளை படுக்க வைத்துவிட்டு அந்த அறையை வெளியில் தாழிட்டான் விஸ்வா.


அந்த சத்தத்தில் கண் விழித்த ஆதிரை 'அந்த வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று தெரியவில்லையே. இருந்த போதும் அதிகம் பேர் இருக்க வாய்ப்பில்லை. இந்த பெரிய வீடும் விஸ்வாவின் வீடாயிருக்க வாய்ப்பில்லை. ஓரளவு நடுத்தர குடும்பம் என்ற போதும் பல அடியாட்களை வைத்துக் கொள்ளும் அளவு பண வசதி அவனிடமில்லை , அதனோடு இந்த வீட்டிற்கே செலவு அதிகம் ஆகியிருக்கும். கடற்கரை காற்று வீசுவதால் இது கண்டிப்பாக ECR -ல் இருக்கும் ஏதோ ஒரு வீடு. அக்கம் பக்கத்தில் இருக்கும் வீட்டிலும் யாரும் இருப்பது போல் தெரியவில்லை. பெரிய பணக்காரர்கள் , guest house போல இப்படி வாங்கிப் போட்டுவிட்டு அவ்வப்போது வந்து பார்த்துக் கொள்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது போன்ற வீடுகளில் ஒன்று போல' என்று அந்த அறையின் சன்னல் திரையை விலக்கி பார்த்து தான் நினைத்தது உண்மையாக இருப்பதை உணர்ந்தாள் ஆதிரை.


“இந்த விஸ்வாவிற்கு என்ன தைரியம் இருக்க வேண்டும். போன ஜன்மங்களிலாவது எனக்கு திருமணம் நிகழவில்லை. என்னை அடைய விரும்பியது கூட கண்ணியமாக தோன்றியது. இப்போதுதான் திருமணம் ஆகிவிட்டதே. பிறகும் ஏன் என் உயிரை வாங்குகிறான். கூடாது முன் ஜன்மங்கள் போல இறந்து போய்விட கூடாது. அவனிடமிருந்து உயிருடன் தப்பிக்க வேண்டும். “ என்று முனுமுனுத்துக் கொண்டு அந்த அறையை சுற்றி பார்த்தாள். அங்கிருக்கும் பொருட்களில் ஏதேனும் தற்காப்புக்கு பயன்படுமா என்று யோசித்து அவற்றை எப்படியெல்லாம் பயன்படுத்தினால் தன்னை தற்காத்துக் கொள்ளலாமென்று மனதில் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தாள்.


அப்போது அறை கதவின் அருகில் யாரோ வந்துவிட்டது போல் தோன்ற மீண்டும் அவசரமாக பழையபடியே கட்டிலில் படுத்துக்கொண்டாள்.


“ஆதிரை… " என்று அழைத்தான் விஸ்வா. காதில் விழுந்த போதும் அசையாமல் படுத்திருந்தாள் ஆதிரை.


அவளது நடிப்பை கண்டுபிடித்தவன் போல, “ இன்னும் எவ்வளவு நேரம் இப்படி மயங்கியது போல என்னை ஏமாற்ற போகிறாய் ஆதிரை..” என்று நேர கேட்டு அவள் அருகில் அமர்ந்தான். ஆதிரைக்கு திக்கென்று இருந்தது. தீ சுட்டார் போல அவனை விட்டு விலகி அமர்ந்து அவனை எறித்து விடுபவள் போல பார்த்தாள்.


வெற்றி சிரிப்பாக சிரித்த விஸ்வா, “என்ன பார்கிறாய். எப்படி கண்டுபிடித்தேனென்றா? காரிலிருந்து உன்னை தூக்கும் போதே கவனித்துவிட்டேன். மயங்கி இருப்பவர்களை தூக்குவதற்கும், சும்மா நடிப்பவர்களை தூக்குவதற்கும் வேறுபாடு இருக்கிறதே. அப்போதே கேட்டால் தேவையில்லாமல் அங்கேயே முரண்டு பிடிப்பாய் என்றுதான் சொல்லாமல் இங்கு தூக்கிவந்து விட்டேன்" என்று சிரிப்பினை மீண்டும் தொடர்ந்தான்.


அவனை வெறித்த பார்வையை மாற்றாமலே, “ எவ்வளவு நேரம் சிரிக்க போகிறாய். என் அர்ஜூன் வந்தால் நீ சுக்கு நூறாய் கிளிக்கபடுவாய் ஜாக்கிரதை" என்றாள் ஆதிரை.


“அவன் வருவான் என்று அவ்வளவு நம்பிக்கையா? இருக்கட்டும். அவனுக்கு நீ phone செய்தததையே எடுக்காதவன், உன் message க்கு கூட reply பண்ணாதவனை எப்படிதான் நம்புகிறாயோ? அதனோடு நீ நினைத்ததும் வந்து நிற்க இது என்ன திரைபடமா?” என்று நக்கலாக கேட்டான்.


அவனது பதிலில் , ‘ நான் அர்ஜூனுக்கு phone செய்தது இவனுக்கு எப்படி தெரியும்?” என்று கேள்வியாய் அவனை பார்த்தவளின் மனதில் முதல்முறையாக உயிர் போகும் அளவு பயம் வந்தது. ஏற்கனவே அர்ஜூனை போல குரல் மாற்றி பேசியவன்தானே இந்த விஸ்வா? இப்போதும் அது போல எதுவும் ஏமாற்று வேளை செய்திருப்பானா? ஐயோ அர்ஜூனுக்கு இவனால் ஏதேனும் ஆபத்தா?’ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே , அவன் phant pocket-ல் இருந்து ஒரு phone -ஐ எடுத்தான்.


"மிகவும் யோசிக்காதே. இதுதானே உன் ஆளின் phone. பாவம் இரண்டு நாள் முன்னாடியே பிட்பாக்கட் அடித்து தந்துவிட்டார் மாரிமுத்து அண்ணன். அவனுக்கு மட்டும் எத்தனை phone பண்ணுகிறாய். எப்போதும் இருவருக்கும் சண்டைதானோ. message -ல் கூட அவனிடம் ஆசையாக பேசவில்லையே,” என்று ஆதிரை அர்ஜூனுக்கு அனுப்பிய குறுந்தகவலை படித்தான். ஆதிரைக்கு முகமெல்லாம் சிவந்தது.


'ஆக இந்த phone – ல் நான் அனுப்பிய message-ஐ பார்த்துதான் இவன் என்னை கடத்தி வர திட்டமிட்டிருக்கிறான். இது ஒருபுரம் இருக்க , உண்மையில் அர்ஜூன் அந்த தீவிலிருந்து வந்துவிட்டானா? என்று தெரியவில்லையே. இந்திரபிரதேஷுக்கும் இவனே அர்ஜூன் போல phone செய்திருப்பானோ, என்று தோன்ற, “அப்போ. அப்போ. இந்திரபிரதேஷ்க்கு இன்று phone செய்ததும் நீதானா?” என்று அவசரமாக கேட்டாள்.


“அது நான் இல்லை தாயே. அது உன் அருமருந்த கணவனேதான். அர்ஜூன் வீட்டு ஆட்களிடமெல்லாம் குரல் மாற்றி பேச முடியுமா? அதனோடு அவர்களுக்கு தகவல் தர வேண்டுமென்ற அவசியம் எனக்கில்லை. நீ சொல்வதை பார்த்தால் அவனுக்கு நீ சென்னை வந்தது எப்படியும் உன் அண்ணி சொல்லியிருப்பாள். அதனால் அவனுக்கு நீ பாதுகாப்பாக இந்திர enterprise வந்துவிட்டதாக தகவலும் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஒரு நிமிடம் " என்று சொல்லிக் கொண்டு மற்றொரு phone -ஐ எடுத்துக் கொண்டு வெளியில் சென்றான் விஸ்வா.


மீண்டும் வந்தவன், " இனி உன்னை தேடி யாரும் வர மாட்டார்கள். குறைந்தது இன்னும் மூன்று நாட்களுக்கு நீ காணாமல் போனதுக் கூட யாருக்கும் தெரியாது. அந்த இடைவெளி எனக்கு போதும் " என்று புன்னகைத்தான் விஸ்வா.


விஸ்வாவை முறைத்து பார்த்த ஆதிரைக்கு மனதில் அர்ஜூன் பாதுகாப்பாக இருப்பதே நிம்மதி தந்தது. அடுத்து இந்த விஸ்வாவிடமிருந்து எப்படி தப்பிக்கலாமென்று யோசிக்க வேண்டும். அர்ஜூன் வரக் கூடுமென்று யோசிப்பதில் விஸ்வா சொல்வது போல யாரையும் எதிர்பார்த்து காத்திருப்பது நல்லதில்லை. என்று யோசனையில் ஆழ்ந்தாள்.


அவள் முகத்திலே அவள் எண்ணம் உணர்ந்த விஸ்வா, “ என்ன எப்படி தப்பிக்கலாமென்று யோசிக்கிறாய் போல, போன ஜன்மங்கள் போல சிவனையோ அல்லது பார்வதியையோ வேண்டி என்னை கொல்ல போகிறாயா?" என்று கெக்கலித்து சிரித்தவன், “ அதற்கு அந்த கடவுள்களின் சிலை இப்போது உன் அருகில் இருக்க வேண்டும். அதனோடு அது போன்ற அற்புதங்கள் நடக்க இது ஒன்றும் அந்த காலம் இல்லை. நீ கொன்றுவிட்டு போக நானும் பழைய விஸ்வா இல்லை. “ என்றான் பழிவெறி முகத்தில் தெரிய.


அவனது குரலிலும் முகத்திலும் தெரிந்த குரூரத்தில் ஆதிரையின் மனதில் குளிர் பரவியது. மனதில் தோன்றிய பயத்தை மறைத்து முகத்தில் இயல்பான பாவனை தோன்ற " உனக்கும் நம் முன் ஜன்மம் பற்றி தெரியுமா?” என்று ஆச்சரியமாக கேட்டாள் ஆதிரை.


அவளிடம் பயத்தையோ கோபத்தையோ எதிர்பார்த்த விஸ்வாவிற்கு அவளது இயல்பான பேச்சு ஏமாற்றமே. அவளை உன்னிப்பாக பார்த்தவனால் அவளிடமிருந்து எதையும் அறியா முடியாமல், “ ஆமாம் தெரியும். அந்த கிழவன் நீ சென்னையிலிருக்கும் போது உன்னிடம் ஏதோ ஓலைச் சுவடி தந்தானே அதை என்னிடம் பணிபுரியும் அந்த nurse எடுத்து வந்து தந்தாள். அதை படித்ததும் தெரிந்துக் கொண்டேன்.” என்றான்.


“ஓ.. அது உன்னிடம்தான் இருக்கிறதா? நான் எங்கு வைத்தேன் என்று தேடிக் கொண்டிருந்தேன். சரி அதுதான் படித்தாயே. அதிலே உனக்கு தெரிந்திருக்க வேண்டாம். உன்னை திருமணம் செய்து கொல்லாமல் நான் இறந்துதானே போனேன். நீ எந்த தைரியத்தில் என்னை இப்படி மீண்டும் கடத்தி வந்திருக்கிறாய். நான் செத்து போனாலும் செத்து போவேன். உன் எண்ணம் நிறைவேற வாய்ப்பில்லை என்பது புரிந்திருக்க வேண்டுமே. நினைவிருக்கட்டும், போன ஜன்மங்களிலும் அர்ஜூன் வருவார் என்று நான் காத்துகிடக்கவில்லை. மானம் பெரிதென்று செத்து போனேன். அவ்வளவே" என்று விட்டேற்றியாக பதில் சொன்னாள்.


“தெரியும் செத்து போக முயற்சிப்பாய் என்று தெரியும். அதற்காகவும்தான் ஒரு வழி யோசித்து செயல்படுத்தியிருக்கிறேன்.” என்று இடிஇடியென சிரித்தான்.


விஸ்வாவின் அந்த சிரிப்பு ஆதிரைக்கு அருவருப்பாய் இருக்க, அதையே முகத்தில் காண்பித்து, “ என்ன வழி செய்து வைத்திருக்கிறாய்?” என்று கேட்டாள்.


“அவ்வளவு வெறுப்பா. எல்லாம் இன்னும் ஒரு நாளில் மாறிவிடும். என்னைவிட அந்த நாய் அர்ஜூனிடம் அப்படி என்னதான் இருக்கிறதோ. “ என்று வாய்விட்டு திட்டியவன், “ கேட்டுக் கொள், அர்ஜூன் இப்போது சென்னையில் இல்லை. தூத்துக்குடியில் முத்தெடுக்க போயிருக்கிறான். அவனுடன் அவன் தொழிலாலர்களும் கப்பலில் போயிருக்கிறார்கள். அந்த பணியாளர்களில் ஒரு ஆள் என் கையாள். அவனிடம் அர்ஜூன் கடலில் இறங்கும் போது பயன்படுத்தும் ஆக்ஸிஜன் சிலிண்டரில் காலியான சிலிண்டரை கட்டி அனுப்ப ஏற்பாடு செய்திருக்கிறேன். நான் சொல்வதை நீ கேட்கவில்லையென்றால் அதுதான் நடக்கும்.” என்று இலகுவாக சொன்னான்.


அவன் சொன்னதில் உள்ளுக்குள் கலக்கம் இருந்த போதும் அதனை இவனிடம் காட்ட மனமற்று , "என்ன blackmail செய்கிறாயா? அப்படி எளிதாக உன் கையாள் வேலை பார்க்க அங்கிருப்பவர்கள் முட்டாளா? சிலிண்டரின் கனமே காண்பித்து கொடுக்காதா?” என்று கேட்டாள்.


“ நன்றாகதான் கேள்வி கேட்கிறாய். அதற்கு கூட ஏற்பாடு பன்னாமல் இருப்பானா. அதற்கு ஏற்ப, சிலிண்டரின் அடியில் எடைகல்லை ஒட்டி வைத்திருக்கிறோம். நான் ஒரு வார்த்தை சொன்னால் உன் அர்ஜூன் ஆக்ஸிஜன் இல்லாமல் மூச்சுவிடமுடியாமல் மூக்கு வாய் காதுகளில் ரத்தம் வந்து கடலில் மூழ்கி இறந்து போவான். நினைவிருக்கட்டும். முதல் மூன்று நாட்கள் அர்ஜூனும் முத்து குளிக்க போவானாம். நீ என் ஆசைக்கு இணங்க மறுத்தால் அதுதான் நடக்கும்" என்றான் விஸ்வா.


அப்படியே வாயடைத்து போனாள் ஆதிரை.. “என்ன விஸ்வா இப்படி பேசுகிறாய். நான் அவருடைய மனைவி.. எப்படி உன்னோடு இருக்க முடியும். இது புரியாமல் அவரது உயிரை வைத்து என்னை மிரட்டுகிறாயே" என்று மனதில் இருந்த கலக்கம் லேசாக துளிர்க்க அவனிடம் பேசினாள்.


அவளது கலக்கமே அவனது வெற்றியாக தோன்ற, "மனைவியென்றால் எப்படி. இந்த மஞ்சள் கயிற்றை கட்டினால் மட்டும் போதுமா? மற்றது நடக்க வேண்டாம்" என்று விரசமாக கேட்டு சிரித்தான் விஸ்வா.


தனக்கும் அர்ஜூனுக்கும் இடையே தாம்பத்தியம் நடக்கவில்லையென்பது இவனுக்கு எப்படி தெரியும். என்று விக்கித்து குரலே வராத குரலில், “ உ.. உனக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டாள்.


அதற்கு வாய்விட்டு சிரித்த விஸ்வா, “ எனக்கு எப்படி தெரியுமா? மருத்துவர் மூலமாக அப்படி சொல்ல காரணமானதே நான்தானே. உன் medical report -ல் சிலவற்றை மாற்றி குறிப்பிட கொஞ்சம் காசை செலவு செய்தேன். அதை பார்த்த அந்த தலைமை doctor மடையன் அர்ஜூனிடம் சொன்னதும் எனக்கு தெரியும். நீ எனக்கு சொந்தமானவள். பாதியில் வந்து அந்த அர்ஜூன் உன்னை தட்டி செல்ல விட்டுவிடுவேனா?” என்றான்.


'விஸ்வாவின் பதிலில் ஆதிரைக்கு தலை சுற்றியது. அர்ஜூனின் செயலுக்கு ஆயிரம் காரணம் கண்டுபிடித்திருந்தாளே. இப்படி ஒரு காரணம் இருக்குமென்று அவளுக்கு தோன்றவில்லையே. அர்ஜுனும் வேதனைக் கொண்டு என் உடல் நிலைக் நினைத்து தவியாய் தவித்து அல்லவா இருக்கிறான். எல்லாம் இந்த விஸ்வாவால் வந்தது. ' என்று நொந்தவள் எதையும் வெளி காட்டாமல், “பாவி. ஏனடா? இப்படி செய்தாய். உன்னால் அவரை தவறாக நினைத்தேனே. வேறு பெண் விருப்பமென்றெல்லாம் எண்ணினேனே. ” அவனை அடிக்க கையை ஓங்கினாள்.


அவளது நோக்கம் உணர்ந்து விலகிய விஸ்வா ,” என் நோக்கம் ஒன்றுதான் அதை உன்னிடம் ஏற்கனவே சொல்லிவிட்டேன். இப்படி பேசுவது கூட நேர விரயம்தான். ஆனால் எனக்கு எல்லாம் முறைபடி நிகழ வேண்டும். அதனோடு காலம் முழுதும் நீ எனக்கு வேண்டும்" என்றான்.


அவனை அருவருப்பாக பார்த்த ஆதிரை , அப்படி அவனை பார்க்கவும் பிடிக்காமல் முகத்தை திருப்பிக் “உனக்கு வேண்டுமா.? எப்படி. அதுவும் காலம் முழுதும் வேண்டுமா? வாய்ப்பே இல்லை" என்றாள்.


“வழி இருக்கிறது. உனக்கும் அந்த ஆளுக்கும் திருமணம் நிகழ்ந்தது அந்த தீவில். அது முறைபடி எந்த அரசுபதிவிலும் பதிக்கபடவில்லை. அதனால் விவாகரத்து பற்றி யோசிக்க வேண்டிதில்லை. சொல்ல போனால் சட்டப்படி உங்கள் இருவருக்கும் திருமணமே நிகழவில்லையென்று சொல்லலாம். அதனால் உன் கழுத்திலிருக்கும் கயிற்றை கழற்றி வைத்துவிட்டு, நாளை என்னை திருமணம் செய்துக் கொண்டு அரசுமுறைபடி பதிவு செய்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் உன் அர்ஜூன், பரலோகம் போனப் பிறகுதான் என்னை திருமணம் செய்துக் கொள்வாயென்றாலும் நீ தான் முடிவெடுக்க வேண்டும்" என்று கொஞ்சமும் நெஞ்சில் ஈரமில்லாமல் சொன்னான் விஸ்வா.


“விஸ்வா. நான் உன்னுடைய தோழி.. ஏன் இப்படிபட்ட இச்சை.. உன்னை விரும்ப நான் தகுதியானவளே இல்லை.. உன்னை 10 வருடமாக விரும்பும் ஒருத்தியை விட்டுவிட்டு. உன்னை சுத்தமாக விரும்பாத என்னை திருமணம் செய்துக் கொள்ள துடிக்கிறாயே! நியாயமா? அதுவும் மனதில் நான் அர்ஜூனின் மனைவியாகிய பின், நீ இப்படி என்னை மிரட்டுவது நியாயமில்லை" என்று பொறுமையாக சொன்னாள்.


" நியாயம் பார்க்கும் நிலையில் நான் இல்லை. அதனோடு அப்படி என்னை விரும்புபவர்கள் யாருமில்லை. எனக்கு உன் மீதுதான் விருப்பம். என்னை விரும்புகிறார்கள் என்று யாரையும் நான் திருமணம் செய்துக் கொள்ள முடியாது." என்றான் விஸ்வா.


“யாருமில்லாமல் என்ன. லாவண்யா. உன்னை விரும்புகிறாள். அதனோடு உனக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா? என்னை விரும்புகிறாய் என்பதற்காக உன்னை நான் திருமணம் செய்துக் கொள்ள முடியுமா? எனக்கு என் அர்ஜூன் மீது மட்டும்தான் விருப்பம்.” என்றாள் தெளிவாக ஆதிரை.


“லாவண்யா…?” என்று ஒரு நொடி யோசித்தவன், “ அவள் என்னிடம் எதுவும் அப்படி சொன்னதில்லையே. உனக்கு எப்படி தெரியும்? என்னை ஏமாற்ற பார்கிறாய்? பேச்சை மாற்றாதே. நீ இன்னமும் அர்ஜூன் ஜபம் செய்தாய் என்றால் நான் அவனை இந்த உலகை விட்டு அனுப்பிவிட உடனே ஏற்பாடு செய்துவிடுவேன். “ என்றான் விஸ்வா.


விஸ்வாவின் எண்ணம் சிதறுவதை பார்த்து கொண்டாட்டமாக, “ நான் ஏன் பேச்சை மாற்றுகிறேன். உண்மையாக நேசிப்பவளை விட்டு என்னை விரட்டுகிறாயே. அதுவும் காலம் முழுதும். வேடிக்கையாய் இல்லை. லாவண்யாவிற்கு உன் மீது எவ்வளவு அன்பிருந்தால் உனக்காக என்னிடம் கெட்ட பெயர் வாங்கும்படியான செயல்களை செய்திருப்பாள்" என்றாள் லேசாக தோளை குலுக்கி ஆதிரை.


சில வினாடி யோசித்தவன் , உடனே தெளிந்து, “ நீ என்னை குழப்ப பார்க்கிறாய் ஆதிரை. ஏமாந்து போக நான் ஆளில்லை” என்றான் விஸ்வா.
 

banumathi jayaraman

Well-Known Member
எதையாவது எடக்குமொடக்கா செஞ்சுட்டு எக்குத்தப்பா அந்த விஸ்வாவிடம் மாட்டிக்கிறதே இந்த ஆதிரைக்கு இதே வேலையாப் போச்சு
இப்போ அர்ஜுன் எப்படி வந்து இவளைக் காப்பாற்றப் போறான்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top